ஆலன் பீட்டி எழுதிய
போலி பொருளியல் நூலை செப்டம்பர் 30, புதன்கிழமை மாலை
6.45 மணிக்கு, டக்கர் பாபா பள்ளியில், காந்தி மையத்தில், தமிழில் கருத்துரை செய்யவுள்ளேன்.
“ஆச்சிரியமான உலக பொருளாதார வரலாறு” என்று அதற்கு ஆசிரியர், துணைப் பெயரிட்டுள்ளார். போர், புரட்சி, மதம்,
இயற்கை அழிவுகள், அறிவியல் புரட்சி என்ற காரணங்களால் நாம் அறிந்த வரலாற்று நிகழ்வுகளை
மாற்றங்களை போல், பொருளாதார கொள்கைகளும் முடிவுகளும் வரலாற்றை எவ்வழி நடத்தியுள்ளன
என்பதை இந்நூல் விளக்கும்.
பருத்தி புரட்சி,
மாஞ்செஸ்டர் நூலாலைகள், அதனால் மாறிய ஆங்கிலேய, ஐரோப்பிய, இந்திய வரலாறு, பருத்தி புரட்சியை
எதிர்த்த தொழிலாளிகள், சட்டங்கள், வணிகர்கள் பற்றியும் நூலில் உள்ளதை அலசுவேன். ஏன்
ஊழல் நேர்மையை வெல்கிறது, நீர் நிலைகளின் ஆளுமை என்ன, வளநாடு தேய்வதும் வரண்ட நாடு
வளர்வது, ஏரியும் நதியும் வணிகப்பொருளானதும், நூலின் முக்கிய அம்சங்கள்.
நைல் நதியும்
காவிரியும் இந்நூலின் இப்பகுதியை தழுவி நான் எழுதிய கட்டுரை இங்கே
I will review the book False Economy by Alan Beattie, at Gandhi study center, in Thakkar Bapa Vidyalaya, T Nagar this Wednesday September 30 at 6.45 pm. I will speak mostly in Tamil.
This book is subtitled "A Surprising Economic History of the World" and explains the economic forces and choices shaping the histories of nations or regions. I will select some aspects, only some chapters and explain them in detail.
Among them, I will cover the Cotton revolution, the mills of Manchester, how it altered England, the business, labour and legal resistance to it, first in England, then elsewhere, and how it impacted India a century later. I will also deal with chapters on why corruption sometimes defeats honesty, and water management and mismanagement. Why did Egypt once a source of grain for the Roman Empire become a country importing half its food?
1. An interview with Alan Beattie
2. இந்த உரையின் ஒளிப்பதிவு (video link)
ReplyDeleteஅய்யா வராஹமிஹிரகோபு, தாங்கள் முக்கியமான புத்தககங்களைப் படித்து அவற்றைப் பற்றி விஸ்தாரமாக எழுதுவதும் பேசுவதும் போற்றுதற்குரிய விஷயங்களே. என்னால் உங்கள் பேச்சுக்கச்சேரிகளுக்கு வரமுடியாவிட்டாலும் (ஒரு பேச்சைத் தவிர - பெரியவர் நாகசாமி அவர்கள் வீட்டில் தாங்கள் மாமல்லபுரம் பற்றிப் பேசியது), உங்களுடைய பணி (=வெறி!) குறித்து எனக்கு ஆச்சரியமும் ஆகவே அதற்காக நன்றியும்...
இப்போது - ஒரு வேண்டுகோள், கோரிக்கை. முடிந்தால் செய்யவும்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் படிப்பவர்கள் மிகக் குறைவு. அதுவும் இரண்டிலும் ஓரளவு தேர்ச்சி இருந்தாலும், எழுதுபவர்கள் குறைவு. அப்படியே எழுதினாலும் அக்கப்போரில்லாமல் எழுதுபவர்களை ஒருகை விரல்களை விட்டு எண்ணாமல் இருக்கலாம். ஏனெனில் எண்ணித்துணிக கருமம்.
