“ஔவையை பற்றி
எதுவும் நூல்கள் இல்லையே. ஏழெட்டு வருடமாக சென்னைப் புத்தக காட்சியில் ஆத்திச்சூடி
கூட கிடைக்கவில்லை,” என்று 2009 ஆம் ஆண்டு பலரிடம் புலம்பினேன். நண்பர் , ஆசான், ரசிகர்,
பண்டிதர், இலக்கியக் களஞ்சியம் திரு. கண்ணன் அவர்கள் அடுத்தவாரமே பின்வரும் கையெழுத்துக்
கட்டுரையை எழுதி வழங்கினார்! அவர் அனுமதியுடன் வலைப்பதிவில் சேற்க்கிறேன். அவர் தமிழில்
எழுதியதை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் எழுதியதை தமிழிலும் நான் மொழிமாற்றி, சமர்ப்பிக்கிறேன்.
பரோடா வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவர். பல்லாயிர்ம் கர்நாடக இசைப் பாடல்களின் முதல்
வரிகளையும், ராகத்தையும் புத்தகமாக வெளியிட்டவர்.
Around 2009,
I complained to several people, “There are no good books on (or by) Avvaiyaar.
Even Aathichchoodi is not available in the Madras book fair for the last
several years.” A friend, scholar, connoisseur, walking library and teacher, Mr
S Kannan, gave me this handwritten note the next week! With his permission, and
my translations of his English paragraphs to Tamil and vice versa, I submit
this. He’s a retired employee of Bank of Baroda, well known in Carnatic music
circles, as the man who created a book listing the first lines of several
thousand songs and their ragas.
ஔவை : பெண்; தாய்; தெய்வப்பெண்; துறவு பூண்ட
பெண்
சங்க கால
ஔவையார்: (குறிப்புகள்
– புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, திருவள்ளுவமாலை) இவள் சமகாலத்து மனிதர்களையும்,
அரசர்களையும் பற்றி பாடியுள்ளார்.
References: puRanaanooRu,
akanaanooRu, kuRunthokai, naRRiNai, thiruvaLLuvamaalai. She has composed poems
on contemporary people and kings.
\
ஒன்பதாம்
நூற்றாண்டின் பிற்பகுதி ஔவையார்:
1.
“நல்லம்பர்…
நின்னாட்டுடைத்து நல்ல தமிழ்,” என்றவர்.
2.
இவளைக்குறித்து
பல கதைகள் உண்டு; நிறைய தனிப்பாடல்கள்; இனிய செய்யுட்கள்; புராணமாய் மருவிய கவிதைகள்;
பழைய வரலாற்று சம்பவங்கள் இந்த ஔவையின் மேல் குவிந்துள்ளன.
1.
This
was the Avvaiyaar who said, “Nallambar, your country has beautiful Tamil.”
2.
There
are several stories about her; isolated poems; sweet stanzas; poems blown into
popular legends. Ancient historical legends were superimposed on her.
சுமார்
கி.பி. 1120 கால ஔவையார்:
கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை,
நல்வழி இயற்றியவர். அகளங்கன் (என்ற விக்கிரம சோழன்) காலத்திலும் அவனுக்கு பின்னும்
வாழ்ந்தவர்.
பல தெய்வங்களோடும், சான்றோரோடும்,
புலவரோடும் இவளை பிணைத்து பொய்யான, குறும்பான, தவறான, ஒதுக்கக்கூடிய கதைகள் உள்ளன.
கிடக்கட்டும்! ரசமும் சிரிப்பும் யதார்த்தமும் எள்ளலும் கிண்டலும் எளிமையும் புலமையும்
நயமுடை நுட்பமும் இவளது கவிதையில் கண்ணோடு இமையாக, மண்ணோடு மழையாக கலந்து காணலாம்.
இக்கால ஔவையார் செய்தவை யாவும்
அறநூல்களே.
Her works include KonRaivEnthan,
Aaththiccoodi, mooturai, nalvazhi. She lived in the time of AkaLangan (Vikrama
Chozha) and his successors.
Many wrong, mischievous,
mistaken, dismissable accounts are there associating her with great poets,
personalities, or even gods/goddesses. Leaving them all aside, here is a
poetess, who dabbled in interesting, humorous, worldly-wise, sweet, simple,
elegant and scholarly pieces. Her works were all didactic – moralistic.
பதிநான்காம்
நூற்றாண்டின் ஔவையார்:
இரண்டு நூல் செய்துள்ளார் – 1. ஞானக்குறள்
2. விநாயகர் அகவல். பின்னது தோத்திர நூல் – பரவலாக அறியப்பட்டுள்ளது. மரபு வழி சைவர்கள்
இல்லங்களில் நாள்தோறும் பாராயணம் செய்யப்படுவது. முந்தியது சாத்திர நூல்; ‘அவ்வைக்குறள்’
என்றும் சொல்லப்படுவது – 31 அதிகாரம், 310 பாடல்கள்.
