Tuesday 16 February 2021

தென்றல் தீண்டவில்லை




தென்றல் தீண்டவில்லை என்னை
தேவியே தீண்டிவிட்டாள்
சிலிர்த்தது மேனியல்ல - உயர்
சிந்தையும் குளிர்ந்ததுகாண்
வெயலில் நனைந்ததனால் முழு
வையமும் களித்திடவே
மலைப்பது நானல்லவே - அந்த
மலைமகள் குறும்பல்லவோ
கதிரவன் ஒய்வெடுப்பான் - மீன்
கோடிகள் கண்சிமிட்டும்
முத்தங்கள் பொழிந்திடவே முகமேல்
முகிலினம் படையெடுக்கும்
இத்தருணத்தின் இன்பச்சுவைதன்னை
யத்தனித்தேன் யாவருமறிய
முத்தமிழ் போதவில்லை - ஐயோ
முத்தமிழ் போதவில்லை.....