Showing posts with label அஜந்தா. Show all posts
Showing posts with label அஜந்தா. Show all posts

Monday, 15 April 2019

ஐம்பெரும் ஓவியம் - 1 - ஆதங்கம், அறியாமை, கேள்விகள்


இலக்கிய தொகை
தமிழ் இலக்கியத்தில் ஐம்பெருங் காப்பியம் புகழ்பெற்றவை. ஐங்குறுங்காப்பியமும் அறிவோம். வடமொழியில் மூன்று பிருஹத்காவியங்கள், அதாவது, பெருங்காப்பியங்கள், புகழ் பெற்றவை; இவை பாரவி இயற்றிய கிராதார்ஜுனீயம்; மாகன் இயற்றிய சிசுபாலவதம்; ஸ்ரீஹர்ஷன் எழுதிய நைடதம். காளிதாசன் இயற்றிய ரகுவம்சம், குமாரசம்பவம் இரண்டையும் சேர்த்து, வடமொழியின் ஐம்பெருங் காப்பியமாகவும் கூறுவர். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில், அதாவது பதினாறாம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் இயற்றப்பட்டன என்று சமீபத்தில் அறிந்தேன். மற்ற இந்திய மொழிகள் இதுபோல் வரிசையை நான் கேள்விப்பட்டதில்லை.

பஞ்சபூதங்களையும் நாம் அறிவோம். உபநிடதங்களிலும் புறநாநூற்று பாடலிலும் இப் பஞ்சபூதங்களை வணங்கியும் வர்ணித்ததும் வரலாறு. பஞ்சபூத தலங்கள் என்று பாடல் பெற்ற ஐந்து சிவன் கோயில்களும் தமிழரும் மற்ற தென்னிந்தியரும் அறிந்ததே. முருகனின் அறுபடை வீடுகளை சொல்லவும் வேண்டுமா?

இசைத்தொகை
கர்நாடக இசையில் திருவாரூர் தியாகையர் இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. முத்துசாமி தீட்சிதரின் கமலாம்பாள் நவாவர்ணமும் சிலர் அறிவர். விக்கிரமாதித்தியன் அரசவையில் நவரத்தினங்களாக ஒன்பது புலவர் இருந்ததும் கர்ணப்பரம்பரை. எந்த விக்கிரமாதித்தியன் என்பது கேள்விக்குறி. முகலாய மன்னன் அக்பரின் அரசவையிலும் கிருஷ்ணதேவராயர் அரசவையிலும் இதுபோல் நவரத்தினங்கள் இருந்ததும் தெரியும். நவரத்தினம் என்பதே செல்வந்தர் மகிழும் ஒன்பது ரத்தினங்கள் அல்லவா?

நான்மறை, அறுசுவை, ஏழு ஸ்வரம், எட்டு திக்கு, என்றெல்லாம் பொக்கிஷங்களை எண்ணி கணித்து கொண்டாடுவது நம் வழக்கம். அகநானூறு, ஐங்குறுநூறு, இனியவை நாற்பது, பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று இலக்கியத்தில் மிக தொன்மையான மரபை காண்கிறோம்.

கலைத்தொகை
ஐம்பெரும் ஓவியம் என்று நாம் கொண்டாடுகிறோமா? எனக்கு தெரிந்து அப்படி யாரும் ஒரு தொகுப்பை வழங்கவில்லை. ஓவியர்கள் கூட யாரும் இதை பற்றி பேசியோ எழுதியோ நான் கேட்டதில்லை. பண்டைக்கால ஓவியங்கள் பலவும் காலத்தின் கோலத்தால் அழிந்து ஒழிந்து விட்டன என்று  ஒரு வாதத்துக்கு ஒதுக்கிவிடுவோம். ஐம்பெரும் சிற்பம் என்றாவது நாம் புகழ்ந்து பாராட்டுகிறோமா? இல்லை. ஏன்?

மாமல்லபுரத்து ஐந்து ரதங்கள் மிகப்பிரபலம். பாரதத்தை தாண்டி உலக கலை ரசிகரின் மனதில் அவற்றுக்கு ஒரு சிறப்பிடம். அவை ரதங்கள் அல்ல, கோயில்கள். ஐந்து கோயில்கள் என்று யாரும் அழைத்ததில்லை. இருபதாம் நூற்றாண்டிற்கு முன் தமிழ் இலக்கியத்தில் அவை இடம் பெறவேயில்லை. தமிழ் சினிமா பாடல்களில் கோயில்களும் சிற்பங்களும் ஓடி விளையாடி நடனமாடும் நடிகருக்கு பின்புல களமே தவிற, திரைப்படங்களின் கதைக்கும் சிற்பக்கலைக்கும் தொடர்பிருக்காது. கல்கியின் சிவகாமியின் சபதம் உட்பட, மாமல்லபுரத்து ஐந்து ரதமும், அஜந்தா சித்தன்னவாசல் ஓவியங்களும் கதாநாயகருக்கு பின்புலமேயன்றி, கதையின் இணைந்த கலைகளல்ல. இவற்றை, இலக்கியமும் இசையும் திரைப்படத்துறையும் சிற்பக்கலைக்கு செய்த அவமரியாதை என்று கொள்வதா, அறியாமை என்று கொள்வதா, அவதூறு என்றே கொள்வதா?

என் அஜந்தா பயணம்
அஜந்தா ஓவியங்களை முதன்முதல் தை மாதம் 2006ல் நேரில் சென்று பார்த்தேன். இனம்புரியா கோவமும் சோகமும் என்னை ஆட்கொண்டன. ஒரு ஓவியத்திலுள்ள ஒரு பாத்திரமோ, அவர்களது கதையோ ஒன்றையும் அடையாளம் காணமுடியவில்லை. அவை யாவும் புத்தரின் வாழ்க்கை சம்பவங்களும், அதிசயங்களும், புத்தரின் முற்பிறவியான பற்பல போதிசத்துவர்களின் கதைகள் என்பதே முக்கிய காரணம். அதற்குமுன் நான் அமர் சித்திர கதை காமிக்ஸ் புத்தகங்களிலும், அம்புலிமாமா பத்திரிகை கதைகளிலும் பார்த்து ரசித்த ஓவியங்களுக்கும் அஜந்தா ஓவிய பாணிக்கும் சம்பந்தமேயில்லை. மளிகை கடைகள் இலவசமாய் தரும் நாள்காட்டியிலோ, ராஜா ரவி வர்மனின் ஓவியத்திலோ, அங்கும் இங்கும் சில கோவில்களில் கண்ட ஓவியங்களிலோ காணும் கலை வடிவங்கள், உருவங்கள், அங்க இலக்கணங்கள், ஆடைகள், நிறங்கள்... இவை ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும், அஜந்தா ஓவியங்களோடு ஒப்பிடும் போது வேறு யுகத்து வேறு நாட்டு வேறு பண்பாட்டு கலையை பார்க்கிறோமோ என்ற ஐயம் ஏற்பட்டது.

