Friday 1 May 2015

சைலகேது


விண்ணுக்கும் அப்பால் வெறும் 
கண்ணுக்கும் அப்பால் பலரின் 
எண்ணுக்கும் அப்பால் உள்ளசில
மண்ணுலக சிதறல்கள்

உரைந்த பனி-மண்-கல் கலவையிவை
விரைந்தனவே! வானைப் பிளந்தனவே!
கரைந்தனவே! விந்தை! உருகவில்லை!
எரிந்ததுகொல் பனி-மண்-கல் நெருப்பாக! 

குறிப்பு

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெர்ஸியஸ் ராசியில் தோன்றிய மீட்டியார் மழையை பற்றி மேலுள்ள் இரு கவிதைகளை எழுதினேன்.

தூமகேதுவை வால்நட்சத்திரம் என்றும் நாம் அழைக்கிறோம். தூம (வடமொழிச்சொல்) என்றால் புகை. கேது, நமக்கு ராகுவோடு மட்டும் கேட்டுப்பழகியச் சொல். கேதுவை சாயாகிரகம் (நிழல் கிரகம்) என்மனார் ஜோதிடர். புகைப்போல் ஒரு விண்ணுலக விருந்தாளி வந்தால் அதை தூமகேது என்பர்.

கிரகணங்களால் பாம்பசுரராகவோ ராகுகேது நம் வழக்காடலில் இருப்பினும், மீட்டியார் ஆஸ்டிராயிட் போன்றவை நம் வழக்காடலில் இல்லை.

வடமொழியில், சில – கல்; சைல – மலை (தமிழில் சைலம்). மீட்டியாருக்கு சைலகேது என்று வடமொழியில் இப்பதிவோடு பெயர்சூட்டுகிறேன். ஏற்போர் தமிழிலும் அதேச்சொல்லை ஏற்கவும்.

Note

Two poems about the Perseid meteor shower, which I wrote in August 2013.

Related Links

1. VarahaMihira's Eclipse proof
2. VarahaMihira's poem on Agastya (in Tamil)

2 comments:

  1. ஏற்கெனவே விண்கல் என்ற தமிழ்ச்சொல் இருக்கிறதே. கேது - நிழல் கிரகம், மீட்டியர் நிழல் அல்ல, நிஜமான பாறை, எனவே சைலகேது பொருத்தம் அல்ல. இதில் மலையை எதற்கு சேர்க்க வேண்டும் என்பதும் கேள்வி.

    ReplyDelete
  2. கோயில் என்ற சொல் பொதுவாக எந்த கோயிலையும் குறிக்கும். ஆனால் தமிழ்நாட்டில் “கோயில்” -வைணவர்களுக்கு திருவரங்கம், சைவர்களுக்கு சிதம்பரம்.

    அதுபோல், கிரகணங்களை பேசும்போது கேது நிழல் கிரகம். ஆனால் தூமகேது காமெட் என்னும் பாறை சிறுகிரகத்தை குறிப்பது போல், சைலகேது மீடியார் என்னும் சிறுகிரகத்தை குறிக்கலாம். ஆஸ்டிராயிட் என்ற கிரகச்சிதரலையும் குறிக்கலாம். விண்கல் என்ற சொல்லும் பொருந்தும். ஆனால் பல மீடியார்கள் கல்லளவு இல்லை, மலையளவே உள்ளன, பூமியின் காற்றுமணடலத்தில் நுழைந்து, உரைவின் வெப்பத்தால், கல்லாய் சுருங்கி கனலாய் எரிகின்றன.

    ReplyDelete