ஃபெப்ருவரி
மாதம் 12 ஆம் நாள் சார்ளஸ் டார்வினின் பிறந்தநாள். 11ஆம் நாள் தாமஸ் எடிஸனின் பிறந்தநாள்.
பெரிதாக யாரும் கொண்டாட மாட்டார், விஞ்ஞானிகள் உட்பட. அரசரையும் அரசாள்பவரையும் மதகுருக்களையும்
புலவர்களையும் கொண்டாடும் வெகுஜன மக்களும் ஈடு இணையற்ற நன்றிக்கடன் பட்ட இவ்விருவரின்
பிறந்தநாளை கண்டுகொள்வதில்லை. இன்று, ஃபெப்ருவரி 10ஆம் நாள், வால்டர் பிராட்டனின் பிறந்தநாள்.
இவர்
மின்பொருள் கணினி துறைகளுக்கு வெளியே புகழ்பெற்றவர் அல்ல. ஆனால் எடிசனோடும் டார்வினோடும்
இணைத்து புகழ தகுதியானவர். இவரும் ஜான் பார்டீன் என்பவரும், சிலிகான் டிரான்ஸிஸ்டரை
உருவாக்கி, அதற்கு நோபல் பரிசை பெற்றவர்கள். வேதியியலில் இரண்டு நோபல் பரிசு பெற்றவர்
ஜான் பார்டீன்; அவர் இரண்டாம் பரிசை சூப்பர்கண்டக்டிவிடி துறையில் செய்த ஆய்விற்கு
பெற்றார்.
வால்ட்டர் பிராட்டன் |
பிராட்டனின்
புகழ் டிரான்ஸிஸ்டரில் மட்டுமே. ஆனால் எப்பேர்பட்ட ஒரு படைப்பு!
பெற்றது நகத்தளவு
பொதுமக்களுக்கு
டிரான்ஸிஸ்டர் என்று சொன்னால் கையளவு ரேடியோ வானொலி பெட்டி மட்டும் தான் ஞாபகம் வரும்.
தவில் அளவு இருந்த ரேடியோ பெட்டி வேக்குவம் குமிழி கொண்டு மார்க்கோனி செய்ததாக நாம்
அரிவோம். (எட்வர்ட் ஃபெஸ்ஸண்டன் என்பவரின் வானொலி பணி பொதுமக்கள் அறியாதது. சமீபத்தில்
தெரிந்துகொண்டேன். அவரை பற்றி வேறொரு நாள் எழுதலாம்.) இந்த வேக்குவம் குமிழிகள் ஒவ்வொன்றும் விரலளவு இருக்கும். எடிசனின் மின் விளக்கே வேக்குவம் குமிழியின் மூதாதை. எடிசன் அதை
சரியாக புரிந்துகொள்ளவில்லை.
உள்ளங்கை
ஒலிக்கனியாக வானொலி பெட்டியை சுருங்குவதற்கு பிராட்டனும் பார்டீனும் ஆய்ந்து படைத்த
சிலிகான் டிரான்ஸிஸ்டரே காரணம். ஒரு டிரான்ஸிஸ்டர் நகநுனி அளவே இருக்கும். சில்லரை
காசுக்கு எந்த எலக்டரானிக்ஸ் கடையிலும் இன்று வாங்கலாம். விரலளவு உள்ள வாக்குவம் குமிழிகளால்
அன்று நகநுனி அளவு உள்ள டிரான்ஸிஸ்டரால் செய்த ரேடியோவிற்கு டிரான்ஸிஸ்டர் ரேடியோ என்று
பெயர் வந்து, அகப்பொருளே புறப்பொருளுக்கு பெயராய் மாறிவிட்டது.
சிலிகான் தட்டு, டிரான்ஸிஸ்டர், வாக்குவம் குமிழி |
வானொலி
தொலைக்காட்சி கணினி மோடம் கால்குலேட்டர் செல்பேசி இவை யாவும் சிலிகான் டிரான்ஸிஸ்டர்
கொண்டவை.
