சுவாமிநாத
ஐயர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் பொருளியல் கட்டுரைகளை எழுதிவருபவர். இடதுசாரி
எண்ணங்கள் பரவலாயுள்ள இந்திய நாளிதழ் சூழலில் தெளிவாக வலதுசாரி சிந்தனைகளை முன்வைப்பவர்.
பல வருடங்களாக இவரை படித்து வருகிறேன். பொருளியல் பார்வையில் சமூகத்தை அலசி, புதிதாக
பல தகவல்களை சொல்வார். இந்தியாவில் இது செவிடன் காதில் சங்கு ஊதும் பிழைப்பு. இந்த
கட்டுரை பிடித்ததாலும், உழவர் தற்கொலைகளை பற்றி புலம்பல்களே அதிகம் இருப்பதாலும், நான்
இதை தமிழில் மொழிபெயர்த்து இங்கு பகிர்கிறேன். இதன் ஆங்கில மூலம் இங்கே
தற்கொலை
செய்துமடிவோரின் பெரும்பான்மையானோர் உழவர்கள் அல்ல. ஆனால் அவர்களின் மரணத்தால் குறைந்த
அனுதாபம் ஏன்?
உழவர்கள்
தற்கொலைகளை ஒரு பெருந்துயர நிகழ்வாக தொகுத்த
நிருபர்களும், தொலைகாட்சி சேனல்களும் விருதுகள் பெருகின்றன. உலகமயமாக்கலையும்
வணிகப்பயிர்களையும் எதிர்க்கும் அரசுசாரா இயக்கங்கள் நன்கொடை பெருகின்றன. இடது சாரிகளுக்கு
இது வகுப்புவாதம் என்று அரைகூவ மற்றொரு வாய்ப்பு. பல மாநில அரசுகள் தற்கொலையில் தலைவனை
இழந்த குடும்பங்களுக்கு நஷ்டஈடு தொகை தருகின்றன. அவர்களுக்கு கடன்கொடுத்தோர் கொடுத்த
கடனை இத்தொகையிலிருந்து மீட்டெடுக்கின்றனர்.
இதானால்தான்,
ஆகஸ்டு 2004இல் ஸ்வாமிநாமிக்ஸ் கட்டுரைத்தொடரில் “யாவரும் விரும்பும் உழவர் தற்கொலை”
என்ற தலைப்பில் நான் கட்டுரை எழுதினேன். தற்கொலை புள்ளிவிவரத்தில், உலக நாடுகளில் இந்தியாவிற்கு
சராசரி நிலை – வருடத்திற்கு, ஒருலட்சதில் பதினொன்று பேர் தற்கொலை. உலகில் அதிகமாக,
லட்சத்தில், கிரீன்லேண்டில் 83, லித்துவேனியா 38, தென்கொரியா 28.5; சீனா 22.2 – இது
இந்தியாவைவிட இருமடங்கு. வெகுசில உழவருமே கொண்டும், நலிந்தோருக்க நல்ல நிவாரண திட்டங்களும்
கொண்ட பெருஞ்செல்வ நாடுகளில், தற்கொலை விகிதம் இந்தியாவை மிஞ்சுகிறது - பெல்ஜியம்
19, பிரான்சு 14.7, அமெரிக்கா 12.6, ஜப்பான் 12.3, ஜெர்மனி 12.5, இங்கிலாந்து 11.8
லேன்ஸட்
பத்திரிகையில் [செய்தி இதழ் அல்ல, அறிவியல் இதழ்] ஒரு கள ஆய்வு செய்தனர் – இதன் படி
தற்கொலைகளின் எண்ணிகை, அரசின் புள்ளிவிவரங்களை விட 35 முதல் 40 % அதிகமாக இருக்கலாம்.
பல குடும்பங்கள் தற்கொலையை அவமானமாக கருதி, மரணங்களாக சொல்வதுமுண்டு. இதைகயேற்று ஒப்பிட்டாலும்
இந்தியா பெல்ஜியம் நிலைமையில் உள்ளது. வளரும் நாடுகளில் தற்கொலைகள் குறைவாகவே கணக்கிடபடும்.
