Friday, 27 February 2015

Midnight Sun in Sriharikota

Tearing through the night sky, darkness and the glimmer of Pulicat backwaters on either side, Thiruvadirai high up in the sky, stars visible up to the low horizon and a yellowish moon rising in the east, streaking past alert police squads, we come to a halt before the model rockets decorating the round tana at the entrance of the Satish Dhawan Space Center. Mr Mani steps out to hand us our security passes and we drive up to the MR Kurup auditorium, turning just before the gate to the launch pad which is eight kilometres away.


A large hall with red cushioned seats and two drop screens greet us. One shows the control room, the other some graphs with rocket data. As we watch, the video shows ISRO director Dr Radhakrishnan enter the control room and shakes the hands of every single member of the command Center, then every hand at the Visitors' Gallery! A signal act of warm welcome. The countdown clock of PSLV-C96 IRNSS-1C mission ticks down to -00:45:13

In the Kurup hall, a wedding hall atmosphere prevails, as Telugu and Tamil fill the air, and a hundred people in sharers, churidars jeans and shirts and an occasional burqa chat and gaze and munch goodies. Shots of the rocket on the launch IAS flit on the screen as flute music plays over the speakers and a recording of Isro's history plays on.

I collect juice cake and mixture at the refreshment stand. "Di oxyl adipate" brags a low tech blue plastic trash can, full of paper cups.

En masse, we move to the flood lit terrace, five floors up, the North Indian kurtas and mehendhi laden arms flashing between the sarees. A loud speaker barks status messages, like a railway station minus the boquet of fragrances. The Mission Director interrupts to announce that everything is normal.

-00:15:00  Sirius glitters. Trees cloud the view. Nothing terrestrial is visible more than a hundred metres away. Shyam ponders climbing the water tank.

-00:10:00. Some climb the water tanks, one lot is called down by security. 

-00:05:00 External attachments withdrawn.

A crowd of over two hundred are on the roof. Most are taking photos with cellphones, some with cameras. Far away, Sidharth Srinivasan, Manick Rajendran and other amateur astronomers and launch buffs who have gathered to watch the launch at night, glance at the launch pad uncertainly, like I have in my previous day time trips at similar spots. I remember the helplessness of not knowing if the launch has been postponed delayed cancelled or its on schedule.

The lake outside Sriharikota, before the launch - Photo: Siddharth Srinivasan

Countdown at ninety seconds. Announcer updates every five seconds. All casual photographers and posers are done. Even Shashi who has her eyes closed till now wakes up. 

10, 9, 8, 7, 6, 5 "Ignition sequence commencing" 4,3,2,1.

Zero. An orange midnight sun lights up the eastern sky. The rooftop crowd roars. "Ignition normal." Not a whisper from the rocket, 8 km away. Two seconds later the orange shrinks from full landscape to a column of fire.

The stars in the Lower sky disappear as it turns a faded daytime blue, then Sirius too becomes invisible.

 +00:00:10. The rocket and its fiery exhaust rise above the tree line, and the rooftop visitors can see it for the first time. Still eerily silent.

+00:00:20. The roar of the rocket finally hits us, a tender relentless tsunami of reverberating air, that is dull to the ear, but makes skin and clothe quiver like savannah grass in a storm. A hundred cameras click away ferociously, most of them cell phones with better resolution than my Nikon Powershot that lies quietly in my car. Some people realise for the first time that sound is slower than light : not just in textbooks. They explain this excitedly to others

+00.00.45 The curve of the rocket's trail is now clear. It's now just a bright comet, no longer a blazing sun

+00.01.45 (approximately) first stage separation

Three seconds later: Second stage ignition. Cheers. The voice on the loudspeaker has been updating very few seconds. Altitude, latitude, azimuth, systems report.

+00.04.00 Now it's just bright spot in the far distance and fading fast. Some of the crowds head downstairs to the Kurup auditorium. We join them.

The crowd inside the hall is smaller than the crowd that watched the launch. There's a large screen that shows the metrics of the rocket. I think they were broadcast live or slightly delayed on Doordarshan - probably Rajya Sabha TV.

The announcer explains when second stage goes silent, third stage ignites, then after a loooong time, third stage separates, but fourth stage takes a while before igniting. This is planned. The rocket is coasting on momentum. Most parameters are within expected range.

We waited until about 20 minutes after launch, the rocket reached its orbital position. Over the next couple of days, ISRO would little adjustments to fix its apogee and perigee, but the launch was successful. On screen, Dr K Radhakrishnan addresses ISRO, congratulates them, beams with pride. He shook every single visible hand when he went into that control room! Others make speeches, their passion shining through, and their pride making them glow.

Shyam, Shashi and I headed back to our hotel in Sulurpet with a warm glow too. Shyam Raman arranged this midnight visit for me, so I am greatly indebted to him. On the ride from Madras to Sriharikota, he shared a lot of things on his cellphone, space apps and astronomical data, that he was following with geeky delight. For those so inclined, here is the Srirangam Site Seminar page that Shyam created!

So you read the thousand words? Here are the pictures you really want to see! My thanks to Manick Rajendran, Siddharth Srinivasan and Arun Venkataswamy for photos. I know the first two, but have not had the pleasure of meeting Mr Arun; hopefully he wont mind since Manick gave them to me!
Here is the Facebook page of Chennai Astronomy Club where they posted these photos!

Rocket and Orion nebula - photo Siddharth Srinivasan
Launch Closeup - photo Siddharth Srinivasan

Midnight Sun - photo by Arun Venkataswamy
Daytime Launch of Mangalyaan - for comparison - photos R Gopu

Related Blogposts

1. மங்கள்யானும் நானும் - ஆழம் கட்டுரை

Wednesday, 25 February 2015

What is News?

When I first read Tom Friedman’s book “The Lexus and the Olive tree” in 1999, I was stunned. It related a set of major and historical events in the 1980s and 1990s of which I was unaware, either totally, or tangentially. I was an avid reader of newspapers and somewhat less avid consumer of television news : or so I thought. Apparently I was reading the wrong news, mostly politics, sports, entertainment or science.

TV news, I realise, is just radio with makeup. It’s practically disinformation, not news. Newspapers are hardly better. But clearly they serve some markets.

Sometimes, a single statistic or graph explains more things than a whole shelf of books or a decade of personal experience. Moore’s law, Julian Simon’s bet, the Laffer curve, linguistics maps in Jared Diamond’s book “Guns Germs and Steel”, all these explain a phenomenon, a principle or history in a way that words simply can’t. This one, on plants and animals, stunned me recently.

John Allen Paulos tries to make this point in his book A Mathematician Reads the Newspaper. I think he fails by politeness. Hans Rosling does a better job with his TED talks.

