Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Wednesday, 1 March 2017

ஜிம்மி கார்ட்டரின் ஜனநாயகம்

ஆல் இந்தியா ரேடியோ போலவே, அமெரிக்காவில் நேஷனல் பப்ளிக் ரேடியோ (National Public Radio) என்று ஒரு வானொலி நிலையமுள்ளது. 1990களில் நான் சியாட்டிலில் வாழ்ந்த காலம். காரில் போகும் பொழுது அதை கேட்பேன். குறிப்பாக மதியம் “ஃப்ரெஷ் ஏர்” Fresh Air (புதிய தென்றல்) என்ற ஒரு நிகழ்ச்சியை ரசிப்பேன். டெரி கிராஸ் (Teri Gross) என்ற பெண்மணியின் நேர்காணல்கள் சிறப்பானவை.

ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டருடன் டெரி கிராசின் நேர்காணல். 1976 முதல் 1980 வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்ட்டர், 1960களில் ஜார்ஜியா மாநிலத்து தேர்தலில் போட்டியிட்டார். மாநில சட்டசபையில் மேலவைக்கு நடந்த அந்த தேர்தலில், ஒரு வாக்குச்சாவடியில் நடந்த சம்பவங்களை டெரி கிராசிடம் வானொலியில் நினைவு கூறிவந்தார்.

ஒரு சின்ன ஊர், அதில் ஒரு தொழிர்சாலை. அவ்வூரின் முக்கால்வாசி குடிமக்கள் அந்த தொழிர்சாலையில் தொழிலாளிகள். அதனால் அதன் வாசலிலேயே வாக்குச்சாவடி. தொகுதியிலுள்ள பல வாக்குச்சாவடிகளுக்கு சென்று கண்காணிக்கும் போது, அங்கே கொஞ்சம் எதிர்கட்சியின் ஆதிக்கம் அதிகம் என்று தெரிந்துகொண்டாராம். தொழிற்சங்கத் தலைவரும் எதிர்கட்சியின் முக்கிய புள்ளி, வாக்குச்சாவடியில் கண்காணிக்க உட்கார்ந்திருந்தாராம்.

தன் கட்சிக்காரர் யாரும் அங்கில்லை. வாக்குப்பெட்டியின் வாய் கொஞ்சம் அகலமானதாய் கவனித்தார் கார்ட்டர். ஏனென்று யோசிக்கும்போதே, ஒருவர் வாக்கை பதிவிட்டு சென்றார். சங்கத்தலைவர் கை அசைத்தார். அவரது தொண்டர் வாக்குப்பெட்டியில் கையைவிட்டு அந்த வாக்குச்சீட்டை எடுத்து தலைவருக்கு காட்டினார். நம்ம கட்சிக்கு தான் அந்த ஆள் வாக்களித்தான் என்று தலைவர் அமைதியானார். வாக்குசீட்டு மீண்டும் வாக்குப்பெட்டிக்குள்ளே சென்றது. என்ன அநியாயம் என்று கார்ட்டர் பொங்கியெழுந்தாராம்.

வானொலியில் டெரி கிராசும் தவளை போல் விக்கினார். லேசாக சிரித்தபடி நான் வண்டியோட்டினேன்.

கார்ட்டர் பாதி பொங்கும் பொழுதே அடுத்த வாக்காளர் வந்தாரம். அவர் ஒரு பெண்மணி. அவரிடம் தேர்தல் பணியாளர் ஒரு வாக்குச்சீட்டை தர அவர் இன்னொரு சீட்டை கேட்டாராம். எதற்கு என்று கேட்டால், என் கணவருக்கு உடல் சரியில்லை அவருக்கும் சேர்த்து வாக்குசீட்டு வேண்டும் என்றாராம். கேட்பதில் ஒரு நியாயம் இருப்பதை புரிந்து கொண்ட தேர்தல் பணியாளரும், இரண்டாம் சீட்டை கொடுத்தாராம். வட்டச்செயலாளர் வண்டுமுருகனை போல் அன்று தவித்த கார்ட்டர், இன்று கொஞ்சம் நிதானமாகவே இதை சொன்னார். டெரி கிராஸ் ஆச்சரியத்தில் ஜேஎன்யூ மாணவரை போல் அலறினார். எனக்கு சிரிப்பு தாளாமல் வண்டியை ஓரம் கட்டினேன்.

இரண்டு வாக்கையளித்த பெண்மணி சரியான கட்சிக்கு தான் வாக்களித்தாரா என்று தொண்டருக்கோ தலைவருக்கு பெரிதும் ஆர்வமில்லை. பெண்ணாச்சே!! ஒரு கண்ணியம்தான்.

அடுத்து ஒருவர் வந்தாராம். அவரும் இரண்டு வாக்குசீட்டு கேட்டாராம். கோவத்தோடு கார்ட்டர் அவரை பார்த்து, “என்ன உங்கள் மனைவிக்கு உடல் சரியில்லை அவருக்கும் சேர்த்து ஒரு வாக்கா?” என்றாராம். அவர் சாந்தமாக, “இல்லை அப்பாவுக்காக,” என்றாரம். “அப்பாவின் உடலுக்கு என்னவாம்?” என்று கார்ட்டர் வினவ, “இல்லை, அவர் இறந்து ஆறு மாதமாகிவிட்டது, அவர் எப்படி வந்து வாக்களிப்பார்?” என்றாராம்.

டெரியைவிட கொஞ்சம் நான் அதிகமாக சிரித்திருக்கலாம். நல்ல வேளை ஏற்கனவே வண்டியை ஓரங்கட்டிவிட்டேன்.

மந்தகாசமாக புன்னகை செய்த எதிர்கட்சி பெரிசை பார்த்து, “இந்த வாக்குச்சாவடியில் எத்தனை வாக்காளர்கள்?” என்று கார்ட்டர் கேட்க, அவர் “சுமார் 300 இருக்கும்,” என்றாராம்.

“உங்கள் கட்சிக்கு எத்தனை கிடைக்கும்?” – கார்ட்டர்.

“410 முதல் 420 வரை.”

நவரசத்தில் நான்கைந்து ரசங்கள் கார்ட்டரின் முகத்தில் கடுகு தாளித்திருக்கும். ஆனால் அதுவல்ல கதை. இதை யாவையும் மீறி அந்த தேர்தலில் கார்டர் வென்று சட்டசபை உறுப்பினர் ஆனார். சும்மாவா அமெரிக்கா வல்லரசாய் மிளிர்கிறது?

மற்ற தொகுதி கதைகளை அவர் பேசவில்லை. சட்டசபையில் இந்த பிரச்சனையை எழுப்பி, இறந்தவர் சார்ப்பில் மக்கள் வாக்களிக்கும் வழக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்று ஒரு மசோதாவை கார்ட்டர் பிறப்பித்தாராம். இதற்கு மற்ற உறுப்பினர்கள் எளிதில் சம்மதிக்கவில்லை. ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்களை அவ்வளவு சாதாரணமாக மாற்றிவிட கூடாது. காரசாரமான விவாதத்திற்கு பின், ஜார்ஜியா சட்டசபை ஒரு சமரசத்துக்கு வந்து புதிய சட்டத்தை இயற்றியது. அதன்படி, ஒருவர் இறந்தபின் மூன்று வருடம் வரை மட்டுமே அவரது குடும்பத்தார் அவர் சார்ப்பில் வாக்களிக்கலாம்.

