Kanchi Kailasanatha temple காஞ்சி கைலாஸநாதர் கோயில் |
ராஜசிம்ம
பல்லவன் கட்டுவித்த காஞ்சி கைலாசநாதர் கோவிலில் பல ஸமஸ்கிருத கல்வெட்டுகள் உள்ளன. மூலவர்
சந்நிதியை சுற்றி பல உபசந்நிதிகளை காணலாம். ராஜசிம்மன் தன் 300 விருதுகளை
இவற்றில் செதுக்கியுள்ளான். இந்த மணற்கல்
(சரியான் சொல்லை தேடவேண்டும்) கோவிலில் உபசந்நிதிகளில் ஒரு கருங்கல் பலகையும் காணலாம்.
On this granite slab, the king's title is inscribed in DevaNagri, which was used to write Sanskrit in North India and is used to write Hindi and Sanskrit now. Just below it, on the sandstone, the king's titles are inscribed in Pallava Grantha, which was used to write Sanskrit in South India from around the 6th century. This is believed to be the mother script for Telugu, Kannada, Malayalam and Southeast Asian scripts. On the lowest layer, are inscriptions in calligraphic
கருங்கல்லில்
தேவநாகரியிலும், அதன் கீழே பல்லவ கிரந்த லிபியிலும், அதன் கீழே அலங்கார பல்லவ கிரந்த நாகரி லிபியிலும், ராஜசிம்மனின் விருதுகளை காணலாம். தேவநாகரி வட இந்தியாவில் ஸமஸ்கிருதமும்
இன்று ஹிந்தி எழுதப்படும் லிபி – ரயில் நிலையங்களிலும் ரூபாய் நோட்டிலும் காணலாம்.
பல்லவ கிரந்தம் தென்னாட்டில் ஸமஸ்கிருதம் எழுத ஐந்தாம் நூற்றாண்டு முதல் பயன்பட்ட லிபி.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளின் லிபிகளும், தாய்லாந்து, பர்மா, கம்போடியா, மலேசியா,
இந்தோனேசியா போன்ற நாட்டு மொழிகளின் லிபிகளும் இதிலிருந்த வந்தவை என்மனார் புலவர்.
Granite Slab - DevaNagari inscription கருங்கல் - தேவநாகரி கல்வெட்டு |
Sandstone - Pallava Grantha inscription - SriAtyudaara: மணற்கல் - பல்லவ கிரந்த கல்வெட்டு ஸ்ரீ அத்யுதார पल्लव ग्रन्थलिपि श्री अत्युदारः |
Calligraphic Nagari - "Sri Kalankarahita:" "ஸ்ரீகலங்கரஹித:" -அலங்கார லிபியில்
अलङ्कार नागरि लिपि – श्री कलंकरहितः
|
கல்வெட்டுகள்
மிகவும் சேதமானதால், வெவ்வேறு உபசந்நிதிகிளிருந்து தெளிவானதை பொறுக்கி காட்டியுள்ளேன்.
மூன்றிலும் சொற்கள் வேறானவை. கீழே உள்ள அலங்கார கிரந்தம் நாகரி அற்புதம் – கொடிகளும் இலைகளும்
பறவைகளையும் சீராக எழுத்தை அழகூட்டி மிளிர்வதை பார்க்கலாம்.
இந்த
அழகை ரசித்து, தோழி பூஷாவலியிடம் இந்த எழுத்தையும், மல்லை தர்மராஜ ரதத்தில் உள்ள கிரந்த
எழுத்தையும் வரைந்து கொடுக்குமாரு நான் கேட்க, அந்த சட்டையை நான் அணிந்துகொண்டு, டக்கர்
பாபா பள்ளியில் தமிழ் பாரம்பரிய அரக்கட்டளையை அறிமுகம் செய்யும் படம் காணலாம்.
Correction: I had earlier captioned the calligraphic inscription in the sculpture and on my T-shirt as "Sri Kankalahasta:" After going through Gift Siromoney's translations provided by Vijay Kumar, I now believe it is "Sri Kalankarahita:" (which means Immaculate or Spotless).
திருத்தம்: கல்வெட்டிலும், என் சட்டையிலும் உள்ள அலங்கார பல்லவ கிரந்த லிபியை, நான் முன்பு தவறாக “ஸ்ரீ கங்கலஹஸ்த:” என்று கூறியிருந்தேன். விஜய்குமார் தந்த கிஃப்ட் ஸிரோமணியின் விருது மொழிபெயர்ப்புகளை படித்தபின், இந்த சொல் “ஸ்ரீகலங்கரஹித:” ("மாசிலா") என்று நம்புகிறேன்.
Second Correction August 6, 2014: What I thought was calligraphic Pallava Grantha is actually Calligraphic Nagari script. I have used strikeouts of the word
இரண்டாம் திருத்தம் ஆகஸ்டு 6,2014: அலங்கார பல்லவ கிரந்தம் என்று நான் நினைத்தது, அலங்கார நாகரி லிபி. குறுக்குக்கோடிட்டு
good idea - script is so beautiful!
ReplyDeleteThank you so much for the mention Gopu! :)
ReplyDeleteBhusha's INDIA TRAVELOGUE
FASHION PANACHE BLOG
Sandstone : மணற் கற்பாறை
ReplyDelete