Friday, 8 December 2023

TEDx Talk at Saveetha Pupil school

This TEDx talk has been uploaded to Youtube - you can see it here 


 

-----

I am one of six speakers this Sunday December 10th at the TEDx conference at Saveetha Pupil school. It is a ticketed event and the registration form and ticket details are in the link below:

Embark on a journey of curiosity, change, and limitless possibilities at TEDxThe Pupil International School Youth's 'Prakriti – Embracing the Change'. Our visionary speakers will ignite your mind with inspiring perspectives and groundbreaking ideas. Be a catalyst for transformation. Secure your spot and be part of the evolution! 🌍
:
📅 Date: Dec. 10th 2023
🕒 Time: 4:00 pm to 7:30 pm
📍 Location: The Space, The Pupil auditorium
:
👉 Book Your Seat:
Kindly note that seats are limited, so don’t miss the opportunity!




Sunday, 3 December 2023

எங்கள் ஊர் கல்வெட்டு

சாலையோரம் புதர்களுக்கு இடையே ஒரு கல். மரத்தோரம் கேட்பாரற்று  உள்ள இந்த கல்லில் ஒரு கல்வெட்டு இருப்பதாக ஒரு பழைய தொல்லியல் கல்வெட்டு நூலில் குறிப்பு. அறுநூறு ஆண்டுகளுக்கு மும்பு ஒரு மன்னன் சூரிய கிரகண நாளொன்றில் சில பிராமணர்களுக்கு ஒரு கிராமத்தை பிரம்மதேயமாக தானம் கொடுத்தான் என்பது கல்வெட்டின் சாராம்சம். 

தொல்லியல் நூலில் ஒரு விவசாயி பெயர் குறிப்பிட்டு அவர் வயலில் இந்த கல்வெட்டு இருப்பதாகத்தான் குறிப்பு. வயலும் வாரிசுகளும் அகன்று சாலையும்  சில வீடுகளும் ஒரு சிறு பள்ளிக்கூடமும்.


உதயகுமார் என்பவர் இந்த தொல்லியல் நூலை படித்துவிட்டு இந்த கல்வெட்டை தேடி சென்றார். பெங்களூரில் பல தலைமுறைகளாக வாழும் அவருக்கு வரலாற்று ஆர்வமும் கல்வெட்டு தேடும் ஆர்வமும் ஆழமாக தொற்றிக்கொண்டுவிட்டது.

அந்த கல்வெட்டு உள்ள கிராமத்தில் எங்கே தேடுவார். அங்கே ஒரு பள்ளி முதல்வரை சந்தித்து ஏதாவது பழைய தகவல் கிடைக்குமா என்று விசாரித்து பார்க்கிறார். எங்கள் கிராமம் ஒரு குக்கிராமம் என்பதை தவிற அவர் வேறொன்றும் சொல்லத்தெரியாமல் இருக்கிறார். 

”உங்கள் குக்கிராமம் வரலாற்றில் குக்கிராமமே இல்லை - இங்கே ஒரு பிரமதேயம் நிறுவப்பட்டு, ஒரு கல்லூரியே நடந்திருக்கிறது. வேதமும் தர்ம சாத்திரமும் அதை ஒட்டிய பற்பல கலைகளும் சாத்திரங்களும் இங்கே கற்பிக்கப்பட்டன. இங்கே அருகில் தான் பெங்களூரு பல்கலைக்கழகம் இருக்கிறது, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று உதயக்குமார் கேட்கிறார்

பள்ளி முதல்வர் பரவசத்துடன் ”எப்பேர்பட்ட எவ்வளவு பெரிய பல்கலைகழகம் சார். எங்களுக்கு பெருமை தானே,” என்று மலைக்கிறார்.

“இந்த பல்கலைகழகம் நிலைக்கும் பெங்குளூரை குக்கிராமம் என்று சொன்னால் தகுமா?”

மிரண்டு போகிறார் பள்ளி முதல்வர் - “நீங்க என்ன சொல்ல வரீங்க?”

