Showing posts with label செவ்வாய். Show all posts
Showing posts with label செவ்வாய். Show all posts

Monday, 16 February 2015

வியாழம் எழ வெள்ளி உறங்கிற்று


வெள்ளி எழ வியாழம் உறங்கிற்று என்று ஆண்டாள் திருப்பாவையில் பாடியுள்ளாள். இம்மாதம் வியாழம் எழ வெள்ளி உறங்குவதை பார்க்கலாம்.
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் இம்மாதம் வானில் தெரியும். (ராமதுரை ஐயாவை கேட்டு தகவல் சொன்ன பத்ரிக்கு நன்றி). மாலை ஏழு மணியளவில் கிழக்கே மிகவும் பிரகாசமாக தெரிவது வியாழன். 

அதே நேரம் மேற்கில் மிகவும் பிரகாசமாக தெரிவது வெள்ளி – ஆறரை மணிக்கே மத்த எந்த விண்மீனும் தெரியாத போது, மேற்கில் வெள்ளி மட்டும் ஜொலிக்கும். சுமார் எட்டு மணிக்குள் வெள்ளி கட்டிடம் பின்னால் சென்றுவிடும். ஏழு முதல் ஏழரை வரை அதற்கு மிக அருகில் சிவப்பாக தெரியும் புள்ளி தான் செவ்வாய் கிரகம்.

கிரிக்கட் உவமை தருகிறேன். கிழக்கே பார்த்து மட்டை பிடிக்கவும். லாங் ஆனில் வியாழன் தெரியும். லாங் ஆஃபில் ஸிரியஸ் நட்சத்திரம். எக்ஸ்ட்ரா கவரில் அகத்தியர் (கேனோபஸ்). விக்கட் கீப்பரின் பின் பவுண்டரி லைனில் வெள்ளி. வெள்ளி பேட்டிங் செய்தால், அவனுக்கு லெக்ஸ்லிப்பாக செவ்வாய்.
இரவு 12 மணிக்கு லாங் ஆனில் சனி வருவான். இதற்குள் வியாழன் பேக்வர்ட் ஷார்ட்லெக் சென்றுவிடுவான். வெள்ளியும் செவ்வாயும் சுனில் நாராயண், அஜ்மல் போல் அஸ்தமித்திடுவர்.

எச்சரிக்கை முகிலினங்கள் தொலைந்தால்தான் இந்த முகவரிகள் தெரியும்.

சென்னையில் புதனை பார்ப்பது இயலாத காரியம் என்பது என் கணிப்பு. கீழ்வானில் 5:30க்கு உதித்து, 6:15க்கு உதய ஒளியில் மறைந்துவிடும் புதன். நான் எங்குமே இன்றுவரை புதனை பார்த்ததில்லை என்பது சோக கதை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சும்மாவா சொன்னார்கள்.

பிரஹஸ்பதி, தேவர்களின் குரு என்பதும், சுக்ராச்சாரியார், அசுரர்களின் குரு என்பதும் பண்டைய பாரத மரபு. எதிரும் புதிருமாய் இவர்களை காணலாம்.

அடுத்த சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளி செவ்வாயை நெருங்கும். ஃபிப்ரவரி 21ஆம் நாள் இவர்களுக்கு காதலர் தினம்- கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சும். அதன் பின் வேறு காதலரை தேடி பிறிந்து செல்லும். மார்ச் மூன்றாம் நாள் செவ்வாய் பேட்டிங், வெள்ளி லெக்ஸ்லிப். ஸ்டெல்லாரியத்தில் பிடித்த படங்களை இங்கு காண்க.

February 14 February 21
March 3

தொலைநோக்கி இருந்தால் இவை அருகே யுரேனஸ் கிரகம் தெரியும். போன வாரம் நண்பர் விகே ஸ்ரீநிவாஸின் தொலைநோக்கி வழியாக வியாழனின் மூன்று துணைக்கோள்களை பார்த்தேன்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்

1. என். ராமதுரை பதிவு - வியாழன் கிரகத்தின் முகத்தில் கரும்புள்ளி

2. ஸ்டெல்லாரியம் மென்பொருள்

My essays on Astronomy

1. திருவாதிரையும் அகத்தியனும்
2. சிவராத்திரி
3. தமிழ் புத்தாண்டு - சித்திரைபௌர்ணமி
4. Tamil New Year - Chitra Pournami (English)
5. வராஹமிஹிரரின் அகத்தியர் ஸ்லோகம் 
6. Sanskrit mathematical words in English
7. VarahaMihira's Eclipse Proof (English)
8. ஒருஸ்லோகம் ஒரு சிலேடை ஒரு எண் ஒரு நாள் ஒரு நூல்
9. A Sloka, a pun, a number, a date, a book
10. கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்
11. ஸமஸ்கிருதம் புறிகிறதே - மஹாவீரரின் கணித கவிதை
12. Some slokas of Indian astronomy – இந்திய வானவியல் ஸ்லோகங்கள் 

Videos of my lectures on Astronomy (in English)

Astronomy of Ancient Cultures
Indian Astronomy - from Vedic age to 15th century

Sunday, 13 April 2014

தமிழ் புத்தாண்டு - சித்திரா பௌர்ணமி - செவ்வாய்

Night sky over Madras 9pm April 14, 2014
English version of this blog here

நாளை – ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு தொடங்கும் தினம். சித்திரை பௌர்ணமி. இரண்டும் ஒரே நாளில். கொஞ்சம் அபூர்வம். மூன்றாம் அபூர்வம் : செவ்வாய் (Mars) கிரகம், சிவப்பாக, இவ்விரண்டிற்கும் அருகே இருக்கும்.

