Tuesday, 27 August 2013

பொறியாளர் மாதம்

அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், தொழிலாளர் தினம் ஆகியவற்றை கொண்டாடுவது போல, பல நாடுகள் பொறியாளர் தினம் என்று ஒரு நாளை அறிவித்துள்ளன. இன்று தான் இதை நான் விக்கிபீடியாவில் தேடி கண்டுபிடித்தேன். ஆனால் ஒவ்வொரு நாடும் வெவ்வேறு காரணத்தால் வெவ்வேறு நாளில் அறிவித்துள்ளது. உதாரணமாக இந்தியா, விஸ்வேஸ்வரையாவின் பிறந்தநாள் என்பதால் செப்டம்பர் 15 தான் பொறியாளர் தினம்.

இன்று – இந்த வலைப்பதிவை நான் எழுதும் நாள், ஆகஸ்து 27, ஜெர்மானிய ரசாயன மேதை கார்ல் பாஷின் பிறந்தநாள். இவரைப்பற்றி போன வருடமே அறிந்து கொண்டு, சில மாதங்களுக்கும் முன் நான் எழுதினேன். இருபதாம் நூற்றாண்டில் காந்தி, நேரு,சர்ச்சில், ரூஸவெல்ட், ஹிட்லர், கோன்ராட் அடெனார், ஸ்டாலின், மாவோ சேதுங், டெங் சாவோபிங்,அடாடர்க், கோமேனி,கோர்பச்சேவ், தாச்சர், ரீகன்,சுகார்ணோ போன்ற தலைவர்கள் உலகப்புகழ் பெற்றிருக்க, இதைப்போல் ஜாக்கிச்சான், சார்லி சாப்லின், மாரிலின் மன்றோ, வால்ட் டிஸ்னி, ஜேம்ஸ் கேமரான் போன்ற சினிமா கலைஞர்களும், பெலே, பெக்கம், டென்டூல்கர், போன்ற விளையாட்டு வீரர்களோ, பிகாஸ்ஸோ, ஜேகே ரௌலிங், அகாத்தா க்ரிஸ்டீ, ஸல்மான் ருஷ்டீ ஆகிய கலையுலக பேரொளிகள் சிந்தையிலும் செய்தியிலும் மின்ன, இவர்கள் யாவரையும் விட மிக பிரம்மாண்டமாக உலகையும் மனிதக்குலத்தையும் முன்னேற வைத்த கார்ல் பாஷ், ஹாபர், நார்மன் போர்லாக், சார்லஸ் பார்ஸன்ஸ், நிக்கோலா டெஸ்லா போன்றோர் புகழ் மங்கி இருப்பது மனிதகுலத்தின் பெரும் குறையாகவும் அவமான பரிதாப செய்நன்றிமறந்த மகா அவலமாய் எனக்கு தெரிகிறது.

நிற்க.

ஆகஸ்து மாதம் பொறியாளர்களை அள்ளி தந்த மாதம். இவர்களின் பிறந்தநாட்கள் கீழ்வருமாறு:
19 - ஆர்வில் ரைட்
19 – ஃபைலோ ஃபார்ண்ஸ்வர்த் – தெலைக்காட்சி பெட்டியை உருவாக்கியவர்
26 – ஆண்டன் லவாய்ஸியர் – ரசாயனத்தின் தந்தை என்று சொல்லலாம். இயற்பியலிற்கு நியூட்டன்னும், உயிரியலிற்கு டார்வின்/வாலஸைப் போல், ரசாயனத்திற்கு லவாய்ஸியர்.
26- லீ டி ஃபாரஸ்ட் – ட்ரையோடு செய்தவர். இதனால் தான் எலக்ட்ரானிகஸ் யுகம் தொடங்கியது.
27 – கார்ல் பாஷ்
20 – ஜேம்ஸ் பிரின்ஸப் : இவர் பொறியாளர், ஆனால் இந்திய வரலாற்றை மீட்டெடுத்தே இவரின் மாபெரும் பணி
18 – ஃப்ரெட் ஸாங்கர் – மரபணு ஜாம்பவான். ப்ரோட்டீன் பிதாமகன்.
23 – ஹாமில்டன் ஸ்மித்: இவர் உயிரியல் விஞ்ஞானி – restriction enzymes கண்டுபிடித்தவர். மரபணுத் துறையின் பிதாமகன்.