“பல்கலைகழகம் கட்ட அரசாங்கமும் பெரும் செல்வந்தர்கள்  எல்லாம் நிலம், பணம், பொருள் தானம் கொடுத்திருப்பார்கள் அல்லவா? அதன் நினைவாக அடிநாட்டுக் கல்லில் ஒரு பதிவுப்பலகை செதுக்கி இந்த தானங்கள் கொடுத்தவர்களின் பெயர் பொறித்து முக்கிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அல்லவா?”

”ஆமாம் நிச்சயமாக”

“பெங்களூரு பல்கலைக்கழகம் நிறுவும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் உங்கள் குக்கிராமம் ஒரு முக்கிய கல்லூரி. இந்த கிராமத்தில் எழுத படித்தவர்கள் வாழ்ந்தார்கள் என்பதன் மிகப்பழைய வரலாற்று குறிப்பு அந்த கல்வெட்டு. அதைத்தேடி வந்திருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது இந்த வயல் அதிலுள்ள கல்வெட்டு இதை பற்றி தகவல் தெரியுமா? அல்லது யாரையாவது கேட்டு சொல்லமுடியுமா?”

விருவிருப்பாக உற்சாகமாகி பள்ளிமுதல்வர் தன்னால் முடிந்ததை செய்கிறார். இந்த புதரில் இந்த கல்வெட்டை கண்டுபிடித்த உதயகுமார் தன் முயற்சிகளை தொடங்குகிறார். யந்திரங்களை வைத்து புதர்கள் களையப்படுகின்றன. ஊர்மக்கள் ஆர்வம் பெருகுகிறது.  முழுதாக கல்வெட்டு சாசனம் மீண்டும் படிக்கப்பட்டு, நாங்கள் ஒரு குக்கிராமம் அல்ல வரலாற்று புகழ்பெற்ற பிரம்மதேயம் என்று ஊரே விழாக்கோலம் பூணுகிறது. 

மீட்கப்பட்ட கொங்காதிபுரம் கல்வெட்டு


விழாக்கோலம்

கல்வெட்டுக்கு மரியாதை செலுத்தி மாலை அணிவிக்கப்பட்டு, ஒரு திருவிழாவே நடக்கிறது. இந்த கிராமத்திலேயே அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கல்வி பயின்ற வரலாற்றில் பெருமிதம் கொண்ட ஒரு தாய் தன் சிறு குழந்தைக்கு முதல் எழுத்து பயிற்சியை கல்வெட்டு எழுத்தில் விரலை வளையவைத்து பழக்குகிறாள். விஜயதசமி நாள் அன்று நம் மரபில் முதல் முதல் ஒரு குழந்தைக்கு அரசியில் அ என்று எழுதி பழக்குவர். சம்ஸ்கிருதத்தில் கன்னடத்திலும் இதை அக்ஷராப்யாசம் என்பர் (எழுத்து பயிற்சி என்றே பொருள்). இதை கண்டு உள்ளம் பொங்கும் மகிழ்ச்சியில் பள்ளி முதல்வர் படம் எடுத்து உதயகுமாருக்கு அனுப்புகிறார்.

கல்வெட்டில் எழுத்து பயிற்சி


சென்ற வெள்ளிக்கிழமை நவம்பர் 24 அன்று பெங்களூரு அம்ருதா கல்லூரியில் ஆரியபடனின் குட்டகா கணித முறையை பாடமாய் நடத்த என்னை அழைத்தனர். கொஞ்சம் நேரம் இருந்தால் எங்கள் மிதிக் சொசைட்டிக்கு வந்த நாங்கள் செய்யும் பணியை பார்க்கலாமே என்று உதயகுமார் அழைத்தார். சனிக்கிழமை இரண்டு மணிநேரம் உதயகுமார் உரையில் மெய்மறந்து மூழ்கினேன். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற....

