Showing posts with label disease. Show all posts
Showing posts with label disease. Show all posts

Wednesday, 18 March 2020

பாட்டியை மூஞ்சில் குத்து



ஹான்ஸ் ரோஸ்லிங் (Hans Rosling) எனும் பொருளியல் வல்லுனர் எழுதிய ஃபாக்ட்ஃபுல்நஸ் Factfulness (செழுந்தகவல்) நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். கற்றோரும், சான்றோரும், பொருளியல் வல்லுனரும், பலநாட்டு தலைவர்களும், ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும், இன்றைய உலகை எவ்வளவு தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்று பக்கம்பக்கமாக விவரிக்கிறார். 

வளர்ந்தநாடு வளரும்நாடு எனும் இருவகை பிரிவு 1940களில் உருவாகியது. அந்த நிலமை மாறி நாற்பது வருடங்களாகிவிட்டன. இன்று உலக நாடுகளை செல்வத்தாலும் வளர்ச்சியாலும் மக்கள் நலத்தாலும் நான்கு வகையாய் –இரண்டு வகையாக அல்ல - பிரிக்கவேண்டும் என்று 1999 முதல் உலகின் பல அரங்குகளில் சொல்லி வருகிறார். நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் நாட்டின் கரோலின்ஸ்கா கல்லூரிக்கே இதை புரியவைக்க அவருக்கு பல வருடங்கள் ஆனது.

நூலின் ஒன்பதாம் அத்தியாயத்தில், ஒர் சம்பவம் சொல்கிறார். இந்த அத்தியாயத்தின் பெயர் “பழி வீசும் இயல்பு”.

என் மொழியாக்கம் கீழே.

பழி வீசும் இயல்பு

நான் கரோலின்ஸ்கா கல்லூரியில் பந்நாட்டு மருந்து கம்பெனிகளை பற்றி பாடம் நடத்தி கொண்டிருந்தேன். வறுமையான நாடுகளில் மட்டும் நிலவும் மலேரியா, உறக்கநோய் போன்ற நோய்களை ஒழிக்க, பணக்கார பந்நாட்டு கம்பெனிகளில்  ஆராய்ச்சி ஏதும் நடத்துவதில்லை என்று விளக்கினேன்.

முன் வரிசையிலுள்ள ஒரு மாணவன், “அவர்களை மூஞ்சிலேயே குத்தவேண்டும்” என்றான்.

“ஆகா”, என்றேன். “சில நாட்களில் நான் சுவிட்சர்லாண்டிலுள்ள நோவார்டிஸ் எனும் கம்பெனிக்கு உரையாற்ற செல்வேன். யாரை குத்த வேண்டும், குத்தி என்ன சாதிப்பேன் என்று விளக்கினால், நான் போய் குத்திவிட்டு வருகிறேன்.”

“இல்லை, இல்லை. அவர்கள் முதலாளியை குத்தவேண்டும்.”

“சரி. கம்பெனி முதலாளி டேனியல் வசெல்லா. அவரை சந்திப்பேன். அவரை மூஞ்சில் குத்தவா? குத்தியதனால் மலேரியா ஆராய்ச்சி தொடங்க ஆணையிடுவாரா?”

பின்னிருக்கையிலிருந்து வேறொரு மாணவன் வாய்மலர்ந்தான். “கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் அனைவரையும், மூஞ்சில் குத்தவேண்டும்.”

“நிச்சயம் செய்யலாம். அன்று மதியம் நிர்வாக இயக்குனர்கள் சிலரை சந்திப்பேன். காலையில் டேனியல் தப்பித்தார். மதியம் ஒரு ரவுண்டு கட்டி மற்றவரை சுழட்டி சுழட்டி மூஞ்சில் குத்துகிறேன். அனைவரையும் குத்தும் வரை என் கூந்தலில் தேங்காய் எண்ணெய் தடவாதிருப்பேன், ரிப்பன் போடமாட்டேன், அன்னை பராசக்தி மேல் ஆணை. ஆனால் நான் வயதானவன், மல்லனோ சண்டியனோ அல்ல, நாலைந்து நபரை குத்தியபின் அங்குள்ள காவலர்கள் என்னை பின்னி பெடலெடுக்கலாம். சரி இதனால் என்ன மாறும்? நான் குத்தியதால், தான் செய்த பாவம் அறிந்து, சித்தம் தெளிந்து, சிந்தை குளிர்ந்து, மெய்ஞானம் பெற்ற கம்பெனி இயக்குனர்கள் மலேரிய ஆய்வை மேற்கொள்வாரா?”

