எழுத இயலாத் தமிழ்
ஜேரட்
டைமண்ட் எழுதிய “துப்பாக்கிகள், கிருமிகள், இரும்பு – சமூகங்களின் ஊழ்” என்ற நூல்
எனக்கு மிகவும் பிடித்தது. வரலாறு, மொழியியல், வேளாண்மை, உயிரியல், மனிதவியல்,
தொல்லியல் என்று பல துறைகளை அறிமுகம் செய்து, விளக்கி, மயக்கி, எண்ணம் சிலிர்க்க வியப்பூட்டியது
அந்நூல்.
2006இல்
திரைக்கதை கட்டுரை சிறுகதை எதுவும் எழுதவராமல் திணறி தவித்தபோது, ஒரு நாத்திக நாரதர்
என் பகற்கனவில் வந்தார். மதச்சார்பற்ற வீணை வாசித்துக்கொண்டே இந்நூலை நீ தமிழாக்கம்
செய்யலாமே என்று சமீபத்தில் லத்தீன மொழியில் உபதேசித்தார்.
நானூறு
பக்க புத்தகம். ஒரு நாளைக்கு பத்து பக்கம் மொழிபெயர்த்தால் நாற்பது நாளில் பணி
முடியும். யாரும் அச்சிடமாட்டார், அச்சிட்டாலும் யாரும் படிக்கமாட்டார், ஆயினும்,
எழுதும் பழக்கமாவது உண்டாகும் என்ற அசட்டு வீரத்தில் தமிழாக்க தொடங்கினேன். முதல்
பக்கமெழுதவே ஒரு நாளானது. ஐந்து பக்க முன்னுரையை மொழிபெயர்க்க ஒரு வாரம் ஆனது.
பற்பல ஆங்கில சொற்களுக்கு எனக்கு தமிழ் சொல் தெரியவில்லை (உதாரணம் – molecule, species, extinct, aborigine, hunter-gatherer, Conquistadore). நன்கறிந்த சில
சொற்களை டைமண்ட் வேறு பொருளில் பயனிக்க (உதாரணம் – selection, domesticate, glorification, radiation, Fertile crescent, Racial difference), அதற்கேற்ற தமிழ்
சொல் என்னவென்று தலைச்சொரிந்து நூலகம் புத்தகக்கடை என்று அகராதி தேடி அலைந்தேன்.
அறிவியல் தமிழ் நூல்கள் மிகச்சிலவே என்று சீக்கிரம் புரிந்தது. இலக்கியக்கூட்டத்திலோ
இணையதளத்திலோ பெ.நா.அப்புசாமி, சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் தவிற எந்த எழுத்தாளர்
பெயரும் எழவில்லை. வீண் முயற்சி என்பது உறுதியானது.
நாமே
ஒரு பட்டியல் செய்வோம் என்று செய்த பட்டியல் இங்கே. என் தமிழ் அறியாமைக்கும்
இயலாமைக்கும் சான்று! விவசாயத்தின் வரலாறு ஒரு அத்தியாயம்; ஐந்து பக்கம். எழுத்தமைதியின்
வரலாறு ஒரு அத்தியாயம்; இருபது பக்கம். இவற்றை முதலில் தமிழாக்க திட்டம். மொழிபெயர்க்கும்
முன் இந்த பட்டியலை உருவாக்கினேன். இதற்கே இரண்டு மூன்று வாராமானது. அதற்கு பின்
அந்த இரண்டு அத்தியாயங்களை தமிழாக்க இரண்டு மாதமானது. ஒரு நாளுக்கு ஒரு பக்கம் தமிழாக்குவதே
பகீரத பிரயத்தனம். வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. பூங்கா, கடற்கரை, கோயில், சிடி
செண்டர் சந்தை, மாம்பலம் பழவந்தாங்கல் அம்பத்தூர் ஆவடி ரயில்வண்டி நிலையங்கள் –
இப்படி பற்பல் பொது இடங்களுக்கு சென்று எழுதினேன். மூன்று மாதத்திற்கு பின் கைவிட்டுவிட்டேன்.