Vaclav Smil, by dealing with large significant numbers, and placing them in context is unparalleled in the small circle that I am aware of. Bill Gates, who recently endorsed Smil as the author whose book he looks forward to the most, tweets some graphs, which I find are far more newsworthy than a hundred headlines about so-called earth shattering events. In an essay that explains how the world uses 20th century materials, Gates explains Smil's book Making the Modern World, with excellent graphs.

This one on China and cement is one such. China has used more cement in the last three years 2011-13 than the United States did in the 20th century. That simply stuns me.



This graph on the benefits of vaccination in the US, is an example of a bad graph, much harder to understand. 

If only journalists would explain national budgets, industrialization, the market economy, science, or other political issues with such graphs. They only analyze - overanalzye - elections and electorate behaviour on such a scale. This is not confined to Indian media, it is a world wide phenomenon. The only channels where you see informative graphs are the sports channels : cricket, basketball, American football, tennis, these sports are analyzed with excellent statistics and very enlightening graphs. Perhaps that level of arithmetic is beyond the capacity of journalism. I doubt it. I suspect that their primary function is to misinform and keep the noise level high.

Related Posts

2. எடிசனின் வால்மீகி - வஷ்லவ் ஸ்மில்
3. A Fascinating Graph of Life
4. The Laffer Curve

Followup March 28, 2015

Vaclav Smil's graph on cement and China was irresistible to Bill Gates. After a few weeks, Gates' tweet became irresistible to a major newspaper - the Washington Post, which published a story on the graph - though only a blog. I don't know if it came out in the print edition.

Monday, 23 February 2015

தமிழில் பிறமொழி ஒலியும் எழுத்தும்

மணி மணிவண்ணன் ஃபேஸ்புக் பதிவில் தமிழ்நாடு என்னும் சொல்லை டமில்நாடு என்று உச்சரிக்காமல் தமிழ்நாடு என்று பேச்சு வழக்கில் தமிழராவது (தமிழ் மொழி பேசுபவர்) உச்சரிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்படி உச்சரித்த தமிழக முதல்வர் செயலலிதாவை பாராட்டியிருந்தார். ஜெயலலிதா என்றல்லவா எழுதவேண்டும் என்றும், எம்ஜிஆரை, எம்சிஆர் என எழுதுவீரா என நான் வினவ, மாகோரா என்று எழுதுவதாக பதிலளித்தார்.

தமிழர் பேசும்போது, வேறு மொழியில் பேசினாலும் தமிழ் சொற்களை தமிழ் உச்சரிப்புடனே சொன்னால் நல்லது. ஆனால் பிற மொழி ஒலிகளை தமிழில் எப்படி எழுதலாம், ஒலிக்கலாம்.

பின்னூட்டத்தில் பத்ரி சேஷாத்ரி “சமஸ்கிருத மொழி பிறமொழிச் சொற்களை - ஆள் பெயராக இருந்தாலுமேகூட - மொழிமாற்றிப் பயன்படுத்துகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன் போன்றோர் தமிழ் வழக்குக்கு ஏற்றவாறு இறைவன் பெயர்களையும் மாற்றியிருக்கின்றனர். இரண்டு முறைகளையும் பயன்படுத்துவது எனக்கு ஏற்புடையதே” என்று எழுதினார்.

அக்கால புலவர்களுக்கு யாப்பு கட்டுப்பாடு இருந்ததாலும் வடமொழி எழுத்துக்களை தமிழில் எழுதும் தற்பவ தத்சம விதிகள் இலக்கணத்தில் இருந்ததாலும், வாய் வழியே தமிழகம் முழுதும் கற்றோரும் கல்லாதோரும் உச்சரிக்கும்படி வடிவமைக்கும் கட்டாயம் இருந்ததாலும் அவர்கள் கிரந்தம் தவிர்த்து எழுதினார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் மணிப்பிரவாளமாக எழுத கிரந்தத்தை கையாண்டனர். 

கலைச்சொல்

நம் காலத்தில் இவ்வழக்கம் காலாவதியாகிவிட்டது. ஆங்கிலம் வகை ஐரோப்பிய மொழிகளும், உருது பாரசீக அரபு வகை மேற்காசிய மொழிகளும் தமிழை நன்கு ஆட்கொண்டு, அம்மொழி மூல சொற்கள் தமிழில் பரவலாக கலந்து விட்டன.
லத்தீன கிரேக்க ஆங்கிலேய ஜெர்மானிய கலை விஞ்ஞான சொற்கள் தமிழில் பரவலாக உள்ளன. இவை சில மட்டும் தமிழில் சொற்கள் பிரபலமாக உள்ளன. (“புதிய தலைமுறை” ஆசிரியர், எழுத்தாளர் மாலன் தன் பின்னூட்டத்தில், தொலைகாட்சி என்ற சொல் பரவலானாலும் வானொலி என்பதைவிட ரேடியோ பெட்டி என்ற சொல்லே பரவலானது என்று குறிப்பிட்டார். தமிழ்சொல் இருந்தும் ஆங்கிலமோங்கும் பஸ், கார், ரோடு, பாட்டில் போன்ற சொற்களுக்கும், தமிழ் கலைச்சொல்லில்லா பிளாஸ்டிக், ட்ரான்ஸ்ஃபார்மர், ட்ராக்டர், சிலிகான், பாலித்தீன், டீசல் போன்ற சொற்களுக்கும் இது பொருந்தும். இவை ஒலியோ எழுத்தோ அல்ல, சொற்களே.) 

இயல், உரைநடை

செய்யுளில் யாப்பெனும் வேலி தமிழ் ஒலியின் தொன்மையை காக்கும். இயலில், உரைநடையில் வேலி யாப்பெனும் வேலி எதற்கு. வர்க எழுத்தை ஒலிக்கவியலா ஒலிக்கவிரும்பா தமிழருக்கு இது கடினமெனினும், லளழ வேறுபாடும் நனண வேறுபாடும் ஞங வேறுபாடும் சஸஜஷ வேறுபாடும் பலத்தமிழருக்கு வராத நிலையில் உரைநடையில் ஒலி தொன்மையும் தூய்மையும் தேவைதானா? பழையன கழிதலும் புதுவன புகுதலும்…. 

பிறமொழி ஒலி

F, Z, J, H, எழுத்துக்களுக்கு எங்கே தற்பவமும் தத்சமும்? நான் எழுதும் பதிவுகளில் பெயர்சொற்களையும் சில கலைசொற்களையும் கிரந்த ஸ,ஹ,ஜ,க்ஷ, ஃப, போட்டே எழுதுகிறேன்.  ஆங்கில Z  எழுத்துக்கும் ஒலிக்கும் ஃச போட்டு எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். நதியை பற்றி ஒரு கவிதை எழுதுகையில் இது எனக்கு தோன்றியது. ச ஸ தகாது.

