முதல்
உலகப்போர் தொடங்கிய 1914ஆம் வருடம் சென்னை அமைதியாக தான் இருந்தது. ஆகஸ்டு 14ஆம் நாள்,
கேப்டன் மேட்லி என்பவர் முதலில் ஒரு விமானத்தை செலுத்தினார். எஸ் ஏ அண்ணாமலை செட்டியாரும்,
சி பி ராமசாமி ஐயரும் சென்னையில் ஒரு விமான குழுவை (Flight Club) தொடங்கினர். செப்டம்பர்
மாதம் ஜெர்மனிய கப்பல் எம்டன் சென்னை கடலில் வந்து சில குண்டுகளை வீசியது. இதனால் போர்
என்றால் என்ன என்று மறந்திருந்த சென்னை மக்கள் பெருமளவில் சென்னையை விட்டு விலகினர்.
20000 பேர் நகரத்தைவிட்டு கிராமங்களுக்கு குடிபெயர்ந்தனர். சென்னையில் நிலங்களும் வீடுகளும்
மிக மலிய விலைக்கு கைமாறின. பலர் பெருஞ்செல்வம் இழந்தனர், சிலர் பெரும் செல்வந்தராயினர்.
மக்களிடையே
பீதியை போக்க அன்னி பெசண்ட் போன்றோர் பிரச்சாரம் செய்தனர்.
ஆங்கில
அரசும் கலங்கி போய், மதறாஸ் உயர்நீதி மன்றத்தை ஆந்திராவிற்கும், சட்டசபையை திருச்சிராப்பள்ளிக்கும்,
இடம் மாற்றினர். அரசுகூட சில காலம் கோட்டையை விட்டு பச்சையப்பா கல்லூரியிலிருந்து செயல்
பட்டது.
உப்புக்கு
கட்டுப்பாடு வந்து, அரசு உப்புக்கு வரி போட்டது.
இந்த
காலத்தில் 1917ஆம் ஆண்டு ருஷிய புரட்சி நடந்தது குறிப்பிடதக்கது. இந்தியாவில் கம்யூனிஸ்ட்
இயக்கத்திற்கு பெரும் வித்தாக இது நடந்தது. மன்னராட்சி விழுந்து மக்களாட்சி எழுந்ததாக
பலரும் இதை பாராட்டினர், இதே காலத்தில் கணித மேதை ராமனுஜன் மீண்டும் சென்னை திரும்பி,
சில மாதங்களுக்கு பின் காலமானார்.
இரு உலகப்போர்களுக்கு இடையே சென்னை - மாநாடு |
இக்காலத்தில
தான் திரவடியன் என்ற பத்திரிகை ஆங்கிலேயரின் ஆட்சிக்கு ஆதரவு குரலை எழுப்பியது. திரு
வி.க. தேச பக்தன் இதழை தொடங்கினார். ஆங்கிலத்திலும் மணிப்பிரவாளத் தமிழ் நடையிலும்
பத்திரிகைகள் வந்த காலத்தில், எளிய தமிழில் நாளிதழ்கள் வெளிவர தொடங்கின.
செய்யுள்
தமிழின் காலம் சரிந்து உரைநடை தமிழின் காலம் உதயமானது.
ஆதார நூல்கள்
2. ஹிந்து நாளிதழ் கட்டுரைகள் (எஸ். முத்தையா, வெ. ஸ்ரீராம்)
3. South India Heritage (Prema Kasturi, Chitra Madhavan)
4. “இரு உலகப் போர்களுக்கு இடையே சென்னை”, மாநாடு, தியாகராயர் கல்லூரி, வண்ணாரப்பேட்டை, ஆகஸ்டு 2013
5. A History of India, Burton Stein
சம்பந்தபட்ட பதிவுகள்
1. அடையாறு போர்
குறிப்பு இப்பதிவு, லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் தீபாவளி மலரில் வந்த ”போர்காலத்தில் சென்னை” என்ற என் கட்டுரையின் மூன்றாம் பகுதி.
No comments:
Post a Comment