காசி விசுவநாதர் கோயில் கோபுரத்திலுருந்து கங்கை கரை நோக்கி செல்லும் வழியில் இந்த பாரத மாதா சிலையும் அதன் பின் மாந்தாதேஷ்வரர் கோவிலும் உள்ளன. பாரத மாதா சிலை புதிது.
|
மாந்தாதேஷ்வரர் கோயில் |
|
கோவில் முன் பாரத மாதா சிலை |
திரேதா யுகத்தின் சிறந்த மன்னன், மகாபுருஷன் ராமன். சீதையை தேடி இலங்கை சென்ற ராமன் தமிழகக் கடற்கரையில் சிவனை பூசித்த இடம் ராமேஷ்வரம்.
கிருத யுகத்தின் மிகச் சிறந்த மன்னன், மகாபுருஷன் மாந்தாத்தன். இவன் கதை இப்பொழுது பரவலாக புழக்கமாக இல்லை. பரமார மன்னன் போஜன் இயற்றிய
வடமொழி கவிதையில் கிருத, திரேத, துவாபர யுக மகாமன்னர்கள் வரிசையில் மாந்தாத்தன், ராமன், யுதிஷ்டிரனாகும்.
உஜ்ஜயினியை தலை நகராக கொண்ட மன்னன் மாந்தாத்தன், சிவனை பூஜிக்க கேதார்நாத் செல்ல, அவனிடம் சிவப்பெருமானே, நீ காசிக்கு சென்று என்னை வழிபடு என்று ஆணையிட, மாந்தாத்தன் காசிக்கு வந்து வழிப்பட்ட தலம் இந்த மாந்தாத்தேஷ்வரன் கோவில் என்று ஒரு வரலாறு கூறுகிறது.
பௌத்த மரபிலோ மாந்தாத்தன் தன் மிகச்சிறந்த புண்ணியத்தால் தேவலோகம் சென்றான் என்றும், அங்கே இந்திரன் அவனுக்கு தன் சிம்மாசனத்தில் பாதி இடத்தை கொடுத்தான் என்றும் கூறுகிறது. இதை விவரிக்கும் சிற்பம் ஒன்று சென்னை
எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமராவதி சிற்பங்களுள் ஒன்று.
மாந்தாத்தன் கோயில் பஞ்சாயதன வடிவத்தில் இருப்பதாகவும் சமீபத்தில் காசி காரிடார் அமைப்பில் அது புதுப்பிக்க பட்டுள்ளது என்றும் வாரணாசி ஹிந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோதி ரோஹில்லா அனுப்பிய
வலைத்தளத்தின் தகவல்.
பொன்னியின் செல்வன் கதையில் நான்காம் அத்தியாயத்தில் கடம்பூர் மாளிகையில் ஆதித்தக்கரிகாலனின் மெய்கீர்த்தியை கட்டியங்காரன் கூறும்பொழுந்து ”மனு மாந்தாத்தா” என்று தொடங்குவான்.
தொடர்புடைய கட்டுரைகள்