2018 பிபரவரி மாதத்தில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ”இயல் இசை மியூசியம்” என்ற தலைப்பில் இருநாள் விழா நடந்தது. ஒரிரு நிகழ்ச்சிகளை நான் முகநூலில் பதிவிட்டிருந்தேன். நேற்று முகநூல் இதை நினைவூட்டியது. அந்த பதிவுகளின் பிரதியை இங்கே தொகுத்துள்ளேன். முகநூலில் இருக்கும் தகவல்கள் படங்கள் கட்டுரைகள் ஃபயர்வால் என்னும் தகவல்தடுப்புச்சுவரின் பின் உள்ளன. வலைப்பூவில் பதிப்பிட்டால் பொதுவிலும் தேடலாம் என்பதால் இந்த பதிவு.
------
1. கர்ணாடக இசை – டி.கே. ராமசந்திரன்
எப்படி பாடினரோ... ராமலிங்க அடிகளார் பாடலுடன், டிகே ராமசந்திரன், இ. ஆ. ப, தன் உரையை தொடங்குகிறார். அவர் ஐஏஎஸ் ஆபீசர் மட்டுமல்ல ஒரு கர்ணாடக சங்கீத பாடகர். அவர் உரையிலிருந்து சில துளிகள்:
வையத்து இசையோங்கு நகரமாம் கலையுலகில் மையத்துள் வைத்த சென்னை - இந்நகரை “Creative City” (புதுமைகள் புனையும் நகரம்) என்று ஏன் யுனெஸ்கோ (Unesco) கௌரவித்தது ?
தாளத்தில் தனி இடமுண்டு தமிழ் இசைக்கு. பரிணாமத்தில் மிக பக்குவமான இசை இதுவே. Most
evolved tala of any musical system.
தஞ்சை மண் வளர்த்த இசை... கோபாலகிருஷ்ன பாரதி, திருவாரூர் மூவர், அருணாசல கவி, நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம், மற்றும் அக்கால தேவதாசிகள்.. அப்படியிருக்க சென்னையை ஏன் கொண்டாடவேண்டும்? புலவரும் புரவலரும் புலம் பெயர்ந்து சென்னை சீர்வளர்ந்தது
நாடகத்திலும் சினிமாவிலும் தமிழ் இசை பாடி அதிலும் பரவியது. சென்னையில் சபைகள் தொடங்கின. மன்னர்கள் சபைகளில் ஒலித்த இசை மக்கள் சபைகளில் ஒலித்தது. இசை கல்லூரிகள் தோன்றின.
இசைக்கு அதிகமாக பத்மஸ்ரீ பத்மபூஷன் வாங்கியது மதராஸ் கலைஞர்கள் அதிகம் என நினைக்கிறேன். எம். எஸ். சுப்புலட்சுமி பாரத ரத்னா பெற்றார்.
உலகில் வேறு எந்த ஊரிலாவது வருடம் நிறைந்து இசை நாட்டிய கச்சேரி நடக்குமா, சென்னை தவிர?
பாரதி, பாபநாசம் சிவன், வீணை தனம், ராஜரத்தினம் பிள்ளை, முசிறி சுப்பிரமணிய ஐயர்... பற்பல இசை கலைஞர் ஆசிரியர். மற்றும் சாம்பமூர்த்தி போன்ற இசை ஆய்வாளர்கள்.
MKT, TMS, Suseela
Janaki SPB Ilayaraja... எம் கே தியாகராச பாகவதர், டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா, எஸ் ஜானகி, எச் பி பாலசுப்ரமணியம் என்று புகழ்பெற்ற திரையிசை பாடகர்கள் எல்லாம் சென்னையில் பெயர் பெற்றவர்
அம்புஜம் கிருஷ்ணா இயற்றிய "கான மழை பொழிகின்றான்" பாடலுடன் ராமசந்திர்ன் தன் இயல் இசை உரையை முடித்தார்.
டி கே ராமசந்திரன் |
2. பரத நாட்டியம் – அனிதா ரத்னம், கணேஷ்
அனிதா ரத்னம் விளக்க கனேஷ் அபிநயம்.
பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனை அலைகள் அசைவுக்கு இசைந்து ஸ்திரமாக தாங்க வேண்டும் ஆயிரம் தலை சேடன்.
ஸ்திரம் பதஞ்சலி யோக நூலின் அடிப்படை. சிற்பக் கலைக்கும் முக்கியம்.
நாயன்மார் நடந்து பாடினார். ஆழ்வார் நின்று பாடினார்.
