Tuesday 31 December 2013

டிசம்பர் 31 – செல்வத் திருநாள்

டிசம்பர் 31, 1879. வரலாற்றின் மிக முக்கிய நாள் என நான் கருதுகிறேன். என் கருத்தில் அது செல்வத் திருநாள். உங்கள் அனைவருக்கும் என் செல்வத் திருநாள் வாழ்த்துக்கள்.

அதென்ன வரலாற்றின் மிக முக்கிய நாள்? நாம் நாட்களை மதத்தோடும் நாட்டோடும் மட்டுமே நோக்குகிறோம். ஆகஸ்ட் 15, 1947 இந்தியாவின் சுதந்திர தினம், ஆகஸ்ட் 14 பாகிஸ்தானுக்கு; ஜூலை 4, 1776 அமெரிக்காவிற்கு சுதந்திர தினம். அக்டோபர் 25 [ருஷிய பஞ்சாங்கத்தில் நவம்பர் 7] 1917 ருஷிய புரட்சி தினம். மாவோவின் நெடும் பயண தொடக்கம், பெர்லின் சுவர் விழுந்த நாள், பிரஞ்சு புரட்சி நாள், கிழக்கு இந்தியா கம்பெனி ஜார்ஜ் கோட்டை கட்ட கிடைத்த நாள் ஆகஸ்ட் 22; அக்டோபர் 2, காந்தி பிறந்தநாள்; நவம்பர் 14 குழந்தைகள் தினம். இவை அந்தந்த தேசங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மத ரீதியாக, டிசம்பர் 25 யேசு பிறந்தநாள்.  புத்த பூர்ணிமா, வர்த்தமான மஹாவீரர் ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, ராம நவமி, வைகுந்த ஏகாதேசி, தை பூசம், கந்த சஷ்டி - இவை எல்லாம் இந்திய பஞ்சாங்கத்தின் மரபு வழி வருவதால் கிறுஸ்துவ நாள்காட்டி நாளில் விழுவதில்லை. சீன புத்தாண்டு, பாரசீக புத்தாண்டு, இஸ்லாமிய விழா நாட்கள் இவையும் கிறுஸ்துவ பஞ்சாங்க வழி வருவதில்லை. மய நாகரீக யுகத்தொடக்கம் சமீப புதுமை. இவை அந்தந்த மதங்களுக்கே பொருந்தும்.

மகர சங்கராந்தி, தமிழ் வருட பிறப்பு, யுகாதி போன்ற வானியல் தொடர்புடைய நாட்களும் தொழிலாளர் தினம், காதலர் தினம், மாதர் தினம் இவற்றில் சேரா.

நிற்க. ஒரு சின்ன வரலாற்று புதிர். 1879-இல் யார் இந்திய வைஸ்ராய்? மதறாஸின் ஆளுநர்? இங்கிலாந்தில் பிரதமர், அரசர்? ஜப்பானில், சீனாவில், பர்மாவில், துருக்கியில், எகிப்தில், பாரசீகத்தில், ஜெர்மனியில், ருஷியாவில்? அமெரிக்க பிரஞ்சு ஜனாதிபதிகள் யார்? வரலாற்றில் முக்கியமான நாள் என்று நான் கருதினால் இவர்களில் யாரேனும் ஒருவர் ஏதாவது முக்கிய சாதனைகள் செய்திருக்க வேண்டுமே? ஒரு போர், ஒரு முக்கிய சட்டம், சீர்திருத்தம், தானம், திருமணம்…. வாசகர் பலருக்கு அன்றைய ஆட்சியாளரோ மதகுருக்களோ யார் என்று தெரிந்திருந்தால் கொஞ்சம் அதிசயம் தான்.

அப்படி என்ன தான் நடந்தது அன்று? இரு நாடுகளில் இரு வேறு சம்பவங்கள்: ஒன்று படாடோப அமர்க்களமாக, பத்திரிகையில் பரப்பரப்பு கிளப்பி, கண்டவரை மிரளச்செய்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி. மற்றது அவை இல்லாமல். ஆனால் அரசியல் மத சம்பவங்களை விட மிக பிரம்மாண்டமாக, வரலாற்று திருப்புமுனையாக, உலகில் பல நூறு கோடிகள் பயனுற, செல்வம் வெடித்து பெறுக, சமூகங்களின் புது யுகமாக.

தாமஸ் ஆல்வா எடிஸன்
முதல் சம்பவம்: தாமஸ் ஆல்வா எடிஸன், மென்லோ பார்க் என்னும் இடத்தில் நூற்றுக்கணக்கான மின் விளக்குகளை ஏற்றி மக்களுக்கு மின்சார யுகத்தை தொடக்கி வைத்தார். இதற்கு முன் தந்தி ஒன்றே மின்சாரத்தின் முக்கிய கருவியாக இருந்தது.

இரண்டாம் சம்பவம்: ஜெர்மனியில் கார்ள் பென்ஸ் பெட்ரொல் என்ஜினை ஒரு குதிரை வண்டியில் பொருத்தி, ஓட்டி, கார் யுகத்தை தொடங்கி போக்குவரத்து பெரும்புரட்சி ஆற்றினார். காரை இயக்கும் கார்புரெட்டர், கிளட்ச், கியர் ஷிஃப்ட், ஸ்பார்க் ப்ளக் ஆகிய முக்கிய துணைக்கருவிகளையும் இவர் படைத்தார். எமில் லெவஸார், காட்லீப் டைம்லர், வில்லியம் மேபக், ருடோல்ஃப் ஆக்கர்மன் ஆகியோரின் படைப்புகளும் கார்களின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஆனால் கார் பாமர மனிதர்களும் வாங்கும் அளவு மலிவான பொருளாக மாற்றிய பெரும் புகழ் ஹென்ரி ஃபோர்ட்டுக்குச் சேரும்.

கார்ள் பென்ஸ் 
கார் யுகமும் மின்சார யுகமும் உலகின் செல்வப் பெருக்கு மிக முக்கிய காரணிகள். எடிசனுக்கு பின் நிக்கோலா டெஸ்லா, வெஸ்டிங்கவுஸ், சார்லஸ் பார்ஸன்ஸ் போன்றோர் மின்சார யுகத்தின் முக்கிய இயக்குனர்கள்.

டிசம்பர்31 : வரலாற்றின் முக்கிய நாளாக கொண்டாட வேண்டும். தேசிய மத எல்லைக்குள் இன்னாளை வைக்கமுடியாது. விசை திரு நாள் என்று நினைத்தலும், செல்வத் திருநாள் என்று நினைத்தலும் தகும்.


பென்ஸ் வெலோ - விற்பனைக்கு வந்த முதல் கார் 


Monday 30 December 2013

Life and mathematics of Paul Erdos

There was a meeting on Saturday at Gokhale Sastri institute, organized by BrainsTrust. The mathematician and Professor in Univ of Florida, Krishnaswamy Alladi, grandson of Alladi Krishnaswami Iyer, one of the architects of the Constitution of India, was invited to speak on the Life and mathematics of Paul Erdos, a Hungarian genius.

Krishnaswamy Alladi started with Euclid’s Existence Proof that there are infinite primes. Then he explained the Sieve of Eratosthenes method of finding all primes upto a number. He contrasted their mutual incompatibility: Euclid does not tell you how to find a prime number, Eratosthenes cannot be used to prove that there are an infinite number of primes.
For a long time there was no real theory of prime numbers.  Late in the 18th century, the French mathematician Legendre conjectured that the number of primes upto a number x is π[x]=x/log x. There was also a conjecture by Bertrand that there is always at least one prime between any x and 2x. But nobody could prove either of these, until the Russian mathematician Chebyshev in 1850 who stated that if there is a limit to π[x]/ (x/log x) as x approaches infinity, then the limit must be 1. This is asymptotic,: it approaches 1, but [numerator – denominator] does not go to zero. Computer Science students and graduates may know the asymptotic idea from the notations used in algorimthic time and space complexity : O(n) and Ω(n).

Erdos, Elegance and Excellence

Effectively these ideas became to be called the Theory of Prime numbers. Paul Erdos became famous world wide, when as a 19 year old he came up with an elegant proof of Bertrand’s Postulate, more elegant than Chebyshev’s.

