Tuesday 27 October 2015

என்று தணியும் இந்த மார்க்ஸிஸ மோகம்

பெரூ நாட்டின் மரியோ வர்காஸ் லோசா, இசுபானிய மொழியில் எழுதும் மிக புகழ்பெற்ற எழுத்தாளர். கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ் என்ற கொலம்பிய நாட்டு எழுத்தாளரை பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கினார். பின்பு மரியோ லோசாவின் நாவல்களே உலக புகழ்பெற்றன. கல்லூரி நாட்களில் பொது உடமை கொள்கையிலும் அரசியலிலும்  நம்பிக்கை கொண்ட லோசா, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை ஆதரித்துவந்தார்.

காஸ்ட்ரோ தன்னை எதிர்த்த எழுத்தாளர்களை கைது செய்த போது, மாரியோ லோசா காஸ்ட்ரோவை கண்டித்து எழுதினார். காஸ்ட்ரோவும், உலகளாவிய இடதுசாரிகளும் அறிவுஜீவிகளும், லோசாவை கண்டமேனிக்கு திட்டினர். கம்யூனிசம் என்றாலே சர்வாதிகார மனப்பான்மை என்று அவர் உணர்ந்தார். பெரும் முன்னேற்றங்களை செய்வதாக கர்ஜித்தாலும், அவற்றை கம்யூனிசத்தால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் உணர்ந்தார். சமூக ஜனநாயகவாதியாக மாறினார். பொருளியல் நூல்களை படித்தார். தாராள பொருளாதாரமே சுதந்திரமும் செல்வமும் தருகிறதென்று உணர்ந்தார். இடதுசாரி அறிவுஜீவிகள் அவர் மேல் காழ்ப்பு மழை பொழிந்தனர். தான் பெற்று காழ்ப்பு குளியலை பெறுக அறிவுஜீவிகள், என்று அவர்கள் மேல் தன் காழ்ப்பு மழையை லோசா பொழிந்தார்.

“ஆடி தள்ளுபடி அறிவுஜீவிகள்” என்றும் பொருளாதாரத்து ஞானசூனியங்கள், என்றும் அவர்களைச் சாடினார். நவீனமானன் (முற்போக்கானவன்) மார்க்ஸிஸ்டாக இருக்க முடியாது என்று முழங்கினார். அறிவுஜீவுகள் மார்க்ஸிஸம் மீதும், அரசாங்க ஆதிக்கத்தின் மீதும் அடங்காத காதல் கொண்ட புதிரை புரிந்துகொள்ள முயன்றார். அதிகாரத்தின் ஆதரவு கொஞ்சம், அந்தஸ்து ஜம்பம் கொஞ்சம், பொருளியல் அறியாமை கொஞ்சம் என்று விளக்கினார்.

அமெரிக்காவை திட்டிக்கொண்டே, அந்நாட்டு கல்லூரிகளில் ஆசிரியர் பதவிகளுக்கு அலைந்தும், அமெரிக்க நிறுவனங்களின் பொற்கிழிகளுக்கு அலைந்தும், முரண்பட்டே வாழ்ந்த தென் அமெரிக்க அறிவுஜீவிகள், அவர் காழ்ப்பின் உச்சத்திற்கு ஆளானார்கள்.

ஒரு மாலை, மெக்சிகோ நகரத்தில், கேப்ரியல் கார்சியா மார்க்கெசை ஒரு நாடக அரங்கில் மாரியோ வர்காஸ் லோசா சந்தித்தார். மார்க்கெஸ் காஸ்ட்ரோ விசுவாசி. பேச்சோ கருத்து மோதலாகி  கசிந்து உருகி கைகலந்து குத்துச்சண்டையாய் மல்கி, லோசா மொத்த மார்க்கெஸ் வீழ்ந்தார்.

தம் முனைவர் பட்டத்து நாயகனை மொத்தும் இன்றியமையாத இறும்பூதடைய, என்ன தவம் செய்தாரோ.

குறிப்பு 

இது, டேனியல் யெர்கினும் ஜோசஃப் ஸ்டானிஸ்லாவும் எழுதிய The Commanding Heights நூலின் ஒரு சிறு பகுதியின், தமிழாக்கம். ஆங்கில மூலம் இங்கே.

No comments:

Post a Comment