Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Monday, 9 April 2018

எழுத இயலாத் தமிழ்


எழுத இயலாத் தமிழ்

ஜேரட் டைமண்ட் எழுதிய “துப்பாக்கிகள், கிருமிகள், இரும்பு – சமூகங்களின் ஊழ்” என்ற நூல் எனக்கு மிகவும் பிடித்தது. வரலாறு, மொழியியல், வேளாண்மை, உயிரியல், மனிதவியல், தொல்லியல் என்று பல துறைகளை அறிமுகம் செய்து, விளக்கி, மயக்கி, எண்ணம் சிலிர்க்க வியப்பூட்டியது அந்நூல்.

2006இல் திரைக்கதை கட்டுரை சிறுகதை எதுவும் எழுதவராமல் திணறி தவித்தபோது, ஒரு நாத்திக நாரதர் என் பகற்கனவில் வந்தார். மதச்சார்பற்ற வீணை வாசித்துக்கொண்டே இந்நூலை நீ தமிழாக்கம் செய்யலாமே என்று சமீபத்தில் லத்தீன மொழியில் உபதேசித்தார்.

நானூறு பக்க புத்தகம். ஒரு நாளைக்கு பத்து பக்கம் மொழிபெயர்த்தால் நாற்பது நாளில் பணி முடியும். யாரும் அச்சிடமாட்டார், அச்சிட்டாலும் யாரும் படிக்கமாட்டார், ஆயினும், எழுதும் பழக்கமாவது உண்டாகும் என்ற அசட்டு வீரத்தில் தமிழாக்க தொடங்கினேன். முதல் பக்கமெழுதவே ஒரு நாளானது. ஐந்து பக்க முன்னுரையை மொழிபெயர்க்க ஒரு வாரம் ஆனது. பற்பல ஆங்கில சொற்களுக்கு எனக்கு தமிழ் சொல் தெரியவில்லை (உதாரணம் – molecule, species, extinct, aborigine, hunter-gatherer, Conquistadore). நன்கறிந்த சில சொற்களை டைமண்ட் வேறு பொருளில் பயனிக்க (உதாரணம் – selection, domesticate, glorification, radiation, Fertile crescent, Racial difference), அதற்கேற்ற தமிழ் சொல் என்னவென்று தலைச்சொரிந்து நூலகம் புத்தகக்கடை என்று அகராதி தேடி அலைந்தேன். அறிவியல் தமிழ் நூல்கள் மிகச்சிலவே என்று சீக்கிரம் புரிந்தது. இலக்கியக்கூட்டத்திலோ இணையதளத்திலோ பெ.நா.அப்புசாமி, சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் தவிற எந்த எழுத்தாளர் பெயரும் எழவில்லை. வீண் முயற்சி என்பது உறுதியானது.

நாமே ஒரு பட்டியல் செய்வோம் என்று செய்த பட்டியல் இங்கே. என் தமிழ் அறியாமைக்கும் இயலாமைக்கும் சான்று! விவசாயத்தின் வரலாறு ஒரு அத்தியாயம்; ஐந்து பக்கம். எழுத்தமைதியின் வரலாறு ஒரு அத்தியாயம்; இருபது பக்கம். இவற்றை முதலில் தமிழாக்க திட்டம். மொழிபெயர்க்கும் முன் இந்த பட்டியலை உருவாக்கினேன். இதற்கே இரண்டு மூன்று வாராமானது. அதற்கு பின் அந்த இரண்டு அத்தியாயங்களை தமிழாக்க இரண்டு மாதமானது. ஒரு நாளுக்கு ஒரு பக்கம் தமிழாக்குவதே பகீரத பிரயத்தனம். வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. பூங்கா, கடற்கரை, கோயில், சிடி செண்டர் சந்தை, மாம்பலம் பழவந்தாங்கல் அம்பத்தூர் ஆவடி ரயில்வண்டி நிலையங்கள் – இப்படி பற்பல் பொது இடங்களுக்கு சென்று எழுதினேன். மூன்று மாதத்திற்கு பின் கைவிட்டுவிட்டேன். சமீபத்தில் வேறு யாரோ இந்நூலை தமிழாக்கம் செய்து அச்சில் வந்ததை பார்த்தேன். லேசான மகிழ்ச்சி, லேசான பொறாமை.

நல்ல வேளை இதை நான் தொடரவில்லை என்ற ஒரு ஆறுதல்.

