Showing posts with label கட்டட கலை. Show all posts
Showing posts with label கட்டட கலை. Show all posts

Thursday, 15 October 2015

ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து - கட்டட கவிதை


ஆங்கில ஜார்ஜ் மன்னனுக்கு, பன்மொழி பண்டிதர் ஆங்கிலேயன் சென்னைப்பட்டணத்து எல்லீசனின் கல்வெட்டு கவிதையை சிலர் ரசித்திருக்கலாம். முகலாய மன்னன் ஷா ஜஹான் கட்டிய தாஜ் மகாலுக்கு, ரவீந்திர நாத் தாகூர் எழுதிய கவிதை சிலருக்கு தெரிந்திருக்கும். இங்கே ஆங்கிலேயர் கட்டிய சென்னை உயர்நீதிமன்றத்து கட்ட்டத்திற்கு ஒரு தமிழ் புலவர் எழுதிய கவிதையாய் பார்ப்போம்.

அதற்கு இன்றளவும் மதறாஸ் ஹைகோர்ட் (Madras High Court) என்றே பெயர் நிலவி வருகிறது. முதன் முதலில் ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே செயல்பட்ட நீதிமன்றம், மதறாஸ் உச்சநீதிமன்றம் (Supreme Court of Madras) என்ற பெயரில் தொடங்கபட்டது. 1862இல் உயர்நீதிமன்றமாக மாற்றப்பட்டது. 1857இல் சிப்பாய் புரட்சிக்கு பின், கிழக்கிந்திய கும்பெனியின் அதிகாரத்திலிருந்து ஆங்கிலேய அரசின் அதிகாரத்திற்கு மதறாஸ் மாகாணம் கைமாறியதும், இதற்கு ஒரு காரணம். பத்தொன்பதாம் நூற்றாண்டில், கோட்டைக்கு வெளியே தனி மண்டபம் பெற்றது. அவ்விடத்தில் சட்ட கல்லூரியும் நிறுவப்பட்டது. இவை இரண்டும் அவ்விடத்தில் கட்டுமுன், அங்கே சென்னக்கேசவ பெருமாளுக்கு ஒரு கோயில் இருந்தது. இந்த கோயிலின் பெயரே, சென்னைப்பட்டணத்தின் பெயர் பிறந்த காரணம் என்று நம்புவோருண்டு. ஒரு காலத்தில் சென்னகேசவ பெருமாள் கோயில் இடிக்கப்பட்டு, பின்னர் அந்த கோயில் பூக்கடை அருகே, இன்றுள்ள இடத்தில் கட்ட, கும்பெனியார் பணம்குடுத்தனர்.

மாதாமாதம், இண்டாச் (INTACH) என்ற வரலாற்றார்வலர் குழு, ஒரு உயர்நீதிமன்ற வரலாற்று உலா நடத்துகிறது. சென்னையின் பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க தொடங்கிய இக்குழுவின் சார்பில், கட்டடகலைஞர் திருமதி தாரா முரளியும், வழக்கறிஞர் என்.எல்.ராஜாவும் நடத்திய ஒரு மாதாந்திர உலாவில், சென்ற 2014 ஜூலை மாதம் நானும் கலந்துகொண்டேன். நீதிமன்ற வளாகத்தில், முன்னாள் நீதிபதி பாஷ்யம் ஐயங்காருக்கு ஒரு சிலை உள்ளது. அச்சிலைக்கெதிரே, உயர்நீதிமன்றத்தின் அருங்காட்சியகம் உள்ளது. அங்கே சென்னை ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து என்ற நூல் உள்ளது. 

பாஷ்யம் சிலைக்கு முன் வழக்கறிஞர் ராஜா

உயர்நீதிமன்றம், பிறகாலத்தில் சூட்டப்பட்ட பெயர். அக்காலத்தில், ஐகோர்ட் என்றே தமிழில் வழங்கப்பட்டது. ஓர் கட்டடத்தை புகழ்ந்தோ நீதிமன்றத்தை புகழ்ந்தோ பாடல் ஏன் இயற்றவேண்டும்? அதுவும் தமிழில்? மரபுக்கவிதையில் எழுதிய பாடல் யாரைப்போய் சேரும்? இயற்றிய புலவர் யார்? கோட்டைக்கும் இப்படி ஏதேனும் பாடல்கள் உண்டோ? மாமல்லபுரத்து அற்புதங்களுக்கே தமிழில் இவ்வகை அற்புத பாடல்கள் இல்லையே! (எனக்கு தெரிந்து)