அஜந்தா குகை 17
படம் - சித்தார்த் சந்திரசேகர்

அஜந்தா குகை 2 - சேதமான ஓவியம்
படம் - ர கோபு

அஜந்தா ஓவியத்தின் கலையோ, வரலாறோ, ஓவியர்களின் திறமும் நுணுக்கமும் புறிந்துகொள்ளவோ அனுபவிக்கவோ அடிப்படை ஞானம் கூட எனக்கு அன்று இல்லை. திகைக்கவும் திண்டாடவும் மட்டுமே ஞானம் திகழ்ந்தது. அங்கு வழிகாட்டிகள் மற்றவருக்கு சொல்லும் வர்ணனைகள் ஓரிரண்டு நிமிடம் காதில் பட்டாலும், தப்பாகவே தோன்றியது. ஏதோ ராஜா, ராணி, நாட்டிய பெண், பொறாமை, போட்டி, மரண தண்டனை, என்று அவர்கள் சினிமா தொலைகாட்சி கதைகளை அங்கே கோர்த்துவிடுவதாகவே எனக்கு தோன்றியது. அங்கும் இங்கும் சிதைந்து உடைந்து கிடந்த சில ஓவியங்களின் பரிதாப நிலையும், மிஞ்சியிருந்த சில ஓவியங்கள் மேலே சமகாலத்து கயவர்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தங்கள் பெயர்களை கிறுக்கியிருந்தது வெறுப்பூட்டியது. அவர்கள் மீதும் பாரத சமூகம் மீதும் நம் கல்வி மீதும், ஏன் ஆசிரியர் கல்கி மீதும் கூட கோபம் பொங்கி வழிந்தது. என் தம்பி ஜெயராமன் அருகில் வந்து, குகை பின்சுவரிலிருந்த புத்தர் சிலையை காட்டி, “அவரே இரண்டாயிரம் வருஷமா இதை எல்லாம் பார்த்து அமைதியா இருக்கார், உனக்கு ஏன் இவ்வளவு கோபம்,” என்றான். ஓரிரு நிமிடம் புத்தரை பார்த்தேன்; அவர் முகத்தில் தோன்றும் சாந்தம் ஒரு தொத்துவியாதி; அமைதியானேன்.

தன் கையிலிருந்த திராட்சை பையை திருடிய குரங்கின் மேலுள்ள கோபத்தையும், குகை குகையாய் ஏறி இறங்கிய கோபத்தையும் என் தங்கை தேவசேனா மீது அவள் மகள் சினேஹா செலுத்தினாள்; அவளுக்கு புத்தர் சாந்தம் அளிக்கவில்லை; தேவசேனா மணிமேகலையாக மாறவேண்டியிருந்தது.

சுமார் ஐந்து வருடத்திற்கு பின் ஐப்பசி மாதம் நவம்பர் 2010ல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் அஜந்தா எல்லோரா கலை உலாவின் பயிற்சி உரைகள் தொடங்கின. முப்பது ஆண்டுகளாக பற்பல அஜந்தா புத்தகங்களை படித்து, அவற்றின் கலையின் ஆழமும் நுணுக்கமும் வரலாறும் உணர்ந்த பேராசிரியர் சுவாமிநாதன், எங்கள் வழிகாட்டி. வைகாசி மாதம் (ஜூன்) அவரிடம் அவர் எழுதிய அஜந்தா புத்தகத்தை வாங்கி படித்தேன். ஓரிரு மாதம் கழித்து திருப்பி கொடுக்கும் போது, நீதான் இந்த புத்தகத்தை படித்த முதல் ஆள் என்றார். சின்ன ஆனந்தமும் பெரிய ஆதங்கமும் அவர் குரலில் தொனித்தன. நான் திகைத்து நின்றேன். “உனக்கு முன்னாடி எங்க அண்ணா படிச்சார் ஆனால் அது பிழை நடை பார்த்து திருத்தும் பணி.” அவர் அண்ணா கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, வங்காள மொழியில் சாதனைகள் படைத்து பெரும் விருதுகள் பெற்ற எழுத்தாளர்.

அஜந்தாவை மட்டுமல்ல, இந்திய ஓவிய மரபை, அதன் மகத்துவத்தை புரிந்துகொள்ள சுவாமிநாதன் புத்தகம் ஈடற்றது. ஆனந்த குமாரசாமி, சிவராமமூர்த்தி, அரவிந்த கோஷ், ஸ்டெல்லா கிராம்ரிச் போன்ற கலைஆய்வு ஜாம்பவான்கள் எழுதிய நூல்கள் மட்டுமல்ல, மதன்ஜீத் சிங், பெனாய் பெஹல், லேடி ஹெர்ரிங்காம், வால்டர் ஸ்பிங்க், டெய்டர் ஷிங்லாஃப், புத்த ஜாதக கதைகள், இந்திய தொல்லியல் துறை, என்று நீண்ட வரிசையாக அஜந்தாவை மட்டும் விவரித்த நூல்களை படித்து ஆய்ந்து ஒரு நூலை படைத்துள்ளார் சுவாமிநாதன். கிட்டத்தட்ட உவேசா சங்க இலக்கியத்துக்கு எழுதிய விளக்கவுரை போல் அஜந்தா ஓவியங்களை ஒரு ஆர்வலன் புரிந்துகொள்ள உதவும் அரும்பத உரை.

அயல்நாட்டு ஓவியங்கள்
லியோனார்டோ டா வின்சியின் மோனா லிசா, கடைசி விருந்து (லாஸ்ட் சப்பர்), மைக்கேல் ஏஞ்செலோவின் சிஸ்டைன் சேப்பல் விதான ஓவியம், பிகாஸோவின் லா குயர்ணிகா, ரெம்பிராண்டின் அல்லிமலர்கள், வேன் கோவின் சுயஓவியம் போன்ற ஐரோப்பிய ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. இதைப்போல் இந்திய ஓவியங்கள் ஏதேனும் புகழ்பெற்றவையா? பண்டைய சீன பாரசீக எகிப்திய கிரேக்க ஓவியங்கள்? வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறேன்.

வினா பட்டியல்
வாசகரே, இப்பொழுது சில கேள்விகள் கேட்கிறேன். எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரியும் என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 

  1. அஜந்தாவில் சராசரியாக எத்தனை ஓவியங்கள் உள்ளன?
  2. அவை எந்த காலத்தவை?
  3. ஓரிரு ஓவியர்களின் பெயர் சொல்லமுடியுமா?
  4. ஐந்து அஜந்தா ஓவியங்களின் பெயர்கள் சொல்லமுடியுமா?
  5. அஜந்தவை போல் பாரத நாட்டில் வேறெங்கு அவ்வளவு சிறப்பான ஓவியங்கள் உள்ளன? மூன்று இடங்கள் சொன்னால் போதும், இவற்றை க,ச,ட என்று வைத்துக்கொள்வோம்
    1. க - ?
    2. ச - ?
    3. ட - ?
  6.   க, ச, ட இடங்களிலுள்ள ஒரு சில ஓவியங்களின் பெயர் என்ன (மோனா லிஸா, கடைசி விருந்து போல).
  7.  அவை எந்த காலத்தவை? நூற்றாண்டு தெரிந்தால் போதும்
  8.  வரைந்த ஓவியர்கள் யார்?
  9. அஜந்தாவை போலவோ, க,ச,ட தலங்களை போலவோ, அதே காட்சியையோ கருத்தையோ காட்டும் ஓவியங்கள், வேறு எங்காவது இந்தியாவிலோ, வெளி நாடுகளிலோ உள்ளனவா?(அருங்காட்சியகத்தில் இருப்பினும் பரவாயில்லை)
  10. ஓவியங்களை பற்றி ஏதேனும் புத்தகத்தை படித்துள்ளீர்களா?


