இரண்டு
மொழிகளை கலந்து எழுதும் இலக்கியம், மணிப்பிரவாளம்.
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன்
பேபி..
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி..
போன்ற
தமிழ் ஆங்கில மணிப்பிரவாள பாடல்கள் நமக்கு சினிமா வழியில் தெரிந்தவையே. ஆனால் தமிழ்
ஸமஸ்கிருத மணிப்பிரவாள பாடல்களும் ஒரு காலத்தில் பிரபலமாய் இருந்தன. “வதனமே சந்திர பிம்பமோ” என்ற எம்.கே.தியாகராஜ
பாகவதர் பாடலில் முதல் மூன்று சொற்களும் தமிழில் கலந்த வடமொழி சொற்கள். ஆனால் இவை யதார்த்தமாக
சேர்ந்த அயல்மொழிகளை சேர்த்துக்கொண்டு இயற்றப்பட்டவை. பாரதி எழுதிய சுதேசமித்திரன்
பத்திரிகையில் வரும் இவ்வகை மணிப்பிரவாள நடையை கிண்டலடித்து, திருவிக நடத்திய நவசக்தி
பத்திரிகையில் அவர் கையாண்ட தூயதமிழை முன்மொழிந்து கல்கி எழுதியதை சிலர் படித்திருக்கலாம்.
பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சினிமா வருவதற்கு முன்பு ஒரு சில இலக்கியங்களில், யதார்த்தமாக
அன்றி, வலிந்தே இருமொழிகளிலும் இயற்றப்பட்டன. இவ்வகையில் ஒரு கவிதை “கீசக வதம்”. கவிஞர்
பெயர் மறந்துவிட்டேன். இந்நூலை அடையாறில் கே.வி.ஷர்மா நூலகத்தில் நகுபோலியன் எனும்
பாரதி பாலுவிற்கும் எனக்கும் நூலகர் அச்சுத பட், எடுத்துக்கொடுத்தார். அதில் சென்னைப்பட்டணத்து
எல்லீசனின் அறிமுக உறையும், அவர் இயற்றிய மணிப்பிரவாள கவிதையும் இருந்தன. நேற்று ஆழ்வார்பேட்டையில்
டாக் செண்டரில் எல்லீசனை பற்றி நான் பேசிய பொழுது இக்கவிதையை எடுத்துரைத்தேன். அக்கவிதை
கீழே.
அரும்பை போல तव दन्त
पङ्कतिः தவ தந்த
பங்க்தி
குரும்பை போல कुचमण्डल द्वयम् குசமண்டல
த்வயம்
கரும்பை போல मदुरा च
वाणि மதுரா ச வாணி
இரும்பை போல हृदयम् किमासीत्
ஹ்ருதயம் கிம் ஆஸீத்
Like white flowers, are your teeth
Like
coconut shells, are your bosoms
Like
sugarcane, is your honeyed speech
Like
iron, why is your heart
?
Related Essays
1. Trautmann on Ellis2. எல்லீசனின் கல்வெட்டு - An Englishman's Tamil inscription
3. எல்லீசனின் ஜார்ஜ் மன்னன் மெய்கீர்த்தி
4. பர்த்ருஹரியின் கவிதை - தமிழ் புனைவு
5. வராஹமிஹிரரின் அகத்தியர் வாழ்த்து
தங்கள் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தவர்களுள் நானும் ஒருவன்.
ReplyDeleteபேச்சு கொஞ்சம் வேகம். ஆனால் ஒட்டுமொத்தமாக மிகவும் சுவாரசியமாக இருந்தது.
வாழ்த்துக்கள்.