எல்லோரும் இந்நாட்டு மன்னன்
எல்லோரும் இந்நாட்டு
மந்திரி
எல்லோரும் இந்நாட்டு
தொண்டன்
எல்லோரும் இந்நாட்டு
குமாஸ்தா
எல்லோரும் இந்நாட்டு
அறிவாளி
எல்லோரும் இந்நாட்டு
அடிமுட்டாள்
எல்லோரும் இந்நாட்டு
மாவீரன்
எல்லோரும் இந்நாட்டு
படுகோழை
எல்லோரும் இந்நாட்டு
காவலன்
எல்லோரும் இந்நாட்டு
திருடன்
எல்லோரும் இந்நாட்டு
செல்வந்தன்
எல்லோரும் இந்நாட்டு
ஏழை
எல்லோரும் இந்நாட்டு
வள்ளல்
எல்லோரும் இந்நாட்டு
கஞ்சன்
எல்லோரும் இந்நாட்டு
முனிவன்
எல்லோரும் இந்நாட்டு
முரடன்
எல்லோரும் இந்நாட்டு
ஆசிரியன்
எல்லோரும் இந்நாட்டு
மாணவன்
எல்லோரும் இந்நாட்டு
கிழவன்
எல்லோரும் இந்நாட்டு
குழந்தை
எல்லோரும் இந்நாட்டு
மன்மதன்
எல்லோரும் இந்நாட்டு
சந்நியாசி
எல்லோரும் இந்நாட்டு
வண்ணான்
எல்லோரும் இந்நாட்டு
நாவிதன்
எல்லோரும் இந்நாட்டு
உழவன்
எல்லோரும் இந்நாட்டு
குயவன்
எல்லோரும் இந்நாட்டு
நெசவாளன்
எல்லோரும் இந்நாட்டு
வண்டிக்காரன்
எல்லோரும் இந்நாட்டு
நடிகன்
எல்லோரும் இந்நாட்டு ரசிகன்
----------
கவிஞ்ஜரே!
ReplyDeleteவசதியாகவும் பாதுகாப்பாகவும் மிகுந்த கவனத்துடனும், 'எல்லோரும் இந்நாட்டு கவிஞ்ஜன்' என்பதைத் தவிர்த்தமைக்கு வாழ்த்துகள்.
இப்படிக்கு,
எல்லோரும் இந்நாட்டு கமென்டன்