High Court poem ஐகோர்ட்டின் அலங்கார சிந்து
சரி பாடலை பார்ப்போம். நேரிசை வெண்பாவில் விநாயக துதியுடன் தொடங்குகிறது இச்சிந்து.
விநாயகர் துதி

அன்னை வயலாந்திருசூழ்ந் தகிலமெலாம்பேரோங்கும்
சென்னையென்னுமின்னகரில் சிறப்புரவே – உன்னிதமாம்
ஐகோர்ட்டின்கட்டடத்தை அகிலமிசைபாடுதற்கு
கையைந்துடையகணன் காப்பு.

Translation: That this song of the noble High Court building, ennobling the city of Chennai, surrounded by paddy fields and praised around the world, may be sung by all people, I invoke the blessing of the FiveHanded Gana (i.e. Ganapathy).

இதன்பின் –
ஓரடித்தங்கசிந்து

சீரோங்கும் சென்னைதனில் சிறப்புடனேயமைந்த பேரோங்கும் ஐகோர்ட்டின் பிரபலமாம்கட்டடத்தை பாரெங்கும்மிபுகழைபாடு தர்க்குமுன் கடவுள்
க(?)றானை மாமுகனே ஐங்கரா-கடவுளே துணையிரையா.

Translation O Five-handed Elephant Faced God, protect us, as we sing for the world, to praise this famous High Court building, so well built in prosperous Chennai

சீமையெழுகடலும் சிறப்புற்று தான்வாழும் அன்னைகுயின்விக்ட்டோரியாள் அரசின்மனம்போலே முன்னும் சீஸாலன் துரைமுடித்தபிளான்வேலை பார்த்துமனமகிழ்ந்து பார்லிமெண்டுதுரைகள்கட்டுதர்க்கு நல்லயிடம் கடலின்கரையோரம் கோட்டைக்கடுத்தயிடம் கூண்டுவிளக்கருகில் சித்திரம்போல் ஐகோர்ட்டை செய்துமுடித்தார்கள்யிப்பெருங்கட்டடங்கள் யெவ்வுலகில் கண்டதில்லை முந்தியுகமாண்ட முடிமன்ன ராஜர்களும்..

Translation: By the grace of Mother Queen Victoria, famous across the Seven Seas, the Members of Parliament being delighted on seeing the building plans designed by Lord Seesalan (Chisholm), of good location, along the sea, besides the fort, near the lighthouse; like paintings, built large premises the likes of which the world hasn’t seen, not even the kings of yore or the sculptors…

சீஸாலன் என்பது ராபர்ட் சிஸோல்ம் (Robert Chisholm) எனும் கட்டட கலைஞரை குறிப்பதாக, ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அது புலவரின் தவறான கருத்து என்றும், ஐகோர்ட்டின் வடிவத்தை பிராசிங்டன், வகுத்தார் என்றும், அக்காலத்திற்கு முன்பே சிஸோல்ம் இந்தியாவை விட்டு லண்டன் சென்றுவிட்டார் என்றும், ஸ்ரீராம் கருதுகிறார். மேலும், இந்த அலங்கார சிந்து நூலை ஒரு நீதிபதியிடம் தானே தானமாக கொடுத்ததாகவும், அவர் ஃபேஸ்புக்கில் (முகநூலில்) குறிப்பிட்டுள்ளார். அவரது தானத்திற்கு நன்றி. சென்னையிலுள்ள பல்கலைகழக செனேட் கட்டடம், மத்திய ரயில் நிலையம், மத்திய தபால் நிலையம் போன்ற பல கட்டடங்களை சீஸால்ம் வடிவமைத்தார். இண்டோ-சாரசெனிக் (Indo Saracenic) என்ற கட்டட கலைக்கு முன்னோடி சிஸோல்ம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூண்டுவிளக்கு என்பது ஐகோர்ட் வளாகத்தில் உள்ள கருங்கல் கலங்கரை விளக்கமாகும். இந்த கருங்கல் தூண், இந்தியாவை அளக்கும் திரிகோண நிலஅளவைதிட்டத்தின் (Great Trigonometrical Survey) ஒரு அடிக்கல்லாகவும் திகழ்ந்தது. அதை குறிக்கும் கல்வெட்டும் அதன் அடித்தளத்தில் உள்ளது. ஆங்கிலேயர், கப்பல்களுக்கு எச்சரிக்கையாக விளங்க, முதலில் கோட்டைக்குள் ஒரு கூண்டுவிளக்கை கட்டினர். பின்னர் இந்த கருங்கல் கூண்டுவிளக்கை கட்டினர். அதற்கு பின்னரே, ஐகோர்ட்டிற்கு தனி கட்டட திட்டம் வகுத்தனர். அதோடு, ஐகோர்ட்டின் மிக உயர்ந்த மத்திய விமானம், மூன்றாம் கலங்கரை விளக்கமாக செயல்பட்டது. இவை, மின்சார விளக்கிற்கு முந்தைய காலத்தவை; தீப்பந்தங்கள்.