She has written two books – 1.
JnaanakkuRaL 2. Vinaayakar agaval. The latter is a widely known prayer song, ritually
sung everyday in some Saiva families for generations. The former is dharma
literature, also called ‘OwvaikkuRaL.’ It has 310 stanzas in 31 chapters.
உலக வாழ்க்கையில்
சுதந்திரமாக இருந்த ஔவையார், ஆன்ம சுதந்திரத்தை தம் பாடல்களில் வலியுறுத்தினார். பலத்தனிப்பாடல்களும்
வழக்கிலுள்ளன. பக்தி இயக்கத்தின் செல்வாக்கு இவரிடம் இருக்கக்காணலாம்.
“காதல் இருவர்
கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்” (இல்லறம்) என்ற வாக்கு இவருடையது.
A lady
who had an independent life (not that of a housewife), this Owvaiyaar emphasized
freedom of the soul in her poetry. To her is attributed the famous line: “Two
lovers, united in thinking and supporting each other – that is bliss.” The bhakti
movement’s impact on her is discernible.
பதினேழாம்
நூற்றாண்டின் ஔவையார்:
தனிப்பாடல்கள். Isolated verses.
பதினெட்டாம்
நூற்றாண்டின் ஔவையார்:
பந்தனந்தூதி இயற்றியவர். Composed ‘Panthananthoothi’
பொதுவாக எல்லா
ஔவைகளுமே ஓரிடத்தில் நிலையாக வாழாது, எல்லா இடங்கட்கும் சுற்றிக்கொண்டிருந்தவர்கள்.
இந்த இயல்பு பற்றிதான் போலும், ஒருவருக்கேனும் தம் இயற்பெயர் விளங்காது “ஔவை” என்ற பலர் அறி சுட்டாக இருந்து வருகிறது.
மக்களின் அன்புக்கும்
மரியாதைக்கும் பாத்திரமாய் இருந்த மூதாட்டியாதலால் ஔவையார்களை பற்றி ஏராளமான கதைகளும்,
சம்பவங்களும் எழுந்துள்ளன; எழுதப்பட்டுள்ளன; பெரும்பாலும் புனைவே; பொருந்தாதனவே.
Generally,
all Owvaiyaars were nomadic bards, restless with wanderlust, constantly moving
from town to town, village to village, kingdom to kingdom. Perhaps because, we
don’t know the original names of any of them; but only know them by the
collective epithet “Owvaiyaar.”
Loved and
respected by the people, there are several legends and myths about these
Avvaiyaars, all attributed to one women. Mostly these stories are imaginary.
இவரைப்பற்றிய
நூல்கள்:
2. அவ்வை சரித்திரம்
3. புலவர் சரித்திர சார சங்கிரகம்
4. தமிழ் நாவலர் சரிதை
5. அவ்வையார்: அனவரத விநாயகம் பிள்ளை, 1919.
6. சைவ இலக்கிய வரலாறு: சு. துரைசாமிப்பிள்ளை 1958, அண்ணாமலை பல்கலைக்கழகம்.
முதல் நான்கும்
செவிவழி மரபு, வரலாறும் இல்லை, வாழ்க்கை சரித்திரமும் இல்லை. 5,6 சிறந்த ஆய்வு நூல்கள்.
அன்புள்ள கோபு,
ReplyDeleteசுருக்கமான தொகுப்பாக இருக்கிறது. இருந்தும் ஒரு அறிமுகமாகப் பயன் தரும்.
இரு மொழிகளில் வெளியிட்டது பாராட்டிற்குரியது. ஒரு யோசனை : இடையிடையே மொழிபெயர்க்காமல் தனித்தனி இடுகைகளாக ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டால், படிக்க ஹேதுவாயிருக்கும்.
திரு.கண்ணன் ஒரு நடமாடும் தகவல் பெட்டகம். அவரிடமிருந்து இன்னும் நிறைய பெற்று வெளியிடவும். அல்லது அவர் பெயரில் ஒரு ‘வலைப்பூ’ ((blog) தொடங்கச் சொல்லுங்கள். அவரிடமிருந்து பெறவேண்டியது நிறைய உள்ளது.
அன்புடன்,
ஜி.ஸன்தானம்
திரு. ஸ்ந்தானம் அவர்களே: நல்ல யோசனை நின்னுடைத்து.
ReplyDeleteமணிப்பிரவாளமாய் கண்ணன் எழுதியதால், நானும் அவ்வாரே தமிழ்ப் பாலும் ஆங்கிலப் பாகும் கலந்து எழுதினேன்.
கண்ணன் கணினி தொடுவதே அபூர்வம். அவரெங்கு வலைப்பூ எழுதுவது? உண்மையில் நீங்கள் ஒரு வலைப்பூ எழுதவேண்டும்! நீங்கள் தறவேண்டியது நிறைய உள்ளது.