இந்திய ஓவியக்கலை பற்றிய இந்த எளிய வினாத்தாளில் எத்தனை விடைகள் தெரிந்தன? 

பதில் தெரியாத சிலருக்கு, இந்த கேள்விகள் காழ்ப்பையோ சோர்வையோ தூண்டலாம். மன்னிக்கவும்; இந்த வினாக்காளில் ஒரு கேள்விக்கும் 2010க்கு முன் எனக்கு பதில் தெரியாது; அந்த ஆதங்கமும் அறியாமைமும் வருத்தமும் தான் இந்த கட்டுரையை எழுதத்தூண்டின. இந்த கேள்விகள் என்னை இரண்டு மூன்று வருடங்களாக என்னை வாட்டுகின்றன. 

யாம் பெற்ற கடுப்பு இவ்வையகமும் பெற…

இந்திய அறிவியல் மரபிலும் வரலாற்றிலும் இதே ஆதங்கமும் வருத்தமும் தோன்றி சில வருடங்களாகின. அது வேறு கதை.
சரி; அடுத்த துன்புறுத்தல். இதே பத்து கேள்விகளில் ஓவியம் என்ற சொல்லுக்கு பதில் சிற்பம் என்று போட்டுக்கொண்டு, அஜந்தாவுக்கு பதில் மாமல்லபுரம், எல்லோரா, கோனாரக், பாதாமி, என்று ஏதோ பிடித்த அல்லது தெரிந்த இடத்தை போட்டுக்கொண்டு, மீண்டும் விடை எழுதுங்கள். எத்தனை பதில்கள் கிடைத்தன?

அடுத்த கட்டுரையில் எனக்கு தெரிந்த பதில்களை அளிப்பேன். நான் ஐம்பெரும் ஓவியம் என்று கருதுபவை யாவை என ஓரிரு பட்டியலை தருவேன். உங்கள் விடைகளையோ மறுப்புகளையோ பிடித்த பட்டியலையோ கீழே எழுதவேண்டுகிறேன்.

கல்விக்கூடத்தில் கலைகளின் நிலைமை
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதேசி, இந்தியன் என்ற பெருமையும் ஆவலும் கொண்ட சமூகமாக இருந்தால் இந்த கேள்விகள் அனைத்திற்கும் நமக்கு விடை தெரிந்திருக்கும். மதச்சார்பின்மை என்பது இந்துமத கலைகளை பெரிதுபடுத்தாதது என்ற வைத்துக்கொள்வோம். அப்பொழுது இந்து மரபில் பெருமை, இந்துத்வா என்ற எண்ணமே இருந்தவர்களுக்காவது சமீபத்திலாவது இந்த கேள்விகளின் விடைகள் தெரிந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு சுதேசி என்ற பெருமையோ ஹிந்து மரபு என்ற பெருமையோ இரண்டுமே இல்லைபோலும்.

அரசு நிர்ணயிக்கும் கல்வி திட்டங்களில் மட்டுமல்ல, சமூகத்தின் எண்ண ஓட்டத்திலேயே இந்த சிந்தனைகள் இல்லை. ஆர்வம் இல்லை. தாகம் இல்லை. அச்சு பத்திரிகைகளிலோ, தொலைகாட்சியிலோ, சினிமாவிலோ ஏதும் இல்லை. பாரம்பரிய ஓவிய சிற்ப கலையை ரசிக்கும் இந்தியர்கள் மிக மிக சிறிய சமூகமாகவே உள்ளனர். நாங்கள் தேசத்தின் மனசாட்சி என்று தங்களுக்கே பட்டம் வழங்கிக்கொண்ட எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மரபோடு உறவில்லா செயற்கை தீவுகளாக வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது. நம்மை விட, இருநூறு ஆண்டுகளாய் இந்திய சிற்பங்களையும் ஓவியங்களையும் ஆராய்ந்து, பல நூல்கள் எழுதி, கற்று கற்பித்து களிக்கும் ஐரோப்பியர்களே அதிகம். கிழக்காசியாவில் ஒரு சிலர் தேரலாம். நம் கல்லூரிகளும் பள்ளிகளும் ஐரோப்பிய கலை ஆர்வலரை தான் வளர்க்கின்றனவோ?

காலனிய ஆதிக்க நாடுகளாகிய இங்கிலாந்து பிரான்சு நெதர்லேண்டு பெல்ஜியம் இவையோடு காலனி ஏதுமற்ற  இத்தாலி ஜெர்மனியில் உதித்த தொழில் புரட்சி, இந்தியாவிலும் தோன்றாத குறையை தீர்க்க, இந்திய அரசும் மக்களும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் காட்டி, நம் கல்வி திட்டத்தில் கலைகளை மிக பின்தள்ளிவிட்டோம். ஆரம்பப் பள்ளிகளிலேயே இந்த ஓரவஞ்சனை தொடங்கிவிடுகிறது. பொறியியல் மருத்துவம் சட்டம் நிர்வாகம் ஆகிய தொழில்களுக்குள்ள சமூக மரியாதையும் அந்தஸ்தும் மற்ற தொழில்களுக்கு பொதுவாக இல்லை. சமீபத்தில் சில மருத்துவர்களின் ஊழலினாலும், சில வக்கீல்களின் ரௌடித்தனத்தினாலும், சில பொறியாளர்களின் திறமையின்மையாலும் சம்பளச்சரிவினாலும் இது பிரம்மாண்டமாக மாறுகிறது. ஒருவேளை இதனால் நம் கல்வி அமைப்பும் மாறலாம். கலைக்கு பள்ளிக்கூடங்களில் கொஞ்சம் இடம் கிட்டலாம்.
ராமு அரக்கட்டாளை பேராசிரியர் பாலுசாமிக்கு வேதவல்லி விருது அளித்த நிகழ்விலும், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள அமராவதி சிற்பங்களை பற்றி தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் நான் ஆற்றிய உரையிலும் இந்த கேள்விகளை கேட்டேன். தூண்டிய சலனம் அன்றே அடங்கிவிட்டது.

தொடரும்.


Thursday, 17 January 2019

The story of the Stupa


In 1936, A.H. Longhurst, former Superintendent in the Archaeological Survey of India, published a book titled “The Story of the Stupa”. It traced the evolution of the stupa, far before the era of Gautama Buddha and well into modern times.

It had four chapters, three of which were seemingly unrelated to stupas. The first explained the significance of the umbrella in Indian culture,and the extremely high privilege it held symbolically, at the time of Longhurst’s writing.