மேலும், ஐகோர்ட்டின் அலங்கார சிந்து கீழ்வருமாறு தொடர்கிறது.

ஆநந்தகளிப்பு

பல்லவி
பட்டணம் ஐகொர்ட்டை பாரும் யிந்த
பாரினிலிதற்கிணை யெதைசொல்லப்போகும்

அநுபல்லவி
கட்டடம்மதிகவிஸ்தாரம் – யதில்
கலசம்யிருக்கின்ற வேலைகள்ஜொரும்
அட்டதிசையெல்லாம் கோரும் – நல்ல
அழகாய்யமைந்திட்ட அதிசயம்பாரும்

I don’t think these require any translation.

ஆநந்தகளிப்பு


கூண்டுவிளக்கு

Related Essays

ஜார்ஜ் மன்னன் மெய்கீர்த்தி
போர்காலத்தில் சென்னை - இரண்டாம் உலகப்போர் 
Sriram Venkatakrishnan on Madras High Court
A Hungarian mathematician's Poem about Madras
The Cooum : A Cultural Mapping - Facebook group
Madras - India's First modern city
An Evening with John and Pamela Davis
சென்னை சைனா மதறாஸ் மதறாஸா?

Monday, 26 May 2014

கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்

ஒரியாவிலுள்ள கொனாரக் சூரியனார் கோயிலுக்கு நான் 2011 நவம்பரில் சென்ற பொழுது, சுற்றுலா வழிகாட்டி (tourist guide) ஒருவர், அந்தக்கோவில் வராஹமிஹிரரால் கட்டப்பட்டது என்றார். வராஹமிகிரர் பஞ்சசித்தாந்திகா, ப்ருஹத் ஸம்ஹித, ப்ருஹத் ஜாதக ஆகிய ஜோதிட நூல்களை எழுதியவர். விண்ணியல் விஞ்ஞானி என்றும், ஜோசிய நூலாசிரியர் என்றும் அறியப்பட்டவர். ஆனால் கோயில்களை கட்டும்பணி, விஷ்வகர்மா சமூகத்தை சார்ந்த ஸ்தபதிகளுக்கே உரியது. அவ்வப்பொழுது, இந்த கோயில் நக்ஷத்திர அமைப்பு படியோ ராசிகளை குறிக்கும் வழியிலோ கட்டப்பட்டது என்று நான் கேள்விபட்டதுண்டு. இன்றுவரை சாட்சி கண்டதில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில், குடுமியான் மலையில், அம்மன் சந்நிதி அருகே,12 ராசிகளும் கூறையில் செதுக்கப்பட்ட சிற்பம் உள்ளது. கும்பம் மீனம் துலாம் சிம்மம் என்று 12 சதுரங்களில் ராசிகளும், அதற்கு வெளியே, விநாயகர் உட்பட, பலவித சிறபங்கள் 20 சதுரங்களிலும், அதற்கும் வெளியே 28 தாமரைகளும் செதுக்கப்பட்டுள்ளன.  புதுக்கோட்டை நகரில் பிரஹதாம்பாள் (அரைக்காசு அம்மன் என்றால்தான் பலருக்கு தெரியும்) கோவிலில், வண்ணங்கள் பூசிய இவ்வகை சிற்பத்தை காணலாம்.