படங்கள் குடுத்தவர் உதயகுமார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் அரங்கில் உதயகுமார் பெங்களூரின் கல்வெட்டுகள் என்ற தலைப்பில் 2018ல் உரையாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

வரலாற்று கட்டுரைகள்


Sunday, 1 October 2023

Swami Vivekananda Rural Community College

I visited the Swami Vivekananda Rural Community college near Pondichery with prof Swaminathan and his wife on Monday September 25th.

This is being run as a technical education center for lower middle class students who struggle to continue education for financial or other reasons. The college offers practical training in various mechanical, electrical and computer engineering to their 150 students. Their labs are now sponsored and equipped by companies like Dell Siemens Renault Yamaha etc. 

Students learn such skills as 

  • repairing or servicing motorbikes, scooters, cars including 
  • repairing and servicing plumbing equipment
  • software skills such as Microsoft Office, Tally
  • repairing and servicing desktop and laptop computers and their electronics
  • design of pamphlets posters invitations programs etc
  • medical assistance including for elderly people, pregnant women

Several of these students go on to become entrepreneurs, while quite a few find employment in these companies or others around Pondichery. Several girls are also enrolled, and there is an entire room of both mechanical and electrical sewing machines where they learn various tailoring and embroidery techniques.

We were given a thirty minute tour of several of the labs and classrooms, by a member of the staff Mr Santosh. His pride in the service he was doing and the success of some of the college's students was palpable in his voice. Since we arrived late in the day most of the students had left for the day, and we only spoke very briefly to one student.

The college was founded by Mr Subramaniam, a former colleague of Prof Swaminathan at Delhi, who literally asked for five and ten rupees donations to start this college several years ago. Mr Subramaniam's whole family including wife, son and daughter in law are engaged full time in running this college. They say they dont seek or take any assistance from government organizations. Mr Santosh mentioned that besides teaching the skills they also give basic etiquette training, as in dressing properly, showing up with a presentable appearance, proper behaviour and speech etc.

The college reminded me somewhat of Sevalaya's Mahakavi Bharathi school near Thiruninravur, run primarily by the efforts of Mr Muralidharan.

I must confess, that while the efforts of the founders of such charitable organizations dedicated to education are extremely laudable, I wonder if they are not taking on too big a challenge, trying to outdo what state or local governments are providing with a much larger financial base. I wonder about the sustainability of these ventures past the energetic lives of their founders or most active organizers. Then it occurs to me even governments and private companies have exactly the same issue - in fact, thanks to elections, governments have even briefer tenures : it is the bureaucracy that carries on the larger and somewhat onerous task. Regardless of my prejudice or skepticism they seem to be doing an amazing job. 



Main building

Plumbing components



Chemistry laboratory

Car internals 

Computer circuit board

Body part models for paramedical training




School Education in Tamilnadu - My translation of Jeyamohan's essay 

Education - a Sanskrit proverb


Thursday, 31 August 2023

மோகனச் சுவை

தியாகராய நகர் தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை அரங்கில் இந்திரா பார்த்தசாரதிசிலப்பதிகாரத்தை பற்றி பேசிய நாள். கடைசியில் அவர் மேடை இறங்கி ரசிகர்களை சந்தித்தப்போது, ஒருவர் “என்னை தெரிகிறதா?” என்று கேட்டார். பார்த்தசாரதி தயங்க, அவர் “சார்வாகன்” என்று லேசாக சிரித்துக்கொண்டே தன் பெயரை தெரிவித்தார். அது அவரது இயற்பெயர் அல்ல, சிறுகதைகள் எழுத சூட்டிக்கொண்ட புனைப்பெயர். தன்னோடு வந்திருந்த தன் சகதோரரை அறிமுகம் செய்தார்.

