உஜ்ஜையின் தீர்கரேகை தெரியுமா? இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய தீர்க ரேகையாக அது விளங்கியது. இன்று உலக புகழ் பெற்ற கிரீன்விச் தீர்க்கரேகை சுமார் முன்னூறு ஆண்டுகளாக தான் பயன் படுகிறது. உஜ்ஜைன் மகிமை எப்படி கடல் தாண்டி கிரீன்விச்சுக்கு சென்றது?
பிதகோரஸ் கோட்பாடு, ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு, நியூட்டனின் விதி, என்று கணிதத்திலும் அறிவியலிலும் ஐரோப்பிய பெயர்களை மட்டுமே பள்ளி காலம் முதல் கேட்டு பழகிவி்ட்டோம். பாரதியார் பாடிய பாஸ்கரன் மாட்சி பாடலில் ஒரு வரி மட்டுமா? பாஸ்கரன் கோட்பாடு, பாஸ்கரன் விதி என்று ஏதும் இல்லையா?
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையில் வந்தது போல் ஆரியபடன், வராகமிகிரன், பிரம்மகுப்தன், என்ற வரிசையில் வந்தவர் சாதனைகள் என்ன? பெயர்களை கேடிகி்றோமே அவர்கள் என்ன தான் செய்தார்கள்? அவர்கள் எழுதிய நூல்கள் என்ன கூறுகின்றன?
கணிதமில்லாமல்லா தஞ்சை பெரிய கோவிலும், கோனாரக் கோவிலும், ஆயிரம் ஆண்டுகளாக அரண்மணைகளும், மாட கோபுரங்களும், கோட்டைகளும், சுரங்கபாதைகளும், பெருங்கடல் கலங்களும் துறைமுகங்களும் கட்டப்பட்டன? என்ன கணிதம் செய்து கிரகணங்களை கணித்தனர்? இது ஏன் நம் பாடநூல்களில் இல்லை?
வாமனன் விஸ்வரூம் எடுத்து காலால் அளந்த வானையும் மண்ணையும் பாரதத்தின் கணித மேதைகள் நூலால் அளந்த கதை என்ன?
எண்ணும் எழுத்தும் கண்ணென தகும். அந்த எண்களின் கதை என்ன? வரலாறு என்ன? அதற்கும் ஜோதிடத்திற்கும் விண்ணியலுக்கும் என்ன தொடர்பு?
No comments:
Post a Comment