Kudumiyaan Malai Zodiac குடுமியான் மலை - ராசிகளின் சிற்பம்


Kumbakonam SarngapaaNi Zodiac  குடந்தை சாரங்கபாணி - ராசிகளின் சிற்பம்
கும்பகோணத்தில் சாரங்கபாணி (ஷார்ங்கபாணி) கோவிலின் மண்டபத்து கூறையிலும் சக்ரபாணி கோவிலிலும் இதை போன்ற ராசிகளுள்ள சிற்பங்களை பார்த்தேன். அதேபோல் திருவரங்கம் கோவிலில் ஆர்யபடாள் வாசல் என்ற கதவின் அடித்தளத்தில், இது போன்ற ராசி சின்னங்களை காணலாம்.

Pudukottai Brhadambal Zodiac புதுக்கோட்டை பிரஹதாம்பாள் - ராசிகளின் சிற்பம்

இது போன்ற ராசி சிற்பங்களுக்கும், கோவில்கள் கட்டும் பணிக்கும் ஏதும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. லகதர் எழுதிய ’அர்ச்ச ஜ்யோதிஷம்’, ‘யாஜுஷ் ஜ்யோதிஷம்’ என்ற வேதாங்க நூல்களில் ராசிகளை பற்றி குறிப்பு ஏதும் இல்லை. வேதகாலத்தில் இந்திய ஜோதிடத்தில் – விண்ணியலில் – ராசிகளை பயன்படுத்தப்படவில்லை.

इत्येवं मासवर्षाणां मुहुर्तोदयपर्वाणाम् ।
दिनर्त्वयनमासाङ्गं व्याख्यानां लगधोऽब्रवीत् ॥
இத்யேவம் மாஸவர்ஷாணாம் முஹூர்தோதயபர்வாணாம் ।
தினர்த்வயனமாஸாங்கம் வ்யாக்யானம் லகதோப்ரவீத் ॥

என்று யாஜுஷ் ஜ்யோதிஷத்தில் ஒரு ஸ்லோகம் கூறுகிறது.

பொருள் : “மாதம் (மாஸ), வருடம் (வர்ஷ), முஹூர்த்தம், உதயம், பருவம், தினம் (சூரிய தினம்), ருது (ஆறு காலங்கள் – உ.ம். வேனில், கார்), அயனம், ஆகியவற்றை அங்கங்களாக கொண்ட லகதர் கூறியுள்ளார்”

சற்றே வித்தியாசமாக, ஆவுடையார் கோவிலில், மாணிக்கவாசகர் சந்நிதியின் நுழைவாயில் உத்திரத்தில், 28 நக்ஷத்திரங்கள் சிற்பங்களாக குறிக்கப்பட்டுள்ளன. இவற்றை எனக்கு முதலில் காட்டியவர், புகைப்பட நிபுணர் அஷோக் கிருஷ்ணஸ்வாமி. இந்திய விண்ணியலில் 27 நக்ஷத்திரங்கள் முக்கியம் பெற்றவை – இவை சந்திரன் பூமியை சுற்றும் பாதையில் உள்ளவை. “Addresses of the Moon,” (சந்திரனின் விலாசங்கள்) என்று அஷோக் இவற்றை அருமையாக வர்ணித்தார். ரிக் வேத காலத்தில், ஒரு சில காலம் 28 நக்ஷத்திரங்களை சந்திரனின் விலாசங்களாக கருதினர். பின்னர் 28ஆம் நக்ஷத்திரம் – தக்ஷன், அபிஜித் என்று அதற்கு இரு பெயர்கள் உண்டு – கைவிடப்பட்டது. 27 நக்ஷத்திரங்களில், கிருத்திகையை தவிற, மற்றவை தனி நக்ஷத்திரங்களே. கிருத்திகை ஆறு நக்ஷத்திரங்களின் கூட்டம். ஆனால் இச்சிற்பத்திலோ பலவும் , நக்ஷத்திர கூட்டங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமும் தெரியவில்லை.