சரி. இதே பீட்டி இன்னொரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்: Who is incharge here - இதுவும் ஒரு முக்கியமானதொன்று. இதையும் நீங்கள் படித்திருக்கக்கூடும்.
நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் - நீங்கள் ஒரு முக்கியமானவரை/எழுத்தாளரைப் பற்றி எழுதும்போது/பேசும்போது - அவருடைய ஒரு புத்தகத்தை/கருத்தை மட்டும் விரித்துப் பேசுவதற்கு பதிலாக, அவர்களுடைய பிற விஷயங்களை/புத்தகங்களை/கருத்துகளைப் பற்றியும் மேலதிகமாகப் பேசமுடியுமா? (நான் நீங்கள் ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று சொல்லவரவில்லை!)
ஏனெனில் தமிழ்ச் சூழலில், அதிக பட்சம், வெறும் இலக்கியம் மட்டும்தான் (சில சமயம் தத்துவங்களும்!) வெளி நாடுகளிலிருந்து வந்து சேர்கிறது. அதுவும் அது 'டாம் மாமாவின் குடிசை' என்கிற வகையறாக்கள் வழியாக அல்லது -- இருத்தலியல் (இது இருக்காமலியலுக்கு எதிரானது என்பது என் புரிதல்), அமைப்பியல்வாதம் (இது பக்கவாதத்திற்கு மச்சான் முறையோ?) குறித்த அரைவேக்காட்டுப் புத்தக வகையறாங்கள் வழியாக. புனைவிலக்கியம், தத்துப்பித்துவம் அல்லாத பலப்பல பெரிய விஷயங்கள் இங்கு வந்து சேர்வதேயில்லை.
ஆக - விரிவும், செறிவும் ஆழமும் இல்லாமல் இருக்கும்போது எப்படி, எட்டுத் திக்குகளிலிருந்தும் கலைச்செல்வகங்களை கொணர்ந்திங்குச் சேர்ப்பது. வேகமய்யா வேகம்! :-(
உங்களுக்கென்று வாசகர்களும், பின் தொடர்பவர்களும் இருக்கிறார்கள்; நானும் முன்னவர்களில் ஒருவன் என்கிற முறையில், இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்.
தொடர்ந்து தாங்கள் எழுதுபவைகளையெல்லாம் படிக்கிறேன். எழுதுவதற்கு நன்றி.
நன்றி.
ramasami sir, நான் ஆலன் பீட்டியின் Who is incharge here நூலை இன்னும் படிக்கவில்லை. வாங்கவும் இல்லை. படித்த பல புத்தகங்களின் சாராம்சத்தை எழுத நினைக்கிறேன். வேகமாக எழுத வரவில்லை, மெதுவாக தன் எழுதுகிறேன். ஒரு பக்கம் எழுதவே ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. உரையாற்றும் போது, சொல்ல நினைப்பதிலும் சிறிதளவே சொல்வதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. நேற்றும் அதுவே நடந்தது.
ReplyDeleteநான் தமிழில் மிகச்சில நூல்களே படித்துள்ளேன். ஆங்கிலத்தில் தான் அதிகம் படிக்கிறேன். கதை இலக்கியத்தை தாண்டி, அறிவியல் பொருளியல் பேச இலக்கிய வட்டம் உருவாக வேண்டும். புத்தகம் படிப்பவர் தமிழகத்தில் குறைவே, அதிலும் இத்துறை நூல்கள் படிப்போர் அதைவிட குறைவே. ஆவலுடன் பலரும் கூடினால், அப்படிப்பட்ட வாசகர் வட்டங்கள் அமையலாம்.
உங்கள் பாராட்டுக்கும், தொடர்ந்த வாசிப்பிற்கும் நன்றி. நாகசாமி இல்லத்தில் நடந்த பொழுதே சந்தித்திருக்கலாம்.