சிலிகான் துளைத்து அணுவை புகட்டி
குறுகத் தறித்த கருவி
டிரான்ஸிஸ்டரை
எளிமையாக விளக்கமுடியுமா என்று எனக்கு தெரியவில்லை. இப்பொழுது முயலப்போவதில்லை. ஆனால்
எடிசனும் டார்வினும் செய்தது போல வீட்டில் பொருட்களை வாங்கி ஒரு அரையை பரிசோதனை கூடமாக்கி
ஆய்வு செய்து அதை உருவாக்க இயலாது. அரைகுறை பள்ளிக்கல்வியுடன் தன்னார்வாத்தால் தானே
கற்று செய்யும் திறமையை வளர்த்து செய்யும் ஆய்வும் அல்ல. கல்லூரி பல ஆண்டு படித்து,
பெரும் பொருட்செலவும், பண ஆதரவும், ஆய்வு சுதந்திரமும், சமத்திறன் கொண்ட சக விஞ்ஞானிகளும்
குறைந்தபட்சம் வேண்டும். இவையெல்லாம். பிராட்டனுக்கு பெல் நிறுவனத்தில் கிடைத்தது.
தொலைபேசியை உருவாக்கிய அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் நிறுவிய கம்பெனி ஏடி&டி; இதன்
ஆராய்ச்சி பிறிவு தான் பெல் நிறுவனம். உலகின் மிகச்சிறந்த ஆராய்ச்சி மையங்களில் முக்கியமான்
ஒன்று.
தங்கம்
டங்க்ஸ்டன் நைட்ரொஜென் ஃபாஸ்ஃபரஸ் போன்ற பொருட்களை ஆவியாக்கி, சிலிக்கான் தட்டில் பூசி,
அதில் மிகச்சிறு கம்பிகளை செலுத்தி (இதுவே டிரான்ஸிஸ்டர்!!), அவற்றில் மின்சாரம் பாய்ச்சி,
அந்த மின்சாரத்தின் குணங்களை ஆராய்வதே பிராட்டனுக்கும் பார்டீக்குனும் தொழில். இது
ஒருவகையில் செய்தால் டிரான்ஸிஸ்டர் மின்சாரத்தை பெருக்கும் திறன் கொண்டது என்று இவ்விருவரும்
கண்டுபிடித்தனர். அதுவரை ட்ரையோட் என்ற வாக்குவம் குமிழியே மின்சாரத்தை பெருக்க பயன்பட்டது.
ஈனியாக் என்ற முதன் முதல் செய்த கணினியும் வாக்குவம் 18000 குமிழிகள் கொண்டு, நூறு
அடி நீளமும் ஐம்பது அடி அகலமும் பத்து அடி உயரமுமான ராட்சத இயந்திரமாய் இருந்தது. டிரான்ஸிஸ்டர்
வந்தபின் அலமாரி அளவுக்கு கணினி சுருங்கியது.
பின்னர்
ஒரு சிலிக்கான் தட்டில் பல நூறு டிரான்ஸிஸ்டரை செய்ய ராபர்ட் நாய்ஸ் என்பவர் வழி வகுத்தார்.
அதற்கு இண்டக்ரேட்டட் சர்க்யூட் (பல பாகங்கள் கொண்டு ஒரு தட்டில் இணைக்கப்பட்ட இயந்திரம்)
என்று பெயர்.
கல்வி யாது
தலைமுறை
தலைமுறையாய் கல்விகற்ற பழம்பெரும் மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவரா பிராட்டன்? பாரத
நாட்டில் சிலரிடம் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. வேதம் படித்தவருக்கு கணினி திறன் ரத்தத்தில்
வந்ததென்றும், பாணினியின் மகிமையும் ஸமஸ்கிருததின் ஒலியும் கருவரையில் கேட்டு இத்திறன்
வளர்ந்ததாக நினைப்போர் உண்டு. இதன் மறுபுறம், ஆயிரமாயிரம் ஆண்டுகள் மேல்தட்டு ஜாதிகள்
மற்றவருக்கு கல்வி மறுத்ததால் அவர்களால் முன்னேற முடியவில்லை என்பதுமாகும்.
வேதமறியா
ஸ்மஸ்கிருதம் கேளா எடிசனோ மார்க்கோனி பார்டீன் பிராட்டன் பில் கேட்ஸ் ஸ்டீவ் ஜாப்ஸ்
மார்க் ஸுகர்பர்க் இவரெல்லாம் வேத ஞானியரை எப்படி மிஞ்சினார் என்பதை முதல் வகையறா கேட்பதில்லை.
பள்ளியில் படிக்காத எடிசன் ஃபாரடே ஆதியோரும், கல்லூரி படிப்பை பாதியிலோ பாதிக்கும்
முன்னரோ நிறுத்திவிட்டு பில் கேட்ஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் மார்க் ஸுகர்பர்க் ஆதியோரும் செய்த
சாதனைகளை நம் நாட்டில் யாரும் ஏன் சாதிக்கவில்லை என்று இரண்டாம் வகையறா கேட்பதில்லை.