இஸ்லாம் தற்கொலையை பெரும் பாவமாக கருதுகிறது. இதனால் பாகிஸ்தான் தங்கள் நாட்டில் லட்சத்தில்
ஒருவர் தான் தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிவரம் தருகிறது. வருமை, உழவு, அரசின் உதவி
இவற்றோடு தற்கொலைகளுக்கு உலகில் எங்கும் தொடர்பில்லை. தற்கொலை தூண்டும் முக்கிய காரணம்,
பணகுறைச்சல் அல்ல, மன உளைச்சலே. அமெரிக்காவில்
மன உளைச்சலால் வாடி தற்கொலை செய்வோர் 2% முதல் 15 % [கோபுவின் மொழிகுறிப்பு:
மன உளைச்சல் என்று இங்கு ஆசிரியர் கூறும் அன்றாட சலிப்பு அல்ல, மருத்துவர்களால் நோய்
என்று சொல்லப்படும் “டிப்ரெஷன்”.] தற்கொலை செய்வோரில் 66% மன உளைச்சல் நோயில் தவிப்பவர்.
பண கஷ்டகாலங்களில் மன அவதி பெருகும். ஆனால் கடன்களை ரத்து செய்தோ, மானியங்கள் தந்தோ
இந்த மன அவதிகளை குணம்செய்ய இயலா.
உழவர்
சமூகத்தின் தற்கொலை சதவிகிதம் மற்ற தொழில்செய்வோரின் சதவிகிதத்தை மிஞ்சவில்லை வேறுபடவில்லை
என்று ஒரு லேன்ஸெட் ஆய்வு கூறுகிறது. இதற்கு அரசு புள்ளிவிவரங்ளின்றி மற்ற புள்ளிவிவரங்களை
பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வை கேம்ப்ரிட்ஜ் பல்கலை ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. ஆனால்
கேம்ப்ரிட்ஜ் மறுப்பில், வாதம் சரியில்லை என்பது என் கணிப்பு. சில ஆய்வுகள் மற்றசமூகத்தைவிட
உழவர்கள் 20% முதல் 40% அதிகமாக தற்கொலை செய்வதாக காட்டுகின்றன. ஆனால் பிரமீத் பட்டாச்சார்யா
என்ற பொருளியல் நிபுணர், 2013ஆம் ஆண்டில், அரசு புள்ளிவிவரம்படி, உழவரின் தற்கொலை விகிதம்,
மற்றவரை விட குறைந்துவிட்டதை சுட்டிகாட்டுகிறார்.
இதை
கொண்டாடாமல், ஊடகங்கள் இவ்விஷயத்தில் மௌனமாய் உள்ளன. ஆம் ஆத்மி கட்சிகூட்டத்தில் தற்கொலை
செய்துகொண்ட உழவரை மையப்படுத்தி, நில கொள்முதல் சட்டத்தை எதிர்த்து, திசை திருப்புகின்றன.
உழவர்
தற்கொலை சதவிகிதம் குறைந்ததை ஏன் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை? இதை செய்தியாக சொன்னால்
எந்த நிருபருக்கும் விருதோ பதக்கமோ கிடைக்காது. சென்ற வருடங்களில் கிடைத்த விருதுகள்,
தகுதியின்றி கிடைத்தவை, தவரான அடிப்படையில் கிடைத்தவை என்று கருத்து எழும்? எந்த நிருபர்,
எந்த ஊடகம் இதை விரும்பும்?
எதிர்கட்சி
அரசியல்வாதிகள், இடதுசாரி பேராசியர்கள், அரசுசாரா அமைப்புகள் யாவரும் வருமையால் தற்கொலை
பெருகுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் லேன்ஸெட் ஆய்வோ, பணக்கார நாடுகளில் படித்த
மக்களே அதிகம் தற்கொலை செய்துகொள்வதை, ஏன், பத்து மடங்கு அதிகம் என்று, காட்டுகிறது.
துப்பாக்கி
வாங்கிய முதல் வாரத்தில் தற்கொலை செய்துகொள்வோர் ஏற்கனவே துப்பாக்கி வைத்துள்ளோரை விட
57% அதிகமென்று, அமெரிக்காவின் கலிஃபோர்ணியா மாநிலத்தில் ஒரு ஆய்வு காட்டுகிறது. அந்நாட்டு
தலைநகரில் தற்காலிகமாக துப்பாக்கிகளுக்கு தடைவிதித்த போது, தற்கொலைகள் 23% குறைந்தனவாம்.
ஏன்? துன்பகாலங்களில், கை அருகே ஆயுதம் இருப்பின் அது தற்கொலைக்கு உதவும்.