           
Asia
ஆசியா
Climatology
வானிலையியல்
Blacks
கருப்பினர்
Calibrate

Bronze age
வெங்கலக்காலம்
Great ape
பெருங்குரங்கு
Cargo
சரக்கு
Fossil

Continent
காண்டம்
Flake

Discovery
கண்டுபிடிப்பு
Flint
பொறிக்கல்
Diversity
வேற்றுமை
Standardized

domestic animals
கால்நடை விலங்குகள்
Contemporary
சமகாலத்து
Eurasia
யுரேசியா
Great Leap Forward
மாபெருந்தாவல்
Europe
ஐரோப்பா
Anatomical

History
வரலாறு
Voice box
குரலுறு
Huntering gathering
வேட்டை-சேர்த்தல்
Hybridization
இனக்கலவை
Industry
தொழில்நுட்பம்
Extermination
இன ஒழிப்பு
Iron age
இரும்புக்காலம்
Marsupial

Literacy
எழுத்தறிவு
Rain-forest
மழைவனம்
MesoAmerica
மத்திய அமெரிக்கா
Habitable
வாழக்கூடிய
Metal tools
உலோக ஆயுதம்
Alphabet
கசடதபறம்
N/S America
வட/தென் அமெரிக்கா
Syllable
கூட்டொலி
Native
ஆதிவாசி
Sign
சின்னம்
New Guinea
புதுகினி
Determinative
துணைசின்னம்
People
இனம்
Logogram

Plurality
பன்மை
Pictogram
சித்திரச்சின்னம்
Pre-history

முன்வரலாறு


Proximate causes
சமீபத்து காரணங்கள்


Society
சமுதாயம்


Stone age
கற்காலம்


Tame animals
அடங்கிய விலங்குகள்


Technology
தொழில்நுட்பம்


Ultimate causes
மூலக்காரண்ங்கள்


Whites
வெள்ளையர்


Historians
வரலாற்று வல்லுனர்


Aborigines
அபாரிஜின்


Metric
அளவுகோல்


Racial difference
இனவேறுபாடு


glorification
புகழ்தல்


Evolution
பரிணாம வளர்ச்சி


Evidence
சான்று


Fertile crescent
செழிப்பு பிறை


Gene
மரபணு


Natural selection
இயற்கை தேர்தல்


Infection
தொற்றுநோய்


Molecular biology



Proto-human



Epidemic



Linguistics
மொழியியல்


Disciplines
துறைகள்


Fraction
பகுதி


Radiation
படர்தல்


Model



Conquistadore



Axis



Diffusion
பழக்கப்பரவல்


Egalitarian
சமத்துவம்


Sedentary
குடியான


Nomadic
நாடோடி


Chapter
படலம்


Part
அத்தியாயம்


Replacement



Expansion
பரவல்/படர்தல்


Colony
காலனி


Colonize
ஆதிக்கம்


Conquest
நிலபற்றல்


Similarities
உவமானங்கள்


Triggered
நாணேற்றம்



பின்புலம்

நான் 2000த்தில் கணினித்துறையை கைக்கழுவிவிட்டு அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு திரும்பி வந்தேன். அங்கிருக்கும் போதே ஆங்கில திரைக்கதை எழுதி சினிமாவும் தொலைக்காட்சி தொடரும் இயற்ற ஆசை. அறைகுறையாக சில திரைக்கதைகளை எழுதி வைத்திருந்தேன். அன்று ஒலிபரப்பாகிவந்த Frasier ஃப்ரேசர் என்ற நகைச்சுவை தொலைகாட்சி தொடருக்கு எழுதிய திரைக்கதை மட்டுமே முற்றும் எழுதிமுடித்தேன். சில ஏஜண்டுக்களுக்கு அனுப்பினேன், யாரும் சீண்ட கூடவில்லை.

1998ல் லாஸ் ஏஞ்சலசில் நடந்த ஒரு திரைக்கதை மாநாட்டுக்கு சென்று ஒரு சில தயாரிப்பாளர்களையும், எழுத்தாளர்களையும் சந்தித்து பேசினேன். நான் சந்தித்ததில் ஃப்ரேசர் தயாரிப்பாளர் பீட்டர் கேசி, மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஷேன் பிளாக் ஹாலிவுட் பிரியர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

ஆங்கிலத்தில் ஒரு சினிமா திரைக்கதை தமிழில் ஒரு சினிமா திரைக்கதை எழுதத்தொடங்கி, பாதியில் இன்றும் நிற்கின்றன. சென்னை வந்தபின் வேறு சில திரைக்கதை நாவல் சிறுகதை எல்லாம் இப்படியே வேகாமல் அடுப்பிலிருந்து இறக்கிவைத்துவிட்டேன். பொருளியல், உயிரியல், மொழியியல் நூல்களை படித்து வெவேறு ஆர்வத்தில் மனம்போன போக்கில் வாழ்க்கை. அந்த கட்டத்தில் 2006ல் எழுத்துப்பயிற்சிக்காக இந்த வினை…

2.   நூல் அறிமுகம் Guns Germs and Steel
3.   ஜல்லிக்கட்டு நடை – ஜூல்ஸ் வெர்ண் 
6.   Guns Germs and Steel தமிழில் துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு