Wednesday 13 December 2017

காஞ்சி மகாமணி - பேச்சுக் கச்சேரி

நகரேஷு காஞ்சி என்று பாடினார் புலவர் பாரவி. சாளுக்கிய நாட்டின் தலைநகராம் வாதாபியில் வாழ்ந்து கிராதார்ஜுனீயம் என்ற மாபெரும் காப்பியத்தை இயற்றிய புலவர், சாளுக்கியர் தங்களது இயற்கை பகைவராக (பிரக்ருதி ஆமித்திரர்) கருதிய  பல்லவரின் தலைநகராம் காஞ்சியை, ஏன் "நகரங்களில் சிறந்தது" என்று புகழ்ந்தார்?

கல்வியில் கரையிலா காஞ்சி என்று அப்பர் பெருமான் திருநாவுக்கரசரும், தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்று ஔவையும் வானுயர்த்திய தொல் நகரம் காஞ்சிபுரம்.
இன்று பட்டுபுடவைக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாக அறியப்படிகிறது. அங்குள்ள காமாட்சி, ஏகாம்பரர், வரதராசர், கந்தக்கோட்டம் கோயில்களுக்கும் அலை மோதும் அடியார் கூட்டங்களுல், பெருமாளை விட புனித பல்லியை நம்பி வருவோர் அதிகமோ என ஐயமூட்டும்.

அங்குள்ள பற்பல அற்புதமான ஈடில்லாத கோயில்களையும், அவற்றின் சிற்பங்களையும் ஓவியங்களையும் கல்வெட்டுகளையும் காஞ்சியில் வாழ்ந்த மாபெரும் புலவர்களையும் வெகு சிலரே அறிவர். தமிழ்நாட்டில் படித்து வளர்ந்த எனக்கும், கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் நாவல் படிக்கும் வரை காஞ்சியின் மகிமை தெரியாது.

ஆழ்வார்கள் பாடிய பதினாங்கு கோயில்களும், நாயன்மார்கள் பாடிய ஐந்து கோயில்களும், காஞ்சியில் உள்ளன. மதுரை, குடந்தை, உறையூர், தஞ்சை எந்த தொல்தமிழ் நகரிலும் இத்தனை பாடல் பெற்ற கோயில்கள் இல்லை.

ஏழாம் நூற்றாண்டு முதல் நம் காலம் வரை வெவ்வேறு காலங்களை பரிணமித்து பழமை தொனித்து கலை வளமை செழித்து கற்பனை திறமை பொலித்து கட்டிட கலைக்கு பாடமாய் திளைக்கும் ஆலயங்கள் வேறு எங்கும் இல்லை. எந்தையும் தாயும் முந்தை முனிவரும் புலவரும் மன்னரும் மக்களும் மகிழ்ந்து குலாவிய மாநகர்.
மிருத்யுஞ்சேஷ்வரர்

பிறவாஸ்தனம்

மாமல்லபுரத்துக்கு போட்டியாக சிற்பக்கலையில் திகழும் ஒரு ஊர் எனில் அதை காஞ்சி என்பேன். ஓவியக்கலையில் அஜந்தாவிற்கு சமகால ஓவியங்கள் மிளிர்வதும் காஞ்சியில். எங்கு பார்க்கினும் கண்ணை கவரும் மற்ற கலைகளால், சித்தன்னவாசலின் புகழ் அவற்றிற்கு கிட்டவில்லை. பிற்காலத்து நாயக்கர் ஓவியங்களையும் ரவிவர்மா ஓவியங்களையும் பழகி ஓவியச்செம்மை அறியா நமக்கு, தெய்வமெனில் எந்த சிற்பத்தையும் அழகென்று குணம் நாடாமல் பார்க்கும் பலரின் பார்வைக்கும் காஞ்சியின் பல்லவர் காலச் சிற்பங்கள் வியப்பூட்டும்.

மைக்கலாஞ்சலோவும் லியோர்ணாடோ டாவின்சியும் பிகாசோவும் தெரிந்த அளவுக்கும் அவர்களது படைப்புகளையும் அறிந்த நம்மக்களுள் பலருக்கு நம் மரபில் வந்த சிற்பியர் பெயரோ ஓவியர் புகழோ தெரியாதது வரலாற்று கொடுமை. அவர் சமைத்த கலைகளையாவது தெரிந்து கொள்வோமே. கைலாசநாதர், வைகுண்ட பெருமாள், ஜ்வரஹரேச்சுரர், மாதங்கேஷ்வரர், பிறவாஸ்தனம், மிருத்யுஞ்சேஷ்வரர் கோயில்களை பார்த்து மலைக்கவேண்டாமா?

உலகளந்த பெருமாள் கோவிலில் பரிமேலழகர் உரை எழுதினார் என்றும், கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை கந்த கோட்டத்தில் அரங்கேற்றினார் என்றும், வேதாந்த தேசிகர் மூன்று மொழிகளில் எண்ணற்ற நூல்களை இயற்றியதும், பாரவிக்கும் காளிதாசனுக்கும் ஈடான தண்டின் கச்சியில் வாழ்ந்த பெருந்தகை என்பதும் தெரியுமா? சான்றோருடைத்து என்று இவர்களை தான் ஔவை பாடினளோ?

முகலாய வம்சமும், மௌரிய வம்சமும் ஓரளவு பள்ளி புத்தகத்தில் படித்த எனக்கு, பல்லவ வம்சத்தையே சிற்பமாக பரமேச்சுர விண்ணகரத்தில் காணமுடியும் என்பது இன்ப அதிர்ச்சி.
பல்லவ வம்சம்
சமணக்காஞ்சி எனும் திருப்பருத்திக்குன்றத்தில் பல்லவர் கால சமண கோயிலும் பிற்கால திரைலோக்யநாதர் கோயிலொன்றும் உள்ளன. இதில் சில அருகர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மண்டப விதானத்தில் காணலாம். அவற்றுள் நடுவே யதுகுல கண்ணனின் சில ஓவியங்களும் உண்டு. பார்த்தால் ஒன்றும் புரியாது.அருகர் வாழ்க்கை வரலாறு
யதுகுல கண்ணனின் சில ஓவியங்கள்

இது போன்ற பல அற்புத தகவல்களை கச்சி மாநகரின் வரலாறும் கலையும் கோயிலும் சமயமும் தறிகளும் தொழிலும் இலக்கியமும் கல்வியும் தொன்மையும் விளக்கி விவரித்து பேச, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை இரண்டு நாள் பேச்சு கச்சேரி நடத்தவுள்ளது. நான் கைலாசநாதர் கோவிலை பற்றி பேசுவேன்.