மேலும், பன்மொழி பழகும் உலகமயமாக்கலால் சீன கொரிய ஜப்பானிய மொழி ஒலிகளும் அடுத்த இருபதாண்டுகளில் தமிழகத்தில் பரவும். இவை ஒலி அமைப்புக்கும் தமிழ் மொழி வளர்ந்து விரிந்து வழி செய்ய வேண்டியிருக்கும்.

மணிவண்ணன் சொல்வது போல் தமிழை டமில் எனாமல் தமிழ் என்றே ஆங்கிலம் பேசும் போது சொல்வது சரி. அதே போல் தான் ஃப்ரிட்ஜ், ஸஹானா, ஷரீஃப் போன்ற சொற்களும். எழுத்திலும் கூட. 

ட்விட்டர், எஸ்.எம்.எஸ் தமிழ்

எஸ்.எம்.எஸ் ட்விட்டர் இவ்விரண்டும் ஆங்கிலத்தை குலைத்துவிட்டன என்று குமுறாத ஆங்கில எழுத்தாளர் இல்லை. இவை இரண்டும் இதுவரை தமிழில் பரவலாக இல்லை. இவற்றின் விளைவு சீக்கிரம் தெரியும்.

ஸம்ஸ்க்ருதம் ஃப்ரெஞ்சு தனித்தமிழ்

ஸம்ஸ்க்ருதம் தெரியாதவர்கள் பல தமிழ் சொற்களை ஸம்ஸ்க்ருதம் என்று அறியாமல் தூய தமிழ் என்று கருதுகிறோம். நான் ஸம்ஸ்க்ருதம் கற்க கற்க அதன் வரலாற்று பரவலையும் மற்ற மொழிகளை அத வளர்த்த திறனையும் கண்டு வியக்கிறேன்.

ஆனால் அதே சமயம் ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கும் தவிற்க்கமுடியாத பல செயற்கை சொற்களையும், கடினமான வேற்றுமை உருபு வகைகளையும், இலக்கண கண்டிப்புகளையும் பார்த்தபின் தமிழின் எளிமையை உணர்கிறேன். ஆங்கிலத்தில் உள்ள எளிமை சில நேரம் லயிக்க வைக்கும், தமிழோடு ஒப்பிட்டால் பொராமை வளர்க்கும். ஆனால் தமிழின் தனிச்சிறப்பையும் அழகையும் நளினத்தையும் ரசிக்கவும் வைக்கும்.

தனித்தமிழ் இயக்கம் தூய ஃப்ரெஞ்சு இயக்கத்தை போல் ஒரு இலக்கண லொள்ளுப்படையை உண்டாக்க தான் உதவும் என்பது என் அனுமானம்.

பின்குறிப்பு

லத்தீன் ஐரோப்பிய மொழிகளில் - ஃப்ரெஞ்சு, போர்த்துகீசு, ஸ்பானிஷ், இத்தாலியன் - ட ஒலியை த என்றே உச்சரிப்பார்கள். ஜெர்மானிய மொழிகளில் - ஜெர்மன், டச்சு, அங்கிலம் - த ஒலியை ட என்றே சொல்வதுண்டு. தியோடார் மன்னர் வம்சத்தை டுடார் என்று அக்காலத்தில் தி உச்சரிக்க இயாலாத ஆங்கிலேயர் அழைத்தது ஒரு சான்று. இதனால் தான் த ஒலிக்கு ஒரு எழுத்து இல்லாமல் th என்ற ஈரெழுத்து அமைப்பும் ஆங்கிலத்தில் நுழைந்துள்ளது. இதேபோல் ஷ இல்லாமல் என்ற ஈரெழுத்தும் பின்னர் நுழைந்தது.

கிரேக்கத்தில் டகரத்துக்கு டௌ தகரத்துக்கு தீட்டா என்ற தனித்தனி எழுத்துக்களும் ஒலிகளும் உள்ளன. முதலில் தமிழகம் வந்த போர்த்துக்கிசியரும் ரோம லிபியில் Tamil Tamoul என்று எழுதினால் தமில் தமுல் என்றே உச்சரித்தனர். பின்னர் வந்த ஆங்கிலேயர் அதே ரோம லிபி வடிவத்தை வைத்துக்கொண்டு டமில் என்று உச்சரித்தனர். அதுவே இன்றும் பாரதம் முழுவதும் தொடர்கிறது. இப்படிதான் தெலுகு டெலுகு ஆனது, தூத்துக்குடி டூட்டூகுறின் ஆனது.

Monday, 16 February 2015

வியாழம் எழ வெள்ளி உறங்கிற்று


வெள்ளி எழ வியாழம் உறங்கிற்று என்று ஆண்டாள் திருப்பாவையில் பாடியுள்ளாள். இம்மாதம் வியாழம் எழ வெள்ளி உறங்குவதை பார்க்கலாம்.
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் இம்மாதம் வானில் தெரியும். (ராமதுரை ஐயாவை கேட்டு தகவல் சொன்ன பத்ரிக்கு நன்றி). மாலை ஏழு மணியளவில் கிழக்கே மிகவும் பிரகாசமாக தெரிவது வியாழன். 

அதே நேரம் மேற்கில் மிகவும் பிரகாசமாக தெரிவது வெள்ளி – ஆறரை மணிக்கே மத்த எந்த விண்மீனும் தெரியாத போது, மேற்கில் வெள்ளி மட்டும் ஜொலிக்கும். சுமார் எட்டு மணிக்குள் வெள்ளி கட்டிடம் பின்னால் சென்றுவிடும். ஏழு முதல் ஏழரை வரை அதற்கு மிக அருகில் சிவப்பாக தெரியும் புள்ளி தான் செவ்வாய் கிரகம்.

கிரிக்கட் உவமை தருகிறேன். கிழக்கே பார்த்து மட்டை பிடிக்கவும். லாங் ஆனில் வியாழன் தெரியும். லாங் ஆஃபில் ஸிரியஸ் நட்சத்திரம். எக்ஸ்ட்ரா கவரில் அகத்தியர் (கேனோபஸ்). விக்கட் கீப்பரின் பின் பவுண்டரி லைனில் வெள்ளி. வெள்ளி பேட்டிங் செய்தால், அவனுக்கு லெக்ஸ்லிப்பாக செவ்வாய்.
இரவு 12 மணிக்கு லாங் ஆனில் சனி வருவான். இதற்குள் வியாழன் பேக்வர்ட் ஷார்ட்லெக் சென்றுவிடுவான். வெள்ளியும் செவ்வாயும் சுனில் நாராயண், அஜ்மல் போல் அஸ்தமித்திடுவர்.

எச்சரிக்கை முகிலினங்கள் தொலைந்தால்தான் இந்த முகவரிகள் தெரியும்.

