Sunday, 28 July 2013

சொல்லணி கொன்றை

மரணம் :: இயற்கையின் விளங்கா புதிர்
பிறவி :  கேட்காமல் கிடைக்கும் வரம்
மோகம் : நெஞ்சுக்கு கண்ணின் மடல்
காதல் :  உள்ளத்தை பிணைக்கும் கலை
ஊடல் :  ஆசைக்கு நாணத்தின் தடை
காமம் :  உடலுக்கு உறவின் கொடை

கேள்வி : சிந்தைக்கு வழிகாட்டும் ஒளி
ஐயம் :   அறிவுக்கு அழியாத் துணை
அன்பு :   உள்ளத்தில் பெய்யும் மழை
கருணை : கொடியோரை மாற்றும் முறை
கல்வி :  வல்லோர்க்கு ஏணிப் படி
பண்பு :  நல்லோரின் வாழ்கை நெறி

கவிதை : கருத்துக்கு சொல்லில் உடை

பிப்ரவரி 3, 2008

Sunday, 21 July 2013

Tholkaappiyam, Bharata Naatyam and Cilappadikaaram

What do Bharatha's Natya Shaastra ( a Sanskrit book on classical Indian dancing), the Tholkappiyam ( a book on Tamil grammar, prosody, and vaguely geography), and Cilappadikaram ( a long narrative Tamil poem about Kovalan and his wife Kannagi, titled after her anklet) have in common? 

In a brilliant exposition, Dr Nagaswami renowned archaeologist, historian and scholar in both Tamil and Sanskrit, connected these in his talk at Arkay Convention Center on Sunday, July 14.

The oldest Tamil literature, of the Sangam age - considered to be between approximately 300 BC to 300 AD by most historians - is divided as (1) Agam - Internal (2) Puram - External. Agam refers to domestic themes, mostly of love, marriage, longing, separation, adultery, lust, infatuation, disillusion, domestic bliss and discord, families etc. Puram refers to worldly affairs, battles and wars, street scenes, affairs in the royal courts etc. 

Tholkaappiyam also divides the land into five geographical regions, each with its own ruling deity :
1. Mullai - Forest ( Deity : maayOn - Krishna in Sanskrit)
2. Marudham - Farm land ( Deity : vEndan - Devendra in Sanskrit)
3. Kurinji - Hills ( Deity : cEyOn - Subrahmanya in Sanskrit)
4. Neithal - Sea coasts ( Deity : varuNan - VaruNa in Sanskrit)
5. Paalai - Desert ( Deity : koRRavai - Durga in Sanskrit)

Interestingly, the Sangam poems mentioned above are also classified according to these geographic categories (called thiNai in Tamil) besides the Agam / Puram classification. This is known to most educated Tamils, but is generally unknown to the rest of India.

Dr Nagaswami's fascinating contention was that Bharata's Naatya Shaastra also follows a similar geographic division, the corresponding words being
Vanam - Mullai / Forest
Parvatam - Kurinji / Hill
Saagaram - Neidal / Sea Coast
Mrittika - Marudam / Farmland

In fact he contends that this classification is mentioned in the Vedas. This is the first time I have heard of the thiNai concept in Sanskrit literature. He also stated that the wordpaalai refers not to desert, but to localities where two or more of the other types of geographical aspects are present. This is the first time I heard such an explanation for paalai - but it would explain two things - 1. There is no genuine desert in the Tamil country, though there are arid regions like the Sivakasi area. 2. Songs of the paalai outnumber songs of all the other categories, which is quite puzzling otherwise.

He also mentioned that in Bharata's Natya shastra, there is a geographical division of the performing space, into four quarters. The paalai equivalent, say a city scene, would be performed where the four quarters meet, i.e., in the central area. Please note that he is talking about theory & practice from 2000 years back, not the manner of performance or design today. Initially, there were only eight rasas; the ninth rasa, shaantham (tranquility) was added much later.

The Sanskrit concepts Dharma, Artha, Kaama, Moksha have equivalents in the Tamil, aRam, poRuL, inbam and veeDu, respectively. He further contended that agam covers the kaama (inbam) literature, whereas puram covers the other three. 
The Sangam poems are in two collections - 1. Paththuppaattu (Ten Songs) 2. ettuthokai (Eight Anthologies). The former is ten individual long poems each composed by one author, the latter is a collection of poems of similar themes by various poets. He contended that ALL these works were written as musical dance performances, with long prose narrations as required. It is because they were performed for the public, that they were preserved while no other texts have survived from that period.

