காங்கிரஸ் தொண்டர்: “ஐயா, சேலத்தில் இருந்த காந்தி
சிலையை கலவரத்துல சிலர் சேதம் பண்ணிட்டாங்க.”
முதல்வர் காமராஜர்: “சேதத்தை சரி பண்ணியாச்சா?”
தொண்டர்: “வேறு சிலை செஞ்சுட்டோம். திறப்பு விழாக்கு
நீங்க தான் தலமை தாங்கி..”
காமராஜர்: “நான் கூட்டத்துல பேசறேன். ஆனா, தலைமை
தாங்க சரியான ஆளை பிடிங்க”
“இவரை அழைச்சா நல்லாயிருக்கும்”
“சினிமா புகழ் பெரிய கூட்டம் வரும். ஆனா காந்தி சிலை
விழாவுக்கு அவருக்கு என்ன தகுதி.”
“அப்போ இவரை?”
“அவர் பெரிய
பணக்காரர், தொழிலதிபர். ஆனா காந்தி சிலை விழாவுக்கு அவருக்கு என்ன தகுதி.”
“சரி, இவர்வந்து…”
“நம்ம கட்சிக்காரர்ன்னா மட்டும் போதாது. சுதந்திர
போராட்டத்துக்கு எதாவது செஞ்சாரா?”
“நீங்களே யாரையாவது சொல்லுங்க ஐயா”
“வ.வு.சி தெரியுமா?”
“கப்பலோட்டிய தமிழர்! எப்படிங்க தெரியாம இருக்கும்?”
“அவரை வெள்ளைக்காரன் என்ன செய்தான் தெரியுமா?”
“அவரை சிறைல செக்கிழுக்க வைச்ச கொடுமை நாட்டுக்கே
தெரியுமே.”
“செக்கு இரண்டு வகை. ஒரு மாடு பூட்டும் செக்கு, இரண்டு
மாடு பூட்டும் செக்கு. வ.வு.சி. இழுத்தது இரண்டு மாடு செக்கு. அந்த செக்குல இன்னொருவரை
பூட்டினாங்க. அவரும் வ.வு.சியும் சேர்ந்து தான் செக்கிழுத்தாங்க. அவர் பெயர் தெரியுமா?”
“……..”
“அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கார். அவரை கூப்பிடுங்க.
காந்தி சிலை திறப்பு விழா தலைமை தாங்க அவர் தான் சரியான ஆள்.”
------
சென்னை எழும்பூர் தொல்லியல் துறையிலிருந்து ஆகஸ்டு
27 அன்று, காரில் செல்லும் வழியில் எனக்கு சேகர் பதிப்பகம் நிறுவனர் வெள்ளையாம்பட்டு
சுந்தரம் சொன்ன சம்பவம்.
யார் அந்த தேச தியாகி வ.வு.சி யுடன் செக்கிழுக்க தோள் கொடுத்தவர்.... சஸ்பென்ஸ் வைக்கதீர்கள் , சொல்லுங்கள் ஐயா ....
ReplyDelete