இவ்விருவரின் செயலால் (கேரி மல்லிஸ், க்ரேக் வெண்டர் ஆகியோரையும் சேர்க்க வேண்டும்), உயிரியல், குறிப்பாக மரபணுவியல், பொறியியல் துறையாக மாறியுள்ளது.


ஆகஸ்து மாதத்தில் சில மாமேதை பொறியாளர்களின் நினைவு நாளும் வரும் – ரிச்சர்ட் ஆர்க்ரைட்,  ஜார்ஜ் ஸ்டீஃபன்ஸன், ஜேம்ஸ் வாட், மைக்கேல் ஃபாரடே, அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.

More grantha from Kanchi Kailasanatha temple


Some more birudas (titles) of RajaSimha Pallava at Kanchi Kailasanatha temple. (Thanks Vijay Kumar and Gift Siromoney).

காஞ்சி கைலாசநாதர் கோவிலில் உள்ள ராஜஸிம்ம பல்லவனின் சில விருதுகள்

श्री अजय्यः श्री गुणविनीतः श्री अवनिदिवाकरः श्री कलंकरहितः श्री कालसमुद्रः श्री आहवधीरः श्री कालकोपः
ஸ்ரீ அஜய்ய: ஸ்ரீ குணவினீத: ஸ்ரீ அவனிதிவாகர: ஸ்ரீ கலங்கரஹித: ஸ்ரீ காலஸமுத்ர: ஸ்ரீ ஆஹவதீர: ஸ்ரீ காலகோப:
sri ajayyaH sri guNavinItaH sri avanidivaakaraH sri kalankarahitaH sri kalaasamurdraH sri aahavadheeraH sri kaalakopaH

Saturday, 24 August 2013

Fascinating graph of life

How does life on land differ from life in the oceans? Answer: Dramatically!!

How do plants differ from animals and micro organisms, by the number and mass of species? Even more dramatically! Incredible, in fact.

This is one of the most bizarre graphs I have seen, from a book "Evolution of the Biosphere", by MM Kamshilov, translated from Russian to English by Minna Brodskaya. Mir Publishers, Moscow, 1972.

Life on Land

Matter Green Plants Animals and Micro organisms
Tons * 10^12 2.4 0.02
Percentage 99.2 0.8

Life in Oceans

Matter Green Plants Animals and Micro organisms
Tons * 10^12 0.0002 0.003
Percentage 6.3 93.7


Post script: This is my first HTML hack on my blog, to include the table.

Tuesday, 20 August 2013

ஔவை எத்தனை ஔவையடி- How many Avvaiyaars

“ஔவையை பற்றி எதுவும் நூல்கள் இல்லையே. ஏழெட்டு வருடமாக சென்னைப் புத்தக காட்சியில் ஆத்திச்சூடி கூட கிடைக்கவில்லை,” என்று 2009 ஆம் ஆண்டு பலரிடம் புலம்பினேன். நண்பர் , ஆசான், ரசிகர், பண்டிதர், இலக்கியக் களஞ்சியம் திரு. கண்ணன் அவர்கள் அடுத்தவாரமே பின்வரும் கையெழுத்துக் கட்டுரையை எழுதி வழங்கினார்! அவர் அனுமதியுடன் வலைப்பதிவில் சேற்க்கிறேன். அவர் தமிழில் எழுதியதை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் எழுதியதை தமிழிலும் நான் மொழிமாற்றி, சமர்ப்பிக்கிறேன். பரோடா வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவர். பல்லாயிர்ம் கர்நாடக இசைப் பாடல்களின் முதல் வரிகளையும், ராகத்தையும் புத்தகமாக வெளியிட்டவர்.

Around 2009, I complained to several people, “There are no good books on (or by) Avvaiyaar. Even Aathichchoodi is not available in the Madras book fair for the last several years.” A friend, scholar, connoisseur, walking library and teacher, Mr S Kannan, gave me this handwritten note the next week! With his permission, and my translations of his English paragraphs to Tamil and vice versa, I submit this. He’s a retired employee of Bank of Baroda, well known in Carnatic music circles, as the man who created a book listing the first lines of several thousand songs and their ragas.