இணையத்தில் தேடிப்பார்த்தால் இந்த் நேர்காணலின் ஒலிப்பதிவு கிடைக்கவில்லை. மசோதா சட்டம் தேட எனக்கு பொறுமையில்லை. நீங்கள் இதெல்லாம்  உண்மையா என்று சந்தேகப்படலாம். ஜிம்மி கார்ட்டர் சிவப்பாக இருப்பார். சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது தமிழர் அனைவருக்கும் தெரியும். நான் மாநிறம். இந்த மாதிரி பொய் சொல்லத்தெரிந்தால் எங்கேயோ போயிருப்பேன்.

பின்குறிப்பு 1  ஜூல்ஸ் வெர்ண் எழுதிய அற்புதமான நாவல் “எண்பது நாட்களில் உலகை சுற்றி” (Around the World in 80 days) – இதில் சான் பிரான்சிஸ்கோ நகரின் ஒரு தேர்தல் காட்சி சுவாரசியமாக நடைபெறும்.

கார்ட்டர் அருங்காட்சிகம் - செய்தி துண்டு

பின்குறிப்பு 2  கார்ட்டரின் கட்சி ஓபாமாவும் கிளிண்டனும் சேர்ந்த ஜனநாயக கட்சி. இக்கட்சிக்கே ஒரு நூற்றாண்டாக தொழிற்சங்கங்கள் வாக்களித்து வருகின்றன. என் நினைவில் வானொலியில் தன் கட்சிக்கே தொழிற்சங்க வாக்குகள் விழுந்ததாக கார்ட்டர் சொல்லியதாக நினைவு. 2015இல் அட்லாண்டா சென்றபோது படத்தில் காணும் செய்தி துண்டு கார்ட்டர் அருங்காட்சியகத்தில் கண்பட்டது.

மற்றும் சில முயல்  கர்ஜனைகள்


Monday, 18 July 2016

Science Yatra to the USA

Around this day last year, July 16, 2015, I visited the United States after a fifteen year hiatus. I lived, studied, and worked in the US between 1991 and 2000, when I returned to India , hoping to embark on a writing career, which never took off – I don’t think I have the discipline to be a writer. In 2000, I thought that what I wanted out of life was a career in a different field for every decade of my life. Now I realize that I need not have conceptually compartmentalized my life by decades. I can be interested in multiple things concurrently, though perhaps I cant really have a career in any of them.

Since I quit my software career, I have been mostly reading books, on a variety of subjects. Three subjects which I found boring in my teens and twenties, Art, Biology and Economics, have captured my attention in the last ten years or so. In the last couple of years, especially after reading Thomas Hager’s excellent book, The Alchemy of Air, on the Haber Bosch process, I have been fascinated by Chemistry and its modern history – and how poorly this history is explained to us or discussed in public fora.

But in the last few years, I have had a chance to travel to some parts of India, mostly visiting temples, more for their art, sculputre and painting, than for spiritual or religious pursuit. Occasionally, in India, I have visited places that provoke scientific curiosity or are famous for a scientist / mathematician, like :

·         the Calcutta Botanical Gardens
·         the Trivandrum Museum which has a marvelous Biology exhibit, especially, a superb Invertebrates section
·         Ramanujan museum in Royapuram, Madras
·         Ramanujan house in Kumbakonam
·         Vishveshvarayya Museum, Bangalore
·         Gass Forest Museum, Coimbatore, which has a fantastic butterfly collection
·         Gunduperumbedu fossil site, near Sriperumbudur, TN
·         Tiruvakkarai fossil site, near Vilupuram, TN

Unfortunately, except for the fossil sites, almost everything related to science in India, is of the British period or later. I would have loved to visit an Aryabhata museum in Bihar, a Varahamihira museum in Ujjain or a Brahmagupta musuem in Rajasthan – or even their birthplaces. We have no such thing; there are even scholarly disputes over where they were born or which city they lived in.

Anyway, ever since I read books like Charles Darwin’s Voyage of the Beagle, Alfred Russel Wallace’s Contributions to the Theory of natural selection, Jared Diamond’s Guns, Germs and Steel and perused portions of Henry Bates’ Naturalist on the River Amazons, Alexander von Humboldt’s Personal Narrative of a Journey to the Equinoctial Regions of a New Continent, and most influentially, Iain McCalman’s book Darwin’s Armada, I developed the urge to travel the world, and see its scientific treasures, not just its artistic wonders or other monuments, mostly political. My innate laziness, ridiculous visa hassles, extreme fussiness and wariness over food, and lack of like-minded travel companions have held me back from doing indulging. I’ve wanted to visit Europe, especially Germany, Greece and Italy for the last three years. Similarly Brazil, Mexico, China, Japan, and of course, in the footsteps of Wallace to the islands of Indonesia. I’m even quite tempted to visit Baghdad, scientific centre of the 8th and 9th centuries, though it’s perhaps not suitable now. And Khwarizem, home of two all times greats, Muhammad bin Musa al Khwarizmi and Muhammad bin Ahmad al Biruni.

Considering all this, it was simply easier to visit the US. I already had a visa, and I could see friends and family there. Also food is not a problem in the USA, and I was looking forward to various cuisines I became accustomed to in the years when I lived there. I had a multi-city tour planned, which didn’t work out, because I had some problem renting a car, but it turned out to be good luck, because this way I spent less time traveling between cities and more time visiting actual places of interest. Everywhere I went, except LA, I ended up staying with family.

These are the places of scientific interest which I visited in the US

·         July 24 - Golden Gate Park, San Francisco
·         July 25 - Botanical Garden in the Golden Gate Park
·         July 27 - Stanford University campus tour, Palo Alto
·         July 28 - Computer History Museum, Mountain View, California
·         Aug 1 - Atlanta Botanical Garden
·         Aug 6 - Natural History Museum, Washington DC
·         Aug 7 - Aviation and Space Museum, Washington DC
·         Aug 9 - Benjamin Franklin Museum, Philadelphia
·         Aug 10 - American History Museum (Edison exhibit), Washington DC
·         Aug 13 - Norman Borlaug Center, College Station, Texas

I started the visit with a tour of popular tourist spots in southern California – Seaworld in San Diego and Disneyland and Universal Studios in Los Angeles. The tour of the Library of Congress, especially its paintings and statues turned out to be as substantially about a vision of Science, as of books in general. I got a lot of advice from various people on places to visit, but I haven’t written about most of the places I visited, yet, except San Francisco Botanical Garden and the first Google computer at Stanford. And Facebook has started to toss up memories from last year. I will write about some of these in the next couple of months. I regret not going again this summer; I should have planned visits to Chitchen Itza and Tenochtitlan and of course, the Burgess Shale, in Canada.

If you have undertaken a Science Yatra of some sort, please let me know. I’d love to read about it, and perhaps visit the sites.

