Friday, 25 October 2013

Greenery of the Chola country


Koneri raja puram
Tukkaachi



Chola country : An anthology of green, punctuated by concrete, where streams and canals form watery rhymes. Little boys frolic, splashing in the waters, in bowery nooks that filter sunlight; where Nintendo and Playstation are too pricey to surpass the free delights of earth and water. Leaf, tile and cement ceil houses, pumpkins and dish antennas compete as decor, tractors have garages, cranes fish and farmers crane their backs in rice fields. 






Cows amble, hens scramble, bulls strut, insects flit, bees bumble, dores dumble, drunks stumble and butterflies flutter by. Shops vend tea, snacks, fruits, betel, plastic goods, jewellery, european and persian fabrics, motorbikes, xerox, cell phone, urea, cement, seeds... It's also astounding how many schools with large buildings there are in small towns. Waves of modernity wash the shores of the medieval and ancient.

Feasting on the greenery is an excellent vacation for the eyes, especially if accustomed to LCD screens, on palm desk and wall.


Canal outside Tukkaachi

Similar Sketches

Kumbakonam - LMS

Traffic - LMS

Tuesday, 22 October 2013

நூல் அறிமுகம் - Guns Germs and Steel

நாளை அக்டோபர் 23, புதன்கிழமை, மாலை 6.45 மணிக்கு தியாகராய நகர் டக்கர் பாபா பள்ளியின் காந்தி மையத்தில், உயிரியல் பேராசிரியர் ஜாரெட் டைமண்ட் எழுதிய ‘Guns, Germs and Steel’ நூலை பற்றி, பேச என்னை அழைத்துள்ளனர்.

1999இல் இந்த நூலை படித்தேன். கிணற்று தவளைக்கு கடலைக்கண்ட உணர்வும் வியப்பும் மலைப்பும் தெளிவும் எய்தினேன். என்னதான் சுதந்திரம் பெற்றாலும், ஆன்மீக சக்தி, அகிம்சை, புண்ணிய பூமி, என்றெல்லாம் நம் முதுகில் நாமே தட்டிக்கொண்டாலும், விஞ்ஞானத்தில், தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில், கல்வியில், நாட்டு நிர்வாகத்தில், நகர அமைப்பில், படை பலத்தில், ஏன் கலைகளில் கூட வெள்ளையர்களே வல்லரசராக இருப்பத்தை நாம் அறிவோம். இதனால் நம்மில் பலருக்கு தாழ்மனப்பான்மையும், வெள்ளையர் பலருக்கு கர்வமும் கோலோச்சுவதும் உலக நிதர்சனம். ஆசியர், தம்மை விட ஆப்பிரிக்க மக்கள் கீழானவரென்று சில நேரம் ஒரு வித ஆறுதல் அடையலாம், பரிதாப படலாம். முன்னொருக்காலத்தில் ஐரோப்ப கண்டம் இருண்டிருக்க நம் நாட்டில் செல்வமும் வணிகமும் கல்வியும் கலையும் எழிலும் கர்வமும் கொடிகட்டி பறந்தன என்று வேறு விதத்தில் தேற்றிக்கொள்வோம். சீனரும், அரபியரும், எகிப்தியரும், பாரசீகரும், இராக் மக்களும், ஏன் யவனராகிய கிரேக்கரும் இத்தாலியரும் கூட இப்படி நினைக்கலாம்.

ஆனால் வெள்ளையர் உண்மையில் அறிவிலும் ஆற்றலிலும் மற்றோரை விட சிறந்தவரா? கருப்பர் அடிமட்டத்தினரோ? ஆசியர் நடுத்தரம் தானோ? இன்கா, மாயா, அஸ்டெக் வாரிசுகள் நிலை என்ன? பழம் பெரும் நாகரிக நாடுகள் ஏன் சீரழிந்தன? சில மொழிகள் இலக்கிய செழிப்புடனும், பல மொழிகள் எழுத்தே இன்றியும் ஏன் உள்ளன? குதிரைப்படை கொண்ட ஐரோப்பியர், ஆப்பிரிக்க கருப்பரை அடிமையாக்கி, அமெரிக்க சிவப்பினத்தை அழித்தனரே, வரிக்குதிரை படைகொண்ட ஆப்பிரிக்கர் சிவப்பினத்தை அடிமையாக்கி ஏன் ஐரோப்பாவை ஆளவில்லை? கருப்பினர் பலர் உடையில்லா வேட்டைக்காரர்களாக 40000 ஆண்டு வாழ்ந்த ஆஸ்திரேலியாவில், 200 ஆண்டில் வெள்ளையர் ஒரு சிறந்த நாகரிக்த்தை உருவாக்கியது எப்படி? 40000 இன்கா படையினிரை 200 இஸ்பானிய சிப்பாய்கள் வென்றது எப்படி?