ஔவை : பெண்; தாய்; தெய்வப்பெண்; துறவு பூண்ட பெண்

சங்க கால ஔவையார்: (குறிப்புகள் – புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, திருவள்ளுவமாலை) இவள் சமகாலத்து மனிதர்களையும், அரசர்களையும் பற்றி பாடியுள்ளார்.
                References: puRanaanooRu, akanaanooRu, kuRunthokai, naRRiNai, thiruvaLLuvamaalai. She has composed poems on contemporary people and kings.
\
ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஔவையார்:
1.        “நல்லம்பர்… நின்னாட்டுடைத்து நல்ல தமிழ்,” என்றவர்.
2.        இவளைக்குறித்து பல கதைகள் உண்டு; நிறைய தனிப்பாடல்கள்; இனிய செய்யுட்கள்; புராணமாய் மருவிய கவிதைகள்; பழைய வரலாற்று சம்பவங்கள் இந்த ஔவையின் மேல் குவிந்துள்ளன.

1.        This was the Avvaiyaar who said, “Nallambar, your country has beautiful Tamil.”
2.        There are several stories about her; isolated poems; sweet stanzas; poems blown into popular legends. Ancient historical legends were superimposed on her.

சுமார் கி.பி. 1120 கால ஔவையார்:
                கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி இயற்றியவர். அகளங்கன் (என்ற விக்கிரம சோழன்) காலத்திலும் அவனுக்கு பின்னும் வாழ்ந்தவர்.
                பல தெய்வங்களோடும், சான்றோரோடும், புலவரோடும் இவளை பிணைத்து பொய்யான, குறும்பான, தவறான, ஒதுக்கக்கூடிய கதைகள் உள்ளன. கிடக்கட்டும்! ரசமும் சிரிப்பும் யதார்த்தமும் எள்ளலும் கிண்டலும் எளிமையும் புலமையும் நயமுடை நுட்பமும் இவளது கவிதையில் கண்ணோடு இமையாக, மண்ணோடு மழையாக கலந்து காணலாம்.
                இக்கால ஔவையார் செய்தவை யாவும் அறநூல்களே.

                Her works include KonRaivEnthan, Aaththiccoodi, mooturai, nalvazhi. She lived in the time of AkaLangan (Vikrama Chozha) and his successors.
                Many wrong, mischievous, mistaken, dismissable accounts are there associating her with great poets, personalities, or even gods/goddesses. Leaving them all aside, here is a poetess, who dabbled in interesting, humorous, worldly-wise, sweet, simple, elegant and scholarly pieces. Her works were all didactic – moralistic.

பதிநான்காம் நூற்றாண்டின் ஔவையார்:
                இரண்டு நூல் செய்துள்ளார் – 1. ஞானக்குறள் 2. விநாயகர் அகவல். பின்னது தோத்திர நூல் – பரவலாக அறியப்பட்டுள்ளது. மரபு வழி சைவர்கள் இல்லங்களில் நாள்தோறும் பாராயணம் செய்யப்படுவது. முந்தியது சாத்திர நூல்; ‘அவ்வைக்குறள்’ என்றும் சொல்லப்படுவது – 31 அதிகாரம், 310 பாடல்கள்.

                She has written two books – 1. JnaanakkuRaL 2. Vinaayakar agaval. The latter is a widely known prayer song, ritually sung everyday in some Saiva families for generations. The former is dharma literature, also called ‘OwvaikkuRaL.’ It has 310 stanzas in 31 chapters.

உலக வாழ்க்கையில் சுதந்திரமாக இருந்த ஔவையார், ஆன்ம சுதந்திரத்தை தம் பாடல்களில் வலியுறுத்தினார். பலத்தனிப்பாடல்களும் வழக்கிலுள்ளன. பக்தி இயக்கத்தின் செல்வாக்கு இவரிடம் இருக்கக்காணலாம்.

“காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்” (இல்லறம்) என்ற வாக்கு இவருடையது.

A lady who had an independent life (not that of a housewife), this Owvaiyaar emphasized freedom of the soul in her poetry. To her is attributed the famous line: “Two lovers, united in thinking and supporting each other – that is bliss.” The bhakti movement’s impact on her is discernible.

பதினேழாம் நூற்றாண்டின் ஔவையார்:  தனிப்பாடல்கள்.  Isolated verses.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஔவையார்: பந்தனந்தூதி இயற்றியவர். Composed ‘Panthananthoothi’

பொதுவாக எல்லா ஔவைகளுமே ஓரிடத்தில் நிலையாக வாழாது, எல்லா இடங்கட்கும் சுற்றிக்கொண்டிருந்தவர்கள். இந்த இயல்பு பற்றிதான் போலும், ஒருவருக்கேனும் தம் இயற்பெயர் விளங்காது  “ஔவை” என்ற பலர் அறி சுட்டாக இருந்து வருகிறது.

மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமாய் இருந்த மூதாட்டியாதலால் ஔவையார்களை பற்றி ஏராளமான கதைகளும், சம்பவங்களும் எழுந்துள்ளன; எழுதப்பட்டுள்ளன; பெரும்பாலும் புனைவே; பொருந்தாதனவே.

Generally, all Owvaiyaars were nomadic bards, restless with wanderlust, constantly moving from town to town, village to village, kingdom to kingdom. Perhaps because, we don’t know the original names of any of them; but only know them by the collective epithet “Owvaiyaar.”

Loved and respected by the people, there are several legends and myths about these Avvaiyaars, all attributed to one women. Mostly these stories are imaginary.              

இவரைப்பற்றிய நூல்கள்:
1.        விநோத ரஸ மஞ்சரி
2.        அவ்வை சரித்திரம்
3.        புலவர் சரித்திர சார சங்கிரகம்
4.        தமிழ் நாவலர் சரிதை
5.         அவ்வையார்: அனவரத விநாயகம்  பிள்ளை, 1919.
6.         சைவ இலக்கிய வரலாறு: சு. துரைசாமிப்பிள்ளை 1958, அண்ணாமலை பல்கலைக்கழகம்.


முதல் நான்கும் செவிவழி மரபு, வரலாறும் இல்லை, வாழ்க்கை சரித்திரமும் இல்லை. 5,6 சிறந்த ஆய்வு நூல்கள்.

Thursday, 15 August 2013

“காணாமல் போன” திரிபுராந்தகீசுவரர் கோவில்

காஞ்சிபுரத்தில் பல கோவில்கள் 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களாலோ, அடுத்த சிலநூற்றண்டில் விஜயநகர் மன்னர்களாலோ நாயக்கர்களாலோ கட்டப்பட்டவை. முற்காலத்து செங்கல் கோயிலகளை கற்றளியாய் (கருங்கல் கோயில்களாய்) இம்மன்னர்கள் மாற்றியுள்ளனர். ஆனால் சில 8,9ஆம் நூற்றாண்டு பல்லவ கோவில்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் ராபர்ட் ஸிவெல் என்ற கலெக்டரால் பாழடைந்த நிலையில் இருந்து மீட்கப்பட்டன. அலெக்ஸாண்டர் ரியா எழுதிய “பல்லவ கட்டடக்கலை” என்ற புத்தகத்தில் இவற்றின் புகைப்படங்களும், சிற்பங்களின் ஓவியங்களும், கோவில் வரைபடங்களும் உள்ளன. நான் பலமுறை இக்கோவில்களுக்கு சென்றுள்ளேன். ஒரு முறை நண்பர் அரவிந்த் வெங்கட்ராமனுடன் சென்று, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், பூட்டியக்கோவில்களை திறக்க, பிறவாதீசுவரர், ஐராவதேசுவரர், முக்தேசுவரர் ஆகிய பல்லவ கோவில்களையும் கண்டேன்.

ரியா புத்தகத்தில் “திரிபுராந்தகீசுவரர் கோவிலை” குறிப்பிட்டு ஆறு ஓவியங்களும் ஒரு புகைப்படமும் தந்துள்ளார். அந்த கோவில் “கச்சப்பேசுவரர் கோவிலிற்கும் பெரிய சிவன் கோவிலிற்கும் (அதாவது ஏகாமரேசுவரர்)” நடுவில் உள்ளதாக குறிப்புள்ளது. ஆனால் திரிபுராந்தகீசுவரர் கோவிலை ஊர் மக்களுக்கும் தெரியாது; சில தொல்லியல் துறையினருக்கும் தெரியவில்லை. அப்பெயரில் ரியா குறிக்கும் தெருக்களில் அப்படி ஒரு கோவிலும் இல்லை. அமரீசுரர், ஜ்வரஹரேசுரர், தான் தோன்றீசுரர் ஆகிய சில சிவன் கோவில்களும், சில முருகன் கோவில், அம்மன் கோவில் போன்றவையும் உள்ளன. இவை எவற்றிலும், அலெக்ஸாண்டர் ரியா புத்தகத்தில் உள்ள சிற்பங்கள் இல்லை.

