Thursday 7 November 2013

கல்லிலே ஆடவல்லான்

துக்காச்சி - கோஷ்டத்தில் நடராஜர்
ஆடவல்லான் – நடராஜன் - சிலையை நாம் பெரும்பான்மையாக செப்பு திருமேனி எனும் ஐம்பொன் உருவமாக மட்டுமே பார்த்துள்ளோம். சிவன் கோவில்களில் மூலவர் கல்லில் வடிக்கப்பட்ட லிங்கமாகவும், உத்சவர் நடராஜராகவோ, சோமாஸ்கந்தராகவோ காண்கிறோம். கோஷ்டங்களில் பல்வேறு வடிவங்களில் சிவன் இருப்பதை காண்பதில்லை.






துக்காச்சி கோவில் கோபுரம்

முற்கால சோழர் கோவில்களில் பின்புற கோஷ்டங்களில், பல இடங்களில் லிங்கோத்பவரை காணலாம். சமீபத்தில் சிதம்பரம் கும்பகோணம் பயணமாக சென்றபோது, துக்காச்சி, கோனேரிராஜபுரம், ஆடுதுரை ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் கோஷ்டத்தில் நடராஜர் சிலைகளை பார்த்து ரசித்தேன். 



குறிப்பாக துக்காச்சி நடராஜர், கல் சிலை போலின்றி, வெங்கலச்சிலை போல் இருந்தது. விரலால் தட்டினாலும், வெங்கலம் போல் ஒலித்தது!

3 comments:

  1. fine and interesting.thank u gopu

    ReplyDelete
  2. intha sirpangkalai pinnam seythathu entha kotungkolan?

    ReplyDelete
  3. radhakrishnan: Glad you enjoyed it

    Rajagopalan Subramanian: Statues are damaged due to several factors - 1. neglect 2. accident 3. attempted theft 4. vandalism 5. bad renovation 6. natural lapse of time 7. midirected devotion

    It is not always clear what is the specific cause

    ReplyDelete