Megalithic Origins

Longhurst begins not with megalithic monuments, especially in Kerala. Kodakallu is a class of monument, whose name literally means umbrella-stone in Malayalam (koda=umbrella; kallu=stone). It is aptly named for its shape. These are burial monuments. A massive stone is placed over the grave of a corpse; such pre-historic burial monuments, called dolmens, are found all over India. Usually they are merely large and crude; the umbrella shaped versions are found only in Kerala, and this one in the picture is a masterpiece for its perfection, which must have been achieved only using stone tools.

Longhurst explains that the heavy stone is to prevent the spirit of the dead from coming alive and haunting the living. Extant tribes with such animist beliefs and fears are common all over the world.

Burial sites are common among prehistoric peoples, even in India, which contrasts sharply with the Hindu custom of cremating the dead.


Dolmen, Mallachandram
Picture : Manonmani Puduezhuthu
Koda kallu



Buddhist Stupas

Buddhists and Jains constructed stupas to bury their saints, though today only excavated Buddhist stupas seem to have survived in India. Stupas are mentioned even in Vedic literature.

While the most famous stupas are for Gautama Buddha himself, hundreds of other people, mostly monks in the Buddhist sangha also had stupas. Cunningham excavated a casket in Bhilsa on which was inscribed the name of Haritiputra, a disciple of Buddha. Scattered around major stupas in places like Vaishali, Sanchi, Nalanda, Ratnagiri etc are the stupas of several monks of local monasteries.

The famous stupas of massive structure and intricate art, like Sanchi, Amaravati and Bharhut, contends Longhurst, are exceptions, rather than the rule. Sanchi is exceptional in another way. Its claim to fame is not any direct connection with Buddha, but that it was the hometown of Vidisha Devi, one of Maurya Asoka’s favorite queens.

Importance of Umbrellas

Exploring the ceremonial and social significance of umbrellas, Longhurst says they were reserved for the Gods and their human representatives, royalty. This is especially visible in the sculptures  and paintings over two millennia, as also recorded history and administrave texts. The umbrella of the enemy king was a prized possession, to be captured in battle. Temple processions often feature ceremonial umbrellas of the Gods. Chariots (rathas) are often topped by umbrellas. An inscription in Tiruvarur, Tamilnadu, speaks of the privilege of carrying an umbrella, granted to a devadasi.


Jain tirthankaras, except Parshvanatha, are always shown with triple umbrellas.  Jain acharyas have only one umbrella over them. While it is quite common to see images of Buddha featuring single umbrellas, some monuments like Pithalkora, show triple umbrella over Buddha also, in paintings.

The Hindu God Vinayaka is popularly featured with an umbrella over his head. Paper umbrellas are quite popular during Vinayaka Chathurthi. Mahishasura Mardhini is also often featured with an umbrella. The major Gods though, are rarely shown with an umbrella; Vamana is one such rarity. Unusual exceptions are a Kalyana Sundara sculpture in Kanchi Kailasanatha, a standing Brahma in Pullamangai.



The funerals of the Todas, a Nilgiri tribe, even today feature umbrellas over the funeral car. This is remarkably similar to a Gandharan sculpture showing the Buddha’s own funeral car, with umbrellas.

Toda funeral procession


The custom was so strong in India that even Muslim rulers of India adopted it as a royal emblem, even though neither the nations of their origins nor Islam gave umbrellas any social significance. Europeans of the 17th century, who had also no special status for umbrellas in their culture, were forced to stow away or surrender their common sun protection umbrellas, when entering the city of Delhi.

Evolution of Stupas

The earliest stupas of Buddha were of mud and brick, as befitting a renunciate. One such mud stupa has remnants in Vaishali. During the era of Asoka, these were dismantled, and the buried relics of Buddha apportioned and distributed to hundreds of stupas across Jambudvipa. These stupas were usually undecorated. It is only the vedikas surrounding the stupas, as in Sanchi or Amaravai, or the entrance arches, that were richly adorned in sculptures. Perhaps one exception is a brick and mortar stupa at Nalanda, which features images of the Buddha, but its age is uncertain.

The stupa slowly evolved from a mound over a burial, to a symbolic object of worship. This is best shown by the rock cut stupas of Kanheri, Karle, Ajanta, Pithalkhora etc., where the stupas are carved out of the mother rock – no monk was buried under them. Like the earlier brick stupas of Sanchi, Amaravati, etc, these too feature harmikas over them. Some but not all stupas in Kanheri and Pithalkora, have an umbrella carved on the ceiling of the cave, over the stupa. Paintings in the pillars of the large chaitya at Pithalkora, and cave 9 in Ajanta, feature Buddha with triple umbrellas. The stupa in Ajanta cave 19 is quite elaborate – it features a several bas relief images of the Buddha, and also an intricate triple umbrella.  


Mud stupa,Vaishali, Bihar

Bhaja stupa with harmika, no umbrella

Karle stupa with umbrella


Kanheri stupa with umbrella on ceiling

Ajanta Cave Nineteen
Elaborate stupa with Buddha image
and triple umbrella

A parallel evolution can be seen in stupas in Sri Lanka, the earliest ones being mainly massive brick mounds, but the later dagobas featuring more architectural triple umbrellas. Dagoba is a contraction of dhatu-garbha. Hiuen Tsang in his travels, records multi storeyed wooden temples for Buddha one of which in Rajagriha (Rajgir, Bihar), was completely burnt in a fire accident, which he witnessed. These wooden temples, notes Longhurst, continue in two regions, Kerala and the Himalayas. He specially observes that Nepal, which was never ravaged by Islamic invasions, best preserves Hindu and Buddhist temples from a millennium ago, and perhaps an even older era. 

The influence of Hiuen Tsang and other pilgrim monks who took Buddhism to China and other east Asian nations can still be felt in their architecture of their Buddhist stupas and temples. They must have been copies of what existed in India at that time, argues Longhurst, hence a snapshot in time. But the mounds got shorter and the symbolic umbrellas got more and more elaborate, as reflected in in Shwedagon Pagoda, Burma or the White Dagoba in Beijing. An even later rendition is the Yukishiji pagoda in Japan, where the upper storeys, are not functional, but decorative, being architectural versions of the umbrella.

White Dagoba, Beijing - with umbrella
Picture : Wikipedia

Shwedagon Pagoda, Burma
Picture: Wikipedia

Yakushiji Temple, Japan
Picture : Japan-Guide.com

Such umbrellas and inscribed figures, not just of Buddha, but several yakshas and yakshis, can be also seen in the votive stupas in Ratnagiri, Orissa, which were discovered only in the 1970s.

Remarks


I wonder if Longhurst’s conjecture, even the whole book, could have been proposed by a scholar today. The umbrella has been democratized.He lived and wrote in the 1920-30s, when the princely states of India and royal regalia were visible and omnipresent. Perhaps also to be kept in mind, is that, several such conjectures were made in the early days of Oriental research, that time has falsified. Still, a remarkable book.