சிலப்பதிகார சிக்கல்கள்- இந்திரா பார்த்தசாரதி உரை
சார்வாகன் முன்வரிசை,
மோகன் ஹரிஹரன் நடு வரிசை
மியூசிக் கண்ணன் பின் வரிசை

தம்பி கொஞ்சம் நடிகர் நாசர் சாயல். அப்பொழுது அவர் பெயர் நினைவில்லை; ஆனால அந்த ஆண்டு இறுதியில் த.ப.ஆவின் கலையுலாவில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்து, பேரா சாமிநாதனிடம் சில தகவல்களை கேட்டுக்கொண்டார். அக்டோபாரில் கலையுலா உரைகள் தொடங்கியபோது அமெரிக்காவில் இருந்து ஈமெயில் அனுப்பி, தன் உதவியாளரை (அவர் பெயரும் சாமிநாதன்) அனுப்பி வைத்தார். வாராவாரம் பினாமியாக பாவம் அந்த சாமிநாதன் எங்கள் கூட்டங்களில் கலந்துகொண்டார்.

ஓரிரண்டு மாதம் கழித்து நேரிலேயே வந்தார் சார்வாகனின் தம்பி. தன் பெயர் ஹரிஹரன் என்றார். மெதுவாக, ஹரிஹரன் என்பது தனது தந்தையின் பெயர், ஆனால் தானும் தன் மூன்று சகோதரர்களும் தங்கள் இயற்பெயரை சொல்லாமல் தந்தை பெயரான ஹரிஹரன் என்றே அறிமுகம் செய்வது வழக்கம் என்றார். என் பெயர் மோகன், நான் ஒரு ஆர்கிடெக்ட் என்றார்; சகோதரர் சார்வாகன் என்றார். அவரை இந்திரா பார்த்தசாரதி கூட்டத்தில் பார்த்த நினைவிருக்கிறது என்றேன். திருநெல்வேலி சுற்றியுள்ள தென்பாண்டி தலங்களுக்கு அந்த ஆண்டு கலையுலா. ஒரு சில சொதப்பல்களாயினும் மகிழ்வோடு கலந்துகொண்டார். அடுத்த பல ஆண்டு கலையுலாவிலும் கலந்துகொண்டார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிகழ்வுகளில் மாதாமாதம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முகநூலில் நட்பாயினோம்.

கூவம் நதிக்கரையில்
செஞ்சி பெருமாள் கோவில்

எழுத்தாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் தொடங்கிய கூவம் கலாச்சார வரைப்பட திட்டத்தில் கூவம் நதிக்கரை வரலாற்று சின்னங்களை தேடி பயணங்கள் தொடங்க, அதிலும் மோகன் ஹரிஹரன் பங்கு கொண்டார். நான் ஒரு மாதம் அமெரிக்க பயணம் செல்வதை கேட்டு, என் மகன் மருமகள் லாஸ் ஏஞ்ஜலீசில் உள்ளனர்; என் மகள் மருகன் பிலடல்பியாவில் உள்ளனர், அங்கே சென்றால் நிச்சயம் அவர்களை பார்க்கவும் என்று உபசரித்தார். ஆறு ஏழு மாதங்கள் பழக்கத்தில் அவருடைய நட்புணர்வும் விருந்தோம்பலும் வியக்கவைத்தது. லாஸ் ஏஞ்சலீசில் அவர் மகனை பார்க்க இயலவில்லை. ஆனால் அமெரிக்க தலைநகர் வாஷிங்க்டனுக்கு சென்று என் உறவினன் ராமாநுஜனுடன் ஒரு வாரம் நானும் என் தம்பி ஜயராமனும் தங்கினோம். பிலடெல்பியாவிற்கு சென்று பெஞ்சமின் பிராங்கிளின் அருங்காட்சியகம் பார்க்கவேண்டும் நியூ ஜெர்சிக்கு சென்று தாமஸ் எடிசனின் ஆராய்ச்சிசாலை பார்க்கவேண்டும் என்று எனக்கு அந்த சமீபத்தில் ஆர்வம் பெரிதும் வளந்திருந்தது. 1990களில் அமெரிக்காவில் வாழ்ந்த போதே கொஞ்சம் ஆசை; ஆனால அப்பொழுது விடுமுறை கிடைத்தால் உறவினர்களை பார்க்கும் ஆசையும் இயற்கை காட்சிகளை பார்க்கும் ஆசையும் அதிகம் இருந்ததால் அங்கே செல்லவில்லை. இந்தியாவுக்கு திரும்பிய பின் கலை இலக்கிய வரலாற்றின் மீது வந்த ஆர்வம் போல் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு மீதும் ஆர்வம் சிந்தை வனத்தில் அக்னிக்குஞ்சாய் தணல் எரிந்தது. பிலடெல்பியாவிக்கு ஆர்த்தி அருண் இல்லத்திற்கே அன்புடன் வரவழைத்தனர். அவர்கள் சுட்டி குழந்தைகளின் துடிப்போடு, ஒரு நாள் பெஞ்சமின் பிராங்கிளின் வாழ்ந்த இல்லத்தையும் அவருடை அறிவியல் படைப்புகளையும் பார்த்தோம்.