US Science Yatra Essays

ஞானதேவதைகள்The paintings in the Library of Congress (in Tamil)

India Science Yatra Essays

Midnight Sun in Sriharikota – An Indian Rocket launch
சொர்கத்தின் பறவைகள் Indonesian Birds of Paradise My Book review (in Tamil) of Darwin's Armada 
Video of my lecture on Astronomy of Ancient Cultures

Wednesday, 6 April 2016

ஞானதேவதைகள்

அமெரிக்கா ஒரு அறிவியல் நாடா ஆன்மீக நாடா? கிறுஸ்துவ நாடா மதச்சார்பற்ற நாடா? மரபு போற்றும் நாடா முற்போக்கு நாடா?

கல்லூரி காலத்து கலை ஆர்வம்

நான் 1991இல் படிக்க அமெரிக்கா செல்லும் வரை, அந்நாட்டை அறிவியல் துறையில் தலைத்தோங்கும் நாடென்றே நினைத்துவந்தேன். எடிசனின் நாடு, பெஞ்சமின் ரைட் சகோதரர்களின் நாடு, கம்ப்யூட்டர் உகம் படைத்த நாடு, நோபல் பரிசுகளை அள்ளி குவிக்கும் நாடு, மேற்படிப்புக்கு ஈடு இணையற்ற நாடு, அற்புதமான சினிமாக்களை தயாரிக்கும் நாடு, ராணுவ வல்லரசு, பொருளாதார வல்லரசு, வசதிகளும் பேச்சுரிமையும் பல வித சுதந்திரங்களும் கோலோச்சும் நாடு என்றெல்லாம் நம்பினேன். இவை முக்கால்வாசி அங்கே உண்மையாகவே இருந்தன. 

கலை ஓவியம் சிற்பம் பாரம்பரியம் பற்றி பெரிதாக அப்போது எனக்கு ஆர்வம் இல்லை. அமெரிக்காவில் அவற்றை தேடவேண்டும் என்ற எண்ணமே இல்லை. அப்பொழுது கணினித்துறை படிப்பில்தான் ஆர்வம். சினிமாவில் பலவிதத்தில் பார்த்திருந்தாலும், நேரில் கண்ட செல்வ கொழிப்பு பிரமிக்கவைத்தது. பெரிதாக கவர்ந்தது தொலைகாட்சி பெட்டியே. 1991இல் தூர்தர்ஷண் மட்டுமே பாரத்தில் தொலைகாட்சி. ஸ்ரீவில்லிபுத்தூரில் படிக்கும் போது அங்கே விடுதியில் இலங்கை ரூபவாஹிணியில் தமிழ் மற்றும் அமெரிக்க ஆங்கில தொடர்களை பார்க்க நேர்ந்தாலும், அமெரிக்காவில் கண்ட ஐம்பது தொலைகாட்சி சேனல்களும் மற்ற கலைகளை பற்றிய எண்ணத்தையே உருவாக்கவில்லை.

டாவின்சியும் மைக்கலேஞ்சலோவும் ஏதோ வரலாற்று நபர்கள். அவர்களது ஓவியங்கள் பெரிதும் அழகாக எனக்கு இன்றுவரை தோன்றுவதில்லை. நார்மன் மெய்லர், ஜாக்சன் பால்லாக் போன்றவர்கள் பிரபலமானாலும், அதிலும் ஈடுபாடே இல்லை. இயற்கை எழிலுக்கு அவை போட்டியே இல்லை என்பது அன்றைய மனப்பான்மை. 1999இல் டாவின்சியின் நூல்களை சியாட்டில் அருங்காட்சியகத்தில் வைத்தபோது பார்க்க ஆசையிருந்தாலும் கூட்டத்தை கண்டு மிரண்டு போகவில்லை. அந்நகரத்து ஃப்ரை அருங்காட்சியகத்தில் வேன் கோ, ராஃபாயல், ககேன், மோனே, ரெம்ப்ராண்ட் வேறு சிலரின் ஓவியங்களை கண்டேன்; நுண்கலை உணர்வே எனக்கு இல்லை; ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ளவில்லை; அவற்றில் ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. 

உண்மையில் குமுதம் விகடன் கல்கி கதைகளுக்காக வரையப்பட்ட படங்களும், சூப்பர்மேன் பேட்மேன் டிண்டின் ஆஸ்டெரிக்ஸ் கேல்வின் & ஹாப்ஸ் போன்ற காமிக்ஸ் எனப்படும் தூரிகை படங்கள் தந்த மகிழ்ச்சியை அந்து உலக புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் தரவில்லை. நவீன கலை நகைச்சுவை பொருளாகவே தெரிந்தது.

அமெரிக்க தேசிய நூலகம்

சென்ற 2015இல் அமெரிக்காவுக்கு சுற்றுலாவாக சென்றேன். அறிவியல் யாத்திரை என்றே மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கங்கே கலைகளையும் பார்த்து ரசிக்க நேரந்தது. குறிப்பாக  நான்கு நாட்கள் வாஷிங்டன் நகரின் அருங்காட்சியகங்களிலும், அந்நாட்டு பாராளுமன்றத்தின் நூலகத்திலும் சிற்பங்களும் ஓவியங்களும் பல கதைகள் சொல்லின. 

காங்கிரஸ் என்ற பெயர்கொண்ட அமெரிக்க பாராளுமன்றத்திற்கு ஒரு தனி நூலகம் தேவை என்று கருதி, மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபெர்ஸன் (நற்றமழில் தாமசு செப்பர்சன்) நினைத்து அதை அமைத்தார். பின்னர் அது மிக முக்கிய நூலகமாக மாறியது. தெய்வ நம்பிக்கையுள்ள மதசார்பற்ற அரசை உருவாக்கவேண்டும் என்பது அமெரிக்க குடியரசின் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தை சமைத்தவர்க்கும் தோன்றிய ஒரு முக்கிய கருத்து. அவர்கள் பெரும்பாலும் கிறுத்துவர்களாகவே இருந்தனர்; ஆனால் கிறுத்துவத்தின் பல்வேறு பிறிவுகளை சித்தாந்தங்களை சேர்ந்தவராயிருந்தனர். அரசும் சமூகமும் அமைக்க ஜூலியஸ் சீஸருக்கு முந்தைய ரோமாபுரி குடியரசும் ஏதென்ஸ் சைரக்கியூஸ் போன்ற கிரேக்க நகரங்களும் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தன.

முதலில் அமைத்த நூலகத்தை 1812இல் நடந்த போரில் பிரித்தானிய படை எரித்துவிட்டது. அந்தப்போரிலும் அமெரிக்காவே வென்றது. எரிந்த நூலகத்தை மீட்டமைக்க தாமசு செப்பர்சன் தன் சொந்த நூல்களை தானம் செய்தார். அதை வைத்து பல ஆண்டுகள் நடத்தினர். பெரும் நூலகம் ஒன்றைகட்ட நிதி ஒதுக்கி பின்னர் 1897 அதை கட்டி முடித்தனர். அதுவே நாம் இன்று காணும் நூலகம்.