Elegance was a favorite theme of Erdos, who though an atheist believed God had a book, which contained the most elegant proofs in mathematics. Erdos was an interesting personality, who owned no home, possessed few clothes and only a suitcase, was a citizen of the world and travelled the earth unearthing and enthusing youngsters. A jet-age peripatetic global mentor, a social oddity, a sybaritic bachelor who was “married to mathematics”, and a sociable delight.

If Alladi’s rendition of the history of maths was delightfully elegant for a mathematics enthusiast like me, his narration of Erdos’ idiosyncrasies and charm regaled the lay person for whom math is an enigma.

There is an inside joke called the Erdos number – if you collaborated with Erdos, your Erdos number was 1. If you collobarated with someone who had collaborated with Erdos on a different paper, your Erdos number was 2, and so on. Like the six degrees of Kevin Bacon, perhaps modeled on the Erdos number. If you collaborated on n papers with Erdos, your Erdos number was 1/n, and Alladi said his Erdos number was 1/5!!

Ramanujan and Erdos

Some work was done in the 20th century by GH Hardy and his discovery, S Ramanujan. In Ramanujan’s famous letter to Hardy, one of his formulae was for the number of primes upto a given number. I have borrowed Hardy’s Lectures on Ramanujan from Sri Balasubramanian, my Sanskrit teacher. They collaborated and came up formulae related to primes - Sum of primes, number of primes, number of divisors. Ramanujan came up with the little vs big omega notation for prime divisors: count each divisor vs count only unique divisors. For example, 12=2*2*3. Does it have 2 divisors or 3? Count them both ways said Ramanujan, with different notations. Ω[12]=3 but ω[12]=2, counting 2 as divisor only once. Hardy & Ramanujan proved then that on the average they both don’t differmuch, that they both will be log log x – meaning most prime factors will not repeat, for large numbers. Alladi remarks that this was the first systematic discussion of prime numbers, even though they were known since Greek antiquity.

Coming back to Erdos, and his proof of Bertrand’s postulate, one of Erdos’ Hungarian colleagues mentioned that his proof was very similar to the proofs of S Ramanujan – and that was Erdos’ introduction to Ramanujan and Madras.

The Erdos - Alladi – Madras connection

Krishnaswami Alladi, then a student at Vivekananda College, looked at the missing element here : Sum of divisors. So devised a formula in second year of Vivekananda college which was accepted a conference on maths in Calcutta, which he could not go to but his father agreed to present, in the student’s section. Which was heard by Paul Erdos! Who came to Madras to specifically meet Krishnaswami! And related the Madras Iyer ditty, modeled on the Boston Cabott Lowell ditty. And wrote a recommendation letter to a Stanford University professor, which accepted him.

Krishnaswami Alladi’s formula for the sum of prime factors, which he called A(n) after himself, in “a moment of vanity”, he says. Erdos suggested that the largest prime factor will swamp the sum. Alladi wondered whether if it were removed the second largest would dominate, and so on. “Very good question,” replied Erdos. “Work on it!” And so Alladi worked with Erdos to prove this – one of his most quoted papers.

Alladi showing a paper handwritten by Paul Erdos

It was a delightful evening. Alladi’s presentation was approachable excellence, flavored with anecdote, humour and history, as opposed a lot of science or maths, which is dry erudition. Please watch the video links.

Sunday 29 December 2013

Erdos on Madras

Paul Erdos' verse on the city of Madras

This to city of Madras,
Home of the curry and the daal,
Where the Iyers speak only to Iyengars
And the Iyengars speak only to God

-modelled on a similar verse on Boston snobbery, which goes:

This to city of Boston,
Home of the bean and the cod,
Where the Lowells speak only to Cabots
And the Cabots speak only to God

This was related by Krishnaswami Alladi yesterday December 28, on a talk about the mathematics of Paul Erdos, a brilliant Hungarian, the same country as John von Neumann, the father of computer programming whose birthday it was. The talk was for BrainsTrust at Gokhale Sastri Institute, Karpagambal Nagar, Mylapore.

Wednesday 25 December 2013

இன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள்

இன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள். பழைய யுகத்தை மாற்றி புதிய யுகத்தை உருவாக்கினார். உலகில் ஏதோ ஒரு மூலையில், படாடோபம் இன்றி பிறந்து, இளைய பருவத்தில் எவரும் செய்யாத சாதனைகள் புரிந்து, வியந்து பின் தொடர்ந்த ஒரு சீடர் கூட்டத்தை உருவாக்கினார்.

தான் ஞான இருளில் வாழ்ந்து கொண்டிருப்பதை உணராமலிருந்த உலகத்திற்கு சிந்தையும் மனமும் பெரிதளவும் மாறும் வகையில் சொல்லாலும் செயலாலும் புதுமை செய்து, ஞான ஒளி வீசி மங்காப்புகழ் பெற்றார்.

தனக்கு முன்னர் வந்த பல சான்றோரின் கருத்தை அவர் மறுத்தார். தான் ஒரு யுகப்புருஷர் என்று உணர்ந்ததால், சில நேரம் ஆணவமும் திறமைகர்வமும் அவர் பேச்சிலும் செயலிலும் ஜொலித்தது. ஆனால் தனக்கும் எல்லை உள்ளதை அறிந்து தன்னடக்கதையும் அவர் தெரிவித்தார்.

அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ரத்த சதை வாரிசுகள் ஏதும் இல்லை. ஆனால் அவர் கொள்கைகளின் வாரிசு இல்லாத நாடே இல்லை.

தன் வாழ்நாளில் பல சோதனைகளை சந்தித்தார். எதிர்ப்புகளும் வந்தன. ஒரு சில மாமேதைகளுக்கு மட்டுமே அவருடை வாக்கியங்களும் கொள்கைகளும் புதுச்சிந்தனைகளும் அன்று புரிந்தது. அவர் காலத்தில் இப்படி ஒருவர் இருந்தார் என்று உலகத்தின் மற்ற சமூகங்கள் அறியவில்லை. இன்றோ அவர் உலகம் போற்றும் மாமனிதர்.

டிசம்பர் 25 – ஜகத்குரு ஐசக் நியூட்டனின் பிறந்தநாள்.



Monday 23 December 2013

மார்கழி இசை அனுபவம்

வாழை இலை பாய் விரித்து கச்சேரி ஆரம்பம். அமர்ந்து கோரி வர்ணமாக லட்டும், வடை போன்று ஏதோ வடக்கிந்திய பக்ஷணமும் – வட? வடாம் இல்லை. அனுபல்லவிக்கு, மரவள்ளிக்கிழங்கு வருவல் மொரு மொரு என்று.

வடக்கு வந்துவிட்டால் மேற்கும் பின் தொடராதோ? பீன்ஸ் பருப்புசுலி, அதில் சிட்டஸ்வரமாக பட்டாணி. நாவிலே இந்நேரத்தில் எல்லோருக்கும் ஸ்ருதி சேர்ந்து விட்டது.

அன்ன ஆலாபனை ஆரம்பம். பக்க ஆலாபனைக்கு பருப்பும் நெய்யும். குரலால் சொல்லும் ஸ்வரமும் ராகமும் பிசைவது போல் விரலால் இவற்றை பிசைந்து ருசித்தேன். ரசித்தேன். தயிர் பச்சடி சர்வ லகுவாக பருப்பு சாதம் முதல் ரசஞ்சாதம் வரை லயித்தது.
புளியோதரை சோலோ.

சாம்பார் பல்லவி, அப்பளம் அனுபல்லவி. நிரவலாக பருப்புசுலி. பாவைக்காய் பிட்லை ஸ்ருதிபேதம். சமையல்க்காரரின் கல்பனா ஸ்வரத்திற்கு அங்கங்கே பரிமாரியவர்கள் மாறி மாறி சாதித்து லயம் சேர்த்தனர்.

இந்த விஸ்தாரத்திர்க்கு அடுத்து, சுருக்கென்று ஒரு வாழைப்பூ காரக்குழம்பு. சாம்பாருக்கு சமானமாக. காரைக்குடி பாணி.

அமுதுண்டால் சாற்றும் அமுதின்றி ஆகுமோ? ஆசை முகம் மறந்து போகுமோ?