பிலடெல்பியா - 2015ல் ஆர்த்தி அருண் குழந்தைகளோடு
நான், ஜெயராம், ராமானுஜன்  

முதல் நாள் இரவு அவர்கள் இல்லத்தில் விருந்து. தந்தை மோகன் வரைந்த ஓவியங்கள் சுவர்களை அலங்கரித்தன! விசித்திரம் என்னவென்றால் திருவான்மியூரில் உள்ள மோகன் சித்ரா தம்பதியினர் இல்லத்துக்கு செல்வதற்கு முன்பே பிலடெல்பியாவில் உள்ள ஆர்த்தி அருண் இல்லதிற்கு நான் சென்றதே.

இந்தியாவிற்கு வந்த பின் தானும் தன் மனைவியும் எகிப்து சுற்றுலா பயணம்  செல்வதாக கூறினார். என்னையும் அழைத்தார். போக ஆசை தான். ஆனால் ஒரு மாத அமெரிக்கப் பயணத்திற்கு பின் என் பயண ஆவல் குறைந்திருந்தது. ஆனால் தயக்கத்துடன் அழைப்பை மறுத்துவிட்டேன். பெரிய இழப்பாக இன்று தோன்றுகிறது. கூவம் பயணங்களிலும் பின்னர் அடையாறு பயணங்களிலும் சந்தித்துக்கொண்டோம். சார்வாகனோடு ஒரு சந்திப்புக்கு அழைத்தார், அதற்கு செல்ல முடியவில்லை; மற்றொரு இழப்பு.

தான் பிறந்த ஆரணிஎன்ற ஊரைப்பற்றி நவம்பரில் த.ப.அ-வில் மோகன் ஹரிஹரன் ஒரு உரையாற்றினார். டிசம்பர் மாதம் நடந்த பேச்சுக்கச்சேரியில் கலந்து கொண்டு மிகவும் ரசித்தார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளைக்கு ஒரு பெரிய தொகையை நன்கொடையாய் அளித்தார்.

ஆர்கிடெக்ட் ஸ்ரீநிவாசன் என்று தன் குருநாதரை பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசுவார். தமிழ்நாட்டில் பல சினிமா அரங்ககளை வடிவமைத்தவர் அந்த ஸ்ரீநிவாசன். சவீதா பலகலைகழகத்து நிறுவனர் மற்றும் சான்சிலர் வீரையன் அவர்களோடு மோகன் அவர்களுக்கு நாற்பது ஆண்டு நட்பு. வீரையனின் மகளே, டாக்டர் சவீதா. ஸ்ரீநிவாசனின் பொதுப்பணிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்திய மோகன், சவீதா கல்வி நிறுவனங்கள் சாதனையாளர்களை கௌரவிக்க நடத்திய விழாவில், குருநாதர் ஸ்ரீநிவாசனுக்கு ஒரு சிறப்பு விருது வழங்க சிபாரிசு செய்தார். சான்சிலர் வீரையன் அந்த ஆசையை நிறைவேற்றி வைத்தார்.