சென்னையில் புதனை பார்ப்பது இயலாத காரியம் என்பது என் கணிப்பு. கீழ்வானில் 5:30க்கு உதித்து, 6:15க்கு உதய ஒளியில் மறைந்துவிடும் புதன். நான் எங்குமே இன்றுவரை புதனை பார்த்ததில்லை என்பது சோக கதை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சும்மாவா சொன்னார்கள்.

பிரஹஸ்பதி, தேவர்களின் குரு என்பதும், சுக்ராச்சாரியார், அசுரர்களின் குரு என்பதும் பண்டைய பாரத மரபு. எதிரும் புதிருமாய் இவர்களை காணலாம்.

அடுத்த சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளி செவ்வாயை நெருங்கும். ஃபிப்ரவரி 21ஆம் நாள் இவர்களுக்கு காதலர் தினம்- கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சும். அதன் பின் வேறு காதலரை தேடி பிறிந்து செல்லும். மார்ச் மூன்றாம் நாள் செவ்வாய் பேட்டிங், வெள்ளி லெக்ஸ்லிப். ஸ்டெல்லாரியத்தில் பிடித்த படங்களை இங்கு காண்க.

February 14 February 21
March 3

தொலைநோக்கி இருந்தால் இவை அருகே யுரேனஸ் கிரகம் தெரியும். போன வாரம் நண்பர் விகே ஸ்ரீநிவாஸின் தொலைநோக்கி வழியாக வியாழனின் மூன்று துணைக்கோள்களை பார்த்தேன்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்

1. என். ராமதுரை பதிவு - வியாழன் கிரகத்தின் முகத்தில் கரும்புள்ளி

2. ஸ்டெல்லாரியம் மென்பொருள்

My essays on Astronomy

1. திருவாதிரையும் அகத்தியனும்
2. சிவராத்திரி
3. தமிழ் புத்தாண்டு - சித்திரைபௌர்ணமி
4. Tamil New Year - Chitra Pournami (English)
5. வராஹமிஹிரரின் அகத்தியர் ஸ்லோகம் 
6. Sanskrit mathematical words in English
7. VarahaMihira's Eclipse Proof (English)
8. ஒருஸ்லோகம் ஒரு சிலேடை ஒரு எண் ஒரு நாள் ஒரு நூல்
9. A Sloka, a pun, a number, a date, a book
10. கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்
11. ஸமஸ்கிருதம் புறிகிறதே - மஹாவீரரின் கணித கவிதை
12. Some slokas of Indian astronomy – இந்திய வானவியல் ஸ்லோகங்கள் 

Videos of my lectures on Astronomy (in English)

Astronomy of Ancient Cultures
Indian Astronomy - from Vedic age to 15th century

Tuesday, 10 February 2015

சிலிகான் சிற்பி


ஃபெப்ருவரி மாதம் 12 ஆம் நாள் சார்ளஸ் டார்வினின் பிறந்தநாள். 11ஆம் நாள் தாமஸ் எடிஸனின் பிறந்தநாள். பெரிதாக யாரும் கொண்டாட மாட்டார், விஞ்ஞானிகள் உட்பட. அரசரையும் அரசாள்பவரையும் மதகுருக்களையும் புலவர்களையும் கொண்டாடும் வெகுஜன மக்களும் ஈடு இணையற்ற நன்றிக்கடன் பட்ட இவ்விருவரின் பிறந்தநாளை கண்டுகொள்வதில்லை. இன்று, ஃபெப்ருவரி 10ஆம் நாள், வால்டர் பிராட்டனின் பிறந்தநாள்.
இவர் மின்பொருள் கணினி துறைகளுக்கு வெளியே புகழ்பெற்றவர் அல்ல. ஆனால் எடிசனோடும் டார்வினோடும் இணைத்து புகழ தகுதியானவர். இவரும் ஜான் பார்டீன் என்பவரும், சிலிகான் டிரான்ஸிஸ்டரை உருவாக்கி, அதற்கு நோபல் பரிசை பெற்றவர்கள். வேதியியலில் இரண்டு நோபல் பரிசு பெற்றவர் ஜான் பார்டீன்; அவர் இரண்டாம் பரிசை சூப்பர்கண்டக்டிவிடி துறையில் செய்த ஆய்விற்கு பெற்றார்.

வால்ட்டர் பிராட்டன்
பிராட்டனின் புகழ் டிரான்ஸிஸ்டரில் மட்டுமே. ஆனால் எப்பேர்பட்ட ஒரு படைப்பு!

பெற்றது நகத்தளவு

பொதுமக்களுக்கு டிரான்ஸிஸ்டர் என்று சொன்னால் கையளவு ரேடியோ வானொலி பெட்டி மட்டும் தான் ஞாபகம் வரும். தவில் அளவு இருந்த ரேடியோ பெட்டி வேக்குவம் குமிழி கொண்டு மார்க்கோனி செய்ததாக நாம் அரிவோம். (எட்வர்ட் ஃபெஸ்ஸண்டன் என்பவரின் வானொலி பணி பொதுமக்கள் அறியாதது. சமீபத்தில் தெரிந்துகொண்டேன். அவரை பற்றி வேறொரு நாள் எழுதலாம்.) இந்த வேக்குவம் குமிழிகள் ஒவ்வொன்றும் விரலளவு இருக்கும். எடிசனின் மின் விளக்கே வேக்குவம் குமிழியின் மூதாதை. எடிசன் அதை சரியாக புரிந்துகொள்ளவில்லை.

உள்ளங்கை ஒலிக்கனியாக வானொலி பெட்டியை சுருங்குவதற்கு பிராட்டனும் பார்டீனும் ஆய்ந்து படைத்த சிலிகான் டிரான்ஸிஸ்டரே காரணம். ஒரு டிரான்ஸிஸ்டர் நகநுனி அளவே இருக்கும். சில்லரை காசுக்கு எந்த எலக்டரானிக்ஸ் கடையிலும் இன்று வாங்கலாம். விரலளவு உள்ள வாக்குவம் குமிழிகளால் அன்று நகநுனி அளவு உள்ள டிரான்ஸிஸ்டரால் செய்த ரேடியோவிற்கு டிரான்ஸிஸ்டர் ரேடியோ என்று பெயர் வந்து, அகப்பொருளே புறப்பொருளுக்கு பெயராய் மாறிவிட்டது.

சிலிகான் தட்டு, டிரான்ஸிஸ்டர், வாக்குவம் குமிழி

வானொலி தொலைக்காட்சி கணினி மோடம் கால்குலேட்டர் செல்பேசி இவை யாவும் சிலிகான் டிரான்ஸிஸ்டர் கொண்டவை.

