சென்னை எழும்பூர் கவின் கலை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி, சமீபத்தில் ஓய்வு பெற்ற திரு சிவராமகிருஷ்ணனையும், கும்பகோணம் கவின் கலை கல்லூரி முன்னாள் முதல்வர்கள் திரு அருளரசன், திரு ரவி இருவரையும் கௌரவிக்கும் ஒரு பாராட்டு விழாவை இம்மூவரின் மாணவர்கள் நடத்த உள்ளனர். வரும் சனிக்கிழமை ஜூலை 4, காலை 930 முதல் முழு நாள் நிகழ்வு. இதில் என்னையும் பேச அழைத்துள்ளனர்; காஞ்சி கைலாசநாதர் கோவிலை பற்றி ஒரு உரையாற்றுவேன். பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் அஜந்தா ஓவியங்களை பற்றி உரையாற்றுவார். காலையில் நாட்டியத்துடன் விழா தொடங்கும். மதியம் மாணவர்களின் கலந்துரையாடல். நிகழ்ச்சி நிரல் இதோ.
கும்பகோணத்தில் இந்த சனிக்கிழமை இருந்தால் இந்த விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். சிவராமகிருஷ்ணன் எதை பேசினாலும் மிகவும் சுவாரசியமாக, கலை ரசனை பொங்க, கேட்போர் காதில் தேன் வந்து பாயும். அரிய வாய்ப்பு.