சமீபத்தில் வேறு யாரோ இந்நூலை தமிழாக்கம் செய்து அச்சில் வந்ததை பார்த்தேன். லேசான
மகிழ்ச்சி, லேசான பொறாமை.
நல்ல
வேளை இதை நான் தொடரவில்லை என்ற ஒரு ஆறுதல்.
ஆசியா
|
Climatology
|
வானிலையியல்
|
|
Blacks
|
கருப்பினர்
|
Calibrate
|
|
Bronze age
|
வெங்கலக்காலம்
|
Great ape
|
பெருங்குரங்கு
|
Cargo
|
சரக்கு
|
Fossil
|
|
Continent
|
காண்டம்
|
Flake
|
|
Discovery
|
கண்டுபிடிப்பு
|
பொறிக்கல்
|
|
Diversity
|
வேற்றுமை
|
Standardized
|
|
domestic animals
|
கால்நடை விலங்குகள்
|
Contemporary
|
சமகாலத்து
|
யுரேசியா
|
Great Leap Forward
|
மாபெருந்தாவல்
|
|
ஐரோப்பா
|
Anatomical
|
||
History
|
வரலாறு
|
Voice box
|
குரலுறு
|
Huntering gathering
|
வேட்டை-சேர்த்தல்
|
Hybridization
|
இனக்கலவை
|
Industry
|
தொழில்நுட்பம்
|
Extermination
|
இன ஒழிப்பு
|
Iron age
|
இரும்புக்காலம்
|
Marsupial
|
|
Literacy
|
எழுத்தறிவு
|
Rain-forest
|
மழைவனம்
|
மத்திய அமெரிக்கா
|
Habitable
|
வாழக்கூடிய
|
|
Metal tools
|
உலோக ஆயுதம்
|
Alphabet
|
கசடதபறம்
|
N/S America
|
வட/தென் அமெரிக்கா
|
Syllable
|
கூட்டொலி
|
Native
|
ஆதிவாசி
|
Sign
|
சின்னம்
|
புதுகினி
|
Determinative
|
துணைசின்னம்
|
|
People
|
இனம்
|
Logogram
|
|
Plurality
|
பன்மை
|
Pictogram
|
சித்திரச்சின்னம்
|
Pre-history
|
முன்வரலாறு
|
||
Proximate causes
|
சமீபத்து காரணங்கள்
|
||
Society
|
சமுதாயம்
|
||
Stone age
|
கற்காலம்
|
||
Tame animals
|
அடங்கிய விலங்குகள்
|
||
Technology
|
தொழில்நுட்பம்
|
||
Ultimate causes
|
மூலக்காரண்ங்கள்
|
||
Whites
|
வெள்ளையர்
|
||
Historians
|
வரலாற்று வல்லுனர்
|
||
Aborigines
|
அபாரிஜின்
|
||
Metric
|
அளவுகோல்
|
||
Racial difference
|
இனவேறுபாடு
|
||
glorification
|
புகழ்தல்
|
||
Evolution
|
பரிணாம வளர்ச்சி
|
||
Evidence
|
சான்று
|
||
செழிப்பு பிறை
|
|||
Gene
|
மரபணு
|
||
Natural selection
|
இயற்கை தேர்தல்
|
||
Infection
|
தொற்றுநோய்
|
||
Molecular biology
|
|||
Proto-human
|
|||
Epidemic
|
|||
Linguistics
|
மொழியியல்
|
||
Disciplines
|
துறைகள்
|
||
Fraction
|
பகுதி
|
||
Radiation
|
படர்தல்
|
||
Model
|
|||
Conquistadore
|
|||
Axis
|
|||
Diffusion
|
பழக்கப்பரவல்
|
||
Egalitarian
|
சமத்துவம்
|
||
Sedentary
|
குடியான
|
||
Nomadic
|
நாடோடி
|
||
Chapter
|
படலம்
|
||
Part
|
அத்தியாயம்
|
||
Replacement
|
|||
Expansion