“இல்லை இல்லை, நோவார்ட்டிஸ் ஒரு தனியார் கம்பெனியல்ல. பங்கு சந்தையில் அந்த கம்பெனி பங்குகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். பங்காளிகள் தான் அந்த கம்பெனியின் உண்மை முதலாளிகள்,” என்றான் ஒளிபடைத்த கண்ணனாம் மூன்றாம் மாணவன்.

“பலே பாண்டியா! சரியாக சொன்னாய். இந்த கம்பெனியின் பங்குதார்ரகளே மலேரிய ஆராய்ச்சியை விரும்பாமல் செல்வந்தர் நோய் மட்டுமே தீர்த்து பணம் சம்பாதிப்பதில் குறியாய் வெறியாய் நரியாய் அரியாய் உள்ளனர். யாரிந்த குறி வெறி நரிகள்?” என்றேன்.

“பணக்காரர்கள்.” என்றான் முன் வரிசை மைக் டைசன்.

“அது தானில்லை. மருந்து கம்பெனிகளின் வருமானம் கச்சா எண்ணெய் கம்பெனிகளின் வருமானம் போல வளர்ந்தும் தேய்ந்தும் ஊஞ்சலாடா. வருடாவருடம் பெரிதாக ஏறியிறங்காமல் நம்பகமாக லாபம் பெற்று, துல்லியமாக பங்குதாரர்களுக்கு பங்கு தருகின்றன. அதனால் இவற்றில் முதலீடு போடுவதும் சில நிதி நிறுவனங்களே. பங்குகளை வாங்கி பல வருடங்கள் விற்காமல் தக்கவைத்து கொள்ளும். அவை யார் யார் என்று தெரியுமா?” என்று கேட்டேன்.

மாணவர்களுக்கு இந்த பங்கு சந்தை விவரம் தெரிந்திருக்கவில்லை. சுட்ட நாவல் பழத்தை கேட்ட அவ்வையை போல் என்னை ஆவலுடன் நோக்கினர்.

“ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் (Retirement funds)” என்றேன். மயான நிசப்தம்.

“அந்த மாதிரி நிதி நிறுவனங்களில் பங்கு வாங்கியுள்ள வயோதிகரை நான் சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால் நீங்கள் உங்கள் பாட்டியை வாராவாரம் சந்திப்பவராக இருந்தால் இந்த வாரம் உங்க பாட்டி மூஞ்சில் குத்தலாம். சுயநலாமாக தங்களுக்கு மாதாந்திர வருமானம் ஆடாமல் அசையாமல் அள்ளி வரவேண்டும் எனும் ஆர்வத்தில், பணக்காரர்களின் நோய்களுக்கு மட்டும் மருந்து தேடும் ஆராய்ச்சி கம்பெனிகளின் உண்மை முதலாளிகள் அவர்களே.

“மேலும். சமீபத்தில் நீங்கள் ஊர்சுற்றவோ விழா கொண்டாடவோ உங்களுக்கு உங்கள் பாட்டி ஏதேனும் அன்பளிப்பாக கொஞ்சம் பணம் குடுத்திருந்தால் உங்கள மூஞ்சையும் கொஞ்சம் குத்திக்கலாம்.”

மொழியாக்கம் முற்றும்.

என் குறிப்பு : ஓய்வுபெற்றவர்களின் நிதிகளை கையாண்டு, மாதாமாத ஓய்வு வருமானத்தை தவிற, கொஞ்சம் பங்கு சந்தையில் போட்டால் நல்ல வருமானம் கிடைக்கலாம் என்பதால் சில நிறுவனங்கள் அவர்கள் உபரி செல்வத்தில் இந்த மாதிரி கம்பெனிகளில் பங்கு வாங்கி, வருடத்திற்கு மூன்று நான்கு முறை அவர்களுக்கு பணம்பெற்று தருகின்றன.