ஸமஸ்க்ருதத்தில், சூரியோதயத்தில் தொடங்கும் நாளுக்கு தினம் என்று பெயர்; வேத காலத்தில ஸவண தினம் என்றும் அழைத்தனர். தினத்தை படைக்கும் சூரியனுக்கு தினகரன் என்று பெயர். சந்திரோதயத்தில் தொடங்கும் நாளுக்கு திதி என்று பெயர். நாளை சந்திரோதயம் மாலை ஆறு மணிக்கு என்பதால், ஆறு மணி வரை சதுர்தஷி, அதன் பின் பௌர்ணமி.

பஞ்சமி, சஷ்டி, சப்தமி என்ற திதிகள் நிலவின் வடிவத்தை வைத்து நாளை குறிக்கின்றன. இந்த கணக்கில் முப்பது திதிகள் வரும் – ஷுக்ல பக்ஷ எனும் 15 வளர்பிறை திதிகள், பிரதமை முதல் பௌர்ணமி வரை; கிருஷ்ண பக்ஷ எனும் 15 தேபிறை திதிகள், பிரதமை முதல் அமாவாசை வரை.

நட்சத்திரோதயத்தில் தொடங்கும் நாளுக்கு நட்சத்திரம் என்று பெயர். அஸ்வினி பரணி என்று தொடங்கி ரேவதியில் முடியும் 27 நட்சத்திரங்கள், அந்தந்த நாளில் சந்திரனுக்கு அருகே இருக்கும் நட்சத்திரத்தின் பெயரில் உள்ளன. அஸ்வினி அன்று சந்திரன் அஸ்வினி அருகிலும், பரணி அன்று பரணி அருகிலும், இருக்கும். நாளை சித்திரை (Spica) நட்சத்திரின் அருகே சந்திரன் இருக்கும்.

வானில் கோலம் ஏப்ரல் 14, இரவு 9 மணி அளவில் பார்த்தால்  மேலுள்ள காட்சியை காணலாம். கொஞ்சம் அதற்கு கீழே பளிச்சென்று ஒரு வெள்ளைப்புள்ளி தெரியும் – அதுவே சனி கிரகம். கிழக்கே கட்டடங்கள் உயரமாய் இருந்தால் 10 மணி வரை அளவில் பார்த்தால் தெரியும்.

மாதங்களின் பெயர்கள் பௌர்ணமி அன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தின் அருகே உள்ளதோ அந்த மாதத்திற்கு அந்த நட்சத்திரத்தின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினர். சித்திரை நட்சத்திரத்திற்கு அருகே சந்திரன் காணும் நாள் பௌர்ணமி எனின் அந்த மாதம் சைத்திரை. விசாகம் அருகில் பௌர்ணமி வந்தால், வைகாசம். கிருத்திகை அருகில் பௌர்ணமி வந்தால், கார்த்திகை. தமிழில் இப்பெயர்கள் மறுவி வந்துள்ளன. உதாரணமாக, உத்திர பல்குனி நட்சத்திரத்தின் பெயர் உத்திரம் என்றும், அந்த நட்சத்திரத்திற்கு அருகே பௌர்ணமி வந்தால், அம்மாதம் பங்குனி என்றும் பெயர் மறுவியுள்ளன.

Night sky over Madras, 9:30pm April 18
சந்திரனின் பயணம் ஏப்ரல் 16 அன்று, சந்திரன் சனி கிரகம் (Saturn) அருகிலும், ஏப்ரல் 18 அன்று கேட்டை (Antares)நட்சித்தரத்தின் அருகிலும் காணலாம். நட்சத்திரங்களும் கிரகங்களும் பெரிதாக நகர்ந்திருக்காது, சந்திரனின் பயணம் மட்டும் நன்கு புரியும். படங்கள் ஸ்டெல்லாரியம் மென்பொருள் கொண்டு எடுத்துள்ளேன்.

பின்குறிப்பு நேற்றிரவு பௌர்ணிமி மட்டுமல்ல சந்திர கிரகணம் என்று நண்பர் மிசெல் டனினோ ஈமெயில் வழியாக நினைவூட்டினார். இந்தியாவில் கிரகணமில்லை, வட அமெரிக்காவில் பார்த்திருக்கலாம்.