Aavudaiyaar Temple Zodiac - ஆவுடையார் கோவில் ராசிகளின் சிற்பம்

ஆரியபடரின் காலத்திலோ அதற்கு சற்று முன்னரோ, ராசிகள் இந்திய விண்ணியலில் நுழைந்து விட்டன. பாபிலோனிய நாகரிகத்தினர் ராசிகளை விண்ணியலில் முதலில் கையாண்டனர். இவர்களிடமிருந்து கிரேக்கர்கள் ராசியை கடன் வாங்கியிருக்கவேண்டும். கிரேக்கர்வழியாகவோ, பாரசீகர் வழியாகவோ, நேரடியாக பாபிலோனியரிடமிருந்தோ இந்தியர்கள் கடன் வாங்கியுள்ளனர்.

சூரியன் ஒரு மாதம் இருக்கும் நக்ஷத்திர குவியலுக்கு (ராஷி राशी) ராசியென்ற பெயர். 360 டிகிரி வான வட்டத்தை 12 ராசியாக வகுத்தால், ஒரு ராசி 30 டிகிரி அளவாகும்.

ஆரியபடரின் கணித கலைச்சொறகள்.

राशी ராஷீ = 30 டிகிரி = 30 degrees
अंशः அம்ஷ: = டிகிரி = degree
कला கலா = மினிட் = minute
नाडी நாடீ = செகண்ட் = second
विनाडी விநாடீ = 1/60 நாடீ

12 ராசி = 1 வட்டம் = 360 டிகிரி

Base 10 is decimal. Base 2 binary. Base 60 is sexagesimal. Base 20 is vigesimal.
10 அடிப்படை (base 10) எண் முறைக்கு, டெசிமல் என்று பெயர். 
2 அடிப்படை எண் முறை, பைனரி. 
60 அடிப்படை எண் முறை, செக்ஸாகெசிமல். 
20 அடிப்படை, வைகெசிமல்.

பாபிலோனியரையும் அவருடைய முன்னோர்களான சுமேரியரையும் தவிற எந்த நாகரிகமும் இந்த 60 அடிப்படை எண்முறையை பயன்படுத்தியதில்லை. அதிலிருந்தே 60 டிகிரி, மினிட், செகண்ட், 360 டிகிரி வட்ட அளவு எல்லாம் தோன்றியவை. மயன், அஸ்டெக் சமுதாயங்களும், கிரேக்க கலாச்சாரம் பரவும் முன் ஐரோப்பாவின் சிலச்சமுதாயங்களும் 20 அடிப்படை வைகெசிமல் எண்முறையை பயன்படுத்தின.

இன்று உலகில் யாவரும் கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் டெசிமல் முறையை பயன்படுத்துகிறோம். கணினியில் மட்டும் பைனரி. வட்ட அளவிலும் நேர அளவிலும் மட்டும் 60 அடிப்படை பாபிலோனிய செக்ஸாகெசிமல் தொடர்கிறது.

ஆரியபடரும் அவருக்கு பின்வந்த பிரம்மகுப்தர், முதலாம் பாஸ்கரர், மஹாவீரர், லீலாவதி எழுதிய பாஸ்கராச்சாரியார், கேரளத்தில் பரமேசுவரர், நீலகண்ட சோமசத்வன், ஜ்யேஷ்டதேவர் ஆகிய விண்ணியல் மேதைகளும் விண்ணியல் கணிதத்தை மட்டுமே கையாண்டனர். வராஹமிகிரர் விதிவிலக்காக, ராசி பலன், ஜாதகம், ஹோர சாத்திரம் போன்றவற்றை பற்றி விரிவாக எழுதினார். தங்களை பாதிக்கும் விஷயமாக மக்கள் நம்பும் இவ்வித ஜோதிடம், தீயைப்போல் சமுதாயத்தின் எல்லா தளங்களிலும் பரவியது.

ஆரியபடரின் விண்ணியலும், மஹாவீரரின் கணிதமும் ஒரு குறுகிய பண்டித வட்டத்தில் அடங்கிவிட்டது. பாமரருக்கும், கதை கவிதை எழுதும் இலக்கியவாதிகளுக்கும் இன்று போல் அன்றும் இது விளங்காப்புதிராகவும், திறமைக்கும் பயனுக்கும் அப்பால் தங்கிவிட்டது. அது மட்டுமன்றி, விண்ணியல் சார்ந்த கணிதம் மற்ற துறைகளில் எந்த அளவு நுழைந்தது என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு, கோயில் கட்டட கலையில் இந்த கணித கோட்பாடுகள் நுழைந்ததா என்பது கேள்விக்குறியே. அவை தேவையில்லை, தேவைப்படவில்லை என்பது வேறு விஷயம். 