இரண்டு நாளும் வந்து ரசித்து களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நடக்கும் அரங்கம் தமிழ் இணைய கல்விக்கழகம், காந்தி மண்டபம், சாலை, கோட்டூர்புரம், சென்னை.

வலைத்தளம் - https://thtpechchukkachcheri.wordpress.com
முகநூல் தளம் – https://www.facebook.com/events/309154459591297/

16 டிசம்பர் 2017 – சனிக்கிழமை

நேரம்தலைப்புபேச்சாளர்
காலை 9:00காஞ்சியின் பெருமை
ஒரு ரசிகமணியின் பார்வை
டாக்டர் ஆர். நாகஸ்வாமி
காலை 10:30பரமேஸ்வர விண்ணகரம் அதுவே
வைகுந்த பெருமாள் கோயில்
டாக்டர் சித்ரா மாதவன்
காலை 11:30அருகன் அணிநிறத்து ஆலயம்
திருப்பருத்திக்குன்றம் – ஜைன காஞ்சி
திரு ஷ்யாம் ராமன்
மதியம் 2:00விண்ணகரம் மன்னுகின்ற பொன்னகரம்
விஷ்ணு காஞ்சி
டாக்டர் கே தயாநிதி

17 டிசம்பர் 2017 – ஞாயிற்றுக்கிழமை

நேரம்தலைப்புபேச்சாளர்
காலை 9:00காவிய தரிசனம்
தமிழ் இலக்கியத்தில் காஞ்சி
டாக்டர் சா பாலுசாமி
காலை 10:30கண்ணுதலோன் உறைகின்ற கச்சி மூதூர்
சைவ காஞ்சி
பேரா. மதுசூதனன் கலைச்செல்வன்
காலை 11:30அதிமானம் அதி அற்புதம்
கைலாசநாதர் கோயில்
ரங்கரத்னம் கோபு
மதியம் 1:30தறி நூலழகின் உரை
காஞ்சியின் நெசவுத் தொழில்
ஶ்ரீமதி மோஹன்
Wednesday 29 November 2017

தமிழ் இலக்கியம் - ஒரு கால அட்டவணை

தமிழ் இலக்கிய கால அட்டவணை

ஸம்ஸ்கிருத இலக்கிய கால அட்டவணை
குறிப்பு
நீள சதுரம் - மன்னர் வம்சம்
பசுஞ் சதுரம் - புலவரும் அவர் இயற்றிய நூலும்
மஞ்சள் எழுத்து – மன்னர் பெயர்
பச்சை எழுத்து – மன்னர் இயற்றிய நூல்
நீல எழுத்து – புலவர் இயற்றிய நூல்
சாய்ந்த எழுத்து - பெருங்காப்பியம்

தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை சுருக்கமாக மேலோட்டமாக காண இங்கே ஒரு கால அட்டவணை அல்லது வரைபடம் சமர்ப்பிக்கிறேன். மன்னர்காலத்துக்கும் இலக்கியத்திற்கும் ஆழ்ந்த தொடர்புகளுள்ளன. சங்க காலத்தில் குயத்தியரும், பரதவரும், கூலவணிகரும், எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டாலும் தமிழ் மன்றங்கள் அரசவையிலேயே நிகழ்ந்தன போலும். புறத்திணை இலக்கியத்தில் மன்னர்களே முதற்கண் நாயகர்கள். சிலம்பிலும் சீவகசிந்தாமணியிலும் வணிகர் நாயகர்கள். இருபதாம் நூற்றாண்டில்தான் பாமரர்களின் கதைகளும் இலக்கியமானது என்று நினைக்கிறேன்; அவை இலக்கியமாக நிலைக்குமா என்று தெரியவில்லை.

வம்சாவளியால் தமிழக வரலாற்றை பகுக்கும் வழக்கிருக்க, அதன் வழியே கோயில் கட்டுமானத்தையும் சிற்ப ஓவிய பரிணாம மாற்றத்தையும் வரலாற்று ஆய்வாளர் பகுத்து வழங்குகின்றனர். இம்மரபில் சில தமிழ் இலக்கியங்களையும் ஒரு கால அட்டவணையில் பகுத்துள்ளேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26, 2017 அன்று நந்திக்கலம்பகத்தின் சில செய்யுள்களையும் அதன் பாடல்களையும் கிஷோர் மகாதேவன் விளக்கினார். இலக்கியத்தில் பெயர் பெரும் மன்னரகளை பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் சிலவே. கல்வெட்டில் வரும் மன்னவர் பலர் இலக்கியத்தில் காணப்பெறவில்லை. பாரதத்திலும் தமிழ்நாட்டிலும் இவ்வகை வரலாற்று முரண்கள் அதிகம். நந்திகலம்பகம் இதில் ஒரு முக்கிய விதிவிலக்கு. தெள்ளாற்றெறிந்த நந்தி என்ற மெய்கீர்த்தியுடைய மூன்றாம் நந்திவர்மன், இக்கலம்பகத்தின் நாயகன். மல்லையர்கோன் என்றும் மயிலைக்காவலன் என்றும் இதில் அழைக்கப்படுவதும் முன்னோடியில்லாதவை. மாமல்லபுரத்துக்கு தன் பெயரளித்த வாதாபி கொண்ட நரசிம்ம வர்மனோ, அவன் பெயரன் பரமேச்சுரனோ கடற்கரை கோயிலை எழுப்பிய ராஜசிம்மனோ தங்கள் மெய்கீர்த்திகளில் மல்லை நகரை குறிப்பிடவில்லை. மயிலை காவலன் என்று தன்னை இன்றைய சென்னையை அன்றே அரவணைத்தான் நந்தி.

இலக்கியச்சுவை ததும்பும் தமிழ் கவிதைத்தொகைகளில் ரசிகமணி டி.க.சிதம்பரநாத முதலியாரின் ஒரு கட்டுரையில் நந்திகலம்பகமும் உண்டு.

