Wednesday 1 May 2013

சென்னை விமான நிலையம்


சென்னையில் ஒரு விமான நிலையம் இருந்தாலும், இரண்டு பிரயாண சத்திரங்கள் இருப்பதால், உள்நாட்டு சத்திரத்திற்கு காமராஜர் பெயரும், வெளிநாட்டு சத்திரத்திற்கு அண்ணா பெயரும் சூட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் இவற்றை பெரிதாக்கி, இரண்டுப் புது சத்திரங்களை அரசு கட்டியது. புதுப்பெயர்கள் வைக்க திட்டமுள்ளதாகவும், பழையப்பெயர்கள் நீடிக்கவேண்டும் என்று கோரிக்கை உள்ளதாகவும் செய்தி.

புதுப்பெயர் வைத்தால் பரவாயில்லை. ஆனால் தயவுடன் அரசியல் தலைவர் பெயர்களை மட்டுமே வைக்க வேண்டும். தவறிக்கூட ஒரு விமானியின் பெயரோ, ஒரு விமானத்துறை பொறியாளர் பெயரோ, விஞ்ஞானியின் பெயரோ, பணிப்பெண் (air-hostess) பெயரோ, நிர்வாகி பெயரோ, வேறு எந்த தொழிலாளியின் பெயரோ வைக்கவேண்டாம். தமிழ் மரபை, இந்திய மரபை, பண்பை, ஒழுக்கத்தை, முற்போக்கு சிந்தனையை, மாண்பை, குணத்தை உலகுக்கு சொல்லும் கடமை அரசுக்கு உண்டு.

No comments:

Post a Comment