காங்கிரஸ் நூலகம் முகப்பில் ஜெயராமன்

கலைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் இத்தாலியில் தொடங்கிய மறுமலர்ச்சி காலம் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. அறிவியலில் ஃப்ரான்சிஸ் பேக்கன், கெலீலியோ, ரெனே தேகார்த், ஐசக் நியூட்டன், ஜான் ஹூக், ராபர்ட் பாயில், வோல்டேர் ஆகியோர் வளர்த்த தத்துவங்கள் ஒரு ஊக்கத்தை தந்தது. அக்காலத்து மாபெரும் அறிவியல் மேதாவி பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு முக்கிய சுதந்திர போராளி. இந்திய விடுதலை போராளிகளுக்கு ரவீந்திரநாத் தாகூரை போல், அவர் ஒரு வழிகாட்டி. ஜனநாயகம் செழிக்க அதன் பிரதிநிதிகளுக்கு கல்வியும் தகவலும் முக்கியம் என்பதால் இதை பிரதிபலிக்கும் விதத்தில் காங்கிரசின் நூலகத்தை அமைத்துள்ளனர்.

மகாமண்டபத்தில் ஓவியங்கள்

ஓவியப் பாவைகள்

அழகும் பிரம்மாண்டமும் செல்வமும் மிளிரும் வகையில் நூலகத்தின் கட்டட கலையும் அலங்காரமும் அமைந்துள்ளன. கண்ணாடி ஜன்னல்களின் அமைப்பும் கூறை ஜன்னல்களின் அமைப்பும், தூண்களின் கம்பீரமும், பார்ப்பவரின் கண்ணை பறிக்கும்.

இதில் கிறுஸ்துவ சின்னங்கள் ஏதும் மையமாக இல்லை. தேசிய சின்னங்கள் என்றுகூட எதையும் சொல்லமுடியாது. சுதந்திர போராட்டத்தை சித்தரிக்கும் ஓவியங்களோ, தலைவர்களின் ஓவியங்களோ, நாட்டின் இயற்கை எழிலோ ஏதும் இல்லை.

மாறாக, நூலக மகாமண்டபத்தின் சுவர்களில் ஞானதேவதைகளின் ஓவியங்களை தீட்டியுள்ளனர். பல்வேறு செல்வங்களை நாம் அஷ்டலக்ஷ்மியாக ஐதீக மரபில் கொள்வது போல் தொன்மையான கிரேக்க மக்களும் ரோமாபுரியினரும் பல தெய்வங்களையும் தேவதைகளையும் வழிப்பட்டனர். அந்த தெய்வங்களை தழுவாமல், ஆனால் அந்த மரபை தழுவி, கணிதம் விண்ணியல் புவியியல் தாவரவியல் விலங்கியல் ரசாயனம் என்று தலா ஒரு பெண் வடிவம் அமைத்து சுவற்றின் மேல் ஓவியங்கள் தீட்டிப்பட்டுள்ளன. கலைகளுக்கும் பல்வேறு ஓவியங்கள் உள்ளன. இந்திய மரபில் பருவங்கள் ஆறு; ஐரோப்பாவில் நான்கு – வசந்தம், கோடை, இலையுதிர், பனிக்காலம். இவை நான்கும் சிற்பமாகவும் ஓவியமாகவும் உள்ளன.
உடற்பயிற்சியும் விளையாட்டும் கிரேக்க காலத்திலிருந்து முக்கியமாக கருதப்பட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் நினைவாகவும் இரண்டு ஓவியங்கள் உள்ளன.

பழமொழிகளும் பொன்மொழிகளும் மரபின் அடையாளங்கள். ஷோக்ஸ்பியர் ஜெஃபெர்சன் போன்றவரின் பொன்மொழிகளை கல்வெட்டாய் செதுக்கி, அவற்றிற்கும் ஓவியப்பாவை வடிவம் அமைத்துள்ளனர்.

பார்க்கும் இடமெல்லாம் சிற்பங்கள் ஓவியங்கள். பளிச்சிடும் பளிங்கு தூண்களும், வெளிச்சத்தை பரப்பும் கண்ணாடி ஜன்னல்களும், சுவரிலும் கூறையிலும் போதிகைகளிலும் வண்ண

ஒளிமயமான அஜந்தா என்றே சொல்லலாம்.


தொல்லியல் தேவதை விண்ணியல் தேவதை
ரசாயன தேவதை புவியியல் தேவதை
கணித தேவதை இயற்பியல் தேவதை
இருபுறமும் அறிவியல் தேவதை ஓவியங்கள்


ஞான தேவதைகள்

அறியாமை ஒரு சாபம், வானுலகம் எய்த ஞானமே சிறகு

ஒத்துழைப்பு வீரம்
முயற்சி தேசபக்தி

வழிகாட்டும் சான்றோர்

இவற்றையெல்லாம் விளக்க, ஆர்வமும் வரலாறும் பேச்சுத்தெளிவும் அயரா பண்பும் கொண்ட பல வழிகாட்டிகள் சுற்றுலா வந்தோரை, பத்து நிமிடத்து ஒரு சுற்றுலா குழு வீதம், வழிநடத்தினர். பல்வேறு நகரங்களில் கண்ட பெரும் சிறப்பு இது. அமெரிக்காவின் வழிகாட்டிகளை நம்மை வியக்கவைக்கின்றினர். பாரதத்தில் பெரும்பாலும் இப்படி இல்லையே என்ற ஏக்கத்தில் நம்மை மூழ்கடிப்பார்கள். தம் நாட்டு வரலாற்றிலும் சாதனைகளிலும் பெருமை கொண்டவர்களாயினும், அவர்களின் நடுநிலைமை புகழதக்கது. என்னாட்டவர்க்கும் எக்கலைஞர்க்கும் சான்றாக திகழ்கிறார்கள்.

நூலகத்தில் வெவ்வேறு கண்காட்சிகள் உள்ளன. தாளில் முதல் அச்சிடப்பட்ட விவிலிய நூல் ஒன்றுள்ளது. செவ்விந்தியரின் மரபையும், முதலில் அமெரிக்கா வந்திறங்கிய இசுபானிய தேசத்தோரின் பண்டங்களும், மற்றும் பல பிறிவுகளும் உள்ளன. அதை வேறுமுறை அலசலாம்.

கலைவாணி மினெர்வா

வெளிமண்டபத்தை தாண்டி உள்ளே சென்றால் அற்புதமான ஒரு படிக்கும் அறை உள்ளது. இதற்கு போகும் வழியில் சுவர் உயர மினெர்வாவின் ஓவியம் நம்மை வரவேற்கிறது. 

மினெர்வா கலைகளின் தேவதை, சரஸ்வதிக்கும் சமம்.

கலைவாணி மினெர்வா
படிக்கும் அறையின் இரண்டாம் மாடிக்கு சென்று சுற்றுலா பார்க்க மட்டும் ஒரு பலகணி அமைத்துள்ளனர். சுற்றுலா வருவோருக்கு வட்டமான படிக்கும் அறைக்கு தரை தளத்தில் செல்ல அனுமதி இல்லை; அது ஆய்வாளர்களுக்கு மட்டுமே. அந்த வட்ட அரையின் விமானம் மசூதிகளை போல் வானியல் மையங்களைபோல் அரைகோளம். அங்கே பல சிற்பங்களும், கூரையில் ஒரு அசாத்திய ஓவியமும் உள்ளன. பின்னர் ஒரு நாள் அவற்றை பற்றி எழுதுகிறேன்.

