Tuesday 25 June 2024

விசை விஞ்ஞானம் வரலாறு



கிழக்கு டுடே இணையதளத்தில் இந்த 2024 ஜூன் மாதம் ஒரு அறிவியல் தொடர் எழுதி வருகிறேன். கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொழில் புரட்சி தொடங்கியது. பொதுவாக நீராவி எஞ்ஜினின் இயக்கத்தால் மாறி வந்த  தயாரிப்பு முறைகளை தொழில் புரட்சி என்று மக்கள் பரவலாக கருதுகின்றனர். நீராவி எஞ்ஜினும் அது போல் பல இயந்திரங்களும் இக்காலத்தில் உருவாகின.

ஆனால் நடந்ததென்னவோ பற்பல புரட்சிகள், உருவாகியவை பல்வேறு புதிய துறைகள்.   மின்சாரம், நீராவி எஞ்ஜின், பெட்ரோல் எஞ்ஜின், என்று பல்வேறு புதிய பொறியியல் துறைகள் தோன்றின. மருத்துவம், போக்குவரத்து, கட்டுமானக் கலை, நெசவு, விவசாயம், உலோக உற்பத்தி, எதிர்பாரா பல புதுமைகள் கண்டன. வேதியியல், இயற்பியல், உயிரியல் பல யுகாந்த மாற்றங்களை சந்தித்து புது யுகத்தை வரவேற்றன. புவியியல், தொல்லியல், மொழியியல், பொருளாதாரம், விளம்பரம், சுகாதாரம், சுற்றுச்சூழலியல், வரைபட கலை, கடலியல், தொலைதொடர்பு, என்று புதிய துறைகள் உருவாயின. இதன் பின்புலத்தில் போர், அரச மாற்றம், சமூக மாற்றம், மதக்கலவரம், , இலக்கியப் புரட்சி, இசைப் புரட்சி, கலை புரட்சி, புதுட்ப்புது கலைகள் என்று பல்வேறு மாற்றங்களும் தொடர்ந்தன.

பொதுவாக அரசியல் சமூக மாற்றங்கள் மட்டுமே வரலாற்று வல்லுனர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. சம காலத்தில் நடக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை அவர்கள் பெரிதாக நினைப்பதில்லை. விஞ்ஞான புத்தகங்கள்  விஞ்ஞானிகளையும் படைப்பாளிகளையும் எட்டமுடியாத சாதனை மாந்தராக சித்தரித்து அவர்கள் நடந்த வழியை சரியாக விளக்குவதில்லை. அல்லையேல் புரியாத அளவுக்கு கணிதத்திலும் விஞ்ஞான கொள்கைகளிலும் மூழ்கடித்து விடுகின்றன. கொஞ்சம் மாறுதலாக இந்த கதைகளை சொல்ல முயல்கிறேன்.

இதோ சுட்டிகள். தொகுத்து புத்தகமாக வெளியிட சித்தம். 
  1. ஜேம்ஸ் வாட் : கரி தழல் வளவன்
  2. ரிச்சர்ட் டிரெவிதிக் : ரயில் என்ஜின் ராட்சசன்
  3. ஜார்ஜ் ஸ்டீவென்சன் : படிக்காத மேதை படைத்த பாதை
  4. கில்பர்ட் முதல் பிராங்க்ளின் வரை மின்னல் மழை மின்சாரம்
  5. பிராங்க்ளின் முதல் டேவி வரை தொட்டனைத்தூறும் மின்சாரம்
  6. மைக்கேல் ஃபாரடே – மின்பொருள் நாயனார்
  7. வேதியியல் கதை பஞ்ச பூத யுகம்
  8. ஜோசப் பிரீஸ்ட்லீகற்க கசடற காற்றை
  9. அந்துவான் லவோய்சியே - நவீன வேதியியலின் தந்தை
  10. இளமையில் கல் - புவியியல்




1 comment:

  1. Very well wriiten articles with a different perspective & language idiom.
    Looking forward to the entire series & ur avatar as a full fledged author of books!
    👍

    ReplyDelete