ஜப்பான்,
ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா, இத்தாலி, ப்ரான்ஸ் – ஆறு நாடுகள் மட்டுமே கார்களைசெய்வதில் உலகப் புகழும், விசைத்திறனும், பெருஞ்செல்வமும் கொண்டவை. மற்றபடி, சீனா,
மெக்ஸிகோ, ஸ்வீடன், இந்தியா, இங்கிலாந்து(!!), தாய்லாந்து, ஆஸ்திரேலியா, பிரேஸில் போன்ற
மற்ற நாடுகளில் கார் தொழிற்சாலைகள் இருந்தாலும், கார்களில் அந்தந்த நாடுகளின் பெயரும் அடையாளமும்
இருந்தாலும், உலகச்சந்தையில் பெரும் பங்கு இல்லை.
ஆனால்
இன்னாட்டு கம்பெனிகளின் தொழிற்சாலைகள் வெவ்வேறு நாடுகளில் உள்ளன. வெவ்வேறு நாடுகளில்
ஒரே கார் வெவ்வேறு பெயரில் விற்கப்படலாம். ஒரே தொழிற்சாலையில், போட்டி போடும் இரு கம்பெனிகளின்
கார்கள் உருவாக்கப்படலாம்! காரின் பெயரும், லச்சினையும், விலையும் மட்டுமே மாறும்.
1994-ல்
நான் கார் வாங்க நினைத்தபோது கேள்விப்பட்ட ஒரு செய்தி – கலிபோர்னியா தொழிற்சாலை ஒன்றில்
திங்கள், புதன், வெள்ளியன்று செவ்ரலே கம்பெனியின் ஜியோ ப்ரிஸம் கார்களும், செவ்வாய்,
வியாழன் அன்று, டொயோடா கம்பெனியின் கொரோல்லா கார்களும், உருவாக்கப்பட்டு, கடைசி நிலையில்
பெயரும் லச்சினையும் மட்டும் மாற்றப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்படும். கொரோல்லாவுக்கு
செல்வாக்கு அதிகம் என்பதால் அதன் விலை ஆயிரம் டாலர் அதிகம்! இதற்கு நக்கலாக 'Badge
Engineering' – 'லச்சினை பொறியியல்' என்று பெயர்.
இது
எலக்ட்ரானிக்ஸ் துறையில் சகஜம். உதாரணமாக, சிடி, டிவிடி, பென் டிரைவ், செல்போன், டிஜிட்டல்
கேமரா, போன்றவை, சீனாவிலும், சென்னை அருகிலும், FoxConn கம்பெனியின் தொழிற்சாலைகளில்,
தயாரிக்கப்பட்டு, முத்திரை மட்டும் ஸோனி, தோஷிபா, நோக்கியா, டெல் போன்ற முத்திரைகளுடன்
வெளிவருவதும் வாசகர்கள் பலருக்கும் தெறிந்திருக்கும். சிவகாசியில் சோப்பு, பற்ப்சை,
ஷாம்பூ பல வருடங்களாக போலி லச்சினையோடு விற்பனையாவதும் மறத்தமிழர்கள் அறிந்ததே! கார்களை
பற்றிய செய்தி அதிர்ச்சியாக இருக்கலாம்.
இந்த
வரிசையில், ஜேம்ஸ் பாண்ட் பிரபலமான ஆஸ்டன் மார்ட்டின் என்ற ப்ரிட்டிஷ் வெட்டி அளப்பரைக்
கார் – இன்னும் மவுசு குறையாமல் கொடிகட்டி பறக்கிறது. கார் உற்பத்தி துறையில் இங்கிலாந்து
சரிந்து விட்டாலும், பல கார் கம்பெனிகள் அங்கு இன்றும் உள்ளன. ஆனால் ஆஸ்டன் மார்ட்டின்
காரின் “ஸிக்நெட்” வகை கார், அந்த லச்சினை பதித்த டொயோடா கார் தான் என்ற செய்தி, ஃபோர்ப்ஸ்
பத்திரிகையில் வந்துள்ளது. டொயோடா லச்சினைக்கு 17000 டாலர், ஆஸ்டன் மார்ட்டின் ஸிக்நெட்லச்சினைக்கு 45000 டாலர்!!! எந்த மடையன் ஒரு லச்சினைக்கு 30000 டாலர் தருவான்? ஒன்று, அறியா
மடையன், இல்லையேல் அந்தஸ்துக்கு அலையும் மடையன்.
மற்ற கார்களை பற்றியும் அங்கு படிக்கலாம்.
மற்ற கார்களை பற்றியும் அங்கு படிக்கலாம்.
பின்குறிப்பு: எழுத்து, இலக்கணத் திருத்தங்களுக்கு,
நண்பர் குகனுக்கு என் நன்றி.