அவர்கள் “தி பியூப்பில்” என்ற ஒரு பள்ளிக்கூடத்தையும் நடத்துகின்றனர். அதற்கு ஆர்க்கிடெக் மோகன் ஹரிஹரன் தான். அந்த பள்ளிக்கூடத்தை பார்க்க, அதன் கட்டுமானத்தின் பல பிம்பங்களை விளக்க ஒரு கட்டிட உலா நடத்தினார்; மிகச்சிறப்பான அனுபவம். அரைகளுக்குள்ளே வரும் இயற்கை வெளிச்சத்திலிருந்து, வெப்பத்தணிக்கைக்கு ஏற்ற செங்கல், குழந்தைகளின் மனம் கவரும் வண்ணங்கள், ஓவியங்கள் சித்திரங்கள், என்று பல சித்தாந்தங்கள் மிளிர்ந்த கலை. த.ப.அ மற்றும் அது போன்ற கலை மரபு பேச்சாளர்கள் சவீதா பள்ளி மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சிபாரிசு செய்தார். டாக்டர் சவீதா அவர்களே இதை நிறைவேற்றினார். பேராசிரியர் சாமிநாதன், பத்ரி சேஷாத்ரி, நான், மற்றும் பல கலை ஆர்வலர்கள்  பள்ளி மாணவர்களிடம் உரையாற்றினோம்.


பியூப்பில் பள்ளியில் மோகன் ஹரிஹரன் விளக்கம்

பியுப்பில் பள்ளியின் செங்கல் கட்டுமானமும் 
நீச்சல் குளமும்

2017ல் பியுப்பில் பள்ளி ஆண்டு விழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். நான் மயிலை சி.ஐ.டி காலனி தொடக்க பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்தப்போது என் பெற்றோர் சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்டனர். அந்த கௌரவம் எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. சவீதா கல்லூரியோடும் இதனால் தொடர்பு ஏற்பட்டது. சவீதா பொறியியல் கல்லூரி இயக்குனர் மருத்துவர் ராஜேஷ், டாக்டர் சவீதாவின் கணவர். அவர்களது அழைப்பில் முதலாமாண்டு இஞ்சினியரிங் மாணவர்களின் ஓரியண்டேஷன் விழாவில் உரையாற்றினேன்.

இதற்குள் வராகமிகிரன் அறிவியல் மன்றம் தொடங்கியதால், கட்டுமான கலை பற்றி மோகன் அவர்களை உரையாற்ற அழைத்தோம். சிறப்பாக உரையாற்றினார். அவரது மற்றொரு மூத்த சகோதரர் கர்ணல் ரமணி ஹரிஹரன் கூட்டத்திற்கு வந்திருந்தார். ராணுவ உளவுத்தொழில் பற்றி  தான் ஒரு உரையாற்ற தயார் என்றார்; பின்னர் தமிழிலேயே உரையளித்தார். இளைய சகோதரர் சிவகுமார் ஹரிஹரன் த.ப.அ-வின் சாஞ்சி-மத்திய பிரதேச கலையுலாவில் கலந்துகொண்டார். சமீபத்தில் அவர் நிர்வகிக்கும் பாபாஜி பள்ளிக்கூடத்தில் என்னை பேச அழைத்தார். இப்படி அந்த குடும்பத்தோடு நீளமாக அகலமாக உறவு வளர்ந்தது.

வராகமிகிரன் அறிவியல் மன்றத்தில் நாங்கள் நடத்திய இந்திய வானியல் கணித வகுப்பிற்கு, டாக்டர் ராஜேஷ், டாக்டர் சவீதா, இரு மகள்களோடு வந்து சேர்ந்துகொண்டனர். ஆடிப்போய்விட்டேன். அடிக்கடி மயிலையில் நடக்கும் த.ப.அ நிகழ்வுகளுக்கும் கோட்டூர்புரத்தில் நடந்த வ.அ.ம நிகழ்வுகளுக்கும் அவர்கள் வருவதுண்டு. கல்வியிலும் கலையிலும் மரபிலும் அவர்களுக்குறிய ஆர்வம் அசாத்தியம். இவ்வார்வத்திற்கு மோகன் ஹரிஹரன் ஒரு முக்கிய தூண்டுகோள்.

சவீதா கல்லூரி வளாகத்தில் ஒரு முருகன் கோயில் கட்டினர். சிலைகளையும் மாடியில் உள்ள சிற்றாலயங்களையும் ஸ்தபதிகள் செய்தனர். ஆனால் கோயில் வளாகத்திற்கு மோகன் தான் ஆர்க்கிடெகட். கும்பாபிஷேகத்திற்கு முன் அவர் தலைமையில் ஒரு உலா நடத்தினார். அருகே கட்டிவந்த புதிய மருத்துவ வளாகமும் அவரது கைவண்ணம். அதையும் பார்த்து களித்தோம். 

கொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட கல்லூரிகள் வழக்கம்போல் ஆகஸ்டு மாதம் தொடங்காமல் டிசம்பர் மாதம் தொடங்கியபோது. இந்திய வானியல் கணித பாடத்தை ஒரு கோர்ஸாக அவர்கள் சவீதா பொறியியல் கல்லூரியில் நடத்த பேராசிரியர் மணிமாறன் வழியாக அழைப்பு விடுத்தனர். அவர்களின் வர்புறுத்தலில் இன்வென்ஷன்ஸ் அண்டு டிஸ்கவரீஸ் என்று ஒரு பாடத்தையும் இணையம் வழியாக இரண்டு செமஸ்டரும், 2021ல் ஊரடங்கு விலகிய பின் நேரே கல்லூரி வளாகம் சென்று நடத்தி வருகிறேன்.

இந்திரா பார்த்தசாரதி உரைக்கு வந்த மோகன் ஹரிஹரன் வழியாக வேலைவெட்டியாற்ற நான் மீண்டும் வாரம் ஒரு நாள் வேலை செய்யும் நிலைக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

மோகன் சித்ரா தம்பதியர் சதாபிஷேகம் -
நண்பர்கள் உமையாள் சிவசங்கர் பாபுவுடன் நானும்

மோகன் அவர்களின் சித்திரங்கள்

சமீபத்தில் மோகன் சித்ராவின் மகன் பிருத்வி மகள் ஆர்த்தி மற்றும் குடும்பத்தினர் சென்னைக்கு வந்து அவர்களது சதாபிஷேகமும் ஐம்பதாண்டு கல்யாண வாழ்க்கையும் சேர்த்து கொண்டாடும் வகையில் ஒரு விழா நடத்தினர். என்னையும் தன் நெருங்கிய நண்பர்களில் ஒன்றாய் அழைத்தார்கள். வாழ்வில் அமைந்த பாக்கியங்களில் இவர்களது நட்பு, அன்பு, அக்கறை, உபசரிப்பு, ஆசிர்வாதம் எல்லாம் சேர்க்கை.

ஆகஸ்து முப்பது மோகன் ஹரிஹரனின் பிறந்தநாள்.

பல்லாண்டு பல்லாண்டு !!

சொந்த கதை பதிவுகள்

கிளிவாழை கவிதைகள்

Thursday, 10 August 2023

Watching trains

Most people like to watch the rain, watch a sunrise or sunset, watch wildlife, flowers etc. I like some of these activities watching nature or immersing myself in such, also, but I enjoy the ordinary pleasures of simple engineering and transportation also.

I enjoy riding in buses even when I own a car and can afford to take an auto or taxi. I enjoy traveling in trains. Especially in India. I dont mind that most of our trains are not as fast Japanese or Chinese bullet trains. Slowness is not that bad a feature in Indian trains, it helps us enjoy the countryside so much. Mile after mile of rice field and cotton field and lakes and rivers and canyons mountains, India is a pleasure to ride through, looking out the windows. Even when I travel in AC compartments, in trains, I sometimes stand in the corridor or near the door, the wind and dust whipping hair and skin - almost always there are open doors in most trains, except at night. We get dirty, but that happens anyway, wherever we travel.

