Thursday 21 November 2013

இன்சுலின் விஞ்ஞானி ஃப்ரெட் ஸேங்கர் - அஞ்சலி

இன்சுலினின் அமினோ அமில ரசாயனத்தொடரை கண்டுபிடித்த விஞ்ஞானி, ஃப்ரெட் ஸேங்கர், நேற்று காலமானார். சக்கரை நோயாளி ஒருவரையாவது அறிந்த நாம், இன்சுலின் பற்றாகுறையால் சக்கரை நோய் வருகிறது என்றறிவோம்.

ப்ரோட்டீன்களே செல்லின் விசைகள், படகுகள். ப்ரோட்டீன்கள் அமினோ அமிலங்களால் ஆனவை. AGCT என்ற ஆங்கில எழுத்துக்களால் குறிக்கப்படும் அடினைன், ஸைடோஸைன், குவானைன், தைமைன் ஆகிய நான்கு நூக்ளியோடைடுகளே மரபணு, டிஎன்ஏ, ப்ரோட்டீன் ஆகிய பெரிய மூலக்கூறுகளின் அடிப்படை பொருட்கள். மூன்றுக்கோடி நூக்ளியோடைடு கொண்டது டிஎன்ஏ. மூன்று நூக்ளியோடைடு கொண்டது அமினோ அமிலம். 20 வித அமினோ அமிலங்கள் உள்ளன. அமினோ அமிலத்தொடர்களே ப்ரோட்டீன்கள்.

இன்சுலினின் அமிலோத்தொடரை கண்டுபிடிக்க ஸேங்கர் செய்த அபாரமான ஆய்வினால் அவருக்கு ரசாயனத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. இருபது ஆண்டுகளுக்கு பின், டிஎன்ஏ தொடரை [ரசாயனச்சங்கிலியை] வேகமாக கண்டுபிடிக்க ஒரு புது முறையை அவர் கண்டுபிடித்தார். இந்த ஆய்வின் விளைவாக ரசாயனத்திற்கு மற்றும் ஒரு நோபல் பரிசை ஸேங்கர் பெற்றார்.

ஃப்ரெட் ஸேங்கர் மனிதக்குலத்திற்கும் விஞ்ஞானிகளுக்கும் சான்றாய் வாழ்ந்தவர். அவரைப்போல் பலச் சான்றோர் உருவாகட்டும். என் தந்தை ரங்கரத்தினத்திற்கு சக்கரை நோய் இருந்ததது. அவரும் பல கோடி மக்களும் ஃப்ரெட் ஸேங்கர் முதலோரின் ஆய்வில் பல்லாண்டு வாழ்ந்தனர்.



ஃப்ரெட் ஸேங்கர், நல்ல பணி நின்னுடைத்து.

No comments:

Post a Comment