எப்போ வருவாரோ என்று கேட்கவைக்காமல், கிண்ணத்தில் கண்ணனமுது.

தனி ஆவர்த்தன தயிரும் தீர்மான மோர்மிளகாயும். மங்களமாய் மினரல் வாட்டர்.

இந்த அற்புத கச்சேரி : மியூசிக் அகடமியில் நேற்று, ஞாயிறு டிசம்பர் 22. மார்கழி அனுபவத்தை உங்களுடன் பகிர்வதில் இன்பம். அந்தரிக்கு வந்தனம்.



மறக்கும் முன் – யாரோ உள்ளே பாடிக்கொண்டிருந்தார். ஒலிப்பெருக்கியில் கேட்டது.

Sunday 22 December 2013

Kerala - LMS

Green is the color of everything

Kerala 
where green is not the color of envy, because it is the color of everything.
where palmyra rhymes with coconut and raindrops serve for rhythm.
where water wages love and war, enriches land and redraws maps,
where roofs slope steeper than hills.

Where field is garden, garden is grove, groves are woods;
  and wood is material form function and philosophy, 
    and wood shapes thought as much as Man shapes wood.

Where custom is as rigid as attitudes are mellow; 
where tradition is pride and pride is tradition; 
and spices serve to supplement, not sublimate. 

Where oil lamps flicker in subdued splendor 
alongside the fluorescent grandeur of unabashed modernity.


Water, palmyra, coconut

Wood shapes thought
and Thought shapes wood

Similar sketches 

Chola greenery - LMS
Kumbakonam - LMS
Traffic - LMS
Landscape of Polur (Tamil)

Thursday 19 December 2013

கேரள சுவரோவியங்கள்

கேரளக் கோவில்களில் நம்மை புகைப்படம் எடுக்க விடுவதில்லை. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள் கோயில்களில் கூட இதை அனுமதிப்பதில்லை. சன்னிதி மட்டும் அல்ல, சுற்றுப்புற சுவர்களில் உள்ள ஓவியங்களை படம் எடுக்க கூட அனுமதி இல்லை. நாட்டில் மற்ற மாநிலங்களில் இந்த கட்டுப்பாடு இல்லை.

நவம்பர் 29 திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி கோயிலில் கருவரையை சுற்றி பல ஓவியங்களை நானும் நண்பர் சிவாவும் பார்த்து ரசித்தோம். வேறு எந்த பக்தருக்கும் இதில் ஆர்வம் இருக்கவில்லை. அவர்கள் மூலவரை தரிசனம் செய்து, ஆசிர்வாதம் வாங்கி கொண்டு, குங்குமம் பூ இத்யாதி பிராசதம் வாங்கினால் போதும் என்று கூட்டத்தோடு முட்டி மோதியபின், ஓவியத்தை கண்டுகொள்ளாமல் சென்று விட்டனர். திருச்சூர் அருகே உள்ள திரிப்பரையாறு ராமர் கோவிலிலும், திருச்சூர் பூரம் அன்று அலங்கார யானைப்படை மிரட்டும் வடக்கும்நாதன் கோவிலிலும் இதே நிலை. 


நவம்பர் 26 திரிப்பரையாறு ராமர் கோவிலில் வட்டமான கருவரையின் வெளிச்சுவரில் உள்ள நாயக்கர் பாணி ஓவியங்களை முக்கால் மணி நேரம் நின்று ரசித்து பார்த்தப்போது ஒரு அர்ச்சகர் அருகே வந்து “ஆர்க்காலஜியோ?” என்றார். அதாவது : நீ தொல்லியல் துறையில் வேலை செய்பவனா, என்று வினா; இல்லை என்றேன். வடக்கும்நாதன் கோவிலில் மூலவர் சந்நிதியும் அதனருகே சங்கரநாராயணர் சந்நிதியும் வட்டவடிவில் சுவரமைத்து, அச்சுவர்களில் நாயக்கர் காலத்து அல்லது நாயக்கர் பாணி ஓவியங்கள் இருக்கும். சிவ புராணம் தான். சதுர வடிவில் அங்கு ஒரு ராமர் சந்நிதியும் உண்டு. அதன் சுவற்றில் ரவிவர்மா பாணியில் ராமாயண ஓவியங்கள் உள்ளன. ராமரும் சகோதரர் மூவரும் மணம் செய்யும் காட்சியில் ராமருக்கும் சீதைக்கும் மட்டும் தலைக்குப்பின் வட்டபிம்பம் இருக்கும். இங்கு அர்ச்சகர் ஆர்க்காலஜியா என்று கேட்கவில்லை.

நவம்பர் 28 கொச்சி நகரில் கொச்சி மன்னருக்கு போர்ச்சுகீசியர் கட்டிக்கொடுத்த மட்டஞ்சேரி அரண்மனையின் படுக்கை அறையிலும் நாயக்கர் பாணி ராமாயண காட்சிகள் உண்டு – புகைப்பட அனுமதி இல்லை. இங்கு ஆர்க்காலஜியினர் நீ அர்ச்சகரா என்று கேட்கவில்லை. கம்பீரமாக ஸ்லோகமோ மந்திரமோ ஓதியிருக்கவேண்டும் – வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டேன்.
நாள் கணக்கில் முன்னுக்கு பின் முரணாக, அனந்தன் சந்நிதியில் பாதியில் விட்டு எழுதுவதால், இப்படியே எல்லா கட்டுரைகளும் எழுதும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் என்னை வேலைக்கெடுத்துக்கொள்ளும் என்று வாசகர் அச்சம் கொள்ள வேண்டாம். வேலை கெடுத்துக்கொள்ளாது. அங்கே இருவரும் பார்த்துக்கொண்டிருக்க, பூசைக்கு நேரமாச்சு இடத்தை காலி செய்யுங்கள் என்று ஒரு அர்ச்சகர் அன்பாக துரத்தினார். முக்கால் மணிநேரத்தில் மீண்டும் திறப்போம் சிறப்பு தரிசனம் காண எல்லீரும் வாரீர் என்று அன்புடன் வேறு ஒரு அர்ச்சகர் அன்பாக அழைத்தார். 

வேலை இருந்ததால் சிவா கான்ஃபரன்ஸுக்கும், வேலை இல்லாததால் ஊர்சுற்ற நானும் அன்புடன் நகர்ந்தோம். அன்ன்பூர்ணா என்று ஒரு சைவ உணவகத்திற்கு மதிய உணவுக்கு சென்றேன். 70 ரூபாய்க்கு இலைச்சாப்பாடு – பருப்பு, சாம்பார், மோர்குழம்பு, ரசம், தயிர், அவியல், அப்பளம், கூட்டு பொரியல்; இவற்றுடன் சூடாக பொடாசியம் பெர்மாங்கனேட் கலரில் கருங்காலி வெள்ளம். ரசித்து ருசித்து அருந்தினேன்.

அந்த உணவகத்தின் சுவர்களில் பத்மநாபசுவாமி கோவிலின் கருவறை வெளிச் சுவர்களில் உள்ள ஓவியங்களை போலவே, அதே பொலிவுடன், அதே ஓவியர் தீட்டியது போல், பல சிவ விஷ்ணு ஓவியங்கள். புகைப்படம் எடுத்தால் ஆர்க்காலஜியோ என்று வெய்ட்டர் கூட கேட்கவில்லை.

கண்டு ரசிக்கவும். உண்டும் ரசிக்கலாம்.