பட்டடக்கல் பிரவேசம் என்றுவந்து வாதாபி, ஐகோளே, பட்டடக்கல், மகாகூடா என நான்கு சாளுக்கிய ஊர்களுக்கு ஜனவரி 2016இல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை குழுவினர் கலை உலா சென்றோம். அதற்கு முன் வாராவார அறிமுக உரைகளில் ஒன்றாக “நகரேஷு காஞ்சி” என்று பாடிய புலவர் பாரவி இயற்றிய கிரார்தாஜுனீயம் பற்றி என்னுடைய ஓயாத நச்சுறுத்தலுக்கிணங்கி நகுபோலியன் பாலசுப்ரமணியம் அதன் சில பாடல்களை விளக்கி, அதன் இலக்கிய சுவையை பகிர்ந்தார். கிராதார்ஜுனீயம் ஸம்ஸ்கிருத ப்ருஹத்காவியம் என்று அழைக்கப்பெறும். அதாவது பெருங்காப்பியம். காளிதாசன், பாணன், பாசன், ஹர்ஷன், தண்டின், இவர்கள் இயற்றிய நூல்களெல்லாம் லகுகாவியங்கள்தான். அதாவது குறுங்காப்பியங்கள். ஸம்ஸ்கிருதத்தில் மூன்று பெருங்காப்பியங்களே – மாகன் இயற்றிய சிசுபாலவதமும், ஸ்ரீஹர்ஷன் இயற்றிய நைடத சரிதமும் மற்ற இரண்டாம். (சிற்றையம் – ஸ்ரீஹர்ஷன் தற்பவம் விதியால் திருவருடன் என்று மறுவுமோ?) மகேந்திர பல்லவனின் தந்தை சிம்மவிஷ்ணு ஆட்சிகாலத்தில் பாரவி காஞ்சிக்கு வந்தபோது, அந்நகரின் அழகில் சொக்கி “நகரேஷு காஞ்சி” எனறு பாடியதாக வரலாறு. ராஜசிம்மன் காலத்தில் புலவர் தண்டி தசகுமார சரிதம், அவந்திசுந்தரிகதை ஆகிய காவியங்களையும் காவியதரிசனம் என்னும் செய்யுளணி ஆய்வுநூலையும் இயற்றினார். இதை தழுவியே தண்டியலங்காரம் தோன்றியதாய் கருதலாம்; அதை எழுதியவர் அவரே தானா வேறு தண்டியா என்று தெரியவில்லை.

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் மணிமேகலைமும் இந்த வடமொழி காப்பியங்களை காலத்தில் முந்தியவை. தமிழ் என்ற மொழியையே கண்டுகொள்ளாத சம்ஸ்கிருத புலவர்கள், ரஷியாவின் ஸ்பட்னிக் ராக்கெட் வெற்றியால் பொறாமை பொங்க நிலவிற்கு ராக்கெட் விட்ட அமெரிக்கர்களை போல், இவ்விரண்டால் தூண்டப்பட்டு பெருங்காப்பியங்கள் எழுதினரோ?

பாரதத்தில் வரலாற்று நூல்களில் என்று தொன்றுதொட்டு தொடர்ந்து வந்த வழக்கம் ஏதுமில்லை. கடந்த இருநூறு ஆண்டுகளில் ஐரோப்பிய ஆய்வாளாரின் முயற்சிகளாலும் இன்றும் தொடரும் ஆராய்ச்சிகளாலும் தமிழகத்து வரலாறும் பாரத வரலாறும் தொகுக்கபெற்றன. ஞானசம்பந்தர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டிலுருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரை எந்த காலம் என்று மனோன்மணீயம் சுந்தரனார் ஒரு நூல் எழுதினார். அதன் பிறகே உ.வெ.சாமிநாத ஐயர் சங்கநூல்களை பதிப்பிக்க, அந்த அறுநூறு ஆண்டு வரலாறும் வெளிவந்தது.

புது கண்டுபிடிப்புகளால் மேற்கண்ட அரசியல் வரலாறும் இலக்கிய வரலாறும் மாறலாம். மாலவீகாக்னிமித்திரம் என்ற நூல் முதல் நூற்றாண்டில் ஆண்ட சுங்க மன்னன் அக்னிமித்திரனை நாயகனாக கொண்டதாம். அதை இயற்றிய காளிதாசனே சாகுந்தலத்தையும் ரகுவம்சத்தையும் குமாரசம்பவத்தையும் எழுதினானா? இல்லை குப்தர காலத்தில் வாழ்ந்த வேறு காளிதாசனா? அங்கும் குழப்பம்.

குறிப்பு. 2 மே, 2019 அன்று சம்ஸ்கிருத கால வரிசைப்படத்தில் ஒரு சிறு மாற்றம் செதுள்ளேன். ஐந்தாம் நூற்றாண்டில் காட்டிய சாகுந்தலம் எழுதிய காளிதாசரை முதலாம் நூற்றாண்டுக்கு மாற்றியுள்ளேன்; அதுவே சரியான காலம்.
  1. வரலாறு மூவர் மொழி
  2. தேவாரத்தில் பாரி
  3. மயிலாப்பூரில் பல்லவர் இசை 
  4. A Timeline of Sanskrit literature
  5. A timeline of Tamilnadu and Karnataka
  6. A timeline of Tamilnadu and Gujarat
  7. Was Tholkaappiyam inspired by Bharata's Naatya Shaastram?
  8. ஐகோளே கல்வெட்டில் பாரவியும் காளிதாசனும்

Tuesday 7 November 2017

தொண்டை மண்டல காணி ஆட்சி – ஔவை பாடலும் இரட்டைப்புலவர் பாடலும்

பாணியிற்கங்கைநதி மலையினிற்கயிலைமலை  பாரழகினிற்றண்டகம்
பழமொழியிலௌவைசொல் லரசரிற்சேரமான் பத்தியிற்சிறியதொண்டன்
காணியிற்றொண்டையாம் புகழில்வேளாளர்புகழ் கான்முளையினிற்பகீரதன்

இரட்டை புலவர்கள் இயற்றிய ஏகாம்பரேசுவர பதிகம் என்னும் நூலில் இந்த பாடல் இடம்பெறுகிறது. மிராசு  உரிமைகளை கி.பி. 1806ல் பற்றி கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை ராஜதானி அரசின் பதினேழு கேள்விகளை எழுப்ப, பதிலளித்து ஒரு அறிக்கையை முன்சிரஸ்தாதார் சங்கரய்யன். அதை 1814ல் கலெக்டர் பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார் (ரிப்ளை). 1804ல் கர்ணல் பிளாக்பர்ண் எழுதிய ஒரு கட்டுரையும் (ரிப்போர்ட்),1822ல் மதறாஸ் ஆளுனர் தாமஸ் மன்றோ எழுதிய சிற்றறிக்கையும் (மினிட்), எல்லிஸ் எழுதிய அறிக்கையோடு இணைத்து “மிராசி உரிமையின் மூன்று ஆய்வுரைகள்” (Three Treatises on Mirasi Rights) என்ற தலைப்பில், சார்ல்ஸ் பிலிப் பிரௌண் (Philip Brown)1852ல் ஒரே புத்தகமாக தொகுத்து பதிவிட்டார்.

1. எ ரெப்ளை டு த ஃபர்ஸ்ட் செவண்டீன் குவெஸ்டின்ஸ் (A Reply to the First Seventeen Questions)
2. ரிப்போர்ட் ஆன் மிராஸி ரைட் பை மேஜர் பிளாக்பர்ண், ரெசிடண்ட் அட் டாஞ்ஜூர் கோர்ட் (Report on Mirasi Right by Major Blackburn, Resident at Tanjore Court)
3. மினிட் ஆன் மிராஸி ரைட்ஸ் பை கவர்னர் தாமஸ் மன்றோ (Minute on Mirasi Rights by Governor Thomas Munro)

மேலுள்ள பாடலை பதம் பிரிப்போம்.