ஹான்ஸ் ரோஸ்லிங் பேசும் வீடியோ காட்சி

Tuesday, 7 February 2017

1493 - The Columbian Exchange

Charles C Mann spoke about his book 1493, at the MS Swaminathan Research Foundation on 9 December, 2016. These are my notes from that lecture.
----

There was once a geological era, about 300 million years ago, when all the continents of the Earth were united into a single supercontinent, called Pangaea. Later this continent split up, forming the continents we have today, primarily separating into two large land masses – the Americas on one side and Eurasia and Africa on the other side, separated by the Atlantic ocean one way and the Pacific the other. These two oceans passed huge species barriers. When Columbus sailed from Spain to the Carribean, in 1492, he effectively recreated (or reunited) Pangaea – his ships and its successors bridged the Atlantic, thus providing for a massive biologcal exchange.  Animals, plants and germs from Eurasia traveled into Americas. Alfred Crosby coined term Columbian exchange to describe this.

No domesticated animals like cattle sheep goats chicken horses or their equivalents existed in the Americas, in 1492. This triggered a massive epidemiological imbalance – the native epidemic diseases of Europe were more numerous and more deadly than those of the Americas, and caused a massive genocide of Native Americans, i.e. Red Indians, who had no immunity to European diseases.

The Cold Snap in Europe from 1550s to 1750s, was followed by Dutch paintings of children skating on iced over rivers in April. These rivers have not iced up in the recent two centuries. The massive death of people in the Americas, meant they stopped cutting trees to burn them, so forests grew back and sucked out so much Carbon dioxide from the atmosphere, that they caused the Cold Snap, a mini Ice Age. (This is usually not mentioned in newspaper reports about Global Warming).

Europe was poor while China India and Ottomans were rich, until Silver was discovered in South America by Spaniards, mostly in Peru. In fact they discovered a hills of silver.This trebled the world supply of silver. Europe could now buy Asian goods with their silver.

Wheat went from Europe to the Americas and potatoes and chilis from the Americas to Europe. Mann shows photographs of wheat farms, then says, he talked to a group in New York and had to explain that this was wheat - they've never seen farms or wheat plants!

Mann then showed photos of the several varieties of potatoes that are sold in the Andes, to which they are native. He couldn’t believe they were all potato varieties! Neither can we! Ridge and furrows system of ploughing, with snow in furrows suitable for potatoes. Europe and eastern USA are more suitable for potatoes than Andes.  This caused a food revolution - Europe could feed itself, for the first time ever.
 
Potato varieties in the Andes!
Suddenly Europe had more stable governments, since there were no hungry mobs. Potato was the fuel of European empires, said Mann. We don’t usually consider the political implications of vegetables; its not something that seems to interest historians.

In the 1840s,  Europeans discovered islands off the coast of Peru with 200 feet of guano (bat and bird dung), which had very high nitrogen content, and were extremely popular as fertilizer. These mounds of guano were mined by Chinese slaves –this was the beginning of a European green revolution.

Potato blight killed million people in 1845, then another million in 1846. Ireland was worst affected. This was the last major famine before the invention of photography.

Indian culinary history is not as well developed as it should be given its culinary greatness. Gujarati traders probably brought in some crops from Africa, not just Portuguese.

China is a country that has to grow rice with almost no flat land and very little water. China has only only 7% of world's fresh water, but grows water hungry crops anyway! Maize is grown all over western China in terraced hills - this began only in the 18th century and is very much an ecological disaster!!!

China was still trying to recover from the introduction of American crops in 1850s. India was politically fragmented, so such crop adoption was not uniform. But everything was and is done top down in China, so a bad political decision can have an impact that lasts quite long.

Malaria was gifted to Americas via the Columbian exchange. Plasmodium, the germ that causes malaria, can hide in liver or spleen of healthy human for years and then suddenly resurge. It hides in red blood cells where immune system cant detect it and spreads all over body.

Central and West Africans have more immunity against Falciparum than any other people. Also against yellow fever. Falciparum thrives in tropics, can't handle temperate zones. During the Colonial era, there was a Parliamentary enquiry in Lodon- why British soldiers died in African territories (but not so much in the Americas)? The answer was lack of genetic immunity against African diseases.