Perhaps one of my stranger pleasures is simply watching trains sitting on a railway platform. Our family used to live in Mylapore and when we visited our chithi's family in KK Nagar, one of the delights was the ten seconds of the bus 12 E going over the Kodambakkam bridge and perhaps a fleeting glimpse at the trains running below. Sometimes we would take 12F (which later became 12G) which goes through Mambalam not Kodambakkam, and so we would sometimes watch a train cross the bridge on Brindavan street, and our bus would sometimes go under it. Loved the thunderous noise.

When we first moved to Kodambakkam, I was in class 12, and it was a thrill that I could cross the bridge every day on the way to my school in Royapettai. Either by bus or by bicycle.  The first weekend, I actually took my kid brother and we simply went to the Kodambakkam railway station and sat on a bench on the platform for an hour or so watching trains go by.

Train on Madras-Gummidipoondi line near Chennai Central


Triplicane cricket ground and Marina beach view from MRTS EMU

Between 2000 and 2005 or so, when I had ambitions of becoming a writer, but couldnt complete anything I often went to Mambalam or some other suburban railway station in the evenings and simply sat on the bench, sometimes thinking, sometimes writing. I never became a writer, but enjoyed the moments on the railway platforms, watching people walk around, finishing their days or starting them.

I enjoy railway platforms as much as the beach or some riverside or lakeside. Perhaps very odd in a city with such a magnificent beach. Sometimes when I woke up early I would go early and simply watch trains. (Being a jobless bachelor was a major factor enabling such activities). 

Since the advent of Youtube and the smartphone and extremely cheap and plentiful bandwidth, I now have the benefit of vast number of videos of similar minded people. In fact, out there in smaller towns across India, are hundreds perhaps thousands of train lovers with far more dedication and passion, who post videos. There are also aeroplane watchers who take videos of airplanes taking off and landing at various airports, but this is very difficult in India, as most airports are restricted and you can only watch such these while you are a passenger yourself. I enjoy watching planes land or take off and there are some fantastic videos of these also.

There are also train videos of travelers in different countries, and Youtube videos are a great way to discover how different each culture is. America and Europe have such thin populations, and Africa and South America have so few trains, they are not quite as fascinating.  

But Indian trains and the kind of videos vloggers make are astounding. There are videos of trains merely arriving or leaving, of trains crossing platforms, people crossing railway tracks just ahead of trains, passenger trains racing, overtaking, zooming past, scenic routes, and so many other fascinating aspects of life and technology, There are viewers who study all the train locomotives and the sheds they are attached to (Erode, Royapuram, Itarsi, Vijayawada etc), their categories of WAP7, WAG5, WAM4 (where P,G,M stand for Passenger Goods and Mixed respectively; WDG WDP etc (D in the middle is diesel engine, A is AC engine); the W stands for broad guage, Meter guage trains had the letter Y. The Beach-Tambaram EMU line was converted from meter guage to broad guage about ten years back, almost the last of the meter guage trains in Tamilnadu. I rode those for nostalgia. The numbers at the end 4,5,7 etc stand for horsepower of the engines. 4 is 4000 HP, 7 is 7000 HP. Excitement prevails over the new 12000 HP engines of Indian Railways

All railway lines south of Madras - from Madras to Madurai and Kanyakumari or Tenkasi or Rameshvaram were meter guage in my college days. Only the railways to the west - Bangalore and Coimbatore - or to the north - Bombay and Delhi and such were broad guage before that. Some trains like those at Ooty and Darjeeling still run on narrow guage rails.

Trains crossing on parallel tracks



Engine coupling to train


The level of their videography, the editing, labeling, fan following (even worldwide) is amazing. This is a world that most people dont know exists. One can see similar videos from other countries also, but like I said there are so few people in those stations or trains, except in very large central stations of cities like London or Paris, they are not as interesting. But one gets very amazing views. 

There are some very popular but bizzare trains, from Thailand, Vietnam, and such countries, going through very narrow markets, between rows of housing, etc. There are weird morning commute trains in China and Japan where there are train packers who push people into trains. I think we may see such phenomena soon in India. I once showed such videos to some school kids in Konerirajapuram and they howled with delight. Perhaps you might like them too.








Related Blogs