எல்லிஸ் தன் கட்டுரையோடு சில சோழ, விஜயநகர, ஆங்கிலேய கால தமிழ் தெலுங்கு கன்னட் சம்ஸ்கிருத கல்வெட்டுகளையும், அவற்றின் ஆங்கில மொழிப்பெயர்ப்புகளையும் இணைத்தார். இவ்விணைப்பின் முன்னுரை பத்தியில் இந்த இரட்டைப்புலவர் பாடலை மேற்கோள் காட்டினார். கீழே பதம்  பிரித்துள்ளேன்.

பாணியில் கங்கை நதி மலையினில் கயிலை மலை  பார் அழகினில் தண்டகம்
பழமொழியில் ஔவை சொல் அரசரிற் சேரமான் பத்தியில் சிறிய தொண்டன்
காணியில் தொண்டையாம் புகழில் வேளாளர் புகழ் கால் முளையினில் பகீரதன்

நதிகளில் கங்கையும் மலைகளில் கயிலையும் மற்றவையும் கவிநயம். அதென்ன காணியில் தொண்டை? மிராசு என்பது பாரசீக சொல். இஸ்லாமிய நவாபுகளின் ஆட்சியில் தமிழகத்தில் அன்று வரை நிலவிய காணியாட்சி என்ற சொல்லின் இடத்தை பற்றியது. மிராசு உரிமை என்று தலைப்பிட்டு நூலை அச்சிட்டாலும், சங்கரையனின் பதில்களும் எல்லிஸின் அறிக்கையும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சட்ட நூல்களும் பேசும் காணி ஆட்சியையே ஆய்ந்து பேசுகின்றன.

ஊரிலேன் காணியில்லைஎன்று தொடங்கும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரமும், “காணிநிலம் வேண்டும்” என்று தொடங்கும் சுப்பிரமணிய பாரதி பாடலும் பலருக்கு தெரியும். தேசம், மண்டலம், கோட்டம், நாடு, ஊர், காணி என்பவை சோழர் காலத்து நிலப்பிறிவுகள். இஸ்லாமியார் ஆட்சியில் ஜில்லா, தாலுகா, ஜமீன் போன்ற சொற்களும் ஆங்கிலேயர் ஆட்சியில் பிரஸிடென்ஸி (ராஜதானி), டிஸ்ட்ரிக்ட் (ஜில்லா), டௌன் (ஊர்), வில்லேஜ்(கிராமம்), முனிசிப்பாலிடி போன்ற சொற்களும் புழங்கின. கிட்டத்தட்ட இச்சொற்களே இன்றும் வழக்குப்பெற்றுள்ளன.

இரட்டைப்புலவரின் உவமைகள்
இரட்டைப்புலவரின் இப்பாடலில் சில விசித்திர சொற்களை காணலாம். கால்முளையில் பகீரதன் என்பர். கால்முளை என்ற சொல் எனக்கு புதிது. சென்னையில் பிறந்து ஆங்கில வழிமுறையில் பள்ளி கல்வி பயின்ற எனக்கும் என்போன்ற பலருக்கும், தமிழில் இன்றும் நிலவும் பல சொல்வழக்கங்கள் பலவும் புதிதே. கால்முளை என்ற சொல் சங்க இலக்கியம் தொட்டு நிலவுகிறது. நற்றிணையில் “விளையாடு ஆயமெனும்” எனத்தொடங்கும் 172வது பாடலிலும்  பதிற்றுப்பத்தில் “எடுத்தேறேய கடிப்புடை அதிரும்” எனத்தொடங்கும் 84வது பாடலிலும் உள்ள சொல். செடிகளின் வம்சாவளியை குறிப்பதை இங்கே பகீரதனுக்கு புகழ் சேர்க்கும் சொல்லாக அமைந்துள்ளது.

பக்தியில் சிறியதொண்டன் என்று நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியை உவமைக்கு வைத்ததும் சாலத்தகும். ஆனால அரசரில் சேரமான் என்றும் சொல்லாடல். ஏன்? இரட்டைப்புலவர் காலத்தில் சோழர் பாண்டியர் எல்லாம் வீழ்ந்துவிட்டனர். அவர்கள் வரபதியாட்கொண்டார் என்ற சேர மன்னனிடம் பரிசு பெற்றனராம். நன்றியோ?

பார் அழகினில் தண்டகம் என்பதை, தண்டகமே தொண்டைமண்டலம் என்று எல்லீசன் தவறாக மொழிப்பெயர்த்துள்ளார் என்பது என் ஐயம். இது இராமாயணத்தில் வரும் தண்டகாராண்யம் என்று நினைத்திருந்தேன். ஆனால், தொண்டை நாடு இருபத்தி நான்கு கோட்டங்களாகவும், அக்கோட்டங்கள் எழுபத்தி ஒன்பது நாடுகளாகவும் பிரிந்துள்ளதை, அன்றைய காஞ்சி ஞானப்பிரகாச மடத்தில் கிடைத்த தகவலாக எல்லிஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த கோட்டங்களில் ஒன்று எயிற்கோட்டம், அதில் தண்டகம், மாகரல், கோனேரி என மூன்று நாடுகள் அடங்குமாம். ஒருவேளை அந்த தண்டகமோ?

மேலும் திருக்கழுக்குண்ற புராணத்திலிருந்து ஒரு செய்யுளை சுட்டி, அதில் தொண்டை மண்டலத்தை தண்டக வேந்தன் ஆண்டதால் தண்டக நாடு என பெயர்கொண்டதாகவும், பின்னர் சோழ மரபில் தோன்றிய தொண்டைமான் ஆண்டதால் தொண்டை நாடானது எல்லீசன் கூறுகிறான். ஒருவேளை, இதனால் இரட்டைப்புலவர் குறித்த தண்டகம் தொண்டைநாடே எனும் எல்லீசனின் கருத்து சரியாக இருக்கலாம்.


ஔவையின் பாடல் 

ஔவையாரின் இந்த புகழ் வாய்ந்த பாடலை ஆய்வோம்.

