Showing posts with label name board. Show all posts
Showing posts with label name board. Show all posts

Sunday, 5 January 2014

மென்பொருள் முகவர் முனைவகம்

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் எம்மொழியில் இருப்பினும் கடைகளின் பெயர் பலகைகள் தமிழிலும் இருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் வந்தது. ஆங்கில பெயர்களை விரும்பும் சில கடைகளும், தமிழ் கலைச்சொற்கள் வசதியாகவோ இனிமையாகவோ இல்லாததால், சில பலகைலகளில் ஆங்கில சொல் தமிழ் எழுத்தில் மொழிப்பெயர்க்காமலும், வேறு சில பலகைலகளில் விசித்திரமாய் விநோதமாய் தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளன. அருகருகே இருக்கும் போது, இவை சிரிப்பை கிளப்பும்.



Fresh Juice என்பதை பழச்சாறு என்றே விட்டிருக்கலாம். அது என்ன பூங்கா? கனிவனம்? 
திருக்குறள் மேலே எழுதி கடைக்கு ஆங்கில பெயர் வைப்பது ஒரு வகை – மரிடோ. கார்ப்பரேஷன் என்பதையாவது நிறுவனம் என்று வரையறுக்கப்பட வேண்டாமா! ஏஜன்ஸீஸ் முகவர்கள் ஆனால்  “மேஜர் ஜெனரல் ஸ்டோர்” பூப்பெய்த தளபதி கடை அல்லவா?



எண்டர்பிரைசஸ் அப்படியே இருக்கலாம். முனைவகம் ஆகலாம்.  வணிக நடுவமும் ஆகலாம். சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடியும் சுடும்; முன்னாடியும் சுடும். 

துருவேறா எஃகிரும்பு? இந்த தமிழ் பட்டமின்றி இரும்பு மனிதர் வல்லபாய் படேல் தப்பித்தார். ஸ்டாலின்?! 


Software மென்பொருள், சரி. Solutions தீர்வுகளா? ஐக்கிய வங்கி? ஆஃப் இந்தியா? 

பக்கத்து பக்கத்து கடைக்கு தான் பெயர் விதவிதமாக் இருக்க வேண்டுமா என்ன? தட்டச்சு தமிழாச்சு பார். 

தகரம் தொங்கும் வெள்ளி சொர்கத்தில் எஃகிரும்பும் கிடைக்குமாம்!

Software மென்பொருள் ஆனால் Hardware வன்பொருள் ஆகாதோ? ஆனால் இங்கு பார்க் பக்கம் பசுமை இருப்பினும் பூங்காவாய் மாறவில்லை.

Related Post (உறவு தபால்? ஒவ்வும் பதிவு?)

Saturday, 14 December 2013

நான் ரசித்த சில பெயர் பலகைகள்

கதரும் கதர வைப்பதும்,
திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே

ஊர் சுற்றுகையில் கோவிலும் குளமும் மலையும் நதியும் கோட்டையும் கழுகும் கழுதையும் பார்ப்பது சாதாரணம். நான் பல பாமர காட்சிகளையும், அதில் சில விசித்திரங்களையும் ரசிப்பவன்.

ஸ்ரீவைகுண்டத்தில் பழக்கடை
அரசர்களையும் கலைஞர்களையும் தெய்வங்களையும் முனிவர்களையும் மட்டும் வரலாற்று நாயகர்களாக நான் காணும் காலம் சென்று, வணிகரையும் உழவரையும் உழைப்பவரும் ஒரு சிலராவது சில நேரங்களில் காட்சி நாயகர்களாக என் கண்ணுக்கு தெரிவதுண்டு. அந்த வரிசையில் அவ்வப்பொழுது கடை பெயர் பலகை, தெரு ஓவியம், வண்டிகளில் ஓவியம், பயணி, மரம், கழனி வாண்டு என்று எதையாவது படம் எடுப்பேன். இதற்கு வரதராஜன் மாமா – பிரபா மாமி அன்பு பரிசாக அளித்த டிஜிட்டல் கேமராவும், மிக மலிவான ஹார்ட் டிஸ்க்கும் இலவச இணையதள வசதியும் – வலைப்பதிவு, பிகாசா வகைகள், முக்கிய காரணம்.

நிகழும் கார்த்திகை மாதம் கேரளமும் தென் தமிழகமும் சுற்றுகையில், எடுத்த சில படங்கள் இங்கே.
கொச்சியில் மூலிகை கடை
“ ஹோர்ட்டஸ் மலபாரிகஸ்” என்பது லத்தின மொழியில், மிளகின் விஞ்ஞான பெயர். கொச்சியில் யூதநகர பகுதியில் பார்த்தது.  படத்தில் என்னுடன் இருப்பது தொல்லியல் வல்லுனர் ராதிகா கோபால் - இவர் வீட்டில் தான் விருந்தாளியாக கொச்சியில் நண்பர் சிவாவும் நானும் தங்கியிருந்தோம். அவர் 200 மூலிகைச்செடிகளை கொண்ட தோட்டத்தை தன் வீட்டு மாடியில் வளர்க்கிறார்! அதற்கு தனிப்பதிவு தேவை.


திருநெல்வேலியில் லீபனோன்!

லீபனோன் [லெபனான்] மேற்கு ஆசிய சிறிய நாடு – வெடிகுண்டு வெடித்தால் மட்டும் செய்தியில் வரும். பாளையம்கோட்டையில்  இந்நாட்டு பெயரில் கடை இருப்பது கிளுகிளுத்தது. எச்சரிக்கை: போட்ஸ்வானா, உருகுவே என்று டீக்கடை பார்த்தால் இதே பரவசம் அடைவேன்.






ப், க், ச், த், ம், ஞ், ழ், ல், ட், ள், ர் 

ஒன்றுமில்லை, அங்கங்கே பல ஒற்று[க்]களை விட்டு எழுதியுள்ளேன். இலக்கணப் பிரியர்கள் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும். மிகுதியை அரவிந்த கெஜரிவாலுக்கு தானமாக கொடுத்துவிடுங்கள்.