வாழ்க்கை
குறிப்பு
வால்டர்
பிராட்டனின் பாட்டனார்கள் மில்லில் நெல்லை மாவரைத்தவர். மேலை நாடுகளில் அரிசி இல்லை
– சாதம் இல்லை. கோதுமை சோளம் கம்பு போன்ற தானியங்கள்தான். அரைத்து மாவுசெய்து ரொட்டி
பாஸ்தா கூழ் கஞ்சு செய்துதான் உண்ணவேண்டும் இது அக்காலத்தில் ஒரு தொழில். மில்லில்
மாவரைப்பவருக்கு மில்லர் என்று ஜாதிப்பெயருண்டு. பிராட்டனின் தாய்தந்தையர் கல்லூரியில
படித்தவர். ஆனால் புத்தகப்படிப்பு மட்டும் அல்ல. புகைப்பட நிறுவனம், வயல், நிலவளக்கும்
பணி போன்று பணிகள் செய்தவர் அவர் தந்தை – அவரும் மாவரைத்தவர்; மில்லர்.
வால்டர்
பிராட்டன் பள்ளி பருவத்தில் ஒரு வருடம் மாடுமேய்த்தாராம். தந்தையின் மில்லில் டீஸல்
எஞ்ஜினை முழுவதும் கழற்றி பழுது பார்த்து மீண்டும் பொருத்துவாராம். தன்னார்வத்தினால்
தன் பள்ளிக்கு மின்சாரம் தந்த டீஸல் எஞ்ஜினையும் பிரித்து பழுது பார்த்தாராம். பெருமையாக சொல்லிக் கொள்கிறார். பாரதத்தில், இவ்வகை பயிற்சி பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகளிளோ
பள்ளிகளிளோ இல்லை. பாலிடெக்னிக்கில் இருக்கலாம், எனக்கு சந்தேகம். பல இடங்களில் பழைய
கருவிகளே இருக்கும். மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ கருவிகளோடு பயின்று சோதித்து விளையாடி
ஆராயும் ஆர்வம் பொதுவாக இருப்பதில்லை.
வேலையில்
சேர்ந்தபின்தான் இந்தியாவின் கல்லூரி மாணவர் பலரும் தங்கள் தொழில்களை கற்றுகொள்கின்றனர்.
அந்தஸ்து, ஜம்பம், சோம்பேரித்தனம், அக்கரையின்மை, சலிப்பு இவையெல்லாம் சகஜம். சேத்தன்
பகத் தன் நாவலில் இதைதான் மிகவும் கடுமையாக கண்டித்து எழுதினார். மாறுவதாக தெரியவில்லை.
இந்நிலை நீடிக்கும் வரை பாரதத்தில் வால்டர் பிராட்டன்கள் வளர வாய்ப்பு குறைவே.
நன்றி
நான்
கணினி துறையில் படித்து பட்டம் பெற்று வேலை செய்து சம்பாதித்தவன். வால்டர் பிராட்டனை படிக்க வைத்து வான்புகழ் கொண்ட வாஷிங்டன் மாகாணத்தில் பல வருடம் வேலை செய்தேன்.
அவ்வகையில் வால்டர்
பிராட்டனுக்கு நன்றி. அவரும் பார்டீனும் விதைத்து வளர்த்த மாபெரும் வனம் மின்பொருட்களும்
கணினியும் இணையமும். அவ்வகையில் மானுடத்தின் சார்பிலும் அவருக்கு நன்றி. பக்தியாலும்
அன்பாலும் வணங்குவதாய் இன்றின், அறிவாலும் ஆர்வத்தாலும் ரசனையாலும் வணங்க முடியுமாயின்,
அவ்வகை அவரை வணங்குகிறேன்.
சுட்டிகள்
1. வால்டர் பிராட்டனுடன் நேர்காணல் (நீண்ட பதிவு)
விஞ்ஞானிகளை பற்றிய என் பதிவுகள்
1. ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்
2. ஃப்ரெட் ஸாங்கர்
3. சார்ல்ஸ் பார்ஸன்ஸ் (ஆங்கிலத்தில்)
4. டோரோதி ஹாட்ஜ்கின்
5. லின் மார்குலிஸ் (ஆங்கிலத்தில்)
6. காற்றை கறந்தவர்- ஹாபர்-பாஷ்
7. வரப்புயர்த்திய வல்லவன் - நார்மன் போர்லாக்
8. கில்பர்ட் லூயிஸ் (ஆங்கிலத்தில்)
7. தாமஸ் எடிஸன்
10. எமீல் லெவஸார்
Thanks for Photos
1. NNDB
No comments:
Post a Comment