மண்ணை
பிழிந்து எண்ணெய் எடுக்கலாம்
கானல்
நீரால் தாகம் தீரலாம்
முயன்று
தேடின் முயல்கொம்பு கிட்டலாம்
மூர்க்கன்
விருப்பம் தீர்ப்பது அரிது
பர்த்ருஹரி
என்ற மன்னனின் நீதிசதகத்திலிருந்து ஒரு பாடல் இது. என் மொழிப்பெயர்ப்பு. ஸமஸ்க்ருத
மூலம் கீழே. ஆங்கிலத்தில் இக்கருத்தை சொல்லும் ஒரு பழமொழி உண்டு – “Against
stupidity, the Gods themselves contend in vain.” இதன் பொருள் - “முட்டாள்தனத்தோடு, தெய்வங்களும்
வீணாகவே மோதுகின்றனர்.” இப்பழமொழியின் ஒரு பகுதியை எடுத்து ஐசக் அசிமோவ் The Gods Themselves என்று ஒரு நூலை எழுதியுள்ளார்.
நகுபோலியன்,
பாரதி பாலு, டெல்லி பாலு என்று பல பெயர்களை சூடிய பாலசுப்ரமணியனின் ஸம்ஸ்க்ருத வகுப்பில்
ஒரிரு வருடத்திற்கு முன் கற்றது; கற்றதில் பிடித்தது.
पिबेच्चमृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।।
कदाचिदपि
पर्यटन् शशविषाणम् आसादयेत् ।
न तु प्रतिनिविष्ट मूर्खजनचित्तमाराधयेत् ।।
லபேத
ஸிகதாஸு தைலமபி யதனத: பீடயன்
பிபேச்ச
ம்ருகத்ருஷ்ணிகாஸு ஸலிலம் பிபாஸார்தித:
கதாசிதபி
பர்யடன் ஷஷவிஷாணம் ஆஸாதயேத்
ந து
ப்ரதிநிவிஷ்ட மூர்க்கஜனசித்தம் ஆராதயேத்பதம் பிரிப்பு
லபேத - கிடைக்கலாம் [லாபமாகலாம்]ஸிகதாஸு - மணலில் [ஸிகதா - மணல்; ஸு - இல் எனும் விகுதி]
தைலமபி - எண்ணெயும் [தைலம் - எண்ணெய் ; அபி - கூட]
யத்னத: - முயற்சியால் [யத்ன - முயற்சி; த: - இதிலிருந்து எனும் விகுதி]
பீடயன் - பிழிந்து
பிபேச்ச - குடிக்கலாம் [ பிபேத்த + ச]
ம்ருகத்ருஷ்ணிகாஸு - கானலில் [ ஸு - எனும் விகுதி]
ஸலிலம் - நீர்
பிபாஸார்தித: - தாகத்தால் [த: - இதிலிருந்து எனும் விகுதி]
கதாசிதபி = கதா + சித் + அபி
கதா - எங்கோ
சித் - அசைச்சொல்
அபி - கூட
பர்யடன் - தேடி
ஷஷ - முயல்
விஷாணம் - கொம்பு
ஆஸாதயேத் - கிடைக்கலாம்
ந - இல்லைது - அசைச்சொல்
ப்ரதிநிவிஷ்ட - அசைக்கமுடியாமல் நிற்கும்
மூர்க்கஜனசித்தம் - மூர்க்கரின் விருப்பம்
ஆராதயேத் - நிரைவேற்றலாம்
சில ஸம்ஸ்க்ருத கவிதைகள் - தமிழாக்கம்
1. வராஹமிஹிரரின் அகத்தியர் கவிதை
Brilliant translation ... your 'kavithai' is immensely quotable ... and a lot easier to remember than the BhadraHari original.
ReplyDeleteChandru: Thank you, glad you enjoyed it
ReplyDelete