He said the Cilappadikaram (The Anklet Saga), an epic poem composed at the tail end of the Sangam age (or just after it in other scholars' opinion), conforms to this style, grammar and tradition. It was meant to be a dance-drama, with songs and dances in all five regions, with the characteristic themes and styles of each region. Some of these are extraneous to the story, and there is a gratuitous continuation of the story well after the hero and heroine ascend to heaven. In the continuation, a dance performance of the hilly region (kurinji) is included, just so all five themes are covered, because in the Kovalan-Kannagi story, there is no real scene in a hill region. And finally, the Chera king Cenguttuvan is glorified and praised, because the epic was first presented and performed in his court. The Cilappadikaaram, said Dr Nagaswami, is the most comprehensive composition, that displays all the elements that are prescribed in both the Natya shastra and the Tholkaappiyam.

I have covered the outline of his talk, some salient and breathtakingly new opinions / interpretations, his deft weaving of the links between the three great works. You can see the video when it is posted on the web for all the details and nuances, or read his articles in his website http://www.tamilartsacademy.com/home.asp

Friday, 19 July 2013

சமூக வணிக கலை தடங்களாக கோயில்கள்

கோயில் என்பது என்ன? பூசைக்கும் புளியோதரைக்கும் புண்ணியத்திற்கும் மட்டும் போகும் இடமா? இசை, நாட்டியம், வணிகம், சமூகம், கிணறு வெட்டல், கல்வி, கடன், கொடை, நிலம், பயிர், கால்வாய் நிர்வாகம், வரி விநியோகம், மருத்துவம் - போன்ற அன்றாட வாழ்விற்கும் கோயில்களுக்கும் என்ன சம்பந்தம்?

"Temples as Socio-Economic and Cultural Centres" : Lecture by Dr Chitra Madhavan, on Saturday, 20th July at 6pm at Tattvaloka, 76, Eldams Road, Teynampet, Chennai - 600 018.

Tuesday, 16 July 2013

Age of the Mantras - Book discussion by Prof Swaminathan

"Life in Ancient India - Age of the Mantras" is a book written by PT Srinivasa Iyengar, a historian, of whom the general public and a few historians may be unaware.

Prof Swaminathan will discuss this book at 6.45 pm on Wednesday July 17th at Gandhi Centre, Thakkar Bapa Vidyalaya. This hall can be reached from the Venkatnarayana Road entrance to the school.

The Age of the Mantras refers to the earliest time period of the Vedic age.

Thursday, 11 July 2013

James Watt and Thomas Edison's breakthroughs

Yesterday, I understood how Edison made his huge leap forward in the design of his electric bulb : he was the first person to connect bulbs in parallel! From Vaclav Smil's book "Creating the Twentieth Century."

On Tuesday, I understood how James Watt made his huge leap forward in the design of the steam engine, upon Denis Papin and Newcomen's designs - he separated the steam condense from the main cylinder! From Jenny Uglow's "Lunar Men."

It's interesting that I am learning science from history books, when there is so little science in our school history books and so little history in our school science books.

Monday, 8 July 2013

சாராய வரைபடம்

உலகநாடுகளை கண்டங்களை நில அமைப்பால் மட்டும் பிரித்து பார்க்காமல், கலாச்சார பழக்கங்களால் வரைபடம் செய்து பார்த்தால் பல வேற்றுமை ஒற்றுமைகள் பளிச்சென்று தெரியும். அப்படிப்பட்ட அற்புதமான வரைபடம் “எகானமிஸ்ட்” பத்திரிகையில் அச்சாகியுள்ளது.

நில அமைப்பு மக்களின் வரலாற்றை நிர்ணயித்ததும், அதன் விளைவு பண்பிலும் பிரதிபலிப்பதையும் இதில் காணலாம்.

இந்தியாவுக்கு மாநிலங்கள் வாரியாக, மாவட்டம் வாரியாக, சொத்து வயது கல்வி வாரியாக, இப்படி ஒரு வரைபடம் அமைத்தால் நன்றாயிருக்கும்.


http://www.economist.com/blogs/dailychart/2011/02/global_alcohol_consumption

12 Feb 2018 இந்த சிறு தகவலை ஆகஸ்டு 2013ல் எழுதிய போது  எக்கானமிஸ்ட் பத்திரிகை யாரும் படிக்க இலவசமாக இருந்ததது. பின்னர், கட்டண வலைத்தளமாக மாறிவிட்டது. ஆனால இதைபோன்ற ஒரு சாராய வரைபடம் விக்கிபீடியாவில் உள்ளது. அந்த படம் கீழே.  சுட்டி இங்கே.