சிலிகான் துளைத்து அணுவை புகட்டி குறுகத் தறித்த கருவி

டிரான்ஸிஸ்டரை எளிமையாக விளக்கமுடியுமா என்று எனக்கு தெரியவில்லை. இப்பொழுது முயலப்போவதில்லை. ஆனால் எடிசனும் டார்வினும் செய்தது போல வீட்டில் பொருட்களை வாங்கி ஒரு அரையை பரிசோதனை கூடமாக்கி ஆய்வு செய்து அதை உருவாக்க இயலாது. அரைகுறை பள்ளிக்கல்வியுடன் தன்னார்வாத்தால் தானே கற்று செய்யும் திறமையை வளர்த்து செய்யும் ஆய்வும் அல்ல. கல்லூரி பல ஆண்டு படித்து, பெரும் பொருட்செலவும், பண ஆதரவும், ஆய்வு சுதந்திரமும், சமத்திறன் கொண்ட சக விஞ்ஞானிகளும் குறைந்தபட்சம் வேண்டும். இவையெல்லாம். பிராட்டனுக்கு பெல் நிறுவனத்தில் கிடைத்தது. தொலைபேசியை உருவாக்கிய அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் நிறுவிய கம்பெனி ஏடி&டி; இதன் ஆராய்ச்சி பிறிவு தான் பெல் நிறுவனம். உலகின் மிகச்சிறந்த ஆராய்ச்சி மையங்களில் முக்கியமான் ஒன்று.

தங்கம் டங்க்ஸ்டன் நைட்ரொஜென் ஃபாஸ்ஃபரஸ் போன்ற பொருட்களை ஆவியாக்கி, சிலிக்கான் தட்டில் பூசி, அதில் மிகச்சிறு கம்பிகளை செலுத்தி (இதுவே டிரான்ஸிஸ்டர்!!), அவற்றில் மின்சாரம் பாய்ச்சி, அந்த மின்சாரத்தின் குணங்களை ஆராய்வதே பிராட்டனுக்கும் பார்டீக்குனும் தொழில். இது ஒருவகையில் செய்தால் டிரான்ஸிஸ்டர் மின்சாரத்தை பெருக்கும் திறன் கொண்டது என்று இவ்விருவரும் கண்டுபிடித்தனர். அதுவரை ட்ரையோட் என்ற வாக்குவம் குமிழியே மின்சாரத்தை பெருக்க பயன்பட்டது. ஈனியாக் என்ற முதன் முதல் செய்த கணினியும் வாக்குவம் 18000 குமிழிகள் கொண்டு, நூறு அடி நீளமும் ஐம்பது அடி அகலமும் பத்து அடி உயரமுமான ராட்சத இயந்திரமாய் இருந்தது. டிரான்ஸிஸ்டர் வந்தபின் அலமாரி அளவுக்கு கணினி சுருங்கியது.

பின்னர் ஒரு சிலிக்கான் தட்டில் பல நூறு டிரான்ஸிஸ்டரை செய்ய ராபர்ட் நாய்ஸ் என்பவர் வழி வகுத்தார். அதற்கு இண்டக்ரேட்டட் சர்க்யூட் (பல பாகங்கள் கொண்டு ஒரு தட்டில் இணைக்கப்பட்ட இயந்திரம்) என்று பெயர்.

கல்வி யாது

தலைமுறை தலைமுறையாய் கல்விகற்ற பழம்பெரும் மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவரா பிராட்டன்? பாரத நாட்டில் சிலரிடம் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. வேதம் படித்தவருக்கு கணினி திறன் ரத்தத்தில் வந்ததென்றும், பாணினியின் மகிமையும் ஸமஸ்கிருததின் ஒலியும் கருவரையில் கேட்டு இத்திறன் வளர்ந்ததாக நினைப்போர் உண்டு. இதன் மறுபுறம், ஆயிரமாயிரம் ஆண்டுகள் மேல்தட்டு ஜாதிகள் மற்றவருக்கு கல்வி மறுத்ததால் அவர்களால் முன்னேற முடியவில்லை என்பதுமாகும்.

வேதமறியா ஸ்மஸ்கிருதம் கேளா எடிசனோ மார்க்கோனி பார்டீன் பிராட்டன் பில் கேட்ஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் மார்க் ஸுகர்பர்க் இவரெல்லாம் வேத ஞானியரை எப்படி மிஞ்சினார் என்பதை முதல் வகையறா கேட்பதில்லை. பள்ளியில் படிக்காத எடிசன் ஃபாரடே ஆதியோரும், கல்லூரி படிப்பை பாதியிலோ பாதிக்கும் முன்னரோ நிறுத்திவிட்டு பில் கேட்ஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் மார்க் ஸுகர்பர்க் ஆதியோரும் செய்த சாதனைகளை நம் நாட்டில் யாரும் ஏன் சாதிக்கவில்லை என்று இரண்டாம் வகையறா கேட்பதில்லை.

வாழ்க்கை குறிப்பு

வால்டர் பிராட்டனின் பாட்டனார்கள் மில்லில் நெல்லை மாவரைத்தவர். மேலை நாடுகளில் அரிசி இல்லை – சாதம் இல்லை. கோதுமை சோளம் கம்பு போன்ற தானியங்கள்தான். அரைத்து மாவுசெய்து ரொட்டி பாஸ்தா கூழ் கஞ்சு செய்துதான் உண்ணவேண்டும் இது அக்காலத்தில் ஒரு தொழில். மில்லில் மாவரைப்பவருக்கு மில்லர் என்று ஜாதிப்பெயருண்டு. பிராட்டனின் தாய்தந்தையர் கல்லூரியில படித்தவர். ஆனால் புத்தகப்படிப்பு மட்டும் அல்ல. புகைப்பட நிறுவனம், வயல், நிலவளக்கும் பணி போன்று பணிகள் செய்தவர் அவர் தந்தை – அவரும் மாவரைத்தவர்; மில்லர்.

வால்டர் பிராட்டன் பள்ளி பருவத்தில் ஒரு வருடம் மாடுமேய்த்தாராம். தந்தையின் மில்லில் டீஸல் எஞ்ஜினை முழுவதும் கழற்றி பழுது பார்த்து மீண்டும் பொருத்துவாராம். தன்னார்வத்தினால் தன் பள்ளிக்கு மின்சாரம் தந்த டீஸல் எஞ்ஜினையும் பிரித்து பழுது பார்த்தாராம். பெருமையாக சொல்லிக் கொள்கிறார். பாரதத்தில், இவ்வகை பயிற்சி பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகளிளோ பள்ளிகளிளோ இல்லை. பாலிடெக்னிக்கில் இருக்கலாம், எனக்கு சந்தேகம். பல இடங்களில் பழைய கருவிகளே இருக்கும். மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ கருவிகளோடு பயின்று சோதித்து விளையாடி ஆராயும் ஆர்வம் பொதுவாக இருப்பதில்லை.