Wednesday 18 December 2013

மங்கள்யானும் நானும் - ஆழம் கட்டுரை

பிப்ரவரி 25, 2013. மாசி மாதம். “இன்று ஆறு மணிக்கு இஸ்ரோ ராக்கெட் விடுகிறார்கள். நான் போகிறேன். நீ வருகிறாயா?” என்று என் தம்பி ஜயராமனிடம் கேட்டேன். அதிசயமாக அவனும் சரி என்றான். நண்பர் சிவாவும், ஆசிரியர் பாலசுப்ரமணியனும் ஆவலுடன் சேர்ந்துகொள்ள, சென்னையிலிருந்து வடக்கே காரில் சென்றால் ஸ்ரீஹரிக்கோட்டா அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில், கிளம்பினோம். கொல்கொத்தா நெடுஞ்சாலையில், சூளுர்பேட்டை அருகே திரும்பி, ஸ்ரீஹரிக்கோட்டாவை நோக்கி காரை திருப்ப, புலிக்கேட் எனும் பழவேற்காட்டு ஏரியை சுமார் மதியம் இரண்டு மணிக்கு அடைந்தோம்.  கொக்கு நாரை பெலிக்கன் மற்றும் பெயர் தெரியாத பல பறவை கூட்டங்களை ஐந்து மணிவரை பார்த்துக்கொண்டு, நீல வானத்தையும் நீர் பரப்பையும் பயிர் பசுமையையும் ரசித்தோம். போகும் வழியெல்லாம் அங்கங்கே போலீஸ்காரர் நின்றிருந்தனர்.  

பழவேற்காட்டு பறவைகள் 2013 மாசி மாதம்

பறவை அருங்காட்சியகம் வாசல் பலகை

அருங்காடிசியகத்தில் கிளிஞ்சல்கள்

ஐந்து மணிக்கு ராக்கெட் பார்க்க செல்ல, பழவேற்காட்டு பறவை சரணாலயத்து கல்வி நிலையம் Pulicat Bird Sanctuary – Environmental Education Center, என்று ஒரு கட்டிடம் உள்ளது. அங்கே ஒரு பாலம் உள்ளது. பாலத்தை தாண்ட அனுமதி சீட்டு வேண்டும், என்று அங்கு போலீஸ் செக்போஸ்ட்டில் சொல்ல, சீட்டு இல்லாதவர், அருகே உள்ள சாலையோரம் வண்டி நிறுத்தி, அங்கிருந்து ராக்கெட் புறப்பாட்டை பார்க்கலாம் என்றனர். ஏற்கனவே காரிலும், மோட்டார் பைக்கிலும், ஆட்டோவிலும், சுமார் ஆயிரம் மக்கள் வந்திருந்தனர். ஏரிக்கரையோரம் நீண்டு செல்லும் சாலை என்பதால் வண்டி நிறுத்த நிறைய இடம் இருந்தது. சூளூர்பேட்டையிலிருந்தும் அருகே சில இடங்களிலிருந்தும் அங்கே வர தமிழக, ஆந்திர அரசு பேருந்துகளும் உள்ளன.

அன்று மேகமூட்டம் இல்லை. தொடுவான தூரத்தில் செல்போன் கோபுரங்களும் தண்ணீர் தொட்டி கோபுரங்களும் தெரிந்தன. சுமார் ஆறு மணிக்கு, ஒரு கோபுரம் பற்றி எரிந்தது. செக்க சிவக்க பெரும் அனல் பிழம்பு! இக்நிஷன்! ஹோ என்று மக்களிடமிருந்து பேரிரைச்சல். ஆனால் ராக்கெட் மட்டும் சத்தமே போடவில்லை. மெதுவாக செங்குத்தாக புகைமலை சூழ கிளம்பியது. ஒரு சில நொடிகளில் விலைவாசி வேகத்தில் உயர்ந்தது. சுமார் இருபத்து நான்கு நொடிகளுக்கு பின் எரிவாயு கர்ஜனை எங்கும் ஒலித்தது. ஒலியின் வேகம் நொடிக்கு 332 மீட்டர். மூன்று நொடிக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் என்று வைத்துக்கொண்டால், நாங்கள் ராக்கெட் ஏவிய தளத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் நிற்பதாய் கணித்தேன். வால்நட்சத்திரன் வால் போல, ராக்கெட்டின் புகைவால் அதன் பாதையை கோலமாய் காட்டியது. செங்குத்தாய் சென்ற ராக்கெட் வளையத் தொடங்கியது; கடல் நோக்கி கீழே விழுவது போல் இருந்தது. தோல்வியோ என்று ஐயம் எழுந்தது. இதற்குள், மேலே சென்று ஒன்றரை நிமிடம் ஆகிவிட்டது. திடீரென்று ஒரு ஜ்வாலை உண்டானது. மக்கள் பலரும் திகைத்தனர். Second stage ignition. முதல் பகுதி பிரிந்து விழுந்து, இரண்டாம் பகுதி பற்றிக்கொண்டு, அடுத்த கட்டம் தொடங்கியது. இது புரிந்ததும் மக்களின் திகைப்பும் மலைப்பாய் மாறியது – பலர் “Second stage” என்று பேசிக்கொண்டனர். ஆனால் இதற்குள் மிக உயரமாய் ராக்கெட் சென்றுவிட்டதாலும், இரண்டாம் பகுதியில் எரிவாயு குறைவானதாலும், ஒரு சில நொடிகளுக்கு பின் ராக்கெடின் புகை வால் வளரவில்லை.
காணவந்தவர் அனைவரும் சில நிமிடங்களில் கிளம்பிவிட்டனர்.  நாங்கள் கொஞ்ச நேரம் ராக்கெட் பார்த்த  அனுபவித்தில் லயித்துக்கொண்டிருந்தோம். புகையை புகைப்படம் எடுத்தோம். பின், புகையுடன் எங்களையும் சில புகைப்படங்கள் எடுத்தோம். ராக்கெட் இருந்த இடத்தில் பௌர்ணமி நிலா மெதுவாக உதித்தது. இருளவே, சூளூர்ப்பேட்டையில் நல்ல டீ குடித்துவிட்டு சென்னை திரும்பினோம்.

PSLV C-20 Feb 2013

நான், சிவா, ராக்கெட் புகையை சுட்டிக்காட்டும் நகுபோலியன் பாலு ஐயா
Balu sir pointing to PSLV C-20 vapor trail

இந்த பிண்ணணியில், நவம்பர் 5 அன்று, நண்பன் கருணாகரன், மருமகன் ராகுலுடன், மங்கள்யான் ஏவும் ராக்கெட் பார்க்கச்சென்றேன். இந்தமுறை சூளுர்பேட்டை தாண்டியவுடன் போலீஸ் நிருத்தி அடையாள அட்டை கேட்டனர். மதியம் 2.30க்கு ராக்கெட் கிளம்பும் என்பதால், காலையிலேயே சென்றுவிட்டோம். ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ள சுருட்டப்பள்ளிக்கு சென்று, அங்குள்ள பள்ளிகொண்ட சிவன் கோவிலிக்கும், அதன் அருகே நாகலாபுரம் மச்சாவதார பெருமாள் கோவிலுக்கும் காலையில் சென்று விட்டு, மதியம் ஸ்ரீஹரிக்கோட்டா போக திட்டம். ஆனால் கிளம்ப தாமதம் ஆனதால் நேரே அங்கேயே போய்விட்டோம். ஏரிகள் நிறம்பியிருந்தன. ராக்கெட் பதட்டமின்றி மீனவர் வலைவீசி ஏரிகளில் மீன் பிடித்தனர். கொக்குகளும் பெலிக்கன்களும் வலையில்லாமல் மீன் பிடித்தன. உழவர்கள் வயல்களில் நாத்து எடுப்பதையும் பார்த்தோம். எங்களை தாண்டி பல சுற்றுலா பயணிகள் ஏசி பேருந்துகளிலும், விஐபிக்கள் கார் ஊர்வலத்திலும் விறைந்தனர். ஓரிருவர் நின்று பறவைகளை கண்டு ரசித்து சென்றனர்.

பிப்ரவரியில் (தை) பறவைகள் கூட்டம் கூட்டமாய் இருந்தன. விசா கிடைத்து அமெரிக்கா சீனா சென்றிருக்கலாம், சில பிரம்மச்சாரி பறவைகளே மிஞ்சின. செக்போஸ்ட்டில் இம்முறை நாங்களே அனுமதி சீட்டு இல்லாத முதல் பார்வையாளர். 2.30 மணி நிகழ்ச்சிக்கு 12 மணிக்கு வந்துவிட்டோம். பெட்டிக்கடையில் கடலை உருண்டையும் கமர்கட்டும் வாங்கினோம். பறவை சரணாலாய நிலையத்து தொழிலாளி, உள்ளே வரச்சொல்லி, அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். விளக்கப் படங்களும், காட்சிப்பொருட்களும் நன்று. 2 மணிக்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. கையில் டெலிஸ்கோப் இருந்தது – சுமார் ரகம். தொடுவானத்திலோ மேகமூட்டம். ஒரு சிறுவன் பைனக்குலரில் சரியாக தெறியவில்லை என்றான். 