வேழம் உடைத்து மலைநாடு மேதக்க
சோழ வள நாடு சோறுடைத்து – பூழியூர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து


தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு
காவிரியால் சோழ நாடு வளமுற்றது. தொண்டை நாட்டில் பாலாறு ஓடினாலும், மழையில்லா காலத்தில், ஔவை சொன்ன வயல்களுக்கு தெண்ணீர் ஏரிகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் தாங்கல்களிலிருந்தும் பாய்ந்தது. தொண்டை மண்டலத்து ஒரு வருடத் நீர் தேவைக்கு ஐப்பசி மாதத்தில் பெய்யும் மழையை பெரும்பான்மையாக நம்பவேண்டும். அந்த மழைநீரை சேமிக்க எழுந்த ஏரி குளம் கண்மாய்களின் மகிமையும், அவற்றை அளக்கவும் ஆளவும் கையாண்ட முறைகளும், நிலத்தின் விளைச்சலை அரசும், குடியும் பங்கிடும் சமூக சட்டங்களே காணியாட்சி. பாரதம் முழுதும் காணியாட்சி வெவ்வேறு பெயர்களில் முறைகளில் நடந்தாலும், தொண்டை மண்டலத்து காணி மிகச்சிறந்தது என்று இரட்டை புலவர்கள் கருதியுள்ளனர். அதனால் காணியில் தொண்டை என்று சிறந்த உவமைகளை குவித்து புகழ்ந்துள்ளனர். மன்னரையும் சமயக்குறவரையும் புலவரையும் மட்டுமே பாடும் தமிழகத்தில், புகழில் வேளாளர் புகழ் என்ற வாழ்த்தே அற்புதம். அதி அற்புதமோ?  அவ்வேளாளரின் ஒழுக்கமும் ஒத்துழைப்பும் இன்றி, காணியாட்சி சீராக நடக்க வாய்ப்பில்லை.

தொண்டை மண்டலத்து சான்றோரை புகழ்வதே ஔவையின் சித்தமாயினும், அச்சான்றோரும் அவரை பேணும் சமூகமும் நம்பிய வயல்களை குறிக்காமல் விட ஔவைக்கு மனமில்லை. இரட்டைப்புலவரின் செய்யுளில் பழமொழியில் ஔவைசொல் என்ற கருத்து சாலத்தகும்.

காணியாட்சி – ஆராய்ச்சி களம்
காணியாட்சியை விவரித்த எல்லீசனின் பரிந்துரைகளை சில காலம் ஆங்கிலேயர் ஏற்றாலும், எல்லீசன் மறைந்த பின் மதறாஸ் கவர்னராக பதிவியேற்ற தாமஸ் மன்றோ, காணியாட்சியை அதன் வழிமுறைகளையும் எல்லீசன் தவறாக புரிந்துகொண்டதாக கருதினார். மன்றோவின் கருத்துகள் அவரது சிற்றறிக்கை (மினிட்). இவற்றை நான் படித்து வருகிறேன். மெக்காலேயின் 1835 சிற்றறிக்கையால் (அதுவும் ஒரு மினிட்) இந்திய கல்விமுறையும் சட்டமுறையும் மாறியது போல், மன்றோவின் சிற்றறிக்கையால்  தமிழக காணியாட்சி அபாரமாக மாறியது. இதை யாராவது அராய்ந்துள்ளனரா என்று தெரியவில்லை. சங்கரையனின் அகால மரணமும், எல்லீசனின் அகால மரணமும் தமிழக்த்திற்கும் பாரதத்திற்கும் மாபெரும் இழப்புகள். ஒரு யுகத்தின் முடிவு.

மன்றோவின் பரிந்துரைகளை பற்றியும் காணி முறைகளை பற்றியும் தனியாக ஆராயவேண்டும், எழுதவேண்டும். பரம்பரை வேளாளர் ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அதிலும் பொருளாதாரமும், இந்திய சட்ட நூல்களும், கற்றவர் செய்யவேண்டும்.

என் கட்டுரைகள்
1.    உழவு
b.    டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி 
c.    நார்மன் போர்லாக் – வரப்புயர்த்திய வல்லவன் 
d.    உழவர் தற்கொலை – சுவாமினாதன் ஐயர் கட்டுரை 
e.    வான்மழை பொய்ப்பினும் – சுவாமினாதன் ஐயர் கட்டுரை  
2.    எல்லீசன்
a.    ஒரு ஆங்கிலேயனின் தமிழ் கல்வெட்டு 
c.    எல்லீசனின் தமிழ் சம்ஸ்கிருத கவிதை 

Monday 30 October 2017

அசோகத்தூண் கண்டெடுத்த கதை

அசோகத்தூண் கண்டெடுத்த கதை
(வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப் வாழ்த்து)
வில்லியம் ஜோன்ஸ்

ஜேம்ஸ் பிரின்ஸெப்

23.10.2016 அன்று, ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில், நான் (ர. கோபு) ஆற்றிய உரையின் ஒரு பகுதியை, பாடலில் சொல்லியுள்ளார் சுதர்சனம். அவர் அனுமதி பெற்று இப்பாடல்களையும் பொழிப்புரையையும் பதிவிடுகிறேன். அதற்கும் பின் என்னுடைய விளக்கத்தை படிக்கலாம்.
அறுசீர் விருத்தம்
மா காய் காய் வஞ்சி விருத்தம் இரட்டித்தது
வண்டித் தடமமைத்த பணியாளர்
... வாகாய்ப் பிடித்தொருநீள் பெருங்குழவி
மண்ணைப் பொடித்தழுத்த உருட்டிவந்தார்;
... மேலைக் கடலிருந்து மேற்பார்வை
பண்ண வந்ததுரை பிரின்சப்பு
... ‘பெற்ற தெங்ஙனமிக் குழவி’யென்ன
‘உண்டிவ் விடத்தினிலே என்றுமெ’ன்றார்
... நுனியில் சிறுத்தடியில் பருக்குழவி!  (1)

மெத்தப் பெருநீளக் குழவியது
... மருங்குக் குமருங்காய் மல்லாந்து
மொத்தப் பரப்புக்கும் உருண்டதுபார்!
... மங்கும் விழித்திறத்தர் ஆனாலும்
சித்தப் பொறியாளன் பிரின்சப்பு
... சிதைந்த நுனிகண்டு சிந்தித்தான்
‘இத்தைப் பகுத்தீரோ?’ ‘இஃதெ’ன்றார்’
... இளைத்த நாற்சீயம் சிரித்ததங்கே (2)

நின்று நிமிர்த்தியதும் அத்தம்பம்
... நெஞ்சு விறைத்தபடி நின்றதுகொல்!
இன்று நம்நாட்டின் சின்னத்தூண்
... இற்று நிலமுருண்ட கதையிஃதாம்
பின்றை கன்னலுக்குப் புரட்டியதும்
... பீட சோகத்தூண் சோகத்தை
இன்றெ மக்குரைத்தார் சொல்லீசர்
... இவர்தம் பெற்றியினைச் சொலவுண்டோ (3)

(பீட சோகத்தூண் சோகத்தை - பீடு அசோகத்தூண் சோகத்தை)

இரும்புக் குச்சிகளை வளைத்ததுபோல்
... இருக்கும் எழுத்துக்கள் இத்தூணில்;
பரந்து கிடக்கின்ற பாரதத்தில்
... பலவே றிடம்தன்னில் கிடைத்ததென்றார்
தெரிந்த பண்டிதர்கள் இல்லாமல்
... தொலைந்து போனப்பி ரம்மியென்றார்
விரிந்த அறிவுடைநம் கோபுவென்பார்

... விரித்த வரலாற்றைக் கேட்டோமே! (4)

பொழிப்புரை
1. மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் செல்வதற்காகத் தடம் அமைத்துக் கொண்டிருந்த வேலைக்காரர்கள், ஒரு பெரிய நீளமான குழவிக்கல்லை வாட்டமாக வைத்து உருட்டிக்கொண்டு, நிரவிய மண்ணைப் பொடித்துக் கிட்டித்துக் கொண்டிருந்தார்கள்.
எப்படி இருந்த அசோக தூண்
இப்படி சாலை குழவி ஆனது?
அந்தோ!
மேற்குப் புறக் கடல் தாண்டி இச்சாலை அமைக்கும் பணியை மேற்பார்வை செய்யவந்த பிரின்சப்பு துரை (Sir James Prinsep) ‘இந்தக் குழவி எப்படிக் கிடைத்தது?’ என்று கேட்டார்.
பணியாளர்கள் ‘இந்த இடத்திலே ரொம்ப காலமாகக் கிடக்கிறது’ என்றார்கள்.
அந்தக் குழவி ஒரு நுனியில் குறுகியும், மற்றொரு நுனியில் பருத்தும் இருந்தது.

2. மிகவும் பெரிய குழவி அது. எவ்வளவு பெரிதென்றால், சாலையின் ஒரு புறத்தில் இருந்து, மறுபுறம் வரைக்கும், கரைக்குக் கரை மல்லாந்து கிடந்தது.
பிரின்சப்பு துரை, பார்வைக் குறை உடையவர்தான். ஆனாலும், சிறந்த பொறியாளர் (ஜித்தன்!) அந்தக் குழவியின் சிறுத்த நுனியும் சிதைந்து கிடந்தது. இது எப்படிக் குழவியாக இருக்கும் என்று அவர் சிந்தித்தார்.
‘இதை வெட்டினீர்களோ?’ என்று பணியாளர்களைக் கேட்டார். அவர்கள் ‘ஆமாம். இதோ வெட்டிய பகுதி’ என்று காண்பித்தார்கள்.
அங்கே, வெட்டுப்பட்ட , நான்கு சிங்க உருவங்கள் கொண்ட பகுதி சிரிப்பாய்ச் சிரித்துக்கொண்டு கிடந்தது.
துண்டாய் நிற்கும்
அசோகனின் சார்னாத் தூண் தலை

3. (அவர் உடனே அந்தக் குழவியை உயர்த்தச் சொன்னார்)
பணியாளர்கள், அந்தக் குழவியை, நிற்க வைத்து நிமிர்த்தியதும், அது ஒரு கம்பமாய், நெஞ்சை விறைத்துக் கொண்டு, நின்றதே பாருங்கள்!
இன்று நமது இந்திய நாட்டின் சின்னமான தூண்தான் அது! இப்படி, சிதிலமடைந்து, தரையில் உருண்டு கிடந்த கதி இதுதான்!
பின்னால், கரும்பில் சாறு பிழிய, நாம் புரட்டியதும் அதேபோல் இன்னொரு கம்பம் தான். இப்படி பீடு உடைய அசோகத்தூணின் சோகக்கதையை இன்று சொல்லீசர் (நான், முன்பொரு சமயம் Francis Whyte Ellis பற்றி கோபுவின் உரையைக் கேட்டுவிட்டு, அவரைச் சொல்லீசர் என்று ஒரு பாடலில் குறித்திருந்தேன்) எமக்குச் சொன்னார். அவரின் பெருமையை என்னால் சொல்லவும் முடியுமோ?

4. பிரின்சப்பு துரை இரும்புக் குச்சிகளை வளைத்தது போல் இருக்கும் எழுத்துக்கள் இத்தூணில் இருப்பதைக் கண்டார். இந்தப் பரந்த நிலப்பரப்பு கொண்ட பாரத தேசத்தில், பல இடங்களில், இந்த எழுத்துக்கள் காணக் கிடைத்தன.
படிக்கத் தெரிந்த பண்டிதர்கள் இல்லாமல், வழக்கத்தில் இருந்து தொலைந்து போன பிராம்மி எழுத்துக்கள்தான் இவை என்றார்
விசாலமான அறிவு உடைய, நம்முடைய கோபு, இப்படி வரலாற்றை விவரமாகச் சொன்னதை, நாம் கேட்டோம்.

கோபுவின் குறிப்பு
ஒரிசா தலைநகரம் புவனேசுவருக்கு தெற்கே உள்ள தௌலியில், மௌரிய மன்னன் சம்ராட் அசோகனின் கல்வெட்டும், மேற்கே உதயகிரி-கொண்டகிரி மலைகளில் காரவேலன் கல்வெட்டும் உள்ளன. அவை பிராகிருத மொழியில் பிராமி லிபியில் உள்ளன.

பாரத மக்களுக்கு வரலாற்று உணர்வும் ஆர்வமும் மிகக்குறைவு என்பது ஐரோப்பிய வரலாற்று வல்லுனர்களின் கருத்து. பிடிக்காத வரலாற்றை மறக்க முயல்வதும், வசதிக்கேற்ப திரிப்பதிலும் பாரத மக்களுள் சிலருக்கு ஆர்வம் அதிகம் என்பது என்னுடைய சந்தேகம். பாரதம் என்ன, பிறஹா மொழி பேசும் மக்களை தவிற, உலகின் அனைத்து மக்களுக்கும் இந்த பண்பு இருக்கலாம். 

1784ல் வங்காள ஆசிய கழகம் என்ற ஒரு ஆய்வு நிறுவனத்தை வில்லியம் ஜோன்ஸ் என்ற மாபெரும் மேதாவி, கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்கிஸின் தலைமையில் நிறுவினார். இந்தியாவை பற்றி பிரமிப்பூட்டும் மாய கதைகளையே அறிந்திருந்த ஐரோப்பிய சமூகத்தை, வரலாற்று ஆய்வுகளாலும் மொழி ஆய்வுகளாலும் அசத்தினார் ஜோன்ஸ். 

சம்ஸ்கிருத, கிரேக்க, லத்தீன, பாரசீக மொழிகளுக்குள்ள தொடர்பை உணர்ந்து, அவற்றிர்க்கு ஒரு தாய்மொழி இருந்து காலத்தால் அழிந்துபோயிருக்கலாம் என்று 1784ல் முதலில் சான்றோடு முன்வைத்தவர் வில்லியம் ஜோன்ஸ். அவை இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்று பெயர் பெற்றன.

அவரை தொடர்ந்து பல மாமேதைகள் ஆய்விற்கும் அற்புதங்களை காணவும் பாரதம் வந்தனர். அவ்வரிசையில் வந்தவர் ஹென்றி கோலப்ரூக், ஹொரேஸ் வில்சன், எல்லிஸ், கால்டுவெல், மார்ஸ்டென். அவர்களுல் ஜேம்ஸ் பிரின்செப் என்பவரும் முக்கியமானவர். பரிதாபமாக, நோயால் நாற்பத்தியெட்டு வயதிலேயே மாண்டு போன ஜோன்ஸ் விட்டுச்சென்ற பணிகளையும் புதிர்களையும், பிரின்செப்பும் பலரும் தொடர்ந்தனர்; புதிர்களுக்கு விடை சமைத்தனர். 

குறிப்பாக இந்தியர்களின் வழக்கிலிருந்து அற்றுப்போன பிராமி லிபியை அபாரமான ஆய்வினால் புரிந்துகொண்டு, கண்டுபிடித்து, உலகுக்களித்து மங்காப்புகழை எய்தினார். இதனால் அறுநூறு ஆண்டு இந்திய வரலாறும், பல மறந்து போன வம்சங்களின் விவரங்களும் நமக்கு கிடைத்தன.
கார்ளா குகை தூணில் பிராமி லிபி
புனா நகரம் அருகே மகாராட்டிரம்
இத்தகைய மாபெரும் சாதனையாளர்களை பாரத சமுதாயம் மறந்திருப்பதும், நன்றி பாராட்டி புகழாதது நம் பேரிழுக்கு.
சென்ற வருடம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் வருடாந்திர கலை உலாவிற்கு ஒரிசாவை தேர்ந்தெடுத்தோம். உலாவுக்கு செல்லுமுன் வாரந்தோரும் ஒரிசா சம்பந்தபட்ட சொற்பொழிவுகள் நடந்தன. ஜோன்ஸ் பிரின்செப்பின் ஆய்வுகள் பற்றியும், பிராமி லிபியை பின்னவர் துப்பரிந்த கதையையும் நான் விளக்கினேன். (முன்னர் இதே தலைப்பில் பேசிய வீடியோ இங்கேகேட்க வந்த நண்பர் சுதர்சனம் அவர்கள் பணிகளை பாடலாக்கினர். இதோ அந்த பாடல்களும், பொழிப்புரையும். (இந்த மாமேதைகளாகிய நெல்லுக்கு பாய்ந்த சுதர்சனத்தின் தமிழ் நீர், புல்லான எனக்கும் ஓரிடத்தில் பாய்ந்துள்ளது)

சுதர்சனம் சிறப்பாக பாடுவார். மாமல்லபுரத்து பல்லவ கல்வெட்டை அவர் பாடியுள்ளார், இங்கே கேட்டு ரசிக்கலாம்
சமண ஜோதிடர் மகாவீரரின் கணித வாழ்த்தை இங்கே பாடியுள்ளார். 

Saturday 30 September 2017

Eighteen wheels and gears

This - Finn Murphy on Truck Driving - is an incredible essay, an excerpt from a book written by Finn Murphy, a high-end truck driver in the USA. The general public is interested in autobiographies or stories of kings,presidents, movie stars, crooks, psychopath, artists, athletes, business magnates, monks, philanthropists and sometimes even scientists; but rarely in the stories or expertise or knowledge of ordinary people who are not famous. We are even less interested in people in the working classes, where a lot of physical labour is involved. Their stories are only told by other professional writers or journalists, and sometimes by their children, if they become famous.

I found this narrative riveting, for several reasons. First, someday I hope to write a book on driving, and since I have only driven cars and bicycles, accounts of driving special vehicles interests me. Alistair Maclean's Way to Dusty Death was the first story I read about driving, when I was sixteen, and it was far better when I read it again in my thirties, after having watched a lot of Formula-1 races. I found the movie Rush, about Niki Lauda, quite gripping, especially his philosophy of driving.

The United States is a land of large vehicles, by global standards. I have once driven a U-Haul truck to move my belongings from Seattle to Cupertino. But it’s just a larger version of a car. When Murphy talks about an eighteen gear system, keeping an eye on the tachometer, wariness about jack-knifing, a great awareness of dangers of mountain driving, and specialised instruments like the Jacob brake,  he is talking as a driver whose full concentration is on his vehicle, the road and others. The US has highly structured traffic, drivers have rigorous licensing requirements, as do vehicles, and so on. Most highway driving is quite safe, unlike India, where a moment’s lapse can end in terrible disaster.

Second, Murphy is also an excellent narrator. His passage describing the truck going downhill are almost as dramatic as Alastair Maclean’s passages of an F-1 driver handling a truck on mountain roads. He quotes Moby Dick and Farenheit 451. I was reminded of this New York taxi driver's blog.

We will in the next few decades see similar essays, perhaps books in Indian languages, but currently the reading public is not interested in them (or most manual labour), barring a few rare stories and the odd question in Quora

Third, reading Marc Levinson’s The Box,  about containers and container shipping, helped me understand how profound and widespread an impact they have had, but how unaware we are of this impact. I once spent an hour after breakfast, watching a container ship slowly gliding out of Seattle harbour, from my apartment window, overlooking Puget Sound. It was sublime and meditative, in a way that can only be experienced, not explained. And perhaps one needs an appreciation for engineering to feel as I did. The TED video on Maersk  was also quite enlightening. But there are all kinds of other specialised vehicles on roads, and Murphy describes several of them. He also breaks a few stereotypes.
Ferry in Puget Sound, Seattle
Third, the caste system among truck drivers that he talks about. In his book on screenwriters in Hollywood, Adventures in the Screentrade, William Goldman discusses the several caste systems that exist in Hollywood; one among screenwriters, with variations by payscale; a second between professions, with star actors and directors on top, and a whole bunch of technical and artistic professions filling up the lower rungs. Murphy explains a similar system among American truckers, based on the kinds of trucks they drive. They have even developed a vocabulary of insults, and Murphy has often been at the receiving end. Oddly, while movers like Murphy are low on the caste system, they are quite well paid – an old phenomenon in India, where ostensibly high caste brahmins have usually been very poor through history; and hundreds of other former low castes have thrown up several millionaires and billionaires thanks to the Industrial Revolution; and in England where thousands of English “nabobs” who made money in the colonies moved up the ranks of the prevalent aristocracy.