Other related Links
Vaishali - a visit
The Art of Amaravati
Ajanta - An overview (Prof Swaminathan's slideshow)
Introduction to Amaravati sculptures (lecture video)

Photo Credits
Most of the photos in this essay are my own. Links for others here.
Kodakallu, Kerala : Miyapadavu Social Club
Thiruvarur temple chariot - Wikipedia
White Daboga, Beijing - Wikipedia
Shwedagon Pagoda, Yangon, Myanmar (Burma) - Wikipedia
Yakushiki temple, Japan - Japan Guide
Toda funeral This website (link broken)

Tuesday, 31 May 2016

சிற்பத்தில் இந்திரன்


கோயில்களில் நாம் காணும் சிறபங்களிலும் ஓவியங்களிலும் புராணங்களில் சொல்லப்படும் சமபவங்களையே காணலாம். பிரம்மர், விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, முருகர், விநாயகர் மட்டுமே வெவ்வேறு தெய்வ வடிவங்களில் அதிகமாக காணமுடியும். இவற்களை தவிர சில இடங்களில் சூரியனுக்கு கோயில்கள் உள்ளதால் சூரியனின் சிலைகளை காணலாம்.

வெகு சில கோவில்களிலேயே இந்திராதி தேவர்களையோ, வசுக்களையோ காணலாம். மிகவும் அபூர்வம் என்றே கருதவேண்டும். இந்திரன் வருணன் அக்னி வாயு போன்ற தேவர்களுக்கு வேத காலத்தில் முக்கியத்துவம் இருந்ததாகவும் பின்னர் சைவ வைணவ நம்பிக்கைகள் ஓங்க, அவர்களின் முக்கியத்துவம் குறைந்ததால் வழிபாடும் குறைந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர். வேள்வி செய்தே இந்த தேவர்கள் வழிப்பட்டதாகவும், புத்தரின் மறைவிற்கு பின்தான் கோவில்கள் கட்டும் வழக்கம் பாரதத்தில் தோன்றியதென்றும் ஒரு கருத்து உண்டு. சூரியனை தவிற முப்பத்துமூவரி எந்த தேவருக்கும் கோயில் இல்லாததும் இக்கருத்துக்கு வலுவூட்டுகிறது.

புதிதாக எதை கண்டாலும் லயிக்கும் எனக்கு, அஜந்தாவிலும் காஞ்சியிலும் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன. 2006இல் முதன்முதல் அஜந்தா சென்ற போது அது சம்பந்தமாக கல்கியின் “சிவகாமியின் சபத”த்தை எதையும் படித்திருக்கவில்லை. அங்கிருக்கும் எல்லா ஓவியங்களும் புரியா புதிராகவே விளங்கின. தொல்லியல் துறையின் சிறந்த மலிவான் அஜந்தா புத்தகம் வாங்கவேண்டுமென்றோ, மற்ற ஏதேனும் சிறந்த புத்தகங்கள் இருக்கும் என்றோ எனக்கு ஏனோ எண்ணமே உதிக்கவில்லை! இப்பொழுதும் நினைத்தால் வெட்கம் பொங்கும். பின்னர் 2010இல் பேராசிரியர் சுவாமிநாதன் எழுதிய நூலை படித்தபின்னரும் மதன்ஜீத் சிங், டீட்டர் ஷ்லிங்க்லாஃப், ஸ்டெல்லா கிராம்ரிச், போன்ற மேற்கத்திய கலை ஆர்வாளர்கள் எழுதிய நூல்களையும் படித்தபின்னும் அஜந்தாவின் ஓவியங்கள் பற்றி கொஞ்சம் ஞானோதயம் பிறந்தது. 2010இல் கலை உலா சென்ற போது அஜந்தா ஓவியங்களை ரசிக்கமுடிந்தது.
புத்த மத கதைகளிலும் இந்திரன் பிரம்மா லட்சுமி சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் உண்டு. புத்த ஜாதக கதைகளில் வரும் பாத்திரங்களின் பல பெயர்கள் புராணங்களிலும் மகாபாரதத்திலும் வருபவை.


சுவர்க்கலோகத்தில் வீற்றிருந்த புத்தரை பூமியில் பிறக்குமாறு தேவர்கள் வேண்டிக்கொள்ள, அவரும் அதற்கிணங்கினார். லும்பினியில் புத்தர் மாயாதேவிக்கு பிறந்த பொழுது அவரை காண இந்திரனும் பிரம்மாவும் இறங்கி வந்தனர். இச்சம்பவங்களை ஓவியமாக அஜந்தாவின் இரண்டாம் குகையில் காணலாம். கையில் குழந்தை சித்தார்த்தனை இந்திரன் ஏந்த, பேருவகையுடன் அருகே நின்று பிரம்மர் பார்க்கிறார். அவருக்கு சாமரம் வீசும் பணிப்பெண் முகத்தில் ஆச்சரியம் மிளிர்கிறது.

அஜந்தா- குழந்தை சித்தார்த்தனை ஏந்தும் இந்திரன் அருகே பிரம்மா, எதிரே மாயாதேவி
முதல் குகையிலும் பதினேழாம் குகையிலும் சிபி சக்கரவர்தியின் ஜாதக கதை ஓவியங்களை காணலாம். ஆனால் தராசில் தன் சதையை வைத்தபின் சிபிக்கு இந்திரனும் யமனும் காட்சியளிக்கும் மிகவும் சேதம் அமைந்துள்ளதால் தெளிவாக தெரிவதில்லை.

பதினேழாம் குகையின் வெளிச்சுவரில் இந்திரன் சுவர்க்கத்திலிருந்து கீழே இறங்கி வரும் காட்சியை காணலாம். இந்த ஓவியம் இன்றும் பிரகாசமாக இருக்கிறது. பின்புலத்தில் மேகங்கள் பஞ்சுபஞ்சாக அணிவகுக்க, இந்திரனின் இடது புறம் இரு தேவகன்னிகையர் ஜால்ராவில் தாளத்தை வாசித்து இறங்கி வர, மற்றும் ஒருத்தி நீண்ட புல்லாங்குழலூதுகிறாள். இந்திரனுக்கு வலது பக்கம் நீண்ட ஒரு கருவியையும், இந்திரனின் இடுப்புயரத்தில் வேறொருவன் ஒரு குடம் பொருத்திய கருவியையும் வாசித்தப்படி இந்திரம் பூலோகம் நோக்கி கீழே இறங்குகிறான்.

அஜந்தா : பறந்து இறங்கும் இந்திரன்
இந்திராதி தேவர்களும் முனிவரும் சூழ கைலாயத்தில் சிவனும் பார்வதியும் வீற்றிருக்க, சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் சென்றடையும் ஓவியம் தஞ்சை பெரிய கோவிலிலுள்ளது. இதில் இந்திரனை மட்டும் தனியாக அடையாளம் காண்பது கடினம். டிசம்பர் 2014 தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரியில் முனைவர் நாகசாமி, இந்த ஓவியத்தை வர்ணித்து நடத்திய உரையில், ஓவியர் சந்துரு வரைந்த கோட்டோவியத்தை திரையிட்டார். சந்துருவின் கோட்டோவியத்தில் இந்த கைலாச காட்சியின் பிரம்மாண்டத்தை உணரலாம். இந்திரனை தனியாக அடையாளம் காண இயலாததை நீங்களும் உணரலாம். அடையாளம் தெரிந்தால் தயவுசெய்து எனக்கு சொல்லவும்.