டெலிஸ்கோப்பும் அப்படித்தான் என்று அவனிடம் கொடுத்தேன். ஒலிம்பிக் தீ வைக்கும் கோபுரம் போல் ஒன்று தெறிகிறதே அதுதான் ராக்கெட்டா, என்று அவன் தாயார் வினவினார். அது நகராட்சி தண்ணீர் தொட்டி என்றேன். தெளிவான வானம் இருந்தாலே ராக்கெட் தெரியாது, ஆனால் கிளம்பும் போது நன்றாய் தெரியும் என்று, இரண்டு நிமிட அனுபவ ஆழம் தந்த தன்னம்பிக்கையில், அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். மஹாராஷ்டிரா, ஹரியானா பதிவெண்களோடு கார்கள் வந்து நின்றன. அடுத்தமுறை ஒரு அண்டா டீ கொண்டு வரலாம், நல்ல வியாபாரம் ஆகும் என்று நன்பர் கருணா கூறினார். பிப்ரவரியில் என்னுடன் வந்த சிவா, குடும்ப சமேதராய் காரில் வந்தார். டெலிஸ்கோப் இங்கும் அங்கும் கைமாறியது. தண்ணீர் தொட்டிகளை பார்த்து, ஏதாவது ஒன்று ராக்கெட்டாக மாறுமா என்று ஏங்கி ஏங்கி பார்த்தோம். முன்பு மண்ணாய் இருந்த நிலம், நீர் நிரம்பி ஏரியாய் இருந்தது. ஏரியில் நடந்து இன்னும் கால் கிலோமீட்டர் சென்றால் ஒருவேளை நன்றாய் தெரியுமோ என்று சிலர் முழங்கால் நனைத்தனர். எங்கு வரும், எப்படி வரும், சரியான நேரத்தி கிளம்புமா, வெரும் கண்ணில் தெரியுமா, டெலிஸ்கோப் வேண்டுமா, புகைப்படம் எடுத்தால் வருமா என்ற கேள்விகளுக்கு, அப்துல் கலாமாக மாறிய நான் முத்துக்களாய் பதில் உதிர்த்தேன்.

கீழ்வானம் சிவந்தது. கோபுரம் மீண்டும் எரிந்தது. மக்கள ஆரவாரப் பேரொலி எழுந்தது. ஆரவாரமின்றி ராக்கெட் எழுந்தது. ஒரு நொடி மட்டும் ஜகஜ்ஜோதியாய் தெரிந்தபின், மேகத்தில் கலந்த புகை மட்டுமே தெரிந்தது. பத்து நொடிக்கு பின் மேகத்திரையை கிழித்து மேலே வந்தது. பிப்ரவரியில் ராக்கெட் கண்ணுக்கு தெரியவில்லை எரிவாயுவின் ஜ்வாலை மட்டுமே தெரிந்தது. இம்முறை மங்கள்யான் ராக்கெட்டை நன்றாகவே காணமுடிந்தது. செங்குத்தாய் ஏறாமல் கொஞ்சம் சாய்ந்து ஏறியது போல் தெரிந்தது. ஆனால், ஏமாற்றம்! 15 நொடிகளில் மீண்டும் மேகத்தில் மறைந்தது. 90 நொடி கழித்தே மீண்டும் கண்பட்டது. அதுவரை எரிவாயு அசரீரியாய் கர்ஜித்தது. இரண்டாம் இக்நிஷன் பார்க்கமுடியவில்லை. புகை வால் முற்றி ராக்கெட் பார்வையிலிருந்து மறைந்தது. அதன் பாதை வளைவை பார்த்து ஓரிருவர் கீழெ விழுகிறதா என்றனர். இல்லை, பூமி வளைவதால் அப்படி தெறிகிறது என்றேன்.

புளியோதரை அருந்தி பள்ளிகொண்ட சிவனையும், பொங்கல் ருசித்து மீனாய் நின்ற திருமாலையும், மினரல் வாட்டர் குடித்து பெரியபாளையத்து அம்மனையும், பார்த்துவிட்டு சென்னை திரும்பினோம். வந்த பிறகே மங்கள்யான் வெற்றிகரமாய் விண்ணை அடைந்தது என்று தெரிந்தது.

பி.எஸ்.எல்.வி என்பது போலார் ஸேட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள் எனும் ஆங்கில சொற்றொடரின் சுருக்கம். 
போலார் = துருவ மார்கம்
ஸேட்டிலைட் = செயற்கை கோள்
லாஞ்ச் =  ஏவல்
வெஹிகிள் = வாகனம்

சி-1, சி-2 என்று வரிசையாக செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஏவியுள்ளது. மங்கள்யானை எடுத்து சென்ற ராக்கெட் (ஏவுகணை) சி-25.

மங்கள்யானை ஏற்றி சென்ற பி.எஸ்.எல்.வி சி-25 ஏவுகணை
PSLV C-25 with Mangalyaan
Update on September 7, 2016

ஆழம் டிசம்பர் 2013 இதழில் 
ஸ்ரீஹரிக்கோட்டா அனுபவ கட்டுரை வந்துள்ளது. இப்பொழுது ஆழம் இதழின் சுட்டி வேலைசெய்யவில்லை.

Video of February PSLV-C20 launch here

Essay in English on rocket launch in Sriharikota  - Midnight Sun in Sriharikota

Monday 16 December 2013

பாண்டியா, நல்ல ஊர் பெயர் நின்னுடைத்து

ஆரல்வாய்மொழி. காவல்கிணறு. கல்லிடைகுறிச்சி. ஆழ்வார்திருநகரி. வாகையடி முக்கு. திசையன்விளை.  குருகூர்.

Saturday 14 December 2013

நான் ரசித்த சில பெயர் பலகைகள்

கதரும் கதர வைப்பதும்,
திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே

ஊர் சுற்றுகையில் கோவிலும் குளமும் மலையும் நதியும் கோட்டையும் கழுகும் கழுதையும் பார்ப்பது சாதாரணம். நான் பல பாமர காட்சிகளையும், அதில் சில விசித்திரங்களையும் ரசிப்பவன்.

ஸ்ரீவைகுண்டத்தில் பழக்கடை
அரசர்களையும் கலைஞர்களையும் தெய்வங்களையும் முனிவர்களையும் மட்டும் வரலாற்று நாயகர்களாக நான் காணும் காலம் சென்று, வணிகரையும் உழவரையும் உழைப்பவரும் ஒரு சிலராவது சில நேரங்களில் காட்சி நாயகர்களாக என் கண்ணுக்கு தெரிவதுண்டு. அந்த வரிசையில் அவ்வப்பொழுது கடை பெயர் பலகை, தெரு ஓவியம், வண்டிகளில் ஓவியம், பயணி, மரம், கழனி வாண்டு என்று எதையாவது படம் எடுப்பேன். இதற்கு வரதராஜன் மாமா – பிரபா மாமி அன்பு பரிசாக அளித்த டிஜிட்டல் கேமராவும், மிக மலிவான ஹார்ட் டிஸ்க்கும் இலவச இணையதள வசதியும் – வலைப்பதிவு, பிகாசா வகைகள், முக்கிய காரணம்.

நிகழும் கார்த்திகை மாதம் கேரளமும் தென் தமிழகமும் சுற்றுகையில், எடுத்த சில படங்கள் இங்கே.
கொச்சியில் மூலிகை கடை
“ ஹோர்ட்டஸ் மலபாரிகஸ்” என்பது லத்தின மொழியில், மிளகின் விஞ்ஞான பெயர். கொச்சியில் யூதநகர பகுதியில் பார்த்தது.  படத்தில் என்னுடன் இருப்பது தொல்லியல் வல்லுனர் ராதிகா கோபால் - இவர் வீட்டில் தான் விருந்தாளியாக கொச்சியில் நண்பர் சிவாவும் நானும் தங்கியிருந்தோம். அவர் 200 மூலிகைச்செடிகளை கொண்ட தோட்டத்தை தன் வீட்டு மாடியில் வளர்க்கிறார்! அதற்கு தனிப்பதிவு தேவை.