வேலையில் சேர்ந்தபின்தான் இந்தியாவின் கல்லூரி மாணவர் பலரும் தங்கள் தொழில்களை கற்றுகொள்கின்றனர். அந்தஸ்து, ஜம்பம், சோம்பேரித்தனம், அக்கரையின்மை, சலிப்பு இவையெல்லாம் சகஜம். சேத்தன் பகத் தன் நாவலில் இதைதான் மிகவும் கடுமையாக கண்டித்து எழுதினார். மாறுவதாக தெரியவில்லை. இந்நிலை நீடிக்கும் வரை பாரதத்தில் வால்டர் பிராட்டன்கள் வளர வாய்ப்பு குறைவே.

நன்றி

நான் கணினி துறையில் படித்து பட்டம் பெற்று வேலை செய்து சம்பாதித்தவன். வால்டர் பிராட்டனை படிக்க வைத்து வான்புகழ் கொண்ட வாஷிங்டன் மாகாணத்தில் பல வருடம் வேலை செய்தேன்.

அவ்வகையில் வால்டர் பிராட்டனுக்கு நன்றி. அவரும் பார்டீனும் விதைத்து வளர்த்த மாபெரும் வனம் மின்பொருட்களும் கணினியும் இணையமும். அவ்வகையில் மானுடத்தின் சார்பிலும் அவருக்கு நன்றி. பக்தியாலும் அன்பாலும் வணங்குவதாய் இன்றின், அறிவாலும் ஆர்வத்தாலும் ரசனையாலும் வணங்க முடியுமாயின், அவ்வகை அவரை வணங்குகிறேன்.

சுட்டிகள்
1. வால்டர் பிராட்டனுடன் நேர்காணல் (நீண்ட பதிவு)

விஞ்ஞானிகளை பற்றிய என் பதிவுகள்
1. ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்
2. ஃப்ரெட் ஸாங்கர்
3. சார்ல்ஸ் பார்ஸன்ஸ் (ஆங்கிலத்தில்)
4. டோரோதி ஹாட்ஜ்கின் 
5. லின் மார்குலிஸ் (ஆங்கிலத்தில்)
6. காற்றை கறந்தவர்- ஹாபர்-பாஷ் 
7. வரப்புயர்த்திய வல்லவன் - நார்மன் போர்லாக்
8. கில்பர்ட் லூயிஸ் (ஆங்கிலத்தில்)
7. தாமஸ் எடிஸன்
10. எமீல் லெவஸார்

Thanks for Photos
1. NNDB 

Friday, 6 February 2015

தனி ஒரு மொழி


கிறுத்துவ மதத்தை பரப்ப தமிழகம் வந்த இத்தாலிய பாதிரியார் கான்ஸ்டாண்டைன் பெஸ்ஷி, தமிழை ஆழ்ந்து கற்று, ஆய்ந்து, தேம்பாவணி என்று ஒரு காவியத்தை படைத்து, விவிலியத்தை தமிழுக்கு அளித்து, உயிர்மெய் நெடில்களுக்கு தனிவடிவமும் கொடுத்த மாபெரும் சாதனையாளர். பள்ளியில் தமிழ் படித்த பலருக்கு இது தெரியும், சிலருக்கு நினைவிலும் இருக்கும். இவருக்கு பின் வந்த ஆங்கிலேய பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழி குடும்ப இலக்கண நூலை படைத்ததும் தமிழ்பேசும் நல்லுலகம் அறிந்ததே. முன்னூறு நானூறு ஆண்டுகளாக ஐரோப்பிய அமெரிக்க பாதிரியார்கள் உலகெங்கும் கிறுத்துவ மதப்பணி செய்ய பரவியதும், ஆப்பிரிக்க அமெரிக்க ஆஸ்திரேலிய ஆசிய பழங்குடி மக்களிடையே மதப்பணி செய்வதும் உலகறிந்தது.

மதப்பணி மொழிப்பணியாக மாறிய வரலாறு இன்றும் தொடருகிறது.

பிரேஸில் நாட்டின் சில காட்டுவாசி மக்களும் புதுகினியில் சில காட்டுவாசி மக்களும் இன்றும் உலகமயமாக்கத்தின் எல்லைக்கு அப்பால் உள்ளவர். கிறுத்தவ பாதிரியார்களின் ஆர்வத்தையும், மொழியியல் மனிதவியல் ஆய்வாளரின் ஆர்வத்தையும் இம்மக்கட் குழுக்களும் இனங்களும் கவர்ந்து வருகின்றன. வெரியர் எல்வின் சிலருக்கு ஞாபகம் வரலாம். (ஆங்கிலத்தில் ராமசந்திர குஹாவும், தமிழில் சிட்டி சுந்தரராஜனும் வெரியர் எல்வினை பற்றி நூல் எழுதியுள்ளனர் – இரண்டையும் நான் இன்னும் படிக்கவில்லை)

பிரஹா என்ற பிரேஸில் நாட்டு காட்டுவாசி மக்களின் மொழி இதுவரை மொழியியல் ஆய்வாளருக்கு புதிராக இருந்தது. அந்த மொழியை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று திணறி நின்றனர். எப்படியோ புரிந்துகொண்டு விவிலியத்தை அம்மொழியில் எழுதி மதப்பணி செய்ய, டேனியல் எவரெட் என்பவர் ஒப்புக்கொண்டார். மொழியியல் என்ற துறை இருப்பதே அவருக்கு அப்பொழுது தான் தெரியும். மதப்பணி செய்யும் ஆர்வர்த்தில் கல்லூரியில் சேர்ந்து மொழியியலில் துரையில் பட்டம் வாங்கி, பிரஹா மக்களுடன் 1977ஆம் ஆண்டு வாழச் சென்றார்.

மதப்பணியை விட அவருக்கு மொழியியலே ஆர்வம் தூண்டியது. மத நம்பிக்கை இழந்தார். நாத்திகரானார். இவ்வகை மனமாற்றம் புதிதல்ல – கிறுத்துவ பாதிரியாக விரும்பி, ஏதேதோ படித்து, நாடும் நகரமும் திரிந்து, பல புதிய கலாச்சார விஞ்ஞான பொருளாதார கருத்தக்களை புரிந்துகொண்டு நாத்திகராக மாறியவர்கள் தாம் இங்கிலாந்தின் அறிவியல் ஆய்வு மையமான ராயல் சொசைட்டியின் அஸ்திவார ஜாம்பவான்கள் – சார்லஸ் டார்வினை போல். 

விஞ்ஞானம் வேறு மதம் வேறு என்று இரண்டையும் விட்டுக்கொடுக்காதவர்களும் உண்டு, கால்டுவெல், திருச்சி பிஷப் ஹீபரை போல்.

