CSIR (சி.எஸ்.ஐ.ஆர் ) என்னும் நிறுவனத்தின் ஒரு கிளை NIScPR (தேசிய அறிவியல் கொள்கை பரப்புக் கூடம்) அறிவியல் தகவல்களை பரப்பிவருகிறது. அதில் சுவஸ்திக் என்ற ஒரு திட்டத்தின் கீழ சமீபத்தில் இந்திய கணித மரபை உரைக்கும் தகவலிதழ்களை (போஸ்டர்/சுவரொட்டி) தயாரித்துள்ளனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் இதுபோல் மேலும் பல தகவல் இதழ்களை வரும்நாட்களில் உருவாக்குவார்கள்.
நான் சில மாதங்களுக்கு முன் எழுதிய கட்டுரைகள் இந்த தகவல்களுக்கு அடித்தளமாக அமைந்தன. சில மாதங்களுக்கு முன் தமிழில் இந்திய கணித வானியல் மரபை ஒரு பாடதிட்டமாக வகுத்து, வராகமிகிரன் அறிவியல் மன்றத்தில் நாங்கள் நடத்தியது நினைவிருக்கலாம்.
இந்திய அறிவியல மரபை பற்றி ஆர்வலர் அறிய, இதை நீங்களும் பகிரலாம்.
இங்கே இந்த இதழ்களின் டுவிட்டர் பகிர்வு
இங்கே இந்த இதழ்களின் முகநூல் பகிர்வு
ஆரியபடன் - தமிழ் கட்டுரை
இந்த வலைப்பூவில் என் கணித கட்டுரைகள்
No comments:
Post a Comment