நான் ஒலிக்கும் திபெத்திய கிண்ணம் மணி உலோகத்தால் (bell metal) ஆனது.
கிரேக்கம் ஆண் உருவத்தை கலையில் கொண்டாடியது. அலெக்சாண்டர் காலம் முதல் பாரதத்திற்கும் கிரேக்க நாட்டிற்கும் வணிக கலை உறவு நிலைத்தது. மெகஸ்தனீஸ் மதுரை வந்து மீனாட்சி கோவில் கண்டு அக்ரோபோலிஸ் சாதாரணம் என மலைத்திருப்பான்.
நான் சிற்பியோ வரலாற்று ஆய்வாளரோ அல்ல. கலைஞர் மட்டுமே.
வாய்வழி (oral
tradition) வளர்ந்தது பாரத மரபு.
ஆஞ்சநேயர் மெக்ஸிக பாஞ்சோ மற்றும் வேட்டி அணிந்த சிற்பமும் கண்டேன். காலத்தால் சிற்பமும் மாறிவருகிறது. சஞ்சய் லீலா பன்சாலி போன்ற கலைஞர்களுக்கு இவை வழிகாட்டி வருகிறது.
கணேஷ் படம்: திரிபுரசுந்தரி செவ்வேள் |
சிற்ப பெண் உருவங்கள் ஆண்களின் கற்பனையை கனவை காட்டும். அவ்வளவு பெரிய மார்பிருந்தால் பெண்கள் நிற்க இயலாமல் விழுந்து விடுவார்கள்.
காளிதாசன் கற்பனை கண்ட உமை உருவம் தான் கண்கண்ட கலை தோறும் வந்தது. சிற்பிகள் கல்லிலலும் மரத்திலும் செம்பிலும் பொன்னிலும் கலை செதுக்கினர்.
மல்லை அர்ஜுனன் தபசு சிற்ப விவரங்கள் மகாபாரதம் சொன்னது மட்டுமல்ல. சிற்பியின் கற்பனை கலந்தவை.
அருங்காட்சியகம் மறைந்த கலைகளின் கூடம் மட்டுமல்ல வாழும் கலைகளின் அரங்கம்.
3. கானா பாடல் – பாலா
கானா பாடகர் பாலா பேசினார். ஆங்கிலமும் தமிழும் மணிப்பிரவாளமாக கலந்து யதார்த்த நடையில் எளிய மொழியில் பேசினார் பாலா. உரைக்கு நடுவே பாடல்களை பாடினார்.
பக்தி பாடல் பாடியுள்ளேன். இசையமைப்பாளர் தேவா சினிமாவிற்கு கானா கொண்டு வந்தார். இதனால் இன்று கானா பாடல் புகழ் பெற்றுள்ளது.
பாலா |
தாவரவியல் இளங்கலை பட்டத்தக்கு (BSc Botany ) படித்தேன். இப்பொழுது முதுகலை (MSc) படிக்கிறேன். கர்நாடக இசை மேற்கத்திய இசை கானா இசை இவற்றிற்கு தனி தனி இசை குறிப்பு இல்லை.
பெண்களை கேலி செய்யும் பாடல் தான் கானா என்று சிலர் கூறுகின்றனர். அப்படி இல்லை.
108 ஆம்புலன்ஸ் (ambulance) பத்தி பாடுறோம்
ஒரு கிரிக்கெட் பாடல்.... பதினோரு பேரு ஆட்டம்.
"பாலாஜி பிறந்தது எங்க தமிழ்நாடு" என்று கிரிக்கட் வேக பந்து வீச்சாளர் பாலாஜியை ஒரு பாடல் பாடிகாட்டுகிறார். கடைசியில் மெட்றாஸ் பற்றி ஒரு பாடல்.
கூட்டத்தில் ஒருவர் கூச்சலிட.... அமைதி காக்க கேட்டு, “உநானும் லுங்கி கட்டி அங்க இருந்தவன்... அரசாங்கம் நிகழ்ச்சியில் பேச கூப்பிடிறுக்காங்க... டீசன்டா இருப்போம்.” என்று கோரிக்கை விடுத்தார்.
தேன் நிலவு எனும் திரைப்படத்தின் ”ஓகோ எந்தன் பேபி” மெட்டில் ஒரு அட்டகாசமான பாடல்.
”காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரிபொட்டு வைத்து” திரைப்பட பாடலின் மெட்டில் அடுத்து ஒரு பாடல் : வாழ்க்கை ஒரு பயணம்...
மற்ற இசைக் கட்டுரைகள்
மற்ற உரைப் பதிவுகள்