திருநெல்வேலியில் லீபனோன்!

லீபனோன் [லெபனான்] மேற்கு ஆசிய சிறிய நாடு – வெடிகுண்டு வெடித்தால் மட்டும் செய்தியில் வரும். பாளையம்கோட்டையில்  இந்நாட்டு பெயரில் கடை இருப்பது கிளுகிளுத்தது. எச்சரிக்கை: போட்ஸ்வானா, உருகுவே என்று டீக்கடை பார்த்தால் இதே பரவசம் அடைவேன்.






ப், க், ச், த், ம், ஞ், ழ், ல், ட், ள், ர் 

ஒன்றுமில்லை, அங்கங்கே பல ஒற்று[க்]களை விட்டு எழுதியுள்ளேன். இலக்கணப் பிரியர்கள் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும். மிகுதியை அரவிந்த கெஜரிவாலுக்கு தானமாக கொடுத்துவிடுங்கள்.

Sunday 8 December 2013

வாழைத்தண்டு தோசை ராகி அடை

வாழைத்தண்டு தோசை மாவு

 இந்திராம்மா செய்த கம்பு அடை பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். போன மாதம் காலையில் “என்ன டிஃபன்” என்று கேட்டுகொண்டே மாடியிலிருந்து கீழே வந்த போது “வாழைத்தண்டு தோசை” என்ற பதிலிடி கிடைத்தது. தோனோடும் சாம்பாரோடும் தோசையும் கிடைத்தது.






தேனும் சாம்பாரும் - வாழைத்தண்டு தோசைக்கு

படம் எடுத்தேன் ஆனால் வலைப்பதிவில் போடவில்லை. சில நாட்களுக்கு பின் மாதம் ஒரு முறை ரசிக்கும் ராகி அடையும் கிடைத்தது. படம் இங்கே. பெருகு தோசை என்று தயிரிலும் அவர் தோசை செய்வார் – செய்யும் நாள் படம் காட்டுகிறேன்.

இந்திராம்மாவை காஞ்சிக்கு அழைத்துச் சென்று சன்னதியை தவிற மற்றவையும் கோயிலில் உண்டு என்று காட்டியது வேறொரு அனுபவம். திருப்பருத்திக்குன்றம் சமணர் கோயிலில் ”புத்தரா?” என்று  அவர் [அவுங்க?] திகைத்ததும், அங்கு சாதாரணமாக அவசரப்படும் பெண்மணி சாந்தமாக எங்களை அனுசரித்ததும், வேறொரு நாளுக்கு கதை.
ராகி அடை மாவு

தட்டில் ராகி அடை, இந்திரா அம்மா

Sunday 24 November 2013

சொர்கத்தின் பறவைகள்


டார்வினை பற்றி யாவரும் அறிவோம், ஆனால் அவர் சொன்னை “பரிணாம வளர்ச்சி” கொள்கையை டார்வினுக்கும் முன் வெளியிட்ட ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸை பற்றி ஒரு சிலரே அறிந்திருப்பர். நவம்பர் 2013 வாலஸ் மறைவின் நூற்றாண்டு. 


இளம் வயதில் வாலஸ்
இக்கட்டுரை அவருக்கு என் அஞ்சலி. என் வலைப்பதிவிற்கு “ஆஜீவிகா வாலஸியன் Ajivika Wallacian” என்று பெயரிட்டுள்ளதை சிலர் கவனித்திருக்கலாம். அந்த வாலஸ் இவர் தான்.

டார்வினை பற்றியும் அவரது அறிவியல் ஆய்வுகளை பற்றியும் நாளிதழிலோ பொது பத்திரிகையிலோ படிக்கும் பொழுது, வாலஸ் பெயர் அடிபடாமல் இருக்கலாம். ஆனால் பரிணாமம் பற்றிய கதை கட்டுரைகளில் வாலஸ் பெயர் நிச்சயம் இருக்கும். டார்வினுக்கு சமமான உயிரியல் மேதை, பல துறைகளில் அவரை மிஞ்சியவர். நாம் அறிவியலை பொதுவாகவே சுவையின்றி ருசியின்றி பாடபுத்தகமாகவே படிக்கிறோம். அக புற பக்தி திணைகளில் உள்ள நவரசங்களும் அறிவியல் துறையில் உள்ளன. அறிவியல் வரலாற்றில் உள்ளன. இவற்றை சினிமா நாடக கலைஞர்களும், நாவலாசிரியர்களும் பரப்பாதது அவர்களின் திறமை குறை, சமுதாயத்தின் பெரும் இழப்பு. ஒரு திணையாக அறிவியலை பற்றி பின்னொரு நாள் எழுதுகிறேன்.

வருமையும் கல்வியும் கலந்த குடும்பத்தில் பிறந்த ஆல்ஃப்ரட், ஏழாம் வகுப்பு படிக்கையில் தந்தை இறந்ததால், அண்ணன் வில்லியமுடன் நில அளவு பணியில் இறங்கினார். இயற்கையில் ஆர்வம் பாய்ந்து செடிகளை சேர்க்கலானார், அவற்றை பற்றி படிக்கலானார். ஹம்போல்ட், டார்வின் ஆகியோரின் தென் அமெரிக்க பயணத்தால் ஆவலுற்று, நான்கு வருடம் தென் அமெரிக்கா சென்று அமேசான் நதியும் அதை சூழ்ந்த காடுமாய் அலைந்து பல இன்னல்கள் சந்தித்து, 1852இல் இங்கிலாந்து திரும்பினார். இதை பற்றி தனியாக எழுதுகிறேன். 


 1854இல் சிங்கப்பூருக்கு வந்து மலே தீவுகளில் உயிரியல் ஆய்வு செய்தார். அன்று இந்தொனேசிய தீவுகளை மலே தீவுகள் என்றே அழைத்தனர். அந்த தலைப்பில் Malay Archipelago என்று ஒரு நூல் எழுதினார் வாலஸ். பாலி தீவிலிருந்து லோம்போக் தீவுக்கு சென்ற வாலஸ் 15 கிலோமீட்டர் அருகே இருந்த இத்தீவுகளில் பறவைகளும் விலங்குகளும் இவ்வளவு வித்தியாசமாய் இருப்பதை கண்டு அதிசயித்தார். படங்களை கண்டால் உங்களுக்கும் அதே உணர்வெழும். 

ஆசிய விலங்குகள் ஒரு சில தீவுகளிலும், ஆஸ்திரேலிய விலங்குகள் மற்ற தீவுகளிலும் இருப்பதை கண்டு, இத்தீவுகளுக்கு இடையே இயற்கையாகவே ஒரு பெரும் பிறிவு உள்ளதாய் கருதி, ஒரு காலத்தில் கடலளவு குறைந்திருந்து சில தீவுகள் ஆசிய கண்டத்துடனும் மற்றவை ஆஸ்திரேலிய கண்டத்துடனும், ராமர் பாலத்தால் பாரதமும் இலங்கையும் இணைந்தது போல், இயற்கை பாலங்களால் இவை இணைந்திருக்க வேண்டும் என்றும் எழுதி, வரைபடத்தில் ஒரு கோடிட்டார். இதற்கு வாலஸ் கோடு என்று தாம்ஸ் ஹக்ஸ்லி பெயரிட்டார்.

சூலவேசி, போர்ணியோ, டெர்ணாட்டி தீவுகளுக்கு சென்று இந்த அற்புதத்தை பற்றி கட்டுரைகள் எழுதி இங்கிலாந்திற்கு அனுப்பினார்.