தஞ்சை பெரிய கோவில் - கைலாச காட்சி ஓவியம்

தஞ்சை கோவில் கைலாச காட்சி - சந்துருவின் கோட்டோவியம்
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் ஜலந்தரன் பிறந்த சம்பவத்தின் சிற்பத்தை காணலாம். இந்திரன் சிவனை பார்க்க கைலாசம் செல்ல அவனை நுழையவிடாமல் சிவகணங்கள் தடுக்கின்றன; எள்ளி நகையாடி சேட்டைகள் செய்து, இந்திரனுக்கு கோபமூட்டுகின்றன. இந்த கணங்களில் ஒரு கணத்திற்கு மட்டும் நான்கு கைகள் உள்ளன. வாசலில் ஆரவாரம் கேட்டு சிவனே ஒரு கணமாக தோன்றி கணங்களோடு ஒருவராக இந்திரனை துன்புறுத்துகிறார். ஆத்திரம் அடைந்த இந்திரன், நான்கு கை கொண்ட பூதகணமா என்று கூட யோசிக்காமல் எல்லா கணங்களையும் தாக்க வஜ்ராயுதத்தை எடுக்க, என்ன மடைமை இந்திரா என்னும் பாவனையில் பிரம்மனும் அக்னியும் அவன் கைகளை பிடிக்கின்றனர். பின்னால் நின்று விஷ்ணு வேண்டாம் என்று தர்ஜன முத்திரையால் எச்சரிக்கை விடுக்கிறார். காமவில்லை எடுத்த மன்மதன் சாம்பலானது போதாதா சிவனை எதிர்த்து வஜ்ராயுதமெடுத்தால் நெற்றிகண் திறக்காதா என்று அவர்கள் சொல்லுமுன் நெற்றிக்கண் திறந்துவிடுகிறது. சட்டென்று ஒரு நீர் நிரைந்த குடத்தை எடுத்து அவர்கள் காட்ட நெற்றிக்கண்ணின் பொறி அக்குடத்தில் விழ, சிவனின் அம்சமாக ஜலந்தரன் பிறக்கிறான்.

இந்த சிற்பத்தை காமெராவில் எளிதில் படமெடுக்க முடியாது. முன்னிருக்கும் தூண்கள் மறைக்கும். நேரில் பார்த்தாலே முழு அழகும் சிற்ப அமைப்பு புரியும்; ரசிக்கலாம். இங்கே இரண்டு படங்களாக பார்க்கலாம்.

காஞ்சி கைலாசநாதர் கோவில் -
பிரம்மனும் அக்னியும் தடுக்கும் இந்திரன்

வில்லேந்தும் நாலு கை கணமாக சிவன்!
கீழே கைக்கூப்புவது - ஜலந்தரன்

எல்லோரா கைலாசநாதர் கோவிலில் – பதினாறாம் குகையில் – பிரம்மாண்ட வீற்றிருக்கும் சிவன் சிலை உள்ளது. சிவனை சூழ்ந்த தேவர்களில் ஒருவனாக ஒரு யானை மேல் வீற்றிருக்கும் இந்திரனை காணலாம். இந்திரனுக்கு அருகே எருமை மேல் யமனும், ஆடு மேல் அக்னியும் உள்ளனர்.

எல்லோரா கைலாசநாதர் கோவில்
சிவனுக்கு இடதுபக்கம் - இந்திரன் யமன் அக்னி

புனேவிலிருந்து மும்பை செல்லும் வழியிலுள்ள பாஜா குகை ஒன்றில் சூரியனையும் இந்திரனையும் காணலாம். குதிரை பூட்டிய தேரில் சூரியனும் ஐராவதம் என்ற யானை மேல் பவனிவரும் இந்திரனும். இவை இரண்டுமே அபூர்வ பௌத்த சிற்பங்கள். சாதவாகனர் காலத்தவை, கிபி முதல் நூற்றாண்டு.

பாஜா குடைவரை - சூரியனும் இந்திரனும்
வாதாபியிலுள்ள சாளுக்கியர் கால குடைவரை கோயில்களில், சில விதானங்களில் தெய்வ சிற்பத்தை சூழ்ந்து அஷ்ட திக்பாலர்களை காணலாம். கிழக்கு திசைக்கு திசை தெய்வம், யானை மேல் அமர்ந்துள்ள இந்திரன். வாதாபி மூன்றாம் குகையில் பெருமண்டபத்து விதானத்தில் பிரம்மனை மையமாகவும் சுற்றி அஷ்ட திக்பாலரும் அமைந்த சிற்பங்கள் காணலாம். இதேபோல் விஷ்ணுவை மையமாக வைத்து அஷ்ட திக்பாலரால் சூழ்ந்த நிலையையும் காணலாம். இதில் யானை மேல் அமர்ந்தகிழ்ககு காவலனாக இந்திரன் உள்ளான்.

வாதாபி மூன்றாம் குகை
பிரம்மனை சுற்றி திக்பாலர்

வாதாபி மூன்றாம் குகை
விஷ்ணுவை சுற்றி திக்பாலர்
படங்களுக்கு நன்றி
அஜந்தா - சித்தார்த் சந்திரசேகர்
எல்லோரா - அரவிந்த் வெங்கட்ராமன்
வாதாபி - விகே ஸ்ரீநிவாசன்
தஞ்சை - முனைவர் நாகசாமி, ஓவியர் சந்துரு

தொடர்புள்ள கட்டுரைகள்
2. கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் 
5. மாமல்லபுரத்து உழைப்பாளர் சிலை 
6. குந்தவை ஜீனாலய ஓவியங்கள் 
7. Paranjothi Yathirai - Ajantha Ellora Site Seminar

Saturday, 3 October 2015

கோயிலும் கல்கியும் 2 - சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் படிக்கும் போது அந்த கதையும் வரலாறும் மட்டும் என்னை தாக்கவில்லை. காதலும் வீரமும் சோகமும் உவகையும் சிரிப்பும் வியப்பும் நம் உள்ளத்தில் மூளுவது விசித்திரமல்ல. ஒரு சிறந்த எழுத்தாளன், அதைவிட சிறந்த கதைசொல்லி, இதை எல்லாம் செய்வான்.

கல்கி சிறந்த கதைசொல்லி. 

ஆனால் அதையும் தாண்டி, பல்லவர் காலத்தை கண்முன்னே அவர் கொண்டுவந்த ஆளுமை அற்புதம். குதிரை வேண்டும் என்று ஆயனர் கேட்க, மகேந்திரனின் சங்கோஜமும், இங்கும் அங்கும் தூதுவர் மூலம் தகவல் செல்ல எடுத்து கொண்ட கால அவகாசமும், வியப்பூட்டின. நாம் வாழும் நவீன யுகத்தில் தொலைப்பேசியையும் ரயில்வண்டிகளையும் கார்களையும் விமானங்களையும், சாதாரணமாக கருதும்போது, நாமெல்லாம் மன்னர்களை மிஞ்சிய செல்வந்தர்கள், என்றே எனக்கு வலியுறுத்தியது. வெள்ளத்தை தாண்ட முடியாமல் சாளுக்கிய படையும் நின்றது என்று அறிந்தபோது, பாலங்களின் அருமை புரிந்தது. 

