மெய்யத்து மலையான் படம்: அஷோக் கிருஷ்ண்சாமி |
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட நலிமேனி குணம்பேணும் தொண்டர்க்கு பல்லாண்டு பல்லாண்டு
படியாமல் நோய்பிரிய புண்ணார பணிவோர்க்கு பல்லாண்டு
வடிவாய் திருவாய் இருவிதழில் மலர்கின்ற புன்சிரிப்பும் பல்லாண்டு
பொடியாய் நோய் தீர்க்கும் வல்லாயுத நல்லூசியும் பல்லாண்டு
விடிவாய் எழும் பகலாய் சுகம்தரும் சேவையும் பல்லாண்டே