உதாரணமாக தாராசுரத்து ஐராவதேஸ்வரர் கோவிலிலும், கோனாரக் சூரியனார் கோவிலிலும் உள்ள தேர் வடிவமும், அவற்றிலுள்ள சக்கரங்களும் புகழ் பெற்றவை. ஆனால் அவற்றை செதுக்க, ஆர்யபடீயம் போன்ற விண்ணியல் நூல்களில் உள்ள கணித விதிமுறைகள்  –geometry, trigonometry - தேவைப்படவில்லை. அதன் சாயல்களும் இச்சிற்பங்களில் இல்லை. இது குறையோ பெருமையோ இல்லை. யதார்த்தமாகவே எனக்கு தெரிகிறது.


Darasuram Chariot wheel - தாரசுரம் ரதசக்கரம்
Konarak Sun Temple - Chariot wheel - கோனார்க் சூரியனார் கோவில் ரத சக்கரம்
மய மதம் ஆகிய சில்பசாத்திர நூல்களை நான் படித்ததில்லை. குடந்தை ஸ்தபதி உமாபதி ஆச்சார்யரின் இல்லத்தில், வேதங்கள் கொண்ட ஓலைச்சுவடிகளை, காணும் பாக்கியம் பெற்றேன். அவர் அபார பணி செய்து வருகிறார்.  விஷ்வகர்மா குடும்பங்களின் கல்வி முறைபற்றியும், பாரம்பரிய ரகசியங்களை பற்றியும் அவரோடு நானும் நண்பர்கள் சிலரும் உரையாடியிருக்கிறோம். புதுக்கோட்டை கலை உலாவிற்கு அவரும் வந்திருந்தார். கோயில் கலைகளை விளக்க அவர் நடத்திய கருத்தரங்கம் ஞானம் வளர்த்தது.

இந்த கட்டுரை தகவலுக்கு மட்டுமல்ல, ஒரு தேடலுக்கும் : பல்வேறு துறைகளில் உள்ள அறிவியல் கலை ஒவ்வொன்றை எவ்வாறு தாக்கியது, பாதித்தது, வளர்த்தது என்று அறிய என் ஆவலின் பதிவு.

விஷ்வகர்மா கலையை பற்றி உமாபதி ஆச்சாரியரின் 

Monday, 30 September 2013

வண்ண வண்ணமாய் எண்ணவியலா எண்ணம் எண்ணிலா கன்னா பின்னா கட்டிடங்கள்

வளைந்த, நீண்ட, மூடிய, மூடா பால்கனிகள்
கட்டட கலை என்றாலே பல்லவரும் சோழரும் கட்டிய கோயில்களும், புத்த விகாரங்களும், கோட்டைகளும், முகலாய சமாதிகளும், கிரேக்க ரோமானிய ஆட்சி பீடங்களும் நம் நினைவிற்கு வரும். சம கால கட்டடங்கள் எனில் லீ கோர்பஸியே, ஃப்ராங்க் லாயிட் ரைட், ஐ.எம்.பெய், லுட்யென்ஸ் என்று வெள்ளையரையும், ஐரோப்பிய சிந்தனையாளர்களும் பேசப் படுவார்கள். 
சதுர முக்கோண வளைவுள்ள, கல் கம்பி பால்கனி