விடைகளை எழுதப்பட்ட வரலாற்றிலும் மனிதவியலிலும் தேடாமல், நாகரிகத்திற்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் எழுதா வரலாற்றிலும், அவர் வாழ்ந்த நிலத்திலும், அந்நிலத்து செடிகளின் வரலாற்றிலும் விலங்குகளின் வரலாற்றிலும் தேடினார் ஜாரட் டைமண்ட். அதன் விளைவே இந்த நூல்.

காந்தி மையத்தில் வாரா வாரம் ஒரு நூல் அலசப்படும். யாவரும் வரலாம். ஜூன் மாதம் அங்கு நான் தாமஸ் ஹாகர் எழுதிய The Alchemy of Airஎன்ற நூலை பற்றி பேசினேன்.

Saturday, 19 October 2013

Symbiogenesis - alternate to Darwin's theory of evolution

In the media, especially American, there is often uproar about Creationism, a christian denial of Darwin's theory of evolution. In the Indian media, biology and chemistry are thoroughly ignored. Famous scientists / public speakers especially Richard Dawkins, thunder away with dogmatic militant atheism, as though Christianity were the big challenge to Darwin & Wallace's theory. The views of people like Stephen Jay Gould, who called religion Non-overlapping magisterium, get muted in the public discourse, and his explanations like 'punctuated equilibirium' are generally unknown, as are recent terrific advances in genetics. Meanwhile, in the last HUNDRED years, an alternate set of theories and ideas have cropped up - symbiogenesis, primarily - that seeks to explain missing gaps and illustrates a brilliant mechanism for speciation, which is stunningly ignored in the media, academia, and even intellectual circles, while they bombard us with incomprehensibles like string theory, dark matter and Higgs boson.

For those interested, here is something scientific, from a wonderful scientist. I wish there were some good illustrated talks on the subject. The article may be hard to follow for those who havent read about it, and even more so for those who defend evolution without understanding its elements- in that field I recommend Alfred Russel Wallace's brilliant book "Darwinism" over Darwin's own hard to follow book "Origin of Species."

http://www.scoop.co.nz/stories/HL200903/S00194.htm

Update: For an introduction to some of the topics discussed in the above article, I recommend watching these videos on Youtube.

I read Nick Lane's book "Power, Sex, Suicide" a few years back. It explains how mitochondria, which have their genome outside the nucleus of a cell, power the cell, help it respire, and pass on their DNA called mtDNA along via the maternal line to the offspring. Basically the book explained the physics and chemistry of the eukaryotic cell - i.e a cell with a nucleus, and how it differs from a prokaryotic cell - a cell without a nucleus. The formation of nucleus and absorption of mitochondria was a non-evolutionary event, in the Darwinian sense.

This video of Dr Nick Lane illustrates some aspects of the book. Excellent!

This is a much simpler and smaller lecture by same author, Nick Lane, but without pictures, sadly.