சாராய வரைபடம் - விக்கீபிடியா

17000 டாலர் கார் வெறும் 45000 டாலருக்கு மட்டுமே

ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா, இத்தாலி, ப்ரான்ஸ் – ஆறு நாடுகள் மட்டுமே கார்களைசெய்வதில் உலகப் புகழும், விசைத்திறனும், பெருஞ்செல்வமும் கொண்டவை. மற்றபடி, சீனா, மெக்ஸிகோ, ஸ்வீடன், இந்தியா, இங்கிலாந்து(!!), தாய்லாந்து, ஆஸ்திரேலியா, பிரேஸில் போன்ற மற்ற நாடுகளில் கார் தொழிற்சாலைகள் இருந்தாலும், கார்களில் அந்தந்த நாடுகளின் பெயரும் அடையாளமும் இருந்தாலும், உலகச்சந்தையில் பெரும் பங்கு இல்லை.

ஆனால் இன்னாட்டு கம்பெனிகளின் தொழிற்சாலைகள் வெவ்வேறு நாடுகளில் உள்ளன. வெவ்வேறு நாடுகளில் ஒரே கார் வெவ்வேறு பெயரில் விற்கப்படலாம். ஒரே தொழிற்சாலையில், போட்டி போடும் இரு கம்பெனிகளின் கார்கள் உருவாக்கப்படலாம்! காரின் பெயரும், லச்சினையும், விலையும் மட்டுமே மாறும். 


1994-ல் நான் கார் வாங்க நினைத்தபோது கேள்விப்பட்ட ஒரு செய்தி – கலிபோர்னியா தொழிற்சாலை ஒன்றில் திங்கள், புதன், வெள்ளியன்று செவ்ரலே கம்பெனியின் ஜியோ ப்ரிஸம் கார்களும், செவ்வாய், வியாழன் அன்று, டொயோடா கம்பெனியின் கொரோல்லா கார்களும், உருவாக்கப்பட்டு, கடைசி நிலையில் பெயரும் லச்சினையும் மட்டும் மாற்றப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்படும். கொரோல்லாவுக்கு செல்வாக்கு அதிகம் என்பதால் அதன் விலை ஆயிரம் டாலர் அதிகம்! இதற்கு நக்கலாக 'Badge Engineering' – 'லச்சினை பொறியியல்' என்று பெயர்.
இது எலக்ட்ரானிக்ஸ் துறையில் சகஜம். உதாரணமாக, சிடி, டிவிடி, பென் டிரைவ், செல்போன், டிஜிட்டல் கேமரா, போன்றவை, சீனாவிலும், சென்னை அருகிலும், FoxConn கம்பெனியின் தொழிற்சாலைகளில், தயாரிக்கப்பட்டு, முத்திரை மட்டும் ஸோனி, தோஷிபா, நோக்கியா, டெல் போன்ற முத்திரைகளுடன் வெளிவருவதும் வாசகர்கள் பலருக்கும் தெறிந்திருக்கும். சிவகாசியில் சோப்பு, பற்ப்சை, ஷாம்பூ பல வருடங்களாக போலி லச்சினையோடு விற்பனையாவதும் மறத்தமிழர்கள் அறிந்ததே! கார்களை பற்றிய செய்தி அதிர்ச்சியாக இருக்கலாம்.

இந்த வரிசையில், ஜேம்ஸ் பாண்ட் பிரபலமான ஆஸ்டன் மார்ட்டின் என்ற ப்ரிட்டிஷ் வெட்டி அளப்பரைக் கார் – இன்னும் மவுசு குறையாமல்  கொடிகட்டி பறக்கிறது. கார் உற்பத்தி துறையில் இங்கிலாந்து சரிந்து விட்டாலும், பல கார் கம்பெனிகள் அங்கு இன்றும் உள்ளன. ஆனால் ஆஸ்டன் மார்ட்டின் காரின் “ஸிக்நெட்” வகை கார், அந்த லச்சினை பதித்த டொயோடா கார் தான் என்ற செய்தி, ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வந்துள்ளது. டொயோடா லச்சினைக்கு 17000 டாலர், ஆஸ்டன் மார்ட்டின் ஸிக்நெட்லச்சினைக்கு 45000 டாலர்!!! எந்த மடையன் ஒரு லச்சினைக்கு 30000 டாலர் தருவான்? ஒன்று, அறியா மடையன், இல்லையேல் அந்தஸ்துக்கு அலையும் மடையன். 

மற்ற கார்களை பற்றியும் அங்கு படிக்கலாம்.

பின்குறிப்பு: எழுத்து, இலக்கணத் திருத்தங்களுக்கு, நண்பர் குகனுக்கு என் நன்றி.

Friday, 5 July 2013

செல்வத்துள் செல்வம்

செல்வத்துள் செல்வம் கரிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.