ஆகஸ்டு 5ஆம் நாள், கச்சப்பேசுரர் தொடங்கி இத்தெருக்களில் அலைய, அமரேசுரர் கோவிலை கண்டேன். இதற்குமுன், உபதலைவர் பரமசிவம் தெருவில் வாசற்கதவு மூடப்பட்ட கோவிலை கண்டு அதுவாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. சுவரை எட்டிபார்த்தால், உடற்பயிற்சி கருவிகள் கோவில் வளாகத்தில் தெரிந்தன, ஆனால் கோவில் சுவர் தெரியவில்லை. இந்த சிறுவீதியில் பல்லவரின் கோவில் இருக்காது என்று எண்ணி மேலும் கீழும் நடக்க, அமரேச்சுரர் கோவில் அடைந்தேன். வாசல் பூட்டியிருந்தது. ஆனால் கோவிலின் வடக்கு சுவரை கம்பிக்கதவு வழியாய் பார்த்தேன். கீழேயுள்ள ரியாவின் வரைப்படத்துடன் ஒப்பிட்டபொழுது, சுவரில்லுள்ள சிற்பங்கள் எல்லாம் அழிந்துவிட்டாலும், விமானம், கோஷ்டம், ஒரத்து யாளிகள், நந்தி மண்டபம், பலிபீடம் இது தான் காணாமல் போன திரிபுராந்தகீசுவரர் என்று எனக்கு தோன்றியது. புகைப்படங்களை கீழே ஆங்கிலப்பதிவில் காணவும்.   கோவில் மூடியிருந்ததால் பின்சுவரையும், தென்சுவரையும் பார்க்கவில்லை, படமெடுக்கவில்லை.

துக்காச்சிக்கோவிலில் சோழர் ஓவியத்தை கண்டுபிடித்த நண்பர் விசுவநாதனுக்கு, படங்களை காட்டினேன். பலமுறை பார்த்தபின் அவரும் அமரேசுவரர் கோவில் தான் திரிபுராந்தகீசுவரர் கோவில் என்ற கருத்தை ஏற்று, இதை வலையில் உடனே பதிவு செய்யச் சொன்னார். மணற்கல்லில் இல்லாமல் செங்கலில் இருப்பதால், தொல்லியல் துறை இதை தன் பாதுகாப்பின் கீழ் கொண்டு வராமல் இருக்கலாம் என்பது அவர் கருத்து.

சிற்பங்கள் சிதைந்தாலும், கோவிலின் அமைப்பு அற்புதம் - பல்லவர்காலத்து அழகு இன்றும் மிளிர்கிறது. அதையாவது, பாதுகாக்க வேண்டும்.


Saturday, 10 August 2013

Tripurantakesvara temple in Kanchi

Most historical temples in Kanchipuram were either built or rebuilt in Chola (9th-13th) Pandya (13th-14th century) or Vijayanagar / Nayaka (14th-18th century) times, but some Pallava era monuments (8th-9th century), with very little modification from those times, were discovered by Robert Sewell and others and recorded in Alexander Rea's book "Pallava Architecture." I have visited some before, but a while back I visited Kanchi with Arvind Venkatraman (his excellent collection of photos here) and saw the other temples I missed like Piravaatheesvarar, Airavatesvarar, Muktesvarar and the upper levels of Vaikunta Perumal temple). I wondered where the Tripurantakesvarar mentioned in Rea's book was - "between Kacchapesvara and the great Shiva temple", he says, the latter implying Ekaamresvarar. On Monday August 5, I wandered from Kaccapesvara towards Ekamresvara, in the side streets, and stumbled upon the Amaresvara temple, whose sketch by Rea and my photo are below. I am pretty sure this is the one - the architecture of the main temple is similar in every detail, including Nandi Mantapama & Bali peetam in the lowest photograph, though the sculptures on the walls have been lost. The temple gates were closed, so I couldn't go in and take photos of the back walls and panels, but I am sure that they are gone too, and only these modern depictions remain. The ASI seems unaware of this temple or don't want to mess with it as it is in active worship, and they have their plates full with the existing temples. Let us hope the main facade at least will not suffer damage - it's a beautiful structure. Sorry I couldn't take a better picture, but I was shooting through a grilled gate and a nearby resident started an interrogation session on my ancestry, qualifications, and future prospects - anyway I was keen to decipher inscriptions in Kailasanatha as my previous blogs note.