ஒளிமயமான மகாமண்டபம்

சுட்டிகள்



Sunday, 6 March 2016

தோண்டாமை

பிறவாமை நன்று, பிறந்தால் உன்னை மறவாமை நன்று என்று ஔவை சிவனிடம் வேண்டுவதாக திருவிளையாடல் சினிமா வசனம் நினைவிருக்கலாம்.

தீண்டாமை  ஒழிப்பது நன்று, ஊரெங்கும் தோண்டாமை நன்று.

பாதாள குழாய்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் இங்கிலாந்தில் பாதாள சாக்கடைகள் கட்டி அதனால் காலரா போன்ற வியாதிகளும் குறைந்ததால்  சென்னையிலும் பாதாள சாக்கடை அமைக்க அக்காலத்து மதறாஸ் ராஜதானி அரசு முடிவெடுத்தது. இதை தொடர்ந்து பாரதத்தில் எங்கும்,  முதலில்  பெருநகரங்களிலும், பின்னர் மற்ற நகரங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தொடங்கின.

இன்று 2016ஆம் ஆண்டிலும் பல நகரங்களில் தெரு ஓரங்களில் திறந்த சாக்கடைகளை பல நகரங்களில் காணலாம். மழைநீர் வடியவும் இல்லங்களின் கழிவு பொருட்களையும் இவையே அகற்றுகின்றன. சென்னையில் மட்டும், குடிநீர் கொண்டுவரும் குழாய்களும்,  மழைநீர் வடியும் குழாய்களும், தனியாக சாக்கடை  குழாய்களும் சாலைகளின் கீழே தோண்டி நிறுவப்பட்டவை. எப்பொழுதாவது இவை உடைந்து குடிநீர் குழாய்களில் சாக்கடைநீர் வரும் அவலமும் புதிதல்ல.

செய்திகளையும் வரலாற்றையும் விட நாம் கதைகளில் ஆர்வமும் ஈடுபாடுமுள்ளவர் என்பதால், அசோகமித்திரனின் தண்ணீர் கதையில் இச்சம்பவங்கள் வரும் என்றும் வாசகரிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆரம்ப காலத்தில் மின்சார கம்பிகளும், தொலைப்பேசி கம்பிகளும், தெருவோர கம்பங்களில் பூட்டப்பட்டன. பின்னர் இவையும் பாதாள குழாய்களில் புதைக்கப்படன. இணையதளத்துக்கான கண்ணாடிகம்பி குழாய்களும் அவ்வாறே. கேபிள் டிவி கம்பிகள் மட்டுமே மரங்களை தழுவிக்கொண்டு கோலோச்சுகின்றன.

புதிதாக சாலை போட்டால் சில நாட்களிலேயே அங்கே மின்சாரத்துறையோ தொலைப்பேசித் துறையோ குடிநீர் சாக்கடை துறையோ அங்கும் தோண்டி சாலையை பாழாக்கும் என்பது இந்திய ஜனநாயக மரபு. ஒப்பந்த நிறுவனங்கள், அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆதியோரின் கிம்பளத்தில் இது முக்கிய பங்கு என்பது மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள யதார்த்தம்.

எந்த சாதி?

சாக்கடைகளை கழுவ துப்புறவு தொழிலார் இறங்குவதும், அவ்வப்போது ஓரிருவர் விஷவாயுகளால் இறப்பதும் சோகமான யதார்த்தங்கள். . நாவல்கள் கிடக்கட்டும், அசோகமித்திரன் எழுதாத பல சினிமாக்களிலும் இச்சம்பவங்களுள்ளன.

சில சாதி மக்களே சாக்கடையில் இறங்கி பணிசெய்வார்கள் – அவர்களை பற்றிய புள்ளிவிவரம் நாளிதழ்களிலோ பத்திரிகைகளிலோ என்றும் அச்சிடப்படாது; ஆனால் அவர்களெல்லாம் பட்டியல் சாதியகள் என்பது அனைவரின் பொது நம்பிக்கை. சாதி எதிர்ப்பு அரசியலுக்கும் மேல் சாதிகளை குறிப்பாக பிராமணர்களை பழி சொல்ல ஒரு முக்கிய காரணமும் இதுவே.

ஒரு கேள்வி மட்டும் எழுவதில்லை. மேலைநாடுகளில் பாதாள சாக்கடையில் யாரும் இறங்குவதோ உடல்நனைத்து வியாதியால் தவிப்பதோ விஷவாயுவால் இறப்பதோ நாம் கேள்விப்படுவதேயில்லை. அதே போல் பாரதத்தில் தோண்டுவதே என் பிறப்புரிமை என்று பலரும் நம்புவது ஏன்? கூடவே நின்று குழிபறித்தால் அவன் துரோகி. கூலி வாங்கி குழிபறித்தால் அது அரசாங்கம்.

நம் நாளிதழ்களிலும் (உலகெங்கும் தான்) தொலைகாட்சி செய்தியிலும் வரும் செய்திகளை விட வராத செய்திகளே முக்கியமானவை என்று தோன்றுகிறது. ஓரளவுக்கு மேல் மனிதர்களால் உண்மையை தாங்கிக்கொள்ளமுடியாது என்று டி.எஸ்.எலியட் சொன்னார். நாள்தோரும் உணர்கிறேன்.

காணாத காட்சிகள்

நான் அமெரிக்காவில் 1991 முதல் 2000 வரை ஒன்பது வருடங்கள் வாழ்ந்தேன். அந்நாட்டிலுள்ள சாலைகளின் தூய்மையை நாம் சினிமாவில் பார்த்துள்ளோம். அது மக்களின் ஒழுக்கம் மட்டுமல்ல. அங்கு சாலை பணி நடந்தால் சரியாக நடப்பதும், தோண்டி புதைகுழிகளை வைக்காமல் விடுவதும் ஒரு காரணம். அகலமான சாலைகளையும் அகலமான நடைபாதைகளையும் காணும் போது நம்நாட்டில் இல்லையே என்று ஒரு ஏக்கம் வரும். தலை வெட்கி குனியும்.


சான் ஃபிரான்சிஸ்கோ - அகல சாலை

ஃபிலடெல்ஃபியா - சாலையில் பாதாள மூடிகள்
சான் ஃபிரான்சிஸ்கோ - அகலமான நடைபாதை

1991-2000 காலத்தில் பெரும்பாலும் கேமரா வைத்திருக்கவில்லை. இணையதளமோ வலைப்பூவோ முகநூலோ இல்லை. 2015இல் சுற்றுலா சென்றபொழுது கையில் செல்போன், கேமரா, நடக்கும் பாதைகளில் நடைபாதைகளிலும் சாலைகளிலும் புதைக்கப்பட்ட பாதாள சாக்கடைகளின் மூடிகளை படமெடுத்தேன். அந்நாட்டில் எங்கும் கையில் கடபாரையுடன் ஒருவரையும் காணமுடியாது. சாலைகளில் கொப்பளித்து நிற்கும் சாக்கடை மூடிகளோ, அவலமான நடைபாதைகளோ, ஒன்றும் இல்லை.