வீரமாமுனிவர் கால்டுவெல் போல் அவர் வாழச் சென்றது வேளான் சமுதாயமோ நாகரீகமோ அல்ல. அவர்களோடு வேட்டையாடும் வாழ்க்கையில் இறங்கினார்.

பிரஹா மொழியை கற்றுக்கொண்டார் எவரெட். அதிசயமும் அபூர்வமும் பொங்கி வழியும் மொழி பிரஹா, என்று உணர்ந்தார். சமீப காலங்களில் நோம் சாம்ஸ்கி என்ற அமெரிக்க பேராசிரியரின் கருத்துக்கோட்பாடுகளே மொழியியலின் பெரும் புரட்சியை ஏற்படுத்தி, அசைக்கமுடியா உண்மையாக கருதப்பட்டன.

சாம்ஸ்கியின் மொழியியல்

1) எல்லா மனித இனங்களும் ஏதோ மொழி பேசுகின்றன. பிறக்கும் போது குழந்தைகளுக்கு பேச்சுத்திறன் இல்லை. ஆனால் சிறு வயதிலேயே பேச குழந்தை கற்றுக்கொள்ளும். இது மனித இனத்திற்கு மட்டுமே உள்ள திறன். மற்ற விலங்குகளுக்கு இந்த திறன் இல்லை.

2) ஒவ்வொரு மொழிக்கும் ஏதோ ஒரு வகை இலக்கணம் உள்ளது. எழுத்தே இல்லா மொழிகளுக்கும் இலக்கணம் உண்டு. இவ்விலக்கணங்களின் பொதுவான அடிப்படை, எல்லா மனிதர்களின் மூளையிலும் உள்ள ஒரு அமைப்பின் விளைவு.

சாம்ஸ்கியின் பொது இலக்கண கொள்கையில் நான் புரிந்துகொண்டதை மிக சுருக்கமாக இவ்விறு விதிகளாய் எழுதியுள்ளேன். இது நான் விக்கிப்பீடியாவில் படித்த சிறுகட்டுரையின் சாராம்சம் மட்டுமே. 

பிரஹா மொழி சாம்ஸ்கியின் கொள்கைகளுக்கு விதிவிலக்காக இருப்பதாக சொல்கிறார் எவரெட். 

நிற்க.

பிரஹா மொழியை கற்ற டேனியல் எவரெட் கூறும் சில விசித்திரங்கள்

(க) எண்கள் இல்லா மொழி

ஒன்று என்ற எண்ணே இல்லையாம்! உலகில் எண் இல்லாத வேறு எம்மொழியும் இல்லை.
சிறிதே வளர்ந்த பழங்குடிகளில்கூட நான்கு ஐந்து வரை எண்கள் இருக்கும். சில மொழிகளில் ஐந்து என்ற சொல்லே பலவின்பாலை குறிக்கும். “கோடானு கோடி” என்று நாம் சொல்வது போல் “ஐந்து” என்பதை அவர்கள் மாபெரும் எண்ணாகவும், “நிறைய”, “பல”, “எண்ணமுடியாத” என்ற பொருளிலும் சொல்வார்கள்.

(ச) நீளா மொழி

ஒரு மொழியில் ஒரு வாக்கியம் சொன்னால், ஒரு சில சொற்களை, சொற்றொடர்களை சேர்த்து, அந்த வாக்கியதை நீட்டலாம். மற்ற மொழிகளில் ஒரு வாக்கியத்திற்கு இது தான் நீளம் என்ற வரையளவு ஏதும் இல்லை. பிரஹா மொழியில் வாக்கியத்திற்கு அளவு உள்ளதாம். அது நீளா மொழி.

(ட) 11 ஒலிகள் 

மூன்று உயிரெழுத்து எட்டு மெய்யெழுத்தும் கொண்ட மொழி – மூன்று உயிரொலி எட்டு மெய்யொலி என்று சொல்வதே தகும் என்று தோன்றுகிறது.

(த) பொதுச்சொல் இல்லை

 பாம்பு என்று கண்முன் உள்ள பாம்பை சொல்லலாம், பொதுவாக பாம்புகளை பற்றி பேசலாம். பிரஹா மொழியில் பொதுவாக இனத்தையோ பொருளையோ பேச சொற்கள் இல்லையாம்!

(ப) காலம் இன்மை

நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்று மூன்று காலங்கள் அடிப்படையாக எல்லா மொழியிலும் உள்ளன. பிரஹாவில் நிகழ் காலம் மற்றுமே திகழ்கிறதாம். ” “நேற்று இதை செய்தேன், நாளை இதை செய்வேன்” என்று யோசிக்கும் திறன் இருக்கிறது ஆனால் அவர்கள் கடந்ததை பேசுவதே இல்லை என்கிறார். குறிப்பாக நெடும் பழங்காலத்தையோ தூரத்து எதிர்காலத்தையோ அவர்கள் பேசுவதில்லையாம். இது மொழி விசித்திரம் மட்டும் இல்லை, அவர்கள் பண்பாடு என்கிறார். பேசாத கருத்துக்களுக்கு சொற்கள் உண்டா?

இபிப்பியோ – இது ஒரு பிரஹா சொல். அனுபவத்தை குறிக்கிறது. கண்ணால் பாப்பதும், காதால் கேட்பதும், தானாக அனுபவிப்பதும் அடக்கும் ஒரு சொல் – இதை மற்ற மொழிகளில் எப்படி மொழிப்பெயர்ப்பது? அனுபவத்திற்கு அப்பாற்பட்டதை அவர்கள் பேச விரும்புவதில்லையாம். நம்ப விரும்புவதில்லையாம்.

(ற) கதையோ வரலாறோ இல்லை

 தானாக அனுபவிக்காத சம்பவங்களை மீறி அவர்கள் பொதுவாக எதையும் நம்ப தயாராக இல்லை. இதனால் அவர்களுக்கு கதைகள் மீது விருப்பமில்லை. வரலாற்றை பற்றி கவலையும் இல்லை. இபிப்பியோ இன்றி உலகில்லை. இது மொழியின் கலாச்சார தாக்கமா?

(ங) தெய்வமும் இல்லை

தன் வளர்ப்பு தாய் தற்கொலை செய்ததால் யேசுவிடம் ஆறுதல் தேடினாராம் டேனியல் எவரெட். அதனால் மதப்பணியில் இறங்கினார், பிரஹாவை தேடி அவர்களுக்கு யேசுவை போதிக்க சென்றார். டேனியலின் இபிப்பியோவில் இல்லாத யேசுவையோ (வேறு எந்த தெய்வத்தையோ) அவர்கள் நம்பவும் தயாராக இல்லை, அதை பற்றி பேசவும் விரும்பவில்லை. வானம் பூமி செடி கொடி இவற்றை யார் படைத்தார் என்பதில் அவர்களுக்கு ஆர்வமில்லை. அவையெல்லாம் உள்ளன அவ்வளவு தான், அவற்றை யாரும் படைக்கவில்லை என்று அலட்சியமாக எவரெட்டின் கேள்விகளுக்கு பதிலளித்தனராம்.
அவர்கள் கேட்ட கேள்விகளும் அவர்களின் வாழ்க்கை முறையும் இயல்பான இன்பமும் காலபோக்கில் எவரெட்டை பாதித்தது. ஆறுதலுக்காக தான் நம்பிய கடவுளும் வருத்தமில்லாத ஆறுதல் தேவையில்லாத மக்களுக்கு தேவையில்லை என்று முடிவெடுத்தாராம் எவரெட். பிரஹா மக்களை பார்த்து அவர் நாத்திகராக மாற்றிவிட்டார்.


எண்கள் இல்லாத மொழி என்பதால் 1,2,3 தவிர்த்து க ச ட த என்று வரிசைபடுத்தி எழுதினேன். ங என்று முடிக்காமல் ஙே என்று முடித்திருக்கலாம். 

தொடர்புடைய பதிவுகள்

1. எவரெட் நேர்காணல் - ஆங்கிலத்தில். இந்த கட்டுரையின் அடிப்படை
2. இபிப்பியோ - காணொளி
3. எவரெட் நாத்திகரானது - ஒலிப்பதிவு

Monday, 2 February 2015

Sanskrit mathematical words - English Tamil meanings

Arithmetic ( पाटि गणितः / व्यक्त गणितः )

Word English Meaning Tamil Meaning
युक्तम् Yuktam Addition யுக்தம் கூட்டல்
दलितम् Dalitham Subtraction தலிதம் கழித்தல்
संवर्गः Samvarga: Multiply ஸம்வர்க பெருக்கல்
गुणः guNa: Multiply குண பெருக்கல்
कला Kalaa Divide கலா வகுத்தல்
हर Hara Divide ஹர வகுத்தல்
भागः Bhaaga Divide பாக வகுத்தல்
धनम् Dhanam Positive number தனம் நேர்ம எண்
ऋणम् RNam Negative number ர்ணம் எதிர்ம எண்
करणि karaNi Square root கரணி வர்க மூலம்
वर्गः Varga: Square வர்க வர்கம்
वर्गमूलम् vargamoolamSquare root வர்க மூலம் வர்க மூலம்
घन: Ghana: Cube கன கன சதுரம்
घनमूलम् Ghanamoolam Cube root கன மூலம் கனசதுர மூலம்
आसन्न Aasanna Approximate ஆஸன்ன ஏறத்தாழ
तुल्य / सम Tulya / sama Equal துல்ய / சம சமம்
चिति Chithi Sum of series சிதி எண்தொடர் தொகை
चितिवर्गः Chithivarga Sum of squares சிதிவர்க வர்கத்தொகை
चितिघनः Chithigana Sum of cubes சிதிகன கனசதுரத் தொகை

Geometry ( रज्जु गणितः )

Word English Meaning Tamil Meaning
आयाम Aayaama Length ஆயாம நீளம்
पार्शव Paarshva Side பார்ஷ்வ விளிம்பு (edge/side)
भुजः Bhuja Side புஜ விளிம்பு (edge/side)
अश्रः ashra: Side அஷ்ர விளிம்பு (edge/side)
कर्णः karNa: Hypotenuse கர்ண கர்ணம்
क्षेत्रम् kshEtram Plane க்ஷேத்ரம் தளம் / சமதளம்
त्रिभुजः Tribhuja: Triangle திரிபுஜ முக்கோணம்
चक्र / वृत्त Cakra / vrtta Circle சக்ர / வ்ருத்த வட்டம்
चाप Caapa Arc சாப வளைவு
चतुरश्रः Chaturbhuja: Square சதுர்புஜ சதுரம்
चतुरश्रः Chaturashra: Quadrilateral சதுரஷ்ர நாற்கரம்
परिणाह pariNaaha Perimeter பரிணாஹ எல்லை / சுற்றளவு
परिधिः paridhi Circumference பரிதி சுற்றளவு
षडश्रितिः Shadashriti Tetrahedron ஷடஷ்ரிதி ??
शर Shara Chord ஷர நாண்
शरीरम् Shareeram Area ஷரீரம் பரப்பு
कला Kalaa Degree கலா டிகிரீ
नाडी Naadi Minute நாடீ மினிட்
विनाडी Vinaadi Second விநாடீ ஸெகண்ட்
राशी Raashi 30 degrees ராஷீ 30 டிகிரி
गोल Gola Sphere கோள உருண்டை / கோளம்
ज्या Jyaa Sine ஜ்யா செவ்வளை
कोटिज्या kotijyaa Cosine கோடிஜ்யா துணைச்செவ்வளை
विश्कम्भः Vishkambha Diameter விஷ்கம்ப விட்டம்
विश्कम्भार्धः vishkambhaardha Radius விஷ்கம்பார்த விட்டத்தரை (ஆரம்)
समदलकोटी samadalakoti Perpendicular சமதளகோடி செங்குத்து
घनफल Ghanaphala Volume கனபல கொள்ளளவு
आयामक्षेत्र Aayaamaksetra Trapezeum ஆயமக்ஷேத்ர சரிவகம்

Algebra भीज गणितः

Word English Meaning Tamil Meaning
धनम् dhanam positive number தனம் நேர்மரை எண்
ऋणम् rNam negative number ரிணம் எதிர்மரை எண்
शून्यम् shUnyam zero சூன்யம் பூஜ்ஜியம்
खः khaH zero பூஜ்ஜியம்
खहर khaharaH infinity (x/0) கஹர அனந்தம்
त्रैराशिका trai-raashikaa Rule of three த்ரை-ராசிகா மூன்ரு எண் விதி
विपरीतम् vipareetam Inversion விபரீதம் விபரீதம்
भिन्नः bhinnaH fraction பின்ன பின்னம்
छेदः chedaH fraction சேத பின்னம்
गुणकारः guNakaaraH Multiplier குணகார பெருக்கும் எண்
भागहारः bhaagahaaraH Divisior பாகஹார வகுக்கும் எண்
समः samaH Equation சம சமன்பாடு
समीकरणः samikaraNaH Equation சமீகரணம் சமன்பாடு
इतर पक्षः itara pakshaH this side (LHS) இதர பக்ஷ இந்த பக்கம்
अपर पक्षः apara pakshaH that side (RHS) அபர பக்ஷ அந்த பக்கம்
रूपकः rupakaH Constant ரூபக ரூபகம்


Reference

1. Aryabhateeyam translated into English by KV Sarma and KS Sukla
2. Tamil Dictionary