இந்தியாவிலும்
இதை காணலாம். உழவர் தற்கொலைகளில், பூச்சிமருந்தை உண்டு இறப்போரே அதிகம். காய் கனி வணிகப்பயிர்களை
வளர்க்கும் உழவர்கள் அதிகம் பூச்சிக்கொல்லிமருந்துகளை வைத்திருப்பதால், அவர்களே உழவர்
தற்கொலைகளின் சதவிகிததிலும் அதிகமாய் உள்ளனர்.
போர்வெல்
கிணறுவெட்ட கடன் வாங்கி, அவை சீக்கிரம் வற்றியதால் தற்கொலை செய்துகொண்டோரும் உண்டு;
குறிப்பாக ஆந்திரபிரதேசத்தில். பல மாநில அரசுகள், உழவர்க்கு மின்சாரத்தை இலவசமாக தந்ததால்,
சிலர் கட்டுப்பாடின்றி நீரிரைச்சி, நீர்நிலைகளை பாழாக்கினர். இது போர்வெல்களையும் வற்றசெய்தது.
இலவச மின்சாரத்தால் தற்கொலைகள் பெருகின. எந்த அரசியல்வாதியோ, நிருபரோ, அரசுசாரா அமைப்போ
இலவச மின்சாரத்தை எதிர்க்குமா? மன உளைச்சல் நோய்களை குணப்படுத்தும் மருந்துகளுக்கோ,
மருத்துவருக்கோ அவர்கள் குரலெழுப்பவரா? இல்லை.
லேன்ஸெட்
இதழின் கருத்து: “ பல இந்தியருக்கு தற்கொலை தடுக்கும் சமூக ஆதரவோ மனநோய் மருத்துவ வசதியோ
இல்லை. குறிப்பாக, டிப்ரெஷன் நோயை குறைக்கும் வசதிகள் இல்லை. இவை இருப்பின் தற்கொலைகள்
குறையலாம். வெறித்தனமாக சாராயம் குடிப்பதை குறைக்கவேண்டும்; மதுபானங்களுக்கு வரி ஏற்ற
வேண்டும்; மருத்துவ வசதிகள் வளரவேண்டும்; இவை தற்கொலைகளை குறைக்கும்.”
A Comment on the Article you have referred :
ReplyDelete//
This has to be one of the most stupid article written by you in many many years. It is full of inconsistencies and seems to be written in an inebriated state. Here are some samples.
a. Who says that Financial stress does not cause mental stress? Mental stress must include financial one as well.
b. In last several years if suicide rates have dropped, you must write a congratulatory article on UPA-1 and UPA-2 govts, who definitely pulled many people out of poverty and made sure that rural economy does far better than the urban one. It proves the point that financial well being could reduce suicide rates.
c. People who buy guns in US newly are more likely to commit suicide. Are you suggesting that farmers that committed suicide bought pesticides for the first time. They were using pesticides all the while. A more relevant point would have been to find out the suicide rate between people with guns and people without guns. But alas, you never paid attention to this fact.
d. Southern states are rich, so banks and money lenders give loan to the farmers there. Farmers in their endeavor to live better lives approach banks and money lenders. In northern states, farmers have lost all hopes and they never approach a bank or a money lender. Actually, north-south divide is the difference of hope for a better life vs. no hope. And suicides are committed by people who are hoping for better, take a big risk for that and end up being worse.
All in all not a single point in this article made any sense. All the arguments are hollow.
//
// not a single point in this article made any sense
Deleteஇக்கட்டுரையின் முக்கிய தகவல்கள்
1. இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையோர் உழவை சார்ந்தவராயினும், உழவால் தற்கொலை செய்துகொள்வோரில் உழவரை விட மற்றவரே அதிகம். இதை ஊடகங்கள் சொல்வதில்லை. ஏன்?
2. வருமையினால் தற்கொலை என்பது தவறு, பணக்கார நாடுகளில் தற்கொலைகள் இந்தியாவை விட அதிகமாக இருக்கின்றன.
3. நில கையக மசோதாவிற்கும் தற்கொலைக்கும் நேரடி சம்பந்தம் இல்லை.
>> one of the most stupid article written by you
ReplyDeleteSuch abusive terms deserve no response. Usually it indicates that the commenter was unable to accept that his own ideas may be wrong and doesn't have the objectivity to deal with it.
>>All in all not a single point in this article made any sense. All the arguments are hollow.
This merely shows the mindset of that particular commenter. Swaminathan Aiyar has made several valid points