கின்லீ
போற்றுதும் கின்லீ போற்றுதும்
வான்மழை
பொய்ப்பினும் கோன்நெறி வழுக்கினும்
சான்றோர்
ஆன்றோர் இருப்பினும் இலாவினும்
காவிரி
வைகை மணல்கிடங்காயினும்
கங்கை
யமுனை மலக்கிடங்காயினும்
மாளிகை
என்றோ மண்குடில் என்றோ
வாள்வலியார்க்கும்
தோள்வலியார்க்கும்
நூல்வழியார்க்கும்
வழியல்லார்க்கும்
வேற்றுமை
பாராது விலைப்பொருளாக
போற்றர்க்குரிய
நீர் வழங்கும்மே
கின்லீ
போற்றுதும் கின்லீ போற்றுதும்
அக்குவாபினா
போற்றுதும் அக்குவாபினா போற்றுதும்
பக்குவமான
தெள்ளிய நீரை
கிணறு
வற்றினும் குளங்கள் வற்றினும்
கட்சி
கொள்கை குல மதம் பாராது
குணம்
நாடாது குற்றமும் நாடாது
பணம்
நாடி பணமொன்றே நாடி
உத்தரவின்றி
தொந்தொறவின்றி
பத்திரமான
சுத்தமும் சுவையும்
யாதும்
ஊரே யாவரும் கேளிரென
வாதும்
சூதும் வழி தடுக்காமல்
தக்கார்
தகவிலர் சமமாய் நீர்தரும்
அக்குவாபினா
போற்றுதும் அக்குவாபினா போற்றுதும்
மாமழை
போற்றுதும் மாமழை போற்றுதும்
மாமழை
காரண ஞாயிறு போற்றுதும்
மாமழை
பெய்திடும் மாநில மிகைதனை
மாபெரும்
மோட்டாரால் நதிநீள குழாய்களால்
வரட்சியில்
வாடும் பற்பல ஊரெலாம்
அருட்செய்
மழைபோல் அள்ளி வழங்கிடும்
அரசுகள்
போற்றுதும் அலுவலர் போற்றுதும்
கம்பெனி
போற்றுதும் கம்பெனி போற்றுதும்
முன்பொரு
பிஸ்லெரி பின்பொரு கிங்ஃபிஷர்
என்பவை
போன்ற பற்பல பெயருடன்
அங்குமிங்கும்
பட்டறை அமைத்து
தங்கு
தடையின்றி இல்லந்தோரும்
நாளொரு
போத்தலும் பொழுதொரு குடமும்
நாடு
முழுவதும் ஓடோடி விற்கும்
கம்பெனி
போற்றுதும் கம்பெனி போற்றுதும்
கிளை நதிகள்
உலக பொருளாதார வரலாறு - நூல் விமர்சனம்
No comments:
Post a Comment