ஆங்கில
ஜார்ஜ் மன்னனுக்கு, பன்மொழி பண்டிதர் ஆங்கிலேயன் சென்னைப்பட்டணத்து எல்லீசனின் கல்வெட்டு
கவிதையை சிலர் ரசித்திருக்கலாம். முகலாய மன்னன் ஷா ஜஹான் கட்டிய தாஜ் மகாலுக்கு, ரவீந்திர
நாத் தாகூர் எழுதிய கவிதை சிலருக்கு தெரிந்திருக்கும். இங்கே ஆங்கிலேயர் கட்டிய சென்னை
உயர்நீதிமன்றத்து கட்ட்டத்திற்கு ஒரு தமிழ் புலவர் எழுதிய கவிதையாய் பார்ப்போம்.
அதற்கு
இன்றளவும் மதறாஸ் ஹைகோர்ட் (Madras High Court) என்றே பெயர் நிலவி வருகிறது. முதன் முதலில் ஜார்ஜ் கோட்டை
வளாகத்திலேயே செயல்பட்ட நீதிமன்றம், மதறாஸ் உச்சநீதிமன்றம் (Supreme Court of Madras) என்ற பெயரில் தொடங்கபட்டது.
1862இல் உயர்நீதிமன்றமாக மாற்றப்பட்டது. 1857இல் சிப்பாய் புரட்சிக்கு பின், கிழக்கிந்திய
கும்பெனியின் அதிகாரத்திலிருந்து ஆங்கிலேய அரசின் அதிகாரத்திற்கு மதறாஸ் மாகாணம் கைமாறியதும்,
இதற்கு ஒரு காரணம். பத்தொன்பதாம் நூற்றாண்டில், கோட்டைக்கு வெளியே தனி மண்டபம் பெற்றது.
அவ்விடத்தில் சட்ட கல்லூரியும் நிறுவப்பட்டது. இவை இரண்டும் அவ்விடத்தில் கட்டுமுன்,
அங்கே சென்னக்கேசவ பெருமாளுக்கு ஒரு கோயில் இருந்தது. இந்த கோயிலின் பெயரே, சென்னைப்பட்டணத்தின்
பெயர் பிறந்த காரணம் என்று நம்புவோருண்டு. ஒரு காலத்தில் சென்னகேசவ பெருமாள் கோயில்
இடிக்கப்பட்டு, பின்னர் அந்த கோயில் பூக்கடை அருகே, இன்றுள்ள இடத்தில் கட்ட, கும்பெனியார்
பணம்குடுத்தனர்.
மாதாமாதம்,
இண்டாச் (INTACH)
என்ற வரலாற்றார்வலர் குழு, ஒரு உயர்நீதிமன்ற வரலாற்று உலா நடத்துகிறது. சென்னையின்
பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க தொடங்கிய இக்குழுவின் சார்பில், கட்டடகலைஞர் திருமதி
தாரா முரளியும், வழக்கறிஞர் என்.எல்.ராஜாவும் நடத்திய ஒரு மாதாந்திர உலாவில், சென்ற
2014 ஜூலை மாதம் நானும் கலந்துகொண்டேன். நீதிமன்ற வளாகத்தில், முன்னாள் நீதிபதி பாஷ்யம்
ஐயங்காருக்கு ஒரு சிலை உள்ளது. அச்சிலைக்கெதிரே, உயர்நீதிமன்றத்தின் அருங்காட்சியகம்
உள்ளது. அங்கே சென்னை ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து என்ற நூல் உள்ளது.
பாஷ்யம் சிலைக்கு முன் வழக்கறிஞர் ராஜா |
உயர்நீதிமன்றம், பிறகாலத்தில் சூட்டப்பட்ட பெயர். அக்காலத்தில், ஐகோர்ட் என்றே தமிழில் வழங்கப்பட்டது. ஓர் கட்டடத்தை புகழ்ந்தோ நீதிமன்றத்தை புகழ்ந்தோ பாடல் ஏன் இயற்றவேண்டும்? அதுவும் தமிழில்? மரபுக்கவிதையில் எழுதிய பாடல் யாரைப்போய் சேரும்? இயற்றிய புலவர் யார்? கோட்டைக்கும் இப்படி ஏதேனும் பாடல்கள் உண்டோ? மாமல்லபுரத்து அற்புதங்களுக்கே தமிழில் இவ்வகை அற்புத பாடல்கள் இல்லையே! (எனக்கு தெரிந்து)
High Court poem ஐகோர்ட்டின்
அலங்கார சிந்து |
சரி
பாடலை பார்ப்போம். நேரிசை வெண்பாவில் விநாயக துதியுடன் தொடங்குகிறது இச்சிந்து.
விநாயகர் துதி
அன்னை
வயலாந்திருசூழ்ந் தகிலமெலாம்பேரோங்கும்
சென்னையென்னுமின்னகரில்
சிறப்புரவே – உன்னிதமாம்
ஐகோர்ட்டின்கட்டடத்தை
அகிலமிசைபாடுதற்கு
கையைந்துடையகணன்
காப்பு.
Translation: That this song of the
noble High Court building, ennobling the city of Chennai, surrounded by paddy
fields and praised around the world, may be sung by all people, I invoke the
blessing of the FiveHanded Gana (i.e. Ganapathy).
இதன்பின்
–
ஓரடித்தங்கசிந்து
சீரோங்கும்
சென்னைதனில் சிறப்புடனேயமைந்த பேரோங்கும் ஐகோர்ட்டின் பிரபலமாம்கட்டடத்தை பாரெங்கும்மிபுகழைபாடு
தர்க்குமுன் கடவுள்
க(?)றானை
மாமுகனே ஐங்கரா-கடவுளே துணையிரையா.
