Monday, 12 May 2014

இன்சுலின் நாயகி டோரோதி ஹாட்ஜ்கின்

English version of this essay here

கூகுளின் மூக்கூறு புள்ளிவரைபடம்
இன்று காலை குரோம் பிரௌஸரை திறந்தேன். கூகுளின் மூக்கூறு புள்ளிவரைபடம் கண்டேன். க்ளிக்கினால், டோரோதி ஹாட்ஜ்கினை பற்றிய சுட்டிகள். இன்று மே மாதம் பன்னிரெண்டாம் நாள், அவரது பிறந்தநாள். “இன்சுலினின் மூலக்கூறு வடிவத்தை ஆய்ந்து உணர்த்தியவர்,” என்றது விக்கீப்பீடியா. ஃப்ரெட் ஸாங்கர் அல்லவோ இன்சுலினின் வடிவத்தை ஆய்ந்தார்? அஞ்சலி எழுதினோமே? மேலும் தகவல்: “வைட்டமின் பி-12 மூலக்கூறு வடிவம் ஆய்ந்துரைத்ததற்கு, டோரோதி ஹாட்ஜ்கின் ரசாயன நோபல் பரிசு பெற்றார்.” கல்லாதது டோரோத்தி அளவு. என்னே ஒரு சாதனையாளர். கேள்விப்ட்டதே இல்லை.

ஸாங்கரின் பணியிலிருந்து எப்படி இவர் ஆய்வு மாறுபட்டது? தேடினேன். வெல்கம் கம்பெனி வளைத்தளத்தில் விவரம் கிடைத்தது. இன்சுலினின் அமினோ அமில வடிவத்தை ஸாங்கரும், மூலக்கூறு வடிவத்தை ஹாட்ஜ்கின்னும் தலா ஆய்ந்தனர்.

இன்சுலினின் அமினோ அமில வடிவம்

கூகுளுகு நன்றி, பாராட்டு. டோரோத்தி ஹாட்ஜ்கின்னுக்கு நன்றி, வணக்கம்: என் தந்தை உட்பட, சக்கரை நோயினால் தாக்கப்பட்டவர் கோடி. எண்பது ஆண்டுகளுக்கும் முன் மருந்தின்றி 30. 40 வயதில் தவித்து துடித்து செத்திருப்பார்கள். இன்சுலின் கண்டுபிடிப்பால் வாழ்ந்தவர் கோடி; இவர்களின் அறிவியல் ஆய்வினால், கொங்குதேர் வாழ்க்கை வாழ்ந்தனர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர், டோரோத்தி ஹாட்ஜ்கின்.

2 comments:

  1. அருமையான பதிவு, கோபு. டோரோதி ஹாட்ஜ்கின்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    கூகிள் மட்டும் இந்தியக் கம்பெனியாக இருந்திருந்தால் பல அரசியல் தலைவர்கள் மற்றும் 'பெரும் புள்ளி'களின் பிறந்தநாள் அன்றும், இறந்த நாள் அன்றும் மூலக்கூறு புள்ளிவரைபடம் போட்டிருப்பார்கள். நல்ல வேளை !

    - Kishore Mahadevan

    ReplyDelete
  2. ரசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி, கிஷோர். எனக்கே அன்று தான் டோரோதி ஹாட்ஜ்கின் அறிமுகம்.

    தலைவர்களுக்கு என்ன புள்ளிவரைபடம் போட்டிருக்க முடியும்? கற்பனை குதிரையை இப்படி கிளப்பிவிட்டீர். எந்த தலைவர் கார்பன் டையாக்ஸைட், எவர் க்ளோரோஃபார்ம், எவர் ரேடியம் என்று எண்ணம் போகிறது

    ReplyDelete