Sunday 5 January 2014

மென்பொருள் முகவர் முனைவகம்

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் எம்மொழியில் இருப்பினும் கடைகளின் பெயர் பலகைகள் தமிழிலும் இருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் வந்தது. ஆங்கில பெயர்களை விரும்பும் சில கடைகளும், தமிழ் கலைச்சொற்கள் வசதியாகவோ இனிமையாகவோ இல்லாததால், சில பலகைலகளில் ஆங்கில சொல் தமிழ் எழுத்தில் மொழிப்பெயர்க்காமலும், வேறு சில பலகைலகளில் விசித்திரமாய் விநோதமாய் தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளன. அருகருகே இருக்கும் போது, இவை சிரிப்பை கிளப்பும்.



Fresh Juice என்பதை பழச்சாறு என்றே விட்டிருக்கலாம். அது என்ன பூங்கா? கனிவனம்? 
திருக்குறள் மேலே எழுதி கடைக்கு ஆங்கில பெயர் வைப்பது ஒரு வகை – மரிடோ. கார்ப்பரேஷன் என்பதையாவது நிறுவனம் என்று வரையறுக்கப்பட வேண்டாமா! ஏஜன்ஸீஸ் முகவர்கள் ஆனால்  “மேஜர் ஜெனரல் ஸ்டோர்” பூப்பெய்த தளபதி கடை அல்லவா?



எண்டர்பிரைசஸ் அப்படியே இருக்கலாம். முனைவகம் ஆகலாம்.  வணிக நடுவமும் ஆகலாம். சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடியும் சுடும்; முன்னாடியும் சுடும். 

துருவேறா எஃகிரும்பு? இந்த தமிழ் பட்டமின்றி இரும்பு மனிதர் வல்லபாய் படேல் தப்பித்தார். ஸ்டாலின்?! 


Software மென்பொருள், சரி. Solutions தீர்வுகளா? ஐக்கிய வங்கி? ஆஃப் இந்தியா? 

பக்கத்து பக்கத்து கடைக்கு தான் பெயர் விதவிதமாக் இருக்க வேண்டுமா என்ன? தட்டச்சு தமிழாச்சு பார். 

தகரம் தொங்கும் வெள்ளி சொர்கத்தில் எஃகிரும்பும் கிடைக்குமாம்!

Software மென்பொருள் ஆனால் Hardware வன்பொருள் ஆகாதோ? ஆனால் இங்கு பார்க் பக்கம் பசுமை இருப்பினும் பூங்காவாய் மாறவில்லை.

Related Post (உறவு தபால்? ஒவ்வும் பதிவு?)

1 comment:

  1. Even i have been fascinated endlessly by these name plates.
    But 2 days back in kpuram, i saw an upmarket shop where 'different types of foot & bags were sold' 🙄
    Angu tamizhakkam irukka villai.

    ReplyDelete