Translation O Five-handed Elephant
Faced God, protect us, as we sing for the world, to praise this famous High
Court building, so well built in prosperous Chennai
சீமையெழுகடலும்
சிறப்புற்று தான்வாழும் அன்னைகுயின்விக்ட்டோரியாள் அரசின்மனம்போலே முன்னும் சீஸாலன்
துரைமுடித்தபிளான்வேலை பார்த்துமனமகிழ்ந்து பார்லிமெண்டுதுரைகள்கட்டுதர்க்கு நல்லயிடம்
கடலின்கரையோரம் கோட்டைக்கடுத்தயிடம் கூண்டுவிளக்கருகில் சித்திரம்போல் ஐகோர்ட்டை செய்துமுடித்தார்கள்யிப்பெருங்கட்டடங்கள்
யெவ்வுலகில் கண்டதில்லை முந்தியுகமாண்ட முடிமன்ன ராஜர்களும்..
Translation: By the grace of Mother
Queen Victoria, famous across the Seven Seas, the Members of Parliament being
delighted on seeing the building plans designed by Lord Seesalan (Chisholm), of
good location, along the sea, besides the fort, near the lighthouse; like
paintings, built large premises the likes of which the world hasn’t seen, not
even the kings of yore or the sculptors…
சீஸாலன்
என்பது ராபர்ட் சிஸோல்ம் (Robert Chisholm) எனும் கட்டட கலைஞரை குறிப்பதாக, ஸ்ரீராம்
வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அது புலவரின் தவறான கருத்து என்றும், ஐகோர்ட்டின்
வடிவத்தை பிராசிங்டன், வகுத்தார் என்றும், அக்காலத்திற்கு முன்பே சிஸோல்ம் இந்தியாவை
விட்டு லண்டன் சென்றுவிட்டார் என்றும், ஸ்ரீராம் கருதுகிறார். மேலும், இந்த அலங்கார
சிந்து நூலை ஒரு நீதிபதியிடம் தானே தானமாக கொடுத்ததாகவும், அவர் ஃபேஸ்புக்கில் (முகநூலில்)
குறிப்பிட்டுள்ளார். அவரது தானத்திற்கு நன்றி. சென்னையிலுள்ள பல்கலைகழக செனேட் கட்டடம்,
மத்திய ரயில் நிலையம், மத்திய தபால் நிலையம் போன்ற பல கட்டடங்களை சீஸால்ம் வடிவமைத்தார்.
இண்டோ-சாரசெனிக் (Indo Saracenic) என்ற கட்டட கலைக்கு முன்னோடி சிஸோல்ம் என்பது குறிப்பிடத்தக்கது.
கூண்டுவிளக்கு
என்பது ஐகோர்ட் வளாகத்தில் உள்ள கருங்கல் கலங்கரை விளக்கமாகும். இந்த கருங்கல் தூண்,
இந்தியாவை அளக்கும் திரிகோண நிலஅளவைதிட்டத்தின் (Great
Trigonometrical Survey)
ஒரு அடிக்கல்லாகவும் திகழ்ந்தது. அதை குறிக்கும் கல்வெட்டும் அதன் அடித்தளத்தில் உள்ளது.
ஆங்கிலேயர், கப்பல்களுக்கு எச்சரிக்கையாக விளங்க, முதலில் கோட்டைக்குள் ஒரு கூண்டுவிளக்கை
கட்டினர். பின்னர் இந்த கருங்கல் கூண்டுவிளக்கை கட்டினர். அதற்கு பின்னரே, ஐகோர்ட்டிற்கு
தனி கட்டட திட்டம் வகுத்தனர். அதோடு, ஐகோர்ட்டின் மிக உயர்ந்த மத்திய விமானம், மூன்றாம்
கலங்கரை விளக்கமாக செயல்பட்டது. இவை, மின்சார விளக்கிற்கு முந்தைய காலத்தவை; தீப்பந்தங்கள்.
மேலும்,
ஐகோர்ட்டின் அலங்கார சிந்து கீழ்வருமாறு தொடர்கிறது.
ஆநந்தகளிப்பு
பல்லவி
பட்டணம்
ஐகொர்ட்டை பாரும் யிந்த
பாரினிலிதற்கிணை
யெதைசொல்லப்போகும்
அநுபல்லவி
கட்டடம்மதிகவிஸ்தாரம்
– யதில்
கலசம்யிருக்கின்ற
வேலைகள்ஜொரும்
அட்டதிசையெல்லாம்
கோரும் – நல்ல
அழகாய்யமைந்திட்ட
அதிசயம்பாரும்
I don’t think these require any translation.
ஆநந்தகளிப்பு
|
கூண்டுவிளக்கு |
Related Essays
ஜார்ஜ் மன்னன் மெய்கீர்த்தி
போர்காலத்தில் சென்னை - இரண்டாம் உலகப்போர்
Sriram Venkatakrishnan on Madras High CourtA Hungarian mathematician's Poem about Madras
The Cooum : A Cultural Mapping - Facebook group
Madras - India's First modern city
An Evening with John and Pamela Davis
சென்னை சைனா மதறாஸ் மதறாஸா?
Thanks for the post and translation. Many articles in history has passed unnoticed. Thank god I was able to enjoy this one.
ReplyDeleteGlad you enjoyed it
ReplyDelete