கடந்த
13 ஆண்டுகளில், உலகெங்கும், மலேரியா நோயால் இறந்தவர் எண்ணிக்கை 29% குறைந்துள்ளது.
எனினும், 2012இல் 6,27,000 நபர்கள் மலேரியாவிற்கு பலியானர். பத்து வருடத்தில் இராக்
இலங்கை ஆஃப்கானிஸ்தான் காங்கோ போர்களிலோ, ஆழிப்பேரலை நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளில்
இறந்தவரை விட, மலேரியாவின் மரண எண்ணிக்கை அதிகமானது.
போலியோ
ஓரிரு நாடுகளை தவிர அழிந்துவிட்டது. கினிப்புழூவின் தாக்கம் முடிவுக்கு வரப்போகிறது.
எய்ட்ஸ் நோயினால் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 52% குறைந்துள்ளது. காசநோய் (டுபர்குலாஸில்)
மரணங்கள் 45% குறைந்துள்ளன.
2000
ஆண்டு தொடங்கி நீங்கள் முழுகம் கெட்ட செய்திகளை – தீவீரவாதம், விலைவாசி உயர்வு, ஊழல்,
வல்லரசு படுகொலைகள், திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு – அனைத்தையும் சேர்த்தாலும், அத்தொகையை
மிஞ்சும் நல்ல செய்தி இந்த நோய்கள் பின்வாங்கும் செய்தி.
சூழ்நிலையை
கவனிக்கவும்.
- ஜனத்தொகை பெருகினாலும்
- ஜனநாயகமா சர்வாதிகாரமா இரண்டாங்கெட்டானா, பேதமின்றி
- சாதி மத இன ஆண்பெண் பேதமின்றி
இந்த
நல்ல முன்னேற்றம் வெற்றி நடை போடுகிறது. நான் மிகவும் ரசிக்கும் மதிக்கும் உவக்கும்
புகழும் மேட் ரிட்லி-யின் ஆங்கில கட்டுரை இங்கே.
ஒரு
நாளிதழோ, அரசாங்கமோ, கட்சியோ, ஊடகமோ [கலைஞனோ, புலவனோ, புனிதனோ, எழுத்தாளனோ] இவ்வித
நல்லச்செய்தியை கூவி பறையடிக்க மாட்டாது. நீட்டோலை வாசியா நிற்பர்.
தொடரட்டும்
அவர்களின் ஓயாத ஒப்பாரி.
No comments:
Post a Comment