வெள்ளி
எழ வியாழம் உறங்கிற்று என்று ஆண்டாள் திருப்பாவையில் பாடியுள்ளாள். இம்மாதம் வியாழம்
எழ வெள்ளி உறங்குவதை பார்க்கலாம்.
புதன்,
வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் இம்மாதம் வானில் தெரியும்.
(ராமதுரை ஐயாவை கேட்டு தகவல் சொன்ன பத்ரிக்கு நன்றி). மாலை ஏழு மணியளவில் கிழக்கே மிகவும்
பிரகாசமாக தெரிவது வியாழன்.
அதே நேரம் மேற்கில் மிகவும் பிரகாசமாக தெரிவது வெள்ளி –
ஆறரை மணிக்கே மத்த எந்த விண்மீனும் தெரியாத போது, மேற்கில் வெள்ளி மட்டும் ஜொலிக்கும்.
சுமார் எட்டு மணிக்குள் வெள்ளி கட்டிடம் பின்னால் சென்றுவிடும். ஏழு முதல் ஏழரை வரை
அதற்கு மிக அருகில் சிவப்பாக தெரியும் புள்ளி தான் செவ்வாய் கிரகம்.
கிரிக்கட்
உவமை தருகிறேன். கிழக்கே பார்த்து மட்டை பிடிக்கவும். லாங் ஆனில் வியாழன் தெரியும்.
லாங் ஆஃபில் ஸிரியஸ் நட்சத்திரம். எக்ஸ்ட்ரா கவரில் அகத்தியர் (கேனோபஸ்). விக்கட் கீப்பரின்
பின் பவுண்டரி லைனில் வெள்ளி. வெள்ளி பேட்டிங் செய்தால், அவனுக்கு லெக்ஸ்லிப்பாக செவ்வாய்.
இரவு
12 மணிக்கு லாங் ஆனில் சனி வருவான். இதற்குள் வியாழன் பேக்வர்ட் ஷார்ட்லெக் சென்றுவிடுவான்.
வெள்ளியும் செவ்வாயும் சுனில் நாராயண், அஜ்மல் போல் அஸ்தமித்திடுவர்.
எச்சரிக்கை முகிலினங்கள் தொலைந்தால்தான் இந்த முகவரிகள் தெரியும்.
சென்னையில்
புதனை பார்ப்பது இயலாத காரியம் என்பது என் கணிப்பு. கீழ்வானில் 5:30க்கு உதித்து, 6:15க்கு உதய ஒளியில் மறைந்துவிடும் புதன். நான் எங்குமே இன்றுவரை புதனை பார்த்ததில்லை
என்பது சோக கதை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சும்மாவா சொன்னார்கள்.
பிரஹஸ்பதி,
தேவர்களின் குரு என்பதும், சுக்ராச்சாரியார், அசுரர்களின் குரு என்பதும் பண்டைய பாரத
மரபு. எதிரும் புதிருமாய் இவர்களை காணலாம்.
அடுத்த
சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளி செவ்வாயை நெருங்கும். ஃபிப்ரவரி 21ஆம் நாள்
இவர்களுக்கு காதலர் தினம்- கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சும். அதன் பின் வேறு காதலரை
தேடி பிறிந்து செல்லும். மார்ச் மூன்றாம் நாள் செவ்வாய் பேட்டிங், வெள்ளி லெக்ஸ்லிப்.
ஸ்டெல்லாரியத்தில் பிடித்த படங்களை இங்கு காண்க.
February 14
February 21
March 3
தொலைநோக்கி
இருந்தால் இவை அருகே யுரேனஸ் கிரகம் தெரியும். போன வாரம் நண்பர் விகே ஸ்ரீநிவாஸின்
தொலைநோக்கி வழியாக வியாழனின் மூன்று துணைக்கோள்களை பார்த்தேன்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்
1. என். ராமதுரை பதிவு - வியாழன் கிரகத்தின் முகத்தில் கரும்புள்ளி
2. ஸ்டெல்லாரியம் மென்பொருள்
My essays on Astronomy
1. திருவாதிரையும் அகத்தியனும்
2. சிவராத்திரி
3. தமிழ் புத்தாண்டு - சித்திரைபௌர்ணமி
4. Tamil New Year - Chitra Pournami (English)
5. வராஹமிஹிரரின் அகத்தியர் ஸ்லோகம்
6. Sanskrit mathematical words in English
7. VarahaMihira's Eclipse Proof (English)
8. ஒருஸ்லோகம் ஒரு சிலேடை ஒரு எண் ஒரு நாள் ஒரு நூல்
9. A Sloka, a pun, a number, a date, a book
10. கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்
11. ஸமஸ்கிருதம் புறிகிறதே - மஹாவீரரின்
கணித கவிதை
12. Some slokas of Indian astronomy – இந்திய வானவியல் ஸ்லோகங்கள்
Videos of my lectures on Astronomy (in English)
Astronomy of Ancient Cultures
Indian Astronomy - from Vedic age to 15th century
![]() |
![]() |

தொலைநோக்கி
இருந்தால் இவை அருகே யுரேனஸ் கிரகம் தெரியும். போன வாரம் நண்பர் விகே ஸ்ரீநிவாஸின்
தொலைநோக்கி வழியாக வியாழனின் மூன்று துணைக்கோள்களை பார்த்தேன்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்
1. என். ராமதுரை பதிவு - வியாழன் கிரகத்தின் முகத்தில் கரும்புள்ளி
2. ஸ்டெல்லாரியம் மென்பொருள்My essays on Astronomy
1. திருவாதிரையும் அகத்தியனும்2. சிவராத்திரி
3. தமிழ் புத்தாண்டு - சித்திரைபௌர்ணமி
4. Tamil New Year - Chitra Pournami (English)
5. வராஹமிஹிரரின் அகத்தியர் ஸ்லோகம்
6. Sanskrit mathematical words in English
7. VarahaMihira's Eclipse Proof (English)
8. ஒருஸ்லோகம் ஒரு சிலேடை ஒரு எண் ஒரு நாள் ஒரு நூல்
10. கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்
11. ஸமஸ்கிருதம் புறிகிறதே - மஹாவீரரின் கணித கவிதை
Videos of my lectures on Astronomy (in English)
Astronomy of Ancient CulturesIndian Astronomy - from Vedic age to 15th century