இத்தனைக்கும் தொலைபேசி மின்சாரம் இணையதள குழாய்கள் எல்லாம் குடிநீர் சாக்கடை குழாய்களை போல் பாதாள வழியே உள்ளன. பல ஊர்களில் இல்லங்களுக்கு சமையல் எரிவாயு கூட பாதாள குழாய்கள் வழியாகவே வரும். உதாரணத்திற்கு, இந்த படம் – சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு நடைபாதையில் தண்ணீர், மின்சாரம், எரிவாயு, தொலைகாட்சி குழாய்களின் நுழைவாயில் மூடிகளை காணலாம்.


சான் ஃபிரான்சிஸ்கோ - நடைபாதையில் பாதாள குழாய்களின் மூடிகள்
SFWD – San Francsico Water Department – சான் பிரான்சிஸ்கோ குடிநீர் வாரியம்

PG&E Pacific Gas & Electric – பசிஃபிக் கேஸ் & எலெக்ட்ரிக் (தனியார் கம்பெனி)

Street Lighting – நகராட்சியின் தெருவிளக்கு வாரியம்

நகராட்சிகளும் ஊராட்சிகளும் அமெரிக்காவிலெங்கும் சிறப்பாகவே இவற்றை செய்கின்றன. நீட்டி நிற்கும் குழாய்கள், மின்சார கம்பிகள், சாலைக்கு அம்மைவந்தது போல் கொப்பளித்து நிற்கும் சிமெண்ட் மூடிகள், திறந்து வைக்கப்பட்டுள்ள மூடிகள் இதை எங்குமே காணமுடியாது. நகரங்களில் மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களிலும் இதை காணலாம். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் மழைநீர் வடிகால பாதாள குழாய் மூடியில் பலகலைகழகப்பெயர் உள்ளது. இது ஒரு தனியார் பல்கலைகழகம். டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலைகழகத்தில் புல்வெளியில் கூட பாதாள குழாய் மூடிகள் சீராக உள்ளன.



இதெல்லாம் பாரதத்தில் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை யாரும் எழுப்புவதில்லை.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகம் - பாதாள மழைநீர் குழாய் மூடி

டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகம் - புல்வெளியில் பாதாள மூடிகள்
அட்லாண்டாவில் ஒரு படம். மழைநீர் வடிய சாலையோரம் எவ்வளவு லாவகமாக நடைபாதைகளில் வழிவகுக்கப்பட்டுள்ளன.  தனியார் நிறுவனங்களும் அரசு வாரியங்களும் ஒத்துழைத்து சீராகவே செய்துள்ளனர்.


அட்லாண்டா - மழைநீர் வடிகால் வழி
அமெரிக்கா பணக்கார நாடு, இந்தியா ஏழை நாடு என்ற வாதத்தை இவ்விஷயத்தில் நான் ஏற்க தயாராகயில்லை. இந்தியாவில் செல்போன்கள் (அறுபது கோடி செல்போன்கள்) கழிவறைகளை மிஞ்சிவிட்டன என்பவர், இந்திய செல்போன்கள் அமெரிக்க செல்போன்களை மிஞ்சிவிட்டன் என்று சொல்வதில்லை. அமெரிக்க ஜனத்தொகை சுமார் முப்பது கோடி. ஆளுக்கு இரண்டு செல்போன் வைத்திருந்தால்கூட, இந்திய செல்போன் எண்ணிக்கை அமெரிக்காவை மிஞ்சிவிட்டது. அறுபது கோடி மக்களுக்கு செல்போன் வசதி செய்து தர திறனுள்ள நாட்டிற்கா கம்பிகளை புதைக்கவும், குழாய்களை பழுதாகாமல் காக்கவும் திறமையில்லை? ஊழல் அமெரிக்காவிலும் பரவியே உள்ளது. இல்லினாய் மாநிலத்து நான்கு ஆளுநர்கள் ஊழல் செய்ததால் சிறையிலுள்ளனர். முட்டாள்கள் – சட்டம்போட்டு ஊழல் செய்வதே அமெரிக்காவில் சிறந்த ஊழல் வழி. பரவலாகவே நடக்கிறது. ஆனால் என்ன ஊழல் செய்தாலும் தோண்டாமை பலமாக உள்ளது. தீண்டாமை இல்லை.

இங்கு தீண்டாமையை எதிர்த்து கர்ஜிப்போர் எவரும் தோண்டாமையை கிசுகிசுப்பதில்லை.

நரேகா - மன்ரேகா

மன்மோகன் சிங் அரசு கிராமப்புர வறுமையை ஒழிக்கவும், ஏதோ வேலை அமைக்கவும் ஜான் மேனார்ட் கீன்ஸின் கொள்கையை பின்பற்றி, ஜான் ட்ரீஸ் அறிவுறையில் தேசிய கிராமிய வேலை உறுதி சட்டமும் திட்டமும் – National Rural Employment Guarantee Act (NaREGAநரேகா - வகுத்தது. பின்னர் இதற்கு மகாத்மா காந்தியின் பெயர்வைக்கப்பட்டு, (Mahatma Gandhi NREGA = MaNREGA) மன்ரேகா ஆனது. பஞ்ச காலத்தில் இவ்வகை திட்டங்கள் நியாயமானவை – பக்கிங்ஹாம் கால்வாய் கட்டியதும் அக்காலத்து பஞ்ச நிவாரண திட்டமே. இதை பற்றி நரசையா எழுதிவருகிறார். (பக்கிங்ஹாம் கால்வாய் ஒரு ஏமாற்று வேலை என்று ஜெயமோகன் கூறுகிறார். இதை நான் ஏற்கவில்லை.) 1929 இல் அமெரிக்காவில் நடந்த பொருளாதார சரிவை ஈடுகட்ட கீன்ஸ் சித்தாந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூசவெல்ட் இவ்வழியில் பல திட்டங்களை வகுத்தார். “வெறும் குழியை தோண்டி, மீண்டும் அதை மூட வேலை கொடுத்து, அதற்கு சம்பளம் கொடுத்தும், பஞ்ச நிவாரணம் செய்யலாம்,” என்பது கீன்ஸின் வாதம். 

ஆனால் மன்ரேகா பஞ்ச நிவாரண திட்டமல்ல. வேலையின்மை நிவாரணம்; வருமான குறைவு நிவாரணம்; விலைவாசி ஏற்ற நிவாரணம். கிராம மக்கள் நகரங்களுக்கு குடிபெயராமல் கிராமங்களிலேயே வாழ ஒரு திட்டம்.

2014இல் ஆட்சிக்கு வந்தபின் இத்திட்டத்தை நரேந்திர மோதி கிண்டல் செய்தார். “அறுபது ஆண்டு சுதந்திரத்திற்கு பின் குழி தோண்ட கூலி தருவதே உங்களால் முடிந்த சாதனை அல்லவா,” என்று காங்கிரஸை மக்களவையில் கடிந்தார். ஆனால் 2016 நிதி அறிக்கையில் இந்த மன்ரேகா திட்டத்திற்கு அதிக பணம் ஒதுக்கியுள்ளார். 

வரப்புயர என்றாள் ஔவை. குழி தோண்டுக என்கிறது ஜனநாயகம்.

இது மோதியின் திறமையின்மையாக இருக்கலாம். ஆனால் அதைவிட பெரிய ஒரு கசப்பான உண்மை என்று நான் நினைக்கிறேன். ஒரு சில கோடி மக்களுக்கு இதை போன்ற கடினமான கைக்கூலி தொழிலை தவிற வேறு எதுவும் செய்ய திறமையில்லையோ என்று அஞ்சுகிறேன். இல்லை மற்ற திறமைகளை வளர்க்க பொறுமையில்லையோ? அது போன்ற திறமைகளை கற்றுக்கொள்ள வாய்ப்புகளோ வசதிகளோ இல்லையோ? தொழில்நுடபத்தின் அதிவேக முன்னேற்றங்களால், அப்படி தொழிற்கல்வி பெற்றாலும், அது குறுகிய காலத்தில் காலாவதியாகி, வீண்செலவாக மட்டுமே இருக்குமா? தெரியவில்லை.

ஆனால் நகரங்களில் சாக்கடைகளில் குளிப்பதும் விஷவாயுவில் துப்புறவு தொழிலார் உயிரிழப்பதும் சாதியினால் மட்டுமல்ல. சாதி அரசியல் செய்வோருக்கு இது வசதியற்ற உண்மை. இதை பேசாதது அரசின், செய்தியாளரின், நிர்வாகத்தின், அறிவுஜீவிகளின், சமுதாயத்தின் அபார போலித்தனம்.

சுருக்கமாக, தோண்டாமை வந்தால் தீண்டாமையின் ஒரு அம்சம் போகும் என்பது என் வாதம். ஆனால் தீண்டாமை ஒழிந்தாலும் தோண்டாமை விடியாது என்பது என் சந்தேகம். மீண்டும் மீண்டும் அதே இடத்தில் தோண்டி நிரப்புவரின் பெருஞ்செல்வம், 2ஜி, 3ஜி ஊழலில் பேசப்பட்டதை விட பெரும் தொகை என்பது என் கணிப்பு. 

ஊழல் எழுப்பும் ஆத்திரத்தை யதார்த்தம் தூண்டுவதில்லை.


சில கட்டுரைகள்

9. ஜெயமோகன் உரை - காணொளி - 11 நிமிட அளவில் பக்கிங்ஹாம் கால்வாய் பற்றி அவர் கருத்து 


Wednesday, 21 October 2015

புரட்சி குடிமகன்

ஏப்ரகாம் லிங்கனை வெள்ளை மாளிகையில் ஒரு வெளிநாட்டு தூதுவர் பார்க்கவந்தாராம். லிங்கன் தன் காலணியை துடைத்து கொண்டிருந்தாராம். ஒரு ஜனாதிபதிக்கு இந்த சேவை செய்யக்கூடவா ஆளில்லை என்று அதிசயித்த தூதுவர், “மிஸ்டர் லிங்கன், உங்கள் ஷூவை நீங்களேவா பாலிஷ் செய்கிறீர்கள்?” என்று வினவ, “ஏன், உங்களுக்கு யார் ஷூவை பாலிஷ் செய்து பழக்கம்,” என்று லிங்கன் பதிலளித்தாராம். தன் கையே தனக்குதவி என்பது அமெரிக்க கலாச்சாரம். தன்னுடைய ஷூவுக்கு என்னை பாலிஷ் செய்ய கட்டளையிட்டுக்கொண்டே என் அப்பா இந்த கதையை பல முறை சொல்லியுள்ளார். சில சமயம் தானே பாலிஷ் செய்யும் பொழுதும் சொல்லியுள்ளார். பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிக்கும் நான் ஷூ போடாமல் செருப்பை போட்டுக்கொண்டதற்கு இக்கதை ஒரு முக்கிய உளவியல் காரணமாக இருக்கலாம்.

சில வருடங்களுக்கு முன் சரித்திர எழுத்தாளர் ராமசந்திர குஹ (குகன்?) “தி ஹிண்டு” ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். முன்னாள் கம்யூனிஸ்டாக இருந்தவர் அமெரிக்கா சென்ற போது, ஒரு பெரும் பல்கலைகழகத்தின் பேராசிரியர், ஒரு பெட்டி நிரைய புத்தகங்களுடன் தன் அலுவலகத்திலிருந்து கார் வரை நடந்து சென்றதை, குறிப்பிட்டார். 

பாரதத்தில் எந்த கம்யூனிஸ்ட்டும் இதை செய்யமாட்டார் என்று மேலும் கூறி, ஓட்டுனரோ குமாஸ்தாவோ பெட்டி சுமந்து வர, கட்சி பிரமுகர்களும் கல்லூரி பேராசிரியர்களும் ஸ்டாலினிய சித்தாந்தம் பேசுவார் என்றும், பேனாவை சுமந்து சட்டைக்கு வலிக்கக்கூடாது என்பதால் மற்றவரிடம் பேனா வாங்கி எழுதுவதே இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் அறவழி என்று கொய்யாப்பழத்தில் கோணி ஊசி வைத்திருந்தார் குகன்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது, தன் இல்லத்திலிருந்து நூறு மைல் தூரமுள்ள ஹ்யூஸ்டன் விமான நிலையத்திற்கு, என்னையும் எம்பி ஜெயராமனையும் கூட்டிச்செல்ல், தன் காரை ஓட்டிக்கொண்டு வந்து என் மாமா வரதராஜன். டெக்ஸாஸ் ஏ&எம் (Texas A&M University) பல்கலைகழகத்தில், மார்க்கெட்டிங் துறை பேராசிரியர். போகும் வழியில் பெட்ரோல் நிறப்பினோம். அங்கே வைக்கப்பட்டுள்ள சோப்புத்தண்ணியால் கார் கண்ணாடிகளின் அழுக்கை துடைத்தார். ராமசந்திர குகனின் கதை ஞாபகம் வந்தது. இதோ படம்.

(ஐயம்: ஹ்யூஸ்டனை கூசுடன் என்றும், டெக்ஸாஸை தெகுசாசு என்றும் தமிழில் எழுதவேண்டுமோ?)
புரட்சி குடிமகன்
நம் நாட்டில் ஓட்டுனரோ, பெட்ரோல் கடை ஊழியரோ தான், கார் கண்ணாடி துடைத்து பார்க்கமுடியும். ஆனால் அமெரிக்காவில் இது சகஜம். வீட்டில் உண்டபின், நான் என் தட்டை கழுவினால் சமையல் செய்யும் இந்திராம்மாவோ, எங்கள் இல்லத்து ஸ்வச் பாரதி மேரியம்மாவோ, “விட்டுடுங்க, நீங்க ஏன் கழுவுறீங்க, நான் செய்கிறேன்,” என்று காம்போதி ராகத்தில் பாடுவார்கள். ஏப்ரகம் லிங்கனின் மறு அவதாரமாக என்னை உணரும் அத்தருணத்தில், எந்த வெளிநாட்டு தூதுவனும் இல்லையே என்று ஜன்னல் வழியே ஏக்கத்தோடு எட்டிப்பார்பேன். கம்ப்யூட்டர் துறையிலும் பாத்திரம் தேய்ப்பதிலும், எனக்கு கிட்டத்தட்ட சமமான ஆண்டுகள் தொழில் அனுபவம்.

