Friday, 6 September 2013

ஸமஸ்கிருதம் புரிகிறதே!

மஹாவீரர் என்ற கணிதமேதை, ஒன்பதாம் நூற்றாண்டில், அமோகவர்ஷ நிருபதுங்கன் என்ற அரசனின் (இன்றைய கர்நாடகத்தில்) அவையில் இருந்தார். கணித ஸார ஸ்ங்கரஹம் என்ற நூலை இயற்றினார். இதுவே ஸமஸ்கிருதத்தில் முதல் கணித நூல். இதற்கு முன் ஜோதிட நூல்களின் ஒரு அத்தியாயமாகவே கணிதம் இடம்பெற்றது. சமீபத்தில் (ஆகஸ்ட் 31)  “இந்திய விண்ணியல் – வேத காலம் முதல் 16ஆம் நூற்றாண்டு வரை” என்ற தலைப்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் ப்ரெயின்ஸ் ட்ரஸ்ட் குழுவிற்கு நான் உரையாற்றினேன். இன்னூலில் வரும் கவிதையின் ஒரு பகுதியை படித்து விளக்கினேன். உரை முடிவில் ஓரிருவர் ”எனக்கு ஸமஸ்கிருதம் தெரியாத போதும், இது மட்டும் புறிகிறதே” என்றனர். உங்களுக்கு எப்படி? என் மொழியாக்கம் கீழே.


लौकिके वैदिके वापि तथा सामायिकेऽपि य: |
व्यापारस्तत्र सर्वत्र संख्यानमुपयुज्यते || ९
कामतन्त्रेऽर्थतन्त्रे च गान्धर्वे नाटकेऽपि वा|
सूपशास्त्रे तथा वैद्ये वास्तुविद्यादिवस्तुषु || १०
छन्दोऽलङ्कारकाव्येषु तर्कव्याकरणादिषु |
कलागुणेषु सर्वेषु प्रस्तुतं गणितं परम् || ११

லௌகிகே வைதிகே வாபி ததா ஸாமாயிகேபி ய
வியாபாரஸ்தத்ர் ஸர்வத்ர ஸங்க்யானம் உபயுஜ்யதே
காமதந்த்ரே அர்த்ததந்த்ரே ச காந்தர்வே நாடகேபி வா
ஸூபஷாஸ்த்ரே ததா வைத்யே வாஸ்துவித்யாதிவஸ்துஷு
சந்த அலங்கார காவ்யேஷு தர்க்க வ்யாகரணாதிஷு
கலாகுணேஷு ஸர்வேஷு ப்ரஸ்துதம் கணிதம் பரம்

லௌகிகத்தில் வேத கல்வியில் ஸமயத்தில்
வியாபாரத்தில் எதிலும் கணிதம் உபயோகப்படும்
காமதந்திரத்தில் அர்த்ததந்திரத்தில் காந்தர்வத்தில் (இசையில்) நாடகத்தில் (கூத்தில்)
சமையலில் (ஸூபசாத்திரம்) மருத்துவத்தில் (வைத்தியம்) கட்டடகலையில் (வாஸ்து)
சந்ததில் அலங்காரத்தில் காவியத்தில் தர்க்கத்தில் இலக்கணத்தில் (வ்யாகர்ணம்)

கலைகுணங்களில் எங்கிலும் கணிதம் பரம்புகழ் என்பர்.

3 comments:

  1. லௌகிகே வைதி₃கே வாபி
    ததா₂ ஸாமாயிகே(அ)பி ய: |
    வ்யாபாரஸ்தத்ர ஸர்வத்ர
    ஸங்க்₂யாநமுபயுஜ்யதே || 9

    காமதந்த்ரே(அ)ர்த₂தந்த்ரே ச
    கா₃ந்த₄ர்வே நாடகே(அ)பி வா|
    ஸூபஶாஸ்த்ரே ததா₂ வைத்₃யே
    வாஸ்துவித்₃யாதி₃வஸ்துஷு || 10


    ச₂ந்தோ₃(அ)லங்காரகாவ்யேஷு தர்க்கவ்யாகரணாதி₃ஷு |
    கலாகு₃ணேஷு ஸர்வேஷு
    ப்ரஸ்துதம் க₃ணிதம் பரம் || 11


    http://www.virtualvinodh.com/aksharamukha


    தேவ்

    ReplyDelete
    Replies
    1. நன்று, நன்று. நன்றி, நன்றி. அக்ஷரமுகம் இணையதளமும் அற்புதம்.

      Delete