பாலங்களை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. நாடுகளின் எல்லைகளாக பெரிய நதிகளே பல நூற்றாண்டுகள் திகழ்ந்தன. அவற்றை மிஞ்சி பேரரசுகள் அமைந்தது அதிசயம். ஆங்கிலேயர் ஆட்சியில் பாலங்களால் உள்நாட்டு வணிகம் செழித்ததும், பெரும் வரம். மாபெரும் கோயில்களை கட்டிய மன்னர்களால், ஸ்தபதிகளால் பாலங்கள் செய்ய முடியாதது பெரிய புதிர். இதை ஆராயும் கட்டுரையோ நூலோ ஏதும் நான் கேள்விப்பட்டதில்லை.

ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது அஜந்தா ஓவியம் பற்றிய தகவல் தான். ஆயிரம் ஆண்டுகளாகியும் மங்காத சிலையும், சாயாத கோயிலும், தேயாத இலக்கியமும், மாறாத சில மரபுகளும் அதுவரை யதார்த்தமாகவே தெரிந்தன. ஆனால் ஆயிரம் ஆண்டு மங்காத ஓவியம், ஆழமாகவும் அகலமாகவும் சிந்தனையை கிளறியது. பாரதநாட்டை, பக்திக்கும் இலக்கியத்திற்கும் உணவிற்கும் மட்டுமே சிறந்த நாடாக நான் அன்று வரை கருதியிருந்தேன். கலைகளிலும் விஞ்ஞானத்திலும் நாம் சாதனைகள் செய்தோம் என்று எனக்கு அன்று வரை தோன்றவில்லை. ஸ்தபதி, சிற்பி என்று சொற்கள் வழக்கில் இருப்பினும், அவர்களது கல்வியும் ஆர்வமும் மரபும் முக்கியத்துவமும் ஏனோ அறிவியல் ஆர்வமுள்ள பலருக்கும் தெரிவதில்லை. 

நாட்டில் பஞ்சம் வரும்போது அதை தீர்க்க ஏதோ கோயில் கட்டினார் என்ற வரட்டு மூடநம்பிக்கை, நம் நாட்டில் மிக பரவலாக உள்ளது. மூலிகைகளை மருந்தாக ஆய்ந்து உணர்ந்து கற்று நூல்செய்த சரகர் சுஷ்ருதர், ஜோதிட கணித நூல்களை இயற்றிய ஆரியபடர், வராஹமிஹிரர், பாஸ்கராச்சாரியர் ஆகியோரை அறிவியல் ஞானிகளாக கருதும் பாரத மக்கள், சிற்பிகளை, ஸ்தபதிகளை, விவசாயிகளை, அறிவியல் பயில்வோராக பார்ப்பதில்லை. அறிவுசார் நூல்களை படிப்பவர் சிலரே, ஓரளவேனும் இவர்களின் மரபுகளையும் திறமையும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக, ஆங்கில கல்வி மரபில் வந்த பலரும் இதை உணர்வதில்லை.

கல்கி என் கண்களை திறந்துவைத்தார்.

தமிழ் இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டில், கவிதையில் சுப்பிரமணிய பாரதி செய்த புரட்சியை விட, கதை உலகில் கல்கி செய்த புரட்சி அகலமானது. சரித்திர நாவல்களை எழுதிய பெரும் எழுத்தாளர் படைக்கு முன்னோடி, கல்கி.

முன்னோடிகள்

பிரெஞ்சு மொழியில் ஜூல்ஸ் வெர்ண் நிலவுக்கு செல்லும் பயணத்தையும், கடல்மூழ்கி கப்பலையும், பலூனில் ஆப்பிரிக்காவை கடக்கும் சாகசத்தையும் நாவல்களாக எழுதி அறிவியல் கதை யுகத்தை தொடங்கி வைத்தார். ஆர்த்தர் கிளார்க், ஐசாக் அசிமோவ், ரே பிராட்பரி, ஸ்டானிஸ்லாவ் லெம், லேரி நிவன், உர்சுளா லிகுயின் என்று பலரும் இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் சார்ந்த கதைகள் எழுதினார்கள். ஜூல்ஸ் வெர்ணின் ஆழ்ந்த அறிவியல் ஞானம் அவர் கதைகளில் புலப்படும். நான் படித்ததில், ஆர்த்தர் கிளார்க், லேரி நிவன் மட்டுமே அத்தனை ஆழமாக அறிவியலை சார்ந்து நாவல்களை எழுதினார்கள். மற்றவர் கதைகளில் சமூகவியல், அரசியல், காதல், மோதல் என்றே முக்கால்வாசி போகும். இருபதாம் நூற்றாண்டில் நாவல் சிறுகதை தவிற காமிக்ஸ் என்ற சித்திரகதைகளும் (குறிப்பாக சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஃப்லாஷ் கார்டன் வகையறா), ஸைஃபை சினிமாக்களும் அறிவியல் முன்னேற்றங்களின் அடிப்படையில் எதிர்காலத்தை நோக்கி, கற்பனை செய்து அற்புத காவியங்களை தந்தன.

ஆர்த்தர் கோனன் டோயில் ஆங்கிலத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற நாயகனை படைத்து துப்பறியும் கதைகளின் யுகத்தை தொடங்கி வைத்தார்; அகாத்தா க்ரிஸ்டி, ஜான் டிக்சன் கார், பெர்ரி மேசன், எல்லரி குயீன், டிக் ஃப்ரான்ஸிஸ் என்று துப்பறியும் மர்மகதை எழுத்தாளர்ப்படை பின்தொடர்ந்தது.

யாம்பெற்ற துன்பம் பெருக இவ்வுலகம் என்றே, மெகாத்தொடருக்கு முன்னோடியாய் டால்ஸ்டாய், தோஸ்தோயெவ்ஸ்கி போன்ற ருஷிய எழுத்தாளர்கள், அம்மிக்கல்லளவு நூல்களை எழுதி, புலம்பி எழுதுக கருமம், என்ற நீதியை நிறுவினார்கள்.

கல்கிக்கு முன்னரே வரலாற்று கதைகள் தமிழில் இருந்தாலும் அவரை தொடர்ந்து விக்ரமன், சாண்டில்யன், ஜகச்சிற்பியன், ஸ்ரீவேணுகோபாலன், பாலகுமாரன் என்று வரிசை நீள்கிறது. மற்றவர் கதைகளை நான் பரவலாக படித்ததில்லை. கல்கி முன்னோடி என்பதில் சந்தேகமில்லை; சமூக நாவலிலோ, பயண கட்டுரையிலோ, சிறுகதையிலோ அவருக்கு இந்த அந்தஸ்த்து இல்லை. சரித்திர நாவலில், அவரே மகேந்திர பல்லவர்.

கலை ஆர்வம்

நாவலை எழுத மட்டும் அவர் தூண்டவில்லை. சிற்பங்களின் மேலும், பக்தி இலக்கியத்தின் மேலும், மன்னர்களின் கலை ஆர்வத்தின் மேலும், ஒரு புதிய ஆர்வத்தை பல்லாயிரக்கணக்கான தமிழரிடம் அவர் தூண்டினார். பாடல் பெற்ற தலமென்றும், தீர்த்த யாத்திரைக்கும் மொட்டையடிக்கவும் பயணித்த தமிழர்களை, பல்லவர் சிற்பம் சோழர் சிற்பம் என்று தேடிச்செல்லவைத்தார்.

ஹிண்டு நாளிதழில் பலவருடங்களுக்கு முன், எழுத்தாளர் கங்காதர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில், தமிழ்நாட்டை புரிந்துகொள்ள சிவகாமியின் சபதமும் பொன்னியின் செல்வனும் படிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதை நான் ஆமோதிக்கிறேன்.

மலைக்கணவாயில் பரஞ்சோதி குதிரையில் செல்ல, அவனை சூழ்ந்த சிவந்த மலர்களும் பாறைகளும் அவனது மனதில் அனலாய் கொதித்த ஆர்வமும் அச்சமும் உற்சாகமும் நரம்புகளை புடைத்துக்கொண்டு மேனியெல்லாம் மின்னலாய் சிலிர்க்க, அவ்வப்போது பின் தொடரும் வேறொரு குதிரை சத்தம் கேட்பதும், இது வரை போகாத பாதையில் பரஞ்சோதி மட்டுமல்ல, நாமும் போகிறோம் என்ற ஈடில்லா உணர்ச்சி நம்மை கவ்வும். ஓவியர் மணியம் செல்வத்தை அவர் இல்லத்தில் சந்தித்தப்போது இதே உணர்வை அவர் என்னிடம் பகிர்ந்தார். அவர் தந்தை மணியம் வரைந்த வாதாபி ஓவியங்கள் சுவரிலிருந்து சிரித்தன. கல்கி ஆவியாய் என் காதில் வந்து, அப்பனே, மந்தாகினி மாதிரி மௌனமாய் இருக்காதே, வந்தியத்தேவனை போல் ஏதாவது உளரித்தள்ளு, என்றார். பல்லை இளித்து தலையசைத்தேன்.

பரஞ்சோதியோடு மனம் அஜந்தாவிற்கும் பயணம் சென்றது. அருகிலுள்ள சித்தன்னவாசலை விட தொலைவிலுள்ள அஜந்தாவே வா வா என்று அழைத்தது. அங்கே தீட்டப்பட்ட ஓவியத்தை விட, மங்காத வண்ணத்தின் ரகசியத்தின் மேல் ஆர்வம் பொங்கியது. நான் சிவகாமியின் சபதம் படித்தது 2000இல். அஜந்தாவுக்கு 2006 இல் சென்றேன். ஒரு ஓவியமும் புரியவில்லை. அங்குள்ள ஆட்கள் சொல்வது தவறான கதையெனவே உறுத்தியது. காட்சிகள் ஏதும் புரியவில்லை. ஓவியங்களின் தேய்ந்த நிலை கண்டு மனம் கசந்தது. முந்திய நாள் எல்லோராவை பார்த்ததில் மிரட்சியும் பிரமிப்பும் நிலைத்ததால், கொஞ்சம் ஆறுதல். எல்லோரா சிற்பங்கள் சொல்லும் கதைகள் புரிந்ததே? அஜந்தா ஏன் அடையாளமே தெரியவில்லை? குழப்பமான அனுபவம்.

அஜந்தாவை பற்றி நல்ல நூலிருக்கும், அதை படித்தால் விவரம் கிடைக்கும் என்று பல வருடங்களுக்கு என் மந்த புத்திக்கு தோன்றவில்லை. அங்குள்ள ஓவியங்கள் தமிழ்நாட்டு கோயிலுள்ள ஓவியங்களை விட பல மடங்கு சிறப்பானவை என்று மட்டும் புரிந்தது.

ஒரு கோவிலை தவிர்த்து : காஞ்சி கைலாசநாதர் கோவில்.  
(தொடரும்)

தொடர்புடைய கட்டுரைகள்

2. கல்லிலே ஆடவல்லான்
3. ஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்
4. Arthur C Clarke's Magic Postulate

Monday, 23 September 2013

Paranjothi Yathirai

After Mamallapuram in 2010, our second Site Seminar was in Ajanta & Ellora in January 2011. I wrote the following essay in April 2011, after our visit, explaining why I was inspired to visit these two places. We called this trip Paranjothi yathirai...

Paranjothi Yathirai
About ten years back, in 1999, I read Kalki's epic historical novel, Sivakaamiyin Sabatham. It was one of the most fascinating books that I have ever read, not only because of the gripping story and Kalki's narration, but for its historical sweep, its foundation on reality, the fulsome admiration of and pride in the artistic, sculptural, literary, religious, military, technological, administrative and scientific achievements of our ancestors upto that era.

Add to this, the brilliance of the Mahendra Varma Pallavan and his fictional antagonist, the Buddhist bikshu, Naganandhi; and the depictions and descriptions of four wonders - Kanchi, Vatapi, Mahabalipuram and Ajanta, the last two of which have changed little. Here was the perfect recipe to ignite the imagination, wonder and curiosity of a soul that had dried up.
After my return to India, this inspired visits to Kanchi and Mamallapuram with altered mind and eager eyes, but an undeveloped sense of aesthetics.

I read several books on Indian history after that, all in English. AL Basham, Burton Stein, Abraham Eraly, Charles Allen, John Keay, ibn Batuta, al Beruni, even Jawaharlal Nehru. Among these Charles Allen most changed my perspective, opening my eyes to the contributions of the British to Indian history, art, sculpture, culture and heritage; not merely that they were one-dimensional colonialists as portrayed in our classroom syllabus or media coverage. I later became aware of Nilakanta Sastri and PT Srinivasa Iyengar, whose accounts of Tamil history take things to a whole other level. It was around this period that I also visited Ajanta, was blown away by the monuments of Ellora, and rather underwhelmed by the paintings of Ajanta, which were cryptic and chaotic.

Then came the series of lectures by Chitra Madhavan, the encounter with Prof Swaminathan, both quantum leaps, like my first reading of Kalki. If my artistic soul was ignited by Kalki, it was rasied to an inferno, by these two people. And I discovered that Mahendra Varma Pallavan surpassed even Kalki's portrayal; which was also true of the monuments of Mallai, the temples of Kanchi and paintings of Ajantha. Mahendra Varma's worthy successors had wrought wonders, lost to history and the collective consciousness of the Indian public, but these were revived by an amazing set of English orientalists, passionate, scholarly, systematic and deserving of our gratitude; they had help from some French and Indian compatriots - all these were brought to light by Prof Swaminathan's marvellous manuscript on Mallai. And after that three day trip, I just had to read about Ajantha, which I found out he had also written a manuscript about. My first two attempts at provoking the site visit failed, but fortunately Mr Narayanaswamy was able to succeed. And in honour of Sivakaamiyin Sabatham, whose first section is called Paranjothi Yathirai......well you know the rest.

Cave 1, Mahaa Janaka Jaataka panel, Ajanta
Gopu in Cave 16, Ellora
External view, cave 16, Kailasanatha temple, Ellora