Sunday, 14 April 2013

VarahaMihira's slokam on Agastya

भानोर्वर्त्मविघातवृद्धशिखरो  विन्ध्याचल: स्तम्भितो 
वातापिर्मुनि कुक्षिभित् सुररिपुर्जीर्णश्च येनोसुर: |
पीतश्चाम्बुनिधिस्तपोम्बुनिधिना याम्या च दिग्भूषिता 
तस्यागस्त्यमुने: पयोद्युतिकृतश्चार: समासादयं ||

சிகரம் வானைப்பிளக்க கதிரவன் பாதை மறித்த
விந்திய மலையின் விருத்தம் வேண்டியே தடுத்த மறையோன்
விருந்தாய் தன்னையே சமைத்து முனிவர்தம் வயிற்றில் புகுந்து
குடல்கிழித்தே கொன்ற கொடிய வாதாபியசுரனை சரித்தோன்
பாரெலாம் பரவிய கடலை பருகியத் தவக்கடல் குறிலோன்
யமதிசை வானின் மணியோன் நீரையே புனிதம்செய் முனிவன்
ஈடில்லா அகத்தியன் மகிமை உறைத்திடும் கோவை இதுவே.

வராஹமிஹிரர் இயற்றிய பிருஹத் ஸம்ஹித என்ற நூலில், அகத்திய நக்ஷத்திரத்தின் மகிமை உறைக்கும் முதல் செய்யுள்


ஜனவரி 9 2020 தமிழ் எழுத்து வடிவமும், அரும்பத உரையும் சேர்த்துள்ளேன்

பானோர்வர்த்மவிகாதவ்ருʼத்³ஶிக²ரோ விந்த்யாசல: ஸ்தம்பிதோ
வாதாபிர்முனி குக்ஷிபித் ஸுரரிபுர்ஜீர்ணஶ்ச யேனாஸுர: |
பீதஶ்சாம்பு³னிதிஸ்தபோம்பு³னிதினா யாம்யா தி³க்³பூஷிதா
தஸ்யாக³ஸ்த்யமுனே: பயோத்³யுதிக்ருʼதஶ்சார: ஸமாஸாத³யம்ʼ ||

அரும்பத உரை
பா⁴னோர் (பானுவின் – சூரியனின்) வர்த்ம (பாதையை) விகா⁴த (தடுத்து) வ்ருʼத்³த⁴ (பெரிய) ஷிக²ரோ (சிகரம்) விந்த்⁴யாசல: (விந்திய மலை) ஸ்தம்பி⁴தோ (தடுத்தவன்)
வாதாபிர் (வாதாபியை) முனி குக்ஷிபி⁴த் (முனிவர்களின் வயிற்றைகிழித்த) ஸுரரிபுர் (அசுரன்) ஜீர்ண: (ஜீரணம் செய்தவன்) ச (மற்றும்) யேனோஸுர: (யாரால் அசுரனை)
பீத: (குடித்தவன்) ச (மற்றும்) அம்பு³நிதி⁴: (கடல்) தபோம்பு³நிதி⁴னா (தவக்கடலால்)  யாம்யா (தெற்கு) ச (மற்றும்) தி³க்³ (திசை) பூ⁴ஷிதா (அணிகலன்)
தஸ்ய (அந்த) அக³ஸ்த்யமுனே: (அகத்திய முனியின்) பயோத்³யுதிக்ருʼத (நீரையே தூய்மைசெய்யும்) சார: (நடை) ஸமாஸாத்³(விளக்கம்) அயம்ʼ(இது)


1 comment: