Tuesday 16 February 2021

தென்றல் தீண்டவில்லை




தென்றல் தீண்டவில்லை என்னை
தேவியே தீண்டிவிட்டாள்
சிலிர்த்தது மேனியல்ல - உயர்
சிந்தையும் குளிர்ந்ததுகாண்
வெயலில் நனைந்ததனால் முழு
வையமும் களித்திடவே
மலைப்பது நானல்லவே - அந்த
மலைமகள் குறும்பல்லவோ
கதிரவன் ஒய்வெடுப்பான் - மீன்
கோடிகள் கண்சிமிட்டும்
முத்தங்கள் பொழிந்திடவே முகமேல்
முகிலினம் படையெடுக்கும்
இத்தருணத்தின் இன்பச்சுவைதன்னை
யத்தனித்தேன் யாவருமறிய
முத்தமிழ் போதவில்லை - ஐயோ
முத்தமிழ் போதவில்லை.....


2012ம் ஆண்டு புதுக்கோட்டை கலை உலா சென்றபோது எடுத்துக்கொண்ட படங்களில் இதுவும் ஒன்று. சித்தன்னவாசல் குகைக்கோயிலுக்கு அருகே உள்ள ஏழடிப்பட்டம் சமணர் படுகைகளை காண மலை ஏறியபோது எடுக்கப்பட்டது. அந்த இயற்கை சூழலும் யாரோ அன்று பகிர்ந்த ஒரு பாரதியார் கவிதையும், இந்த கவிதையை தூண்டியது. முகநூலில் 2012ல் ஏற்றிவிட்டேன். இப்பொழுது இந்த வலைப்பூவிலும்

என் கவிதைகள்


2 comments:

  1. இப்படி ஒரு அருமையான கவிஞன் ஒளிந்து கொண்டு இருக்கிறானே உமக்குள்ளே!!

    ReplyDelete