Adam Smith asked why slavery existed? Indentured workers were quite common in Europe until slavery was introduced, which wiped out Indentured Labor. Mann posits that Malarial Immunity helped growth of slavery - living slaves were better than dead indentured workers, and since Africans who had the genes to resist malaria outlasted the white and native American population who had almost no immunity against these diseases, germs and genes played a major role in the continuance of slavery.
 
MS Swaminathan and Charles C Mann at the MSSRF
Dr MS Swaminathan added that most Indian food crops like rice wheat mango are not of Indian origin. Globalization of natural resources and husbandry can be quite beneficial for everyone, not just create a system of winners and losers. He congratulated Charles Mann for an excellent speech and excellent pictures, and the wonderful book 1493.

Gopu’s Notes
1. The theory of Tectonic plates and Pangaea are recent developments in Geology
2. Alfred Russel Wallace discovered a species barrier with no seeming geographic logic, in the islands of Indonesia. This is now called the Wallace line.
3. The discovery of guano islands off Peru is a major part of Thomas Hager’s book The Alchemy of Air, which then goes on to describe the Haber Bosch process for producing  artificial nitrogen fertilizer.
4. Jared Diamond’s book Guns, Germs and Steel examines the inequal epidmeological consequences of one aspect of the Columbian exchange and its ultimate causes. I strongly recommend this book.
5. Carbon dioxide and global warming are the reason why Life (and clouds) exists on earth – as opposed to the barrenness of Mars.
6. On the positive side, Mankind is winning the war against diseases. Almost all diseases are on the retreat. This is wonderful news, which doesn't sell magazines or ads, so it won't make it to headlines or public knowledge.
7. Mann's malarial hypothesis of slavery is quite original. But history may be a bit more complicated than that. Indian indentured labor became quite popular when slavery was finally abolished in the British Empire and its colonies, before abolition in the USA. Slavery was not entirely about farm labour, either.
8. This essay (in Tamil) explains how Egypt utilizes water for agriculture. And perhaps has lessons for India.
9. Dr MS Swaminathan was instrumental in furthering the green revolution brought about by  Norman Borlaug.

News links
1.     The Hindu’s report on this lecture
2.     New York times review of this book 1493

Monday, 12 May 2014

இன்சுலின் நாயகி டோரோதி ஹாட்ஜ்கின்

English version of this essay here

கூகுளின் மூக்கூறு புள்ளிவரைபடம்
இன்று காலை குரோம் பிரௌஸரை திறந்தேன். கூகுளின் மூக்கூறு புள்ளிவரைபடம் கண்டேன். க்ளிக்கினால், டோரோதி ஹாட்ஜ்கினை பற்றிய சுட்டிகள். இன்று மே மாதம் பன்னிரெண்டாம் நாள், அவரது பிறந்தநாள். “இன்சுலினின் மூலக்கூறு வடிவத்தை ஆய்ந்து உணர்த்தியவர்,” என்றது விக்கீப்பீடியா. ஃப்ரெட் ஸாங்கர் அல்லவோ இன்சுலினின் வடிவத்தை ஆய்ந்தார்? அஞ்சலி எழுதினோமே? மேலும் தகவல்: “வைட்டமின் பி-12 மூலக்கூறு வடிவம் ஆய்ந்துரைத்ததற்கு, டோரோதி ஹாட்ஜ்கின் ரசாயன நோபல் பரிசு பெற்றார்.” கல்லாதது டோரோத்தி அளவு. என்னே ஒரு சாதனையாளர். கேள்விப்ட்டதே இல்லை.

ஸாங்கரின் பணியிலிருந்து எப்படி இவர் ஆய்வு மாறுபட்டது? தேடினேன். வெல்கம் கம்பெனி வளைத்தளத்தில் விவரம் கிடைத்தது. இன்சுலினின் அமினோ அமில வடிவத்தை ஸாங்கரும், மூலக்கூறு வடிவத்தை ஹாட்ஜ்கின்னும் தலா ஆய்ந்தனர்.