பேச்சு சுதந்திரமும் பொருளாதார சுதந்திரமும் தொழில் சுதந்திரமும் அலைமோதும் மேற்கத்திய நாடுகளில் கட்டட சுதந்திரம் மிகக்குறைவே. பாரதத்தில் சாதி கட்டுப்பாடு பலமாக இருப்பது போல், அங்கே நகர கட்டுப்பாட்டின் பலம் அதிகம். அமெரிக்காவில், நகரத்தின் ஒரு பகுதியில் என்ன அமைப்பு, எத்தனை மாடி, எத்தனை ஜன்னல், என்ன வித கூறை, வெளிச்சுவரின் நிறம், தோட்டத்திற்கு விட வேண்டிய குறைந்தளவு இடம், என்ன மரம் செடி நடலாம், எவ்வளவு செங்கல் எவ்வளவு மரம் வெளியே தெரியலாம், என்றெல்லாம் விதிகள் சட்டபூர்வமாக இருக்கும். இதை நிர்வகிக்கும் குழுக்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். பச்சை நிறத்தில் கதவு வைத்ததால் வழக்கு போட்டு நிறம் மாற்றிய கதை, புல் வெட்டாததால் அபராதம், விளக்கு எறியாததால் அபராதம், என்றெல்லாம் அவ்வூர் செய்திகளில் வரும்.
வானவில் ஒத்த கூறை
நம் நாட்டில் இப்படி சில கிராமங்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன. மன்னராட்சியாலும், ஜாதி குழுக்களாலும் மட்டுமே இந்த அளவு இந்தியாவில் கட்டுப்பாட்டுடன் நிர்வாகம் செய்ய முடியும். சுதந்திரமும் மலிவான் சிமெண்டும் வீடுகட்ட வங்கிக்கடனும் வந்ததால் பாரதத்தில் வீடு மனை  தொழில் மனோதர்ம புயல் வீச இண்டர்நெட் கம்பெனிகளை போல் எண்ணத்திலும் வண்ணத்திலும் உயரத்திலும் அகலத்திலும் அழகிலும் அழுக்கிலும் துடிப்பிலும் இடிப்பிலும் வடிவமைப்பிலும் செடியிழப்பிலும் பலவிதமாய் பரிணமித்து பரவியுள்ளது.
குடிசைகளும் ஓட்டுவீடுகளும் பங்களாக்களும் பணம் கிடைத்த மனம் படைத்த நேரத்தில் சிமெண்ட் வீடுகளாக நாடு முழுவதும் மாறி வருகின்றன. ’வாஸ்த்து கலர்’ என்ற பெயரில், சிலர் கண்ணை கவர்ந்தும் சிலர் கண்களுக்கு கேவலமாகவும், கடந்த பத்தாண்டில், பலவீடுகள் பூசப்பட்டுள்ளன. பாடபுத்தகத்தில் டோரிக் தூண், ஐயோனிக் தூண், சமமான கூறை, சாய்ந்த கூறை, வளைவு கூறை என்றெல்லாம் உண்டு. மேல்தட்டு மக்களுக்கு இவ்வித வீட்டமைப்புகளை சலிப்புடனும் ஏளனமாகவும் பார்க்கலாம். என் வீட்டில் இந்த நிறங்களையோ, அமைப்பையோ விரும்பாவிடினும், என் கண்ணிற்கும் எண்ணிற்கும் இவை ஏளனமாகவோ பாமரமாகவோ தெரியவில்லை. அவரவர் ரசனையும், தனி மனித அழகியலும், தெருவை மிளிரவைக்கும் செங்கல் வானவில்லும், செல்வப்பெருமையும், தன்னிறைவும், என் கண்ணிற்கு தெரிகின்றன. செடிகளும் மரங்களும் சேர்ந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும்.

மாமல்லபுரத்திலும் காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும், ராஜசிம்ம பல்லவனின் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் தன்னை அத்யந்தகாமன் (எல்லையில்லா எண்ணமுள்ளோன்) என்று அழைத்துகொள்கிறான். ஏழுவித அமைப்பில் ஒற்றைக்கல் கோவில்களை மல்லையில், பலவித அமைப்பில் அங்கும் காஞ்சியிலும் பனமலையிலும் கட்டிய இவன் கலையை ரசிக்க காஞ்சிபுரம் சென்ற போது, பாண்டவதூத பெருமாள் சன்னதி தெருவில் கண்டு நான் எடுத்த வீடுகளின் படங்களை இங்கு காட்டியுள்ளேன். இவற்றை கட்டியவர்களும் எல்லையில்லா எண்ணமுள்ளேரே. 
பால்கனியிலா வீடு - கொடிதவழ, மூடியும் மூடாமல் ஒரு பால்கனி - முக்கால் மூடி கோலமுடன் பால்கனி - வளைவு வாசலுடன் படிகள், மூடி சிமெண்ட் ஜன்னலுடன் படிகள்