|
பரவல்/படர்தல்
|
||
Colony
|
காலனி
|
||
Colonize
|
ஆதிக்கம்
|
||
Conquest
|
நிலபற்றல்
|
||
Similarities
|
உவமானங்கள்
|
||
Triggered
|
நாணேற்றம்
|
பின்புலம்
நான்
2000த்தில் கணினித்துறையை கைக்கழுவிவிட்டு அமெரிக்காவிலிருந்து
சென்னைக்கு திரும்பி வந்தேன். அங்கிருக்கும் போதே ஆங்கில திரைக்கதை எழுதி சினிமாவும்
தொலைக்காட்சி தொடரும் இயற்ற ஆசை. அறைகுறையாக சில திரைக்கதைகளை எழுதி
வைத்திருந்தேன். அன்று ஒலிபரப்பாகிவந்த Frasier ஃப்ரேசர் என்ற நகைச்சுவை
தொலைகாட்சி தொடருக்கு எழுதிய திரைக்கதை மட்டுமே முற்றும் எழுதிமுடித்தேன். சில
ஏஜண்டுக்களுக்கு அனுப்பினேன், யாரும் சீண்ட கூடவில்லை.
1998ல்
லாஸ் ஏஞ்சலசில் நடந்த ஒரு திரைக்கதை மாநாட்டுக்கு சென்று ஒரு சில தயாரிப்பாளர்களையும், எழுத்தாளர்களையும் சந்தித்து பேசினேன். நான்
சந்தித்ததில் ஃப்ரேசர் தயாரிப்பாளர் பீட்டர் கேசி, மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஷேன்
பிளாக் ஹாலிவுட் பிரியர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
ஆங்கிலத்தில் ஒரு சினிமா திரைக்கதை தமிழில் ஒரு சினிமா
திரைக்கதை எழுதத்தொடங்கி, பாதியில் இன்றும் நிற்கின்றன. சென்னை வந்தபின் வேறு சில
திரைக்கதை நாவல் சிறுகதை எல்லாம் இப்படியே வேகாமல் அடுப்பிலிருந்து
இறக்கிவைத்துவிட்டேன். பொருளியல், உயிரியல், மொழியியல் நூல்களை படித்து வெவேறு
ஆர்வத்தில் மனம்போன போக்கில் வாழ்க்கை. அந்த கட்டத்தில் 2006ல் எழுத்துப்பயிற்சிக்காக
இந்த வினை…
1. தமிழில் பீரியாடிக் டேபிள்
3. ஜல்லிக்கட்டு நடை – ஜூல்ஸ் வெர்ண்
5. நம்புங்க நானும் ஒரு கம்ப்யூடர் ஆசாமி தான்
You can continue your Screenplay from wherever you left
ReplyDeleteI wish you can continue your screen play where u stopped
ReplyDeleteThank you! It may be simpler to write a new screenplay. My interests have changed
Deleteமொழிபெயர்ப்பை விடாமல் பலர் செய்ய வேண்டும் ; அப்போதுதான் எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் , விமர்சகர்களுக்கும் ஒரு critical mass ( இதன் சொல் என்ன ) ஏற்பட்டு தரம் உயரும் , அதை மற்றவர்களும் பின்பற்றுவர்.
ReplyDeleteசெய்யலாம். செய்வோம்.
Deletecritical mass - இதை பேசுவோரோ தேவையோ இருந்தால், தானாக ஒரு சொல்லோ சொற்றொடரோ உருவாகும்
பல உயிரியல் சார்ந்த கலைச்சொற்கள் 8,9,10,11 தமிழ் வழிக்கல்வி அறிவியல் பாட புத்தகங்களில் உள்ளன உதாரணமாக molecule-மூலக்கூறு , axis - அச்சு.
ReplyDelete