Postscript: Any courageous inspired tenacious brilliant explorer can discover a lost temple in a jungle, a ravine, or under the ocean. But to discover one in the middle of a city in everybody's sight - that takes an Ajivika Wallacian :-)
Alexander Rea's sketch - Tripurantaka temple north side

Gopu's photo - Amaresvara temple north wall
Amaresvara temple - Nandi Manadapam & Bali peetam


Thursday, 8 August 2013

Shri Raja Simha Pallavesvara

Shri Raja Simha Pallavesvara
On Monday, August 5th, I read my first Pallava grantha inscription in Kanchi Kailasanatha temple - "Shri Raja Simha Pallavesvara" the name of the deity, which includes the name of the temple's royal founder himself! Under the large Dakshinamurthy panel.

ஆகத்து மாதம் ஐந்தாம் நாள், திங்களன்று, காஞ்சி கைலாசநாத கோவிலில், முதன்முறையாக ஒர் கல்வெட்டை படிக்கமுடிந்தது. 

ஸ்ரீராஜஸிம்ஹபல்லவேஷ்வர” என்ற சொல்லை இங்கு படித்து, நோட்டு புத்தகத்தில் எழுதி, புகைப்படம் காணலாம்.

"Shankarashchira" (Shankara's head) and "salila" (sand) are the other two Sanskrit words I deciphered shortly afterwards. Apt, and a bit spooky, since, the temple is built with sandstone. It felt like Kailasanatha was playing divine calligraphic joke on me. :-)

ஷங்கரஷ்சிர” (ஷங்கரன் தலை), “ஸலில” (மணல்) என்ற இரு ஸ்ம்ஸ்கிருத சொற்களை பின் படித்தேன். கைலாஸ்நாதன் என்னை கிரந்தத்தில் கிண்டலடிப்பதாய் தோன்றியது.

புகைப்படம் எடுத்தது, ராஹுல் ஜவஹர்.
Photo by Rahul Jawahar

Correction: As Mr Dev (thank you) has pointed out, "salila" means water, not sand. 
திருத்தம்: ஸலில” என்ற சொல்லின் பொருள் “நீர்”, மணல் அல்ல. சுட்டிக்காட்டிய திரு. தேவிற்கு நன்றி

Here is a better picture of the name of the temple and the location of this inscription on the wall of the shrine below the Dakshinamurthy panel.




Friday, 2 August 2013

அலங்கார பல்லவ கிரந்த லிபி - Calligraphic Grantha

Kanchi Kailasanatha temple காஞ்சி கைலாஸநாதர் கோயில்
The Kailasanatha temple in Kanchipuram, built by RajaSimha Pallava has several inscriptions in the Sanskrit language. There are several sub-shrines in the temple, and beneath each sub-shrine, the nearly 300 titles of RajaSimha are etched four times. The temple is carved in sandstone, but there's a granite slab in the middle of each subshrine.
ராஜசிம்ம பல்லவன் கட்டுவித்த காஞ்சி கைலாசநாதர் கோவிலில் பல ஸமஸ்கிருத கல்வெட்டுகள் உள்ளன. மூலவர் சந்நிதியை சுற்றி பல உபசந்நிதிகளை காணலாம். ராஜசிம்மன் தன் 300 விருதுகளை இவற்றில் செதுக்கியுள்ளான்.  இந்த மணற்கல் (சரியான் சொல்லை தேடவேண்டும்) கோவிலில் உபசந்நிதிகளில் ஒரு கருங்கல் பலகையும் காணலாம்.


On this granite slab, the king's title is inscribed in DevaNagri, which was used to write Sanskrit in North India and is used to write Hindi and Sanskrit now. Just below it, on the sandstone, the king's titles are inscribed in Pallava Grantha, which was used to write Sanskrit in South India from around the 6th century. This is believed to be the mother script for Telugu, Kannada, Malayalam and Southeast Asian scripts. On the lowest layer, are inscriptions in calligraphic grantha nagari.

கருங்கல்லில் தேவநாகரியிலும், அதன் கீழே பல்லவ கிரந்த லிபியிலும், அதன் கீழே அலங்கார பல்லவ கிரந்த நாகரி லிபியிலும், ராஜசிம்மனின் விருதுகளை காணலாம். தேவநாகரி வட இந்தியாவில் ஸமஸ்கிருதமும் இன்று ஹிந்தி எழுதப்படும் லிபி – ரயில் நிலையங்களிலும் ரூபாய் நோட்டிலும் காணலாம். பல்லவ கிரந்தம் தென்னாட்டில் ஸமஸ்கிருதம் எழுத ஐந்தாம் நூற்றாண்டு முதல் பயன்பட்ட லிபி. தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளின் லிபிகளும், தாய்லாந்து, பர்மா, கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாட்டு மொழிகளின் லிபிகளும் இதிலிருந்த வந்தவை என்மனார் புலவர்.


Granite Slab - DevaNagari inscription
கருங்கல் - தேவநாகரி கல்வெட்டு

Sandstone - Pallava Grantha inscription - SriAtyudaara:
மணற்கல் - பல்லவ கிரந்த கல்வெட்டு ஸ்ரீ அத்யுதார
पल्लव ग्रन्थलिपि श्री अत्युदारः
I have shown photos on the left of these inscriptions, but they are from different subshrines and carry different words. Most of these inscriptions are irreparably damaged. Look carefully at the calligraphic grantha - the letters have creepers, birds, leaves, etc. worked elegantly and naturally into the script.
Calligraphic Nagari - "Sri Kalankarahita:"
"ஸ்ரீகலங்கரஹித:" -அலங்கார லிபியில்

                  अलङ्कार नागरि लिपि – श्री कलंकरहितः

கல்வெட்டுகள் மிகவும் சேதமானதால், வெவ்வேறு உபசந்நிதிகிளிருந்து தெளிவானதை பொறுக்கி காட்டியுள்ளேன். மூன்றிலும் சொற்கள் வேறானவை. கீழே உள்ள அலங்கார கிரந்தம் நாகரி அற்புதம் – கொடிகளும் இலைகளும் பறவைகளையும் சீராக எழுத்தை அழகூட்டி மிளிர்வதை பார்க்கலாம்.



Bhushavali's T Shirt design



Inspired by this, I requested Bhushavali to decorate  a T-shirt with this calligraphy and some simpler grantha inscriptions from the Dharmaraja Ratha in Mamallapuram. Here is her design – she used the same textile painting she taught the children at Summer camp this year. You can see me wearing the T shirt, at Vinobha hall in Thakkar Bapa Vidyalaya.

இந்த அழகை ரசித்து, தோழி பூஷாவலியிடம் இந்த எழுத்தையும், மல்லை தர்மராஜ ரதத்தில் உள்ள கிரந்த எழுத்தையும் வரைந்து கொடுக்குமாரு நான் கேட்க, அந்த சட்டையை நான் அணிந்துகொண்டு, டக்கர் பாபா பள்ளியில் தமிழ் பாரம்பரிய அரக்கட்டளையை அறிமுகம் செய்யும் படம் காணலாம்.

Correction: I had earlier captioned the calligraphic inscription in the sculpture and on my T-shirt as "Sri Kankalahasta:" After going through Gift Siromoney's translations provided by Vijay Kumar, I now believe it is "Sri Kalankarahita:" (which means Immaculate or Spotless).

திருத்தம்: கல்வெட்டிலும், என் சட்டையிலும் உள்ள அலங்கார பல்லவ கிரந்த லிபியை, நான் முன்பு தவறாக “ஸ்ரீ கங்கலஹஸ்த:” என்று கூறியிருந்தேன். விஜய்குமார் தந்த கிஃப்ட் ஸிரோமணியின் விருது மொழிபெயர்ப்புகளை படித்தபின், இந்த சொல் “ஸ்ரீகலங்கரஹித:” ("மாசிலா") என்று நம்புகிறேன். 

Second Correction August 6, 2014: What I thought was calligraphic Pallava Grantha is actually Calligraphic Nagari script. I have used strikeouts of the word Grantha and replaced with Nagari
இரண்டாம் திருத்தம் ஆகஸ்டு 6,2014: அலங்கார பல்லவ கிரந்தம் என்று நான் நினைத்தது, அலங்கார நாகரி லிபி. குறுக்குக்கோடிட்டு கிரந்தம் என்றச்சொல்லை அடித்து, நாகரி இன்று திருத்தியுள்ளேன்.


Close up of T shirt with calligraphy
Me and my Pallava Grantha T shirt