இன்சுலினின் அமினோ அமில வடிவம்

கூகுளுகு நன்றி, பாராட்டு. டோரோத்தி ஹாட்ஜ்கின்னுக்கு நன்றி, வணக்கம்: என் தந்தை உட்பட, சக்கரை நோயினால் தாக்கப்பட்டவர் கோடி. எண்பது ஆண்டுகளுக்கும் முன் மருந்தின்றி 30. 40 வயதில் தவித்து துடித்து செத்திருப்பார்கள். இன்சுலின் கண்டுபிடிப்பால் வாழ்ந்தவர் கோடி; இவர்களின் அறிவியல் ஆய்வினால், கொங்குதேர் வாழ்க்கை வாழ்ந்தனர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர், டோரோத்தி ஹாட்ஜ்கின்.

Sunday, 6 April 2014

தோற்று பின்வாங்கும் நோய்கள்

கடந்த 13 ஆண்டுகளில், உலகெங்கும், மலேரியா நோயால் இறந்தவர் எண்ணிக்கை 29% குறைந்துள்ளது. எனினும், 2012இல் 6,27,000 நபர்கள் மலேரியாவிற்கு பலியானர். பத்து வருடத்தில் இராக் இலங்கை ஆஃப்கானிஸ்தான் காங்கோ போர்களிலோ, ஆழிப்பேரலை நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளில் இறந்தவரை விட, மலேரியாவின் மரண எண்ணிக்கை அதிகமானது.

போலியோ ஓரிரு நாடுகளை தவிர அழிந்துவிட்டது. கினிப்புழூவின் தாக்கம் முடிவுக்கு வரப்போகிறது. எய்ட்ஸ் நோயினால் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 52% குறைந்துள்ளது. காசநோய் (டுபர்குலாஸில்) மரணங்கள் 45% குறைந்துள்ளன.
2000 ஆண்டு தொடங்கி நீங்கள் முழுகம் கெட்ட செய்திகளை – தீவீரவாதம், விலைவாசி உயர்வு, ஊழல், வல்லரசு படுகொலைகள், திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு – அனைத்தையும் சேர்த்தாலும், அத்தொகையை மிஞ்சும் நல்ல செய்தி இந்த நோய்கள் பின்வாங்கும் செய்தி.

சூழ்நிலையை கவனிக்கவும்.
  1. ஜனத்தொகை பெருகினாலும்
  2. ஜனநாயகமா சர்வாதிகாரமா இரண்டாங்கெட்டானா, பேதமின்றி
  3. சாதி மத இன ஆண்பெண் பேதமின்றி

           இந்த நல்ல முன்னேற்றம் வெற்றி நடை போடுகிறது. நான் மிகவும் ரசிக்கும் மதிக்கும் உவக்கும் புகழும் மேட் ரிட்லி-யின் ஆங்கில கட்டுரை இங்கே.

ஒரு நாளிதழோ, அரசாங்கமோ, கட்சியோ, ஊடகமோ [கலைஞனோ, புலவனோ, புனிதனோ, எழுத்தாளனோ] இவ்வித நல்லச்செய்தியை கூவி பறையடிக்க மாட்டாது. நீட்டோலை வாசியா நிற்பர்.

தொடரட்டும் அவர்களின் ஓயாத ஒப்பாரி.


Friday, 21 March 2014

Retreating Diseases

Malaria is down by 29 percent. since 2000. But 627000 people still died of it in 2012.  That is probably more than in 10 years of Iraq or Afghanistan wars, Congo Sudan or Sri Lanka conflict or any tsunami or earthquake. Polio has almost been conquered, guinea worm is almost extinct.  Children dying of AIDS is down 52 percent, mortality from Tuberculosis down 45 percent. This is more good news than ALL the bad news you have been drowning in since 2000, everyday, TOTALLED UP.

But if you want to be a pessimist, please keep worrying and infect your friends with the negativism. No government will ever tax that. And feel free to criticize me for being a stupid rational optimist and Matt Ridley for being a failed or fraudulent banker.


Ridley's article is here.

http://www.rationaloptimist.com/blog/the-good-news-you-don't-hear-about-diseases.aspx

Note that this is happening

1. In spite of population increasing
2. Regardless of form of government - democracy or dictatorship, benevolent or otherwise
3. ....or religion or race or gender of people