இத்தீவுகளில் அலையும் காலத்தில் சொர்கத்தின் பறவைகள் எனும் Birds of Paradise கண்டார். பரிணாம வளர்ச்சி தத்துவத்தை பற்றி On the Tendency of Varieties to depart indefinitely from the Original Type” என்ற தலைப்பில் எழுதி, டார்வினுக்கு அனுப்பினார். இருபது வருடங்களாக இதை ஆய்வு செய்திருந்த டார்வின், தம்மை ஒருவர் முந்தி, தான் அச்சிட தயங்கிய கருத்தை இவ்வளவு ரத்தின சுருக்கமாய் கட்டுரை எழுதியள்ளதை கண்டு, மனம் இடிந்து போனார். இப்படி நடக்கலாம் என்று அஞ்சி டார்வினை இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவர் நண்பரும் குருவும் ஆன புவியியல் மேதை சார்ல் லயல் அவருக்கு எச்சரித்திருந்தார். தம் உழைப்பு அடையாளற்று போய்விடும் என்று ஒரு புறம் மனமுடைந்தும், ஆனால் வாலஸின் கட்டுரையை பிரசுரிப்பதே நேர்மையான செயல் என்று மறுபுறம் உணர்ந்தும், லயலிடமும், மற்றொரு நண்பர் ஜோஸஃப் ஹூக்கரிடும் லோசனை கேட்டு கெஞ்சினார் டார்வின். உங்கள் இருவர் பெயரிலும் சேர்ந்து ஒரு கட்டுரையை வெளியிடலாம் என்ற அவர்களின் சிந்தனையை, பண்பற்றது என்று முதலில் டார்வின் நிராகரித்தார். அந்த நேரத்தில் டார்வினின் மகன் சார்ல்ஸ் நோய்வாய் பட்டு உயிருக்கு ஊசலாடவே வாழ்விலும் ஆய்விலும் ஆர்வமிழந்த டார்வின் நண்பர்களிடம் பொருப்பை ஒப்படைத்து ஒதுங்கிகொண்டார். மகன் சார்ல்ஸ் இறந்துவிட்டான். இரண்டு மாத கப்பல் பயணத்து தொலைவில் இருந்த, புகழ்பெறாத,  வாலஸிடம் கேட்காமல், லயலும் ஹுக்கரும் பரிணாம வளர்ச்சி என்ற கொள்கையை உலகம் அறிய டார்வின் வாலஸ் இருவர் பெயரிலும் ஜூலை 1858இல் லின்னேயன் சபையில்  ஒரு கட்டுரையை படித்தனர்.

வாலஸ் எத்தகைய மாமனிதர் என்று இதன் பிறகே வெளிப்பட்டது. தன்னை ஏமாற்றியதாக கருதாமல், தன் புகழை டார்வினுக்கு அவர் நண்பர்கள் திருடி அளித்ததாக நினைக்காமல், “தக்கது நீர் செய்தீர் தர்மத்திற்கு இது ஒக்கும்” சூதின்றி வஞ்சமின்றி என்று லயலையும் ஹூக்கரையும் மனமளாவ பாராட்டினார்! டார்வினின் இருபதாண்டு உழைப்புக்கு களங்கம் வராமல், என் கட்டுரை அச்சில் முந்திய ஒரே காரணத்தால் அவருக்கு வரவேண்டிய புகழ் எனக்கு மட்டும் தனியாக வந்திருக்குமாயின், ஒரு மாபெரும் வரலாற்று பிழையும் அநீதியும் நடந்திருக்கும் என்று, அவர்களது செயலை மெச்சினார். பிற்காலத்தில், டார்வினுடன் பல கருத்துக்களில் வேறுபட்டாலும், “டார்வினிஸம்” என்ற பெயரில் டார்வினை விட மிக எளிமையாகவும் சிறப்பாகவும் விளக்கும் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.

வீரர். ஞானி. மேதை. மகாத்மா. சான்றோர்.

இக்கட்டுரைக்கு உதவிய நூல் Darwin’s Armada by Iain McCalman. இணையத்தில் நான் பார்த்த, ஆர்வலர் பார்க்கவேண்டிய காணொளிகள்:

1.   Wallace in the Spice Islands - பறவை விலங்கு படங்கள் இதிலிருந்து எடுத்தவை 

Friday 22 November 2013

Democracy or Free Market

An excellent quote from Matt Ridley's latest blog. It best illustrates the differences between political and economic freedoms. Democracy is usually vastly oversold and hyped, while the free market is usually vehemently criticized. It has also been stated that the market votes every minute with its money, whereas the electorate votes once every few years. 

"Free-market economists are wont to point out that economic freedom is in one sense more tolerant than political freedom. If you like apples and I like oranges, then economic freedom means I can have one and you can have the other, and we are both happy. Political freedom means that we take a vote on whether we all should have apples or all should have oranges, and the loser is disappointed."

Note that Ridley makes this important observation in his last paragraph. Briefly it is: "The real benefit of democracy is stop the rulers using violence against you."

http://www.rationaloptimist.com/blog/when-political-tyranny-allows-economic-freedom.aspx

Thursday 21 November 2013

இன்சுலின் விஞ்ஞானி ஃப்ரெட் ஸேங்கர் - அஞ்சலி

இன்சுலினின் அமினோ அமில ரசாயனத்தொடரை கண்டுபிடித்த விஞ்ஞானி, ஃப்ரெட் ஸேங்கர், நேற்று காலமானார். சக்கரை நோயாளி ஒருவரையாவது அறிந்த நாம், இன்சுலின் பற்றாகுறையால் சக்கரை நோய் வருகிறது என்றறிவோம்.

ப்ரோட்டீன்களே செல்லின் விசைகள், படகுகள். ப்ரோட்டீன்கள் அமினோ அமிலங்களால் ஆனவை. AGCT என்ற ஆங்கில எழுத்துக்களால் குறிக்கப்படும் அடினைன், ஸைடோஸைன், குவானைன், தைமைன் ஆகிய நான்கு நூக்ளியோடைடுகளே மரபணு, டிஎன்ஏ, ப்ரோட்டீன் ஆகிய பெரிய மூலக்கூறுகளின் அடிப்படை பொருட்கள். மூன்றுக்கோடி நூக்ளியோடைடு கொண்டது டிஎன்ஏ. மூன்று நூக்ளியோடைடு கொண்டது அமினோ அமிலம். 20 வித அமினோ அமிலங்கள் உள்ளன. அமினோ அமிலத்தொடர்களே ப்ரோட்டீன்கள்.

இன்சுலினின் அமிலோத்தொடரை கண்டுபிடிக்க ஸேங்கர் செய்த அபாரமான ஆய்வினால் அவருக்கு ரசாயனத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. இருபது ஆண்டுகளுக்கு பின், டிஎன்ஏ தொடரை [ரசாயனச்சங்கிலியை] வேகமாக கண்டுபிடிக்க ஒரு புது முறையை அவர் கண்டுபிடித்தார். இந்த ஆய்வின் விளைவாக ரசாயனத்திற்கு மற்றும் ஒரு நோபல் பரிசை ஸேங்கர் பெற்றார்.

ஃப்ரெட் ஸேங்கர் மனிதக்குலத்திற்கும் விஞ்ஞானிகளுக்கும் சான்றாய் வாழ்ந்தவர். அவரைப்போல் பலச் சான்றோர் உருவாகட்டும். என் தந்தை ரங்கரத்தினத்திற்கு சக்கரை நோய் இருந்ததது. அவரும் பல கோடி மக்களும் ஃப்ரெட் ஸேங்கர் முதலோரின் ஆய்வில் பல்லாண்டு வாழ்ந்தனர்.



ஃப்ரெட் ஸேங்கர், நல்ல பணி நின்னுடைத்து.

A third Industrial Revolution?

Is there a Third Industrial Revolution under way? Chris Anderson thinks so, with the advent of desktop manufacturing.

Our understanding of history -from school syllabus, mostly - is that there was only one Industrial Revolution. Were there two? Some believe so, the first when James Hargreaves invented the spinning jenny, the second triggered by James Watt's steam engine and its adaptation in several manufacturing and mining processes.

I used to be believe that it began with the steam engine and there was a second stage Electricity was harnessed on a large scale. There are apparently historians who believe the Industrial Revolution never happened - but I have not read those works, I've only read references to them, so I refrain from comment! Yet others think there were several stages of the industrial revolution. These would include:
  1. The mass manufacture of cotton textiles in the mills of Manchester - triggered by John Kay's shuttle, Hargreaves' jenny, Eli Whitney's cotton gin, Arkwright's mule / power loom etc. 
  2. The Chemical industry, kickstarted by the manufacture of aniline by BASF in Germany
  3. Watt's steam engine, for mines and mills
  4. The transportation revolution - mainly railways and steamships - triggered by locomotives of Richard Trevithick & George Stephenson
  5. The automobile revolution - Diesel, Otto, Benz
  6. The Electrical revolution - Edison, Tesla
This six stage timeline of the Industrial Revolution happened over a hundred years, hardly an overnight occurrence. From John Kay's shuttle to Arkwright's mule was a 40 year period.