அமெரிக்காவில் பல வேலைகளை அவரவரே செய்துகொள்ளவேண்டும். பல மாநிலங்களில் பெட்ரோல் கடைளில் காசு வாங்குவதற்கு தவிர எந்த தொழிலாளியும் இருக்கமாட்டார். நாமே பெட்ரோல் போட்டுக்கொள்ளவேண்டும், காத்தடித்துக்கொள்ளவேண்டும், கண்ணாடி துடைக்கவேண்டும். முதன்முறை ஓரிகன் மாநிலத்திற்கு சென்றபோது அங்கே பெட்ரோல் போட தொழிலாளிகள் இருந்ததை கண்டு ஆச்சிரியப்பட்டேன். அந்த மாநிலத்தில் அது சட்டமாம். கட்டாய வேலை வாய்ப்பு திட்டம். மொழியாலும் உணவாலும் உடையாலும் அமைப்பாலும் ஒரே மாதிரி காட்சியளித்தாலும், மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர், அமெரிக்காவிலும் பல பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன. வாழ்ந்தால் தான் தெரியும். நிற்க.



கார் கழுவுவதை தவிற வேறு சில தொழில்களும் வரதராஜன் மாமா செய்கிறார். முக்கியமாக தோட்டவேலை. புல்வெளியற்ற தனிவீடு இல்லை என்று அமெரிக்காவை சோல்லலாம். வீட்டின் முன்னும் பின்னும் புல் பரவியிருக்கும். ஒரு உயருத்துக்கு மேல் வளர்ந்தால் வெட்டவேண்டும்; இதற்கு ஊராட்சி சட்டங்கள் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு வாராவாரம் காசு கொடுத்து வெட்டுவோரும் உண்டு, தானே வெட்டுவோரும் உண்டு. புல் காய்ந்து விட்டால், செடிக்கடைகளில் பாய் பாயாக விற்கப்படும் புல் வாங்கிக்கொண்டு வந்து தோட்டம் அமைக்க வேண்டும். புல் வளர (நஞ்சை?) மண் வாங்குவதும் சகஜம். சில நேரம் மண்ணை இலவசமாக சிலர் தருவர். விளம்பரம் செய்து தானம் நடக்கும், வண்டி எடுத்து சென்று மண்ணை அள்ளி வந்து தோட்டத்தில் பரப்பிக்கொள்ளலாம். படம் காண்க.

Free Dirt = இலவச மண்

இருபது வருடத்திற்கு முன் அங்கு சென்ற போது, தன் தந்தைக்கு கிடைத்த மாத சம்பளத்தைவிட, தோட்டத்துக்கு மண் வாங்க செலவழித்தேன் என்று கொஞ்சம் சோகம் ததும்ப சொன்னார். சில வருடங்கள் தோட்டத்தின் ஒரு பகுதியில் புடலங்காய் பூசனி கத்திரி கருவேப்பிலை வளர்த்து மகிழ்ந்தார். இவற்றை கூட்டு, குழம்பு, கறியமுது என்று மாமி பிரபா சமைத்து நானும் சுவைத்துள்ளேன்; ருசியோ ருசி. அக்கம்பக்கத்தினருக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்.

என்னளவு இல்லை எனினும் என்னைப்போல் நளபாக ரசிகர். இவரை போல ரசவிரும்பி யாருமில்லை. காபி டீ தரவா என்று யாராவது கேட்டால் சூடாக ஒரு கோப்பை ரசம் கேட்டு அருந்தி மகிழ்வார்.

பிரபா மாமி செய்த நளபாகம்
தமிழ் பிரியர்; ரசிகர். மகளும் மகனும் ஓட ஓட திருக்குறளும் அவ்வைத்தமிழும் பாரதியார் பாடலும் பேசுவார். பெங்களூருவில் வளர்ந்து பள்ளியில் படித்த காலத்தில், கன்னடம் வகுப்பில் பெற்றோர்கள் சேர்த்தனராம். ஒரு கன்னட ஆசிரியர், “கன்னடம் மிக கடினம். நீங்களோ தமிழ் குடும்பம், தமிழ் வகுப்பிலே மகனை சேர்த்துவிடுங்கள்”, என்று சொன்னாராம். அந்த கன்னட ஆசிரியருக்கு அடிக்கடி மானமார்ந்த நன்றி சொல்லுவார். தாங்கவே முடியாத தமிழ் படங்களை சகித்துக்கொண்டு, கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கும் டி,எம்,சௌந்தரராஜன் சுசீலா குரலினிமைக்கும் கேட்டு ரசிப்பார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் எழுதியுள்ளார். கேள்வி நேரம் என்ற சிறுகதை, தற்கொலை செய்துகொள்பவனை, அவன் பயன்படுத்த நினைக்கும் கருவிகள் கேள்விகள் கேட்டு தடுப்பதாக அமைந்திருக்கும். நான் படித்ததில்லை. அவர் சொல்லி கேட்டதுதான். நகல் கிடைத்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்.

நாம் யாவரும் அவர் கதைகளையோ கட்டுரைகளையோ படித்திரா விட்டாலும் அவர் எழுத்தை படித்திருக்கிறோம். பல வருடங்களுகு முன் சென்ன மாநகராட்சி நடத்திய அந்த காலத்து ஸ்வச் பாரத திட்டத்தில், மக்களை குப்பைகளை தொட்டிகளில் போட ஊக்குவிக்க, சிறந்த சொற்றொடர் எழுதும் போட்டி ஒன்றை நடத்தினர். இவர் எழுதி “Use Me” ரூ.25 பரிசு பெற்றது.


எண்ணும் எழுத்தும்

தன் துறையில் அபாரமான பெயர்கொண்டவர். துறை இலக்கிய பத்திரிகைகளான ஜர்ணல் ஆஃப் மார்க்கெடிங், ஜர்ணல் ஆஃப் மார்க்கெடிங் ரிசர்ச் இரண்டிலும் பல ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். (இவற்றை, தலா விற்பனை கலை பத்திரிகை, விற்பனை கலை ஆய்வு பத்திரிகை என்று தமிழாக்கலாமோ?) இரண்டு பத்த்ரிகைகளிலும் ஆசிரியராக பணிசெய்துள்ளார். 

மச்சச்சேத்துப்பட்டு பல்கலைகழகம் ஐம்பதாண்டில் தன் லட்சக்கணக்காண மாணவர்களில் தேர்ந்தெடுத்து கௌரவித்த தலைசிறந்த பத்தில் இவரும் ஒருவர். நூல்கள் நிரம்பி வழியும் அலமாரியை போல் வாங்கிய விருதுகள் நிரம்பி சுவரும் வழிகிறது. கார் கண்ணாடியை விட நன்றாகவே விருதுகள் மிளிர்கின்றன.



அவர் பிறந்தநாள் அக்டோபர் இருபது. பிறந்தநாள் வாழ்த்துக்கள், மாமா. 

Journal of Marketing
Texas A&M University டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகம்

வரதராஜனின் விருதுகள் அருகில் ஜெயராமன்

தொடர்பான பதிவுகள்

அன்பளிப்பு
On Human Kindness
நான் ரசித்த சில பெயர் பலகைகள்