As Murphy notes, “A specialist truck driver makes a quarter million dollars a year
I guess that’s worth being insulted in the mountains by my brethren.” One of the reasons for the high pay, is that his customers are very very rich people, moving all their belongings from one mansion to another. Antiques (granite Qing dynasty gravestones!), art treasures, luxury items etc are part of the set of goods moved. Damaging these can severely impact their moving fees. Movers like Murphy not only have to be expert truck drivers, but efficient packers. The pride with which he explains his packing techniques, can only come from a first hand account. The professionalism of American workers, whether in construction, transport, entertainment, finance, has to be seen and experienced to be believed. I don’t belittle Indian workers, several million of whom do phenomenal jobs with far less equipment at a fraction of the cost. But if they were more professional and efficient, and less superstitious or open to change, they would be far more productive and make far more money. Indians don’t use tarpaulins in construction and leave a thorough mess of paint, sawdust, cement dust and brickpowder behind, which then a lower paid set of workers clean up. There are severe health repercussions to both groups. Pits are left open, badly covered, with zero concern for the public. Electricians and plumbers leave exposed wires, pipes, rusting equipment, overheating junction boxes, bad manhole covers and a hundred other nuisances that make India that ugly sight it is (you will rarely see these in gated communities or corporate campuses, where the managements crack whips). Safety consciousness is non-existent in India and utterly unenforceable by law or social custom.The greatest fortune of Indian working class is that they always have family or caste to fall back on. And they can survive months or years unemployed.

“Books are disappearing,” notes Murphy; he has to pack fewer cartons, obviously.

To those of my more recent regular readers, who are wondering why I am writing about a truck driver, this essay may help.

Other essays on driving

Friday 22 September 2017

Gurumurthy on Demonetization

S Gurumurthy, Editor Thuglaq, lectured on Demonetization at Chennai International Center, Madras school of Economics, today, September 22, 2017. Here are my notes from that lecture, in his voice.

Jagdish Bhagwati on being asked what he thought of my opinions, quipped, If Gurumurthy is an economist, I am a Bharatha Natyam dancer.

I'm not here to defend the government. I'm here to explain the necessity for demonetization. This cannot be done without explain the history and context of global economics and its changes.
Fundamentally, the world had a single economic model, "one size fits all", after the Second World War. They changed this in 2005, saying one size does not fit all, and each country should develop its own model. Nobody in India discussed this at all.

The world has dramatically changed after the 2008 financial crisis. Most have given up globalization and are adopting economic nationalism, except India, which is still enamored of Globalization.

The USA has eleven trillion dollars of trade deficit. Any other country would be insolvent with this deficit, but USA runs not on economics but on physics. Why physics? Scientists say there is something called dark matter, which holds the universe together, which they cant explain. The dark matter of the USA economy is its military power, its administration, the dollar as the currency of the world, etc.

India has run trade deficits in every year since independence, except 77,78,2002,2004. Deficits didn't use to  matter because of the small size of the Indian economy. But since 1991 the economy has grown significantly.

India had 515 billion dollars of oil imports between 2004-2014, but our capital goods imports was 585 billion dollars in the same period. It's not expensive oil, but this massive trade deficit that was a huge problem. Indian trade deficit with China alone in one of these years was five times Indias defence budget and three times China's defence budget.

Also India became a favorite destination of foreign capital. But big chunks of this was not for products or services, but for financial chicanery. Indian economy grew on average 8%  during those years, but gold and stock markets jumped 300% and real estate between 200% and 2100%. This was mostly phantom growth in the value of these assets because of massive printing of high denomination currency bills. We needed high denomination bills to deal with the explosively growing economy, but the percentage of these bills was nightmarish. It went from 38% to 88% of all currency notes  in the period under the UPA government. Then RBI governor YV Reddy warned against the massive influx of capital inflows, but he was ignored. 

1999 was the highest job growth year in Indian history, we added sixty million jobs that year. But since then, especially under UPA, India has had mostly jobless growth. Even real estate became an asset inflation game, with bulk of buyers being not homeowners but people who bought and sold houses for profit. How can it be otherwise, when most of growth happens not in products or services,  but in phantom asset inflation. Demonetization was required to primarily stop this insanity. No economist would have implemented demonetization. Economists caused this problem. Only a bold non economist, in this case Narendra Modi, would have implemented it.

Income disclosure and demonetization should have been done simultaneously, but this didn't happen. Income disclosure should have been announced first. This was a major problem.

But look at the atmosphere demonetization created. The media, the intellectuals and even the Supreme Court wanted riots. But the Indian people did not riot. This is astounding, a marvelous facet of our civilization. Only the rich were really upset, because of queues, they said. Most Indians stand in queues all the time. The whole debate was framed as about black money alone, while several issues were involved.

Modi can take bold and unpopular decisions. GST is extremely unpopular. Kirana stores and small businesses are suffering. But it was an essential step for the economy. No government is foolish enough to continue long with a highly unpopular move that could cost it the next election, so some of this may change soon.

The poorest of the poor pay 350 to 480 percent interest per annum. No one in government or banks or economists care about them. Or even think about relieving their burden. My washarman came to me lamenting about debt at 360%, and I gave him a few lakhs to get out of his debt hole. The chattering classes have not even bothered about the lack of banking for such people.

Politicians can fix this system, if they muster the will. But civil service and stop anything brought in by parliament or legislatures. Civil service has no inward looking perspective, their education and outlook is entirely foreign.

Inspite of this India still is quite robust. I have traveled to so many cities as part of my job, and understood so many aspects of the Indian economy. The listed corporates of india only contribute 5% to economy of India. It's local businesses that are the bulk of Indian economy, jobs, and  growth. 

Bank managers are just bureaucrats. They know nothing of local economy, which is why Non Performing Assets are such a huge problem. One day a bank officer is transferres from Patna to Vilupuram. He knows or bothers to learn nothing about either community, but uses text book metrics to evaluate anything. Some people now say privatization of banks is the only solution. It's not at all a solution. The managers and staff will be the same people, how will privatization change anything?

RBI and several banks have colluded to convert money for people. Vans have gone from RBI to individuals. Our system is very bad in this aspect. Demonetization has been implemented, now its up to the tax authorities to catch and take action against culprits.

Added note Saturday 23 September, 1pm: Compare and contrast my essay above with the report in the Hindu this morning. In my understanding, the crux of Gurumurthy's speech was that in spite of flaws in the rollout, Demonetization was absolutely necessary. The Hindu's report is that demonetization is a blow to the economy, a gas chamber. Akbar josiyam.

Related Essays
1. தடை கேளு தடை கேளு
2. Renminbi as International currency reserve
3. A lack of economic knowledge
4. Video (in Tamil) - Book review of False Economy
5. Audio (in English) - Book review of False Economy