Notice that these ignore such dramatic developments as the Communication revolution, Plastics, Steel, Cement, Electronics, and Computers.

Drones have changed warfare, but are not covered in the news. Some science stories like the Higgs boson and Mangalyaan get tremendous attention, while developments in biology get no attention at all. 3D printers, electric hybrid cars, electronic ink, the Google driverless car, shale gas revolution, the ubiquitous rare earth elements - these get no coverage at all, they are simply not in the public conscience. That is a pity.

Fred Sanger - Insulin man

Fred Sanger, who first discovered the amino acid sequence of insulin, passed away yesterday. Insulin is now familiar to most of us, as the protein whose shortage causes the onset of diabetes in human beings. Proteins are the engines of the cell, made up of amino acids, which in turn are three-nucleotide sequences of the four basic building blocks of DNA - adenine, cytosine, guanine and thymine, referred to as ACGT.

The sequencing  of a protein was as phenomenal an accomplishment as finding the structure of the DNA by Watson and Crick. The incredible patience which Sanger accomplished is told in books, but since it requires a good understanding of biology, I wont attempt it here. Everybody who has ever had diabetes or someone with diabetes, which was alleviated by insulin, must salute Fred Sanger for his phenomenal contribution to long life and better health of millions of humans.

May there be more Sangers in this world to make it a better place. My father, Rangarathnam, had diabetes and lived a long life because of people like Fred Sanger.

I salute you, sir.

Friday 15 November 2013

டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி


கிமு 1900 இல் உலக ஜனத்தொகை 200 கோடியை எட்டியது. அங்கும் இங்கும் அவ்வபொழுது பஞ்சம் நிலவியது. காளையும் குதிரையும் ஏரில் பூட்டியே விவசாயமே யதார்த்தம். இதற்கு ஜப்பான் நாடு விதிவிலக்கு – 1940கள் வரை, அன்னாட்டில் மனிதர்களே ஏர் இழுத்து உழுதனர். ஏனெனில், ஜப்பானின் ஜனத்தொகை அதிகம் நஞ்சை நிலம் குறைவு. மாட்டுக்கும் தீனி போடும் அளவு நெல் வளர்க்க நிலம் போதவில்லை.

1880க்களில் ஜர்மனியில் ருடால்ஃப் டீஸல், நிக்கலோஸ் ஆட்டோ, கார்ள் பென்ஸ் ஆகியோர் டீஸல் பெட்ரோல் எஞ்ஜின்களை உருவாக்கினர். டீஸல் இஞ்ஜின் பொருத்தி டிராக்டர், ஹார்வஸ்டர், புல்டோஸர் போன்ற விவசாய துறைக்கு ஏற்ற வண்டிகள் வந்தன. காளைகளும் குதிரைகளும் ஏரிழுக்கும் காலம் தேய்ந்தது. போக்குவரத்து வண்டிகளான மாட்டுவண்டியும் குதிரைவண்டியும் வேகமாக மறைந்து கார்களும் பஸ்களும் லாரிகளும் பறவின. பொது போக்குவரத்தில் கரிப்புகை ரயில்வண்டியை விட இவையே பெரும் புரட்சி செய்தன.

நாம் அரிசியும் கோதுமையும் சோளமும் கம்பும் காய்கறிகளும் மனிதருக்கு வளர்க்கும் உணவாகவும், வைக்கோலும் புல்லுமே கால்நடை விலங்குகளின் உணவாக நினைக்கிறோம். ஆனால் கால்நடைகளுக்கு புல் வளர்க்க எத்தனை நிலம் வேண்டியிருக்கும்? அன்றைய ஜனத்தொகையான 200 கோடியில் எத்தனை நபருக்கு மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் இருந்தன? 700 கோடி மக்களுக்கு மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் தேவை பட்டால் அந்த மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் எத்தனை புல்லும் நெல்லும் வேண்டும்? அதற்கு எவ்வளவு நிலம் வேண்டும்? டீசல் பெட்ரோல் இஞ்ஜின் வாகனங்கள் வந்த பின் கோடிக்கணக்கான மாடுகளும் குதிரைகளும் தேவையற்று போயின. அவற்றிர்கு உணவு வளர்க்க தேவையான நிலமும் குறைந்தது. விளைநிலங்களின் வளர்ந்த உணவுகளில் மூன்றில் இரண்டு பகுதி கால்நடைகளுக்கு வேண்டியிருந்தன, என்கிறார் மாட் ரிட்லி, ’The Rational Optimist’ புத்தகத்தில். [கேள்வி: ’The Rational Optimist’ என்பதை தமிழில் எப்படி மொழிப்பெயர்க்கலாம்?]

டிராக்டரும் லாரியும் ஹார்வஸ்டரும் உழவை நேரடியாக மாற்றின. அதாவது கால்நடைகளால் உழ இயலும் நில அளவை பெருக்கின; உழும் வேகத்தை அதிகரித்தன; அவற்றிர்க்கு செலவாகும் உணவு வளர்க்கும் நிலதின் அளவை மிகவும் குறைத்தன. இது உணவு தயாரிக்கும் முறையில் நடந்த பெரும் புரட்சி.

ஆனால் பஞ்சமும் பசியும் தீர படைக்கும் திறன் மட்டுமே போதாது. பஞ்சம் நிலவும் ஊர்களுக்கும் மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் பயிர் மிகுதி உள்ள இடங்களிலுருந்து பெரும் அளவில் கொண்டு வர வேண்டும். காரும் பஸ்ஸும் லாரியும் வந்ததால் உலகெங்கும் தார் சாலைகள் போடப்பட்டன. மாத கால பயணம் சில நாளளவிலும் நாளளவு பயணம் சில மணிநேரங்களிலும் குறைந்தது டீஸல் எஞ்ஜின்களால் தான். இருபதாம் நூற்றாண்டில் பஞ்சத்தை ஒழிக்க டீஸல் எஞ்ஜின் இன்றி அரசுகளுக்கு திறன் இருக்காது.
நல்லெண்ணமோ அறியாமையோ, கார்களின் புகையிலும் நிலக்கரி மின்சார நிலையங்களாலும் சுற்றுச்சூழல் அழிந்தது ஐயோ ஐயோ என்று புலம்பும் ஆர்வலர்களும், ஓலத்தை பெரிதாக்கும் ஊடகங்களும் ஓயாத ஒப்பாரி பாடும் போது, இவை சொகுசுகள் மட்டுமல்ல, இவையின்றி பஞ்சமும் வருமையும் உலகில் கோலோச்சும் என்று நாம் உணர வேண்டும்.

ஹாபர்பாஷ் ரசாயன முறையும், நார்மன் போர்லாக்கின் பசுமை புரட்சியும் உழவு தொழிலை நேராக மாற்றின. ருடால்ஃப் டீசலும் நிக்கலாஸ் ஆட்டோவும் கார்ள் பென்ஸும், போக்குவரத்தை மட்டுமல்ல உழவையும் பிரம்மாண்டமாக மாற்றி புரட்சி செய்தனர். இதுவே நவீன உலகின் முதல் பசுமை புரட்சி என்றும் சொல்லலாம். பெரும் கல்லணைகளாலும் நீர் குழாய்களாலும் விவசாயம் பெருகியதை நான் மறக்கவில்லை. அவற்றின் பாதிப்பின் அளவு தெரியாததால், குறிக்காமல் விடுகிறேன்.



மாட் ரிட்லியின் புத்தகமும், இணையத்தில் அவரது உரைகளும், வச்லாவ் ஸ்மில், ஹுவான் எனிர்கே ஆகியோரின் உரைகளும் படித்தும் பார்த்தும் இக்கட்டுரை எழுதினேன். ஆங்கிலத்தில் இந்த கட்டுரை இங்கே.