Saturday, 12 October 2013

என் அப்பாவுக்கு பிடித்த கவிதை

இது நான் டிசம்பர் 2003இல் எழுதிய கவிதை. அப்பாவுக்கு படித்துக் காட்டினேன். ஒவ்வொரு வரியும் ரசித்தார். பல வருடங்கள் கவிதை படிக்காததாலும், மகன் எழுதினான் என்ற பெருமையாலும், மிகவும் ஆவர் ரசித்திருக்கலாம். அவர் நினைவில்…

           புதுமை எங்கே
அழகியை ஓவியம் வரைய நினைத்தேன்
அதிலென புதுமை அதனை தவிர்த்தேன்
குரூபியை வரைய முடிவு எடுத்தேன்
திறமை குறைவால் முயற்சி தவிர்த்தேன்
பௌர்ணமி நிலவை பாட நினைத்தேன்
உவமை அலுத்ததில் உதறி விடுத்தேன்
அமாவாசையை கவிசெய நினைத்தேன்
யாருக்கு புரியும் கூறிட மறுத்தேன்

முல்லை மருதம் புகழ்ந்திட முனைந்தேன்
நெய்தல் குறிஞ்சி நெகிழ்ந்திட முனைந்தேன்
பாலை தேனை பைந்தமிழ் அமுதை
கள்ளை மதுவை பருகிட முனைந்தேன்
நஞ்சை கவிதை கருத்தாய் வைக்க
நெஞ்சில் முனைந்தேன் வெறுத்து வெகுண்டேன்

காதல் காமம் கசப்பாய் தெறிந்தது
வீரம் பண்பு வெந்து கிடந்தது
நன்மை தீமை உண்மை பொய்மை
நமத்து கிடந்தது கற்பனை பொறிக்கு
பழைய ஆடையின் நூல்களை பிரித்து
மறுபடி நெய்வதில் மகிமை எங்கே
ஆயிரம் தலைமுறை அழகாய் சொன்னதை
புதிதாய் புனைவதில் புலமை எங்கே

கண்ணில் தெறியும் கலைகளை எல்லாம்
மண்ணில் புதைத்து மறந்திடுவோமோ
காதால் கேட்ட இசைமொழி எல்லாம்
காற்றில் சிதறி மறந்திடுவோமோ
பழையன கழிதலும் புதுவன புகுதலும்
விதைத்தபின் வளர்க்கும் அறுவடை தானோ
மனிதன் அறியா மண்ணிருந்தாலும்
கருத்து படியா களமெங்குளவோ

முற்றுப்புள்ளி மேல் மோகம் வீணோ
கேள்விக்குறிதான் கலையின் குறியோ
விடைதெறிந்தாலும் விளங்காப் போமோ
விடை ஒன்றுளதோ வினவே தவறோ


Friday, 11 October 2013

ஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்

ஃப்ரென்சு எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்ணின் ‘From the Earth to the Moon’ புத்தகத்தை படித்துவருகிறேன். தன் அறிவியல் பொறியியல் ஞானத்தை தன்  கதைகளில் எவ்வளவு ஆழமாக கையாண்டார்! வியக்கிறேன்! படிப்பவன் பாமரன், அறிவியலை எளிமையாக சொல்லலாம், குறைக்கலாம், இலக்கிய நயத்தில் மறைக்கலாம் என்றெல்லாம் பின்வாங்காமல், தயங்காமல் அள்ளி வீசுகிறார். புதுமையில் புகுக, புனைவில் களிக, கற்பனை வளர்க, முன்னோர் திறமையை மிஞ்சுக, என்று எழுதுகிறார். ஒரு ஜல்லிக்கட்டு காளையின் துள்ளலும் வீரமும் ஒரு அறிவியல் ரசிகனின் ஆர்வமும் ஆற்றலும் அவர் எழுத்தில் காணலாம். படித்தேன் சிலித்தேன் மலைத்தேன் இதுவென மலைத்தேன்!

இந்திய இலக்கியத்தில் காதல் வீரம் ஹாஸ்யம் கற்பனை களவு சூது சூழ்ச்சி விவேகம் தர்மம் நேர்மை மடமை எல்லா ரசத்தையும் காணலாம். ஆனால் இது போல் ஒரு கதையும் எனக்கு தெறிந்து இல்லை. உலகில் மற்ற மொழிகளில் சிலவே உள்ளன. ஆங்கிலத்திலும், விஞ்ஞான புதினங்கள் பலவும் விஞ்ஞான சாயலுள்ள மாயாஜால கதைகளே.

கத்தி வில் துப்பாக்கி அன்றி லேசர் துப்பாக்கி, ஃபோடான் ஆயுதம்; கடகடா சிறிப்பு மந்திரவாதி அன்றி சிடுமூஞ்சி பித்துக்குளி மாமேதை – உதாரணம் ஜேம்ஸ் பாண்ட், ஸூப்பர்மேன், பாட்மேன் பட வில்லன்கள்; ரத்தக்காட்டேரி அன்றி டைனசார், வெளியுலக யாளி; புது நாடு, ஊர், கலாச்சாரம் என்றில்லாமல் வேற்றுலகம், வேற்று காலம். கதைகளின் திணையும் சர்வாதிகாரம், புரட்சி, போர், காதல், வல்லரசு சூழ்ச்சி என்று அறைத்த பழைய மாவுதான்.

ஆர்த்தர் கிளார்க், லாரி நிவென் போன்ற வெகு சிலரே விதிவிலக்கு. விஞ்ஞான கதை வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கை, விஞ்ஞான வரலாறு, போன்ற நூல்களை மட்டுமே படிக்கவேண்டும். தவறல்ல – ஜேம்ஸ் வாட்ஸனின்  “Double Helix”, ஜாரட் டைமண்டின்  “Guns Germs and Steel”, தாமஸ் ஹாகரின் “The Alchemy of Air”, அயேன் மெக்கலனின் “Darwin’s Armada”,  ஜென்னி அக்லோவின் “Lunar Men” போன்றவை, கதை படிக்கும் வேகமும் ரசிக்க வைக்கும் புதுமையும் மிரளவைக்கும் சாதனையும் சாலக்கலந்த சுவையுள்ளனவே.

ஃப்ரென்சு மொழியில் விக்டர் ஹுகோ, அல்பேர் கமூ, ஸார்டர், ஆகியோரின் சமூக தத்துவ கதைகளே உள்ளன. ஜூல்ஸ் வெர்ணுக்கு விஞ்ஞான இலக்கிய வாரிசு இல்லை.  ‘From the Earth to the Moon’ நூலின் முன்னுரையில், நூலை மொழிப்பெயர்த்த எடுவர்ட் ராத் என்பவரின் ஒரு பத்தி, இங்கே, என் தமிழில்:

பொதுவாக ஒரு கதையிலுள்ள அங்கங்கள் (வெர்ணின் நூலில்) இல்லை. கொலை, துரோகம், கொடுமை, மனமுடைத்தல், ஆடம்பரம், தத்துவம், மர்மம், மயிர்கூசும் வர்ணனை, சொல் நயம், யதார்த்த சொல்லோவியம், உணர்வு பிதுங்கல், கொடூரச் சிகரம் – இவை ஏதுமின்றியும், கதை சொல்லொணா சுவையுடன் சிந்தையை கிளறியது.


எந்த தமிழ் நூல் இப்படி சொல்லத்தகும்? நம் நாட்டில் பல ஷேக்ஸ்பியரும், ஓமர் கய்யாமும், டால்ஸ்டாயும், வால்டர் ஸ்காட்டும், ஹோமரும் உள்ளனர். ஒரு ஜூல்ஸ் வெர்ணும் இல்லை. என்ன பரிதாபம். 

Thursday, 10 October 2013

An evening with Pamela and John Davis

This is one of the emails that prompted Badri Seshadri to ask me to begin a blog. Better late than never.

Balu sir, Jayaram, John Davis, Chitra Madhavan

At the end of my lecture at New College, an English gentleman walked up to me and said he had talked to Mortimer Wheeler (who discovered the Indus valley civilzation) and had a friend who had inherited some of Alexander Cunningham's collections! Naturally, my curiosity was piqued, and thanks to Dr. Chitra Madhavan, I got his phone number. On Wednesday, Feb 27, 2013, some of us went to meet him at Madras Club where he was staying - Swaminathan, Balasubramanian, Siva, Chitra, Jayaram and Gopu.

His name is John Davis and he was there with his wife Pamela, and they had a room facing the Adayar river. "Would you be mother and pour out tea?" Mrs Davis said to Chitra, in a tone and naturality that would drive every Indian feminist up the wall. :-) 

He said he had been a boxwallah, who had come to India in 1946, when the nation was in turmoil, but Madras was a little more peaceful in those days. He is Welsh, original name Daffyd, but the English misspelt & mispronounced it as Davis! Instead of Cunningham or Wheeler, we learnt quite a bit about the intricacies and idiosyncrasies of the Welsh language, its unique grammar and spelling and modifications. Double letters sound different from single letters : "ff" is prononuced "v", "LL" is pronounced "sh", etc. Also, the word "Guin" which stands for the color white is used commonly in names of Welsh girls, and the names always mean something elaborate and poetic : for example, Guinevere, means "a lady in whose footsteps white flowers blossom!" Rather like Tamil towns which are named after trees, Mr Davis, remarked - a fact not many Tamils are aware of. Prof Swaminathan made some comments about the great difficulties he had in trying to follow Welsh, when he was in the UK, to which Davis retorted that English face the same difficulties too!

Davis also gave us a tour-de-force of the origins of the English peoples:
  • how some of them had settled Brittany, a province in France; and a number of them came back to Britain
  • how there had been a similar population settled in Iberia (Spain) in the Galician province and remigration to Britain
  • how every wave of invasion drove the previously settled populations into hills and forests
  • how the early Romans finished of the Druids of their time; the Druids were the priests and medicine men of pre-Roman Britain, who ceremonies included human sacrifices and head shrinking; less adorable than the Druids we may be familiar with in Asterix comics
  • how the end of the Roman empire effected a collapse and regrouping of British society
  • how this must be similar to the Aryan invasion of India overwhelming the Dravidian, and the Dravidian invasion into India must have overwhelmed the Munda speaking tribes and hill-dwellers - a red herring to several people, I'm sure :-) 

He then talked of his early in days in Madras, when they would bicycle from the beach to Gemini circle, and leave their bicycles there unlocked, with no fear of their getting stolen! Of swims in the Adayar river, and boat rides and races on it, with rented boats from the boat club. The Adayar river was clean those days he says, the water transparent, with lots of fishing, but the Kuvam was dirty and smelly even then. There was a British lady who would throw weekend parties at here estate near Guindy, with food and dancing, but charge a nominal amount, and vast sections of English society, even the governor sometimes, would attend those.

In all this, a genuine love of Madras, and of several things Indian, came shining through.

Wheeler delivered a set of lectures on Indus valley on BBC, he said. (If we can get this, it may be useful for our site seminar.) His wife said they had also met Max Mallowan, the husband of Agatha Christie. Mallowan was an archaeologist in Iraq - reflected in a couple of Chritie's novels. Mr Davis himself had one of Cunningham's books in his house in Malaysia, but his servant could not locate it. The Indian govt had asked all foreigners to register after the Mumbai 26/11 attacks and hotels had to submit daily reports.

All this was peppered liberally with British understatement and self effacing humour, that we associate with a Wodehousian world.

We finished the evening with his rendering of a Welsh song, with his wife joining in. The mosquitoes had begun to swarm, and Mr Davis had already suffered dengue twice. As a parting shot, Mr Davis said he wished he were young enough to join us next year for our site seminar at Gujarat, especially Dholavira; his wife sportingly invited us to take him along!!

Wednesday, 9 October 2013

Indian Literature - Four hundred Shakespeares, zero Jules Vernes

Reading Jules Verne's book, From the Earth to the Moonit struck me what a detailed knowledge of science and engineering he brought into his novels and how he did not hesitate to showcase it to the reader. No attempt to dilute it to the ignorance of the lay reader, only an invitation to share in the exhilaration of new knowledge, of building something, attempting something beyond the imagination, let alone the skill of our ancestors. In Indian literature, be it Sanskrit or Tamil or any of the other languages, we have plenty of dramatic, romantic, valorous, humorous, delightful, imaginative, cunning, brilliant, honorable stories, but nothing to rival this. To be fair, I don't know how many other languages have this kind of writing. Even in English most of what passes for science fiction is unscientific fantasy, with honorable exceptions like Arthur C Clarke and perhaps Larry Niven. Even the French language is only famous for social criticism like Victor Hugo, philosophical works ala Camus, Sartre, Balzac or adulterous domestic drama ala Gustave Flaubert.

Here is a passage from Edward Roth's introduction to Jules Verne's, 'From the Earth to the Moon' :

The elements usually considered indispensable in the ordinary novel, were totally absent. There was no killing, no betraying, no persecution, no heart breaking, no courtly pageantsy, no metaphysical speculations, no mystery, no complicated plot, no thrilling descriptions, no fine writing, no photographic sketches of real life, no turning the human heart inside out, no apotheosis of nastiness - and still the story was profoundly and absorbingly interesting.

Can we say this of any Indian writing?

We have plenty of Shakespeares and Molieres and Walter Scotts and Dickenses and Scherezades and Homers and Omar Khayyams and Wordsworths and Shelleys, in Indian literature. But zero Jules Vernes. Also zero Conan Doyles / Agatha Christies. That is a pity.

Tuesday, 8 October 2013

Thomas Edison and Karl Benz

December 31, 1879 is famous as the day Thomas Edison showcased his electric light bulb in Menlo Park, New Jersey, triggering in the Age of Electricity. But, it is also the day, according to Valcav Smil, that Karl Benz first drove a carriage fitted with his internal combustion engine. Surely then, one of the most significant dates in history.

I stumbled upon it, when I was reading Smil's book "Creating the Twentieth Century." It is a fascinating book, by a terrific author, but not an easy read for the general public. It requires a decent knowledge of engineering, and also a passion for understanding the most understated impact of engineering as a force in history, far surpassing politics, philosophy, art or economics.

Sunday, 6 October 2013

குந்தவை ஜீனாலயம் - ஓவியங்கள்

ஓவியங்கள் உள்ள் செங்கல் கட்டடம்
நேற்றைய பதிவில் சமவசரணம், சித்தன்னவாசல் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சித்தன்னவாசலை பற்றி நண்பர் பூஷாவலி, விஜய்குமார் எழுதியுள்ள பதிவுகள் இங்கே. குந்தவை ஜீனாலயம் சென்ற பத்ரி சேஷாத்ரியின் பதிவு இங்கே – அவர் பதிவில், நான் சிவனோ என்று ஐயம்கொண்ட ஓவியம், யக்ஷி அம்பிகை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவில் சிற்பங்களின் சிறந்த படங்கள் உள்ளன. சமணத்தை பற்றியும் சமவசரணத்தை பற்றியும் கூகிள் செய்து அறிந்து கொள்ளலாம். 

குந்தவை ஜீனாலயத்தில் கீழே ஒரு கோவிலும், மேலே பாறையில் குகையிலும், குகையை சுற்றி எழுந்துள்ள செங்கல் கட்டடத்திலும் ஓவியங்கள் உள்ளன. 

வட்டத்து நடுவில் துறவி/ஆசிரியர்
ஆசிரியரை சுற்றி துறவிகள், அரசகுலத்தோர்
கட்டடத்தின் உள்ளே ஓவியங்களில் ஒன்றை பார்ப்போம். ஒரு தீர்தங்க்கரரோ துறவியோ ஆசிரியரோ வட்டமான ஓவியத்தின் நடுவிலும், அவர் உபதேசம் கேட்க தேவர்களும் மக்களும் விலங்குகளும் அவரை சூழ்ந்து வட்டத்தின் பிறிவுகளிலும், வேறு சிலர் வட்டத்தின் வெளியிலும் தீட்டப்பட்டுள்ளனர். இங்கு காணும் ஓவியத்தில் நடுவே உள்ளது தீர்த்தங்கரர் நேமிநாதர் என்று பத்ரி பதிவில் காணலாம். விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் உறவினரே நேமிநாதர் என்று நண்பர், சமணர், தாவரவியல் பேராசிரியர் கனக அஜிததாஸ் கூறுகிறார். 
ஆசிரியரை சுற்றி அரசகுலத்தோர், மக்கள், விலங்குகள்

தரிசனம் தேடி வந்த பசுக்கள்

வட்டத்துக்கு வெளியே – தேவர் / கந்தர்வராய் இருக்கலாம்

அந்த கட்டடத்தின் வெளியிலும் உயரத்தில் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையும், அதன் அருகே சென்று பார்த்தால் மூன்று நாட்டியப்பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் ஓவியமும் உள்ளன. தொல்லியல் பிதாமகன் டாக்டர் நாகசுவாமியின் “ஓவியப்பாவை” என்ற நூலை படித்து, இந்த பெண்களின் ஓவியத்தை பற்றி,  “அஜந்தா மரபின் சாயல் இங்கு தொடற்கிறது” என்று படித்துவிட்டு, ஆவலில் முன்பொரு முறை ஊரைத்தேடி வந்த நண்பர் விசுவநாதன், இங்கே என்னை அழைத்துவந்தார். அவர் பாறை ஏறி பக்கத்தில் சென்று படமெடுத்தார். மூன்று நாட்டியப்பெண்களை நெருங்கினால் என் கற்பிற்கு களங்கம் உண்டாகும் என்பதாலும், பாறை கொஞ்சம் வழுக்குவது போல் தெறிந்ததாலும், இதை விட அழகான பெண்களை அஜந்தாவில் அருகே நின்று பார்த்ததாலும், நான் கொஞ்சம் தள்ளியே நின்று விட்டேன்.

ஓவியத்தை நாடி 
பாறையில் எறும் விசுவநாதன்


வெளிச்சுவரில் நாட்டிய பெண்கள் ஓவியம்
குந்தவை ஜீனாலயம்    கூகிள் வழிகாட்டி Google map location 



Saturday, 5 October 2013

குந்தவை ஜீனாலயம்

திருமலை  அருகே - வயலும் தூரத்து மேகமும் மழையும்
 அக்டோபர் இரண்டாம் நாள், நண்பர் விசுவநாதனுடன் காஞ்சிபுரம் அருகே உள்ள கூழமந்தலுக்கும், திருமலையில் உள்ள குந்தவை ஜீனாலயத்திற்கும் சென்றேன். கூழமந்தலை பற்றி மற்றொரு நாள் எழுதலாம். திருமலை, புகழ்பெற்ற திருவேங்கடம் அல்ல, ஒரு சிறு கிராமம். போளூர் ஆரணி சாலையில் வடமாதிமங்களம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து வடக்கே ஐந்து கிலோமீட்டர் சென்றால் திருமலையை அடையலாம். போளூர் வந்தவாசி அருகேயும், ஆரணி ஆற்காடு அருகேயும் உள்ளன. வந்தவாசியும் ஆற்காடும், இன்றுவரை தமிழ்நாட்டில் உள்ளன.


திருமலை கிராமம்
சென்னை முதல் காஞ்சி வரை குளிர்சாதன பேருந்திலும், காஞ்சி முதல் கூழமந்தல் வரை விரைவு பேருந்திலும், அங்கிருந்து வந்தவாசிக்கும், வந்தவாசியிலிருந்து போளூர் வரை மெதுவாக சென்ற விரைவு பேருந்திலும் சென்றோம். வடமாதிமங்களத்திற்கு ஆரணி போகும் பேருந்தில் சென்று இறங்கி, ஆட்டோ பிடிக்கலாம் என்றார் நண்பர். ஆனால் போளூரில் திருமலை செல்லும் 3.15 மினிபஸ் வந்ததால் அதில் ஏறி பசுமை பொங்கும் வயல்களும், மேகம் முட்டும் மலைகளும் ஒரு வண்டிமட்டுமே செல்லும் சிமெண்ட் சாலைகளில் பயணித்தோம். தூரத்தில் மழை கொட்டும் காட்சி அற்புதம். முடகள் ஜன்னலை உரச காற்று உடலையும் மனதையும் சிலிர்க்க, கராஜில் டிராக்டரகளும் வாசலில் காளைகளும் உள்ள சில வண்ண சிமண்ட் வீடுகளையும், சாலையில் விரகு அடுப்பு மூட்டும் சில குடிசைகளயும் கடந்து சென்றோம்.

 
பாறை விளிம்பில் நான்
சமண துறவிகள் சங்க காலத்திலும் சோழர் காலத்திலும் மலைக்குகைகளில் வாழ்ந்தவர். சங்க கால மன்னர்களும் செல்வந்தரும் இவர்களுக்கு கல் படுக்கை செய்து கல்வெட்டு எழுதியுள்ளனர். சங்க காலத்தில் மாங்குளம் ஆனைமலை ஏழடிப்பட்டம் போன்ற இடங்களில் பிராமி எழுத்திலும் கல்வெட்டுக்கள் உள்ளன – இவையே தமிழ் மொழியின் மிக பழமையான எழுத்துக்கள் ஆகும். சில இடங்களில் இவர்களுக்காக சிறு கோயில்களையும் அங்கு சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளயும் செய்து சில ஓவியங்களையும் தீட்டிவைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் கூரை ஓவியத்திற்கும் பாண்டியன் கல்வெட்டிற்கும் மிக புகழ்பெற்றது.
இடதுபுற சுவரில் சமவ சரண ஓவியம், அதற்குபின் குகை, கூரையில் பந்தல் ஓவியம், எதிர் சுவரில் சிவனோ?

குகை பாறை கூரையில் பந்தல் ஓவியம்
குந்தவை ஜீனாலயம் ராஜராஜசோழனின் அக்கா குந்தவை தந்த தானத்திற்கு பெய்ர்போனது. துறவிகள் தங்கிய குகையின் கூரையில் பந்தலைப்போல் ஓவியங்கள் உள்ளன.  குகையை சுற்றி செங்கல் சுவர் எழுப்பையுள்ளனர். சுவர்களில் சமவசரண ஓவியங்கள் உள்ளன. ஒரு சுவரில் உள்ள ஓவியம் பரமசிவனைப்போல் உள்ளது. வெளியறைகளில் ஓவியங்கள் நன்றாய் தெறிகின்றன, உள்ளறைகளில் இருளில் உள்ளன. ஆனால் என் கேமராவில் ஃப்ளாஷ் அடிக்காமல் நன்றாக சில படங்கள் வந்தன. பாதி இருளிலும் பாதி ஒளியிலும் உள்ள சிலைகளையும் ஓவியங்களையும் முழுதாக படமெடுக்க முடியவில்லை. ஓவியங்கள் விஜயநாகர் காலத்தவை, சோழர் காலத்து ஓவியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

பரமசிவனா? - இல்லை யக்‌ஷி அம்பிகை

மலை உச்சியிலிருந்து கண்கொள்ளா காட்சியாய் நிலமகளின் பச்சை சேலை எழில் கொஞ்சியது. ஓரிடத்தில் குங்க்ஃபூ பாண்டா காட்சியும் ஆமை குரு ஊக்வேவின் மரமும் நினைவுக்கு வந்தன. மலை மேல் நேமிநாதர் கோவிலும், மலை நடுவே கோமதேஸ்வரரின் பெரும் சிலையும் உள்ளன.

வெளிச்சுவர்களிலும் ஓவியங்கள் உள்ளன. அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
மலை உச்சியிலிருந்து குந்தவை ஜீனாலயம்

இருட்டு குகைகூரையில் பந்தல் ஓவியம் – புகைப்படத்தில் மட்டுமே நன்றாக தெரியும்
எச்சரிக்கை: போக்குவரத்து வசதிகள் சுமார். இரவு 7.45 போளூர் செல்லும் பேருந்து வருமாம். 6.30க்கு கிளம்பி வடமாதிமங்களம் வரை விட்டில் பூச்சிகளும் தூரத்து மின்னலும் வழிகாட்ட ஐந்து கிமீ நடந்து வந்து, ஆரணி பஸ் பிடித்தோம். இரவு சென்னைக்கு இரண்டு மணிக்கே வந்தோம். 150கிமீ வர எட்டு மணிநேரம் எடுத்தது கடுப்பான அனுபவம். ஆற்காட்டில் பரோட்டா உண்ட ஓட்டலில் உணவு தேடி வந்த பசு, ஒரு கால்நடை கவிதை.

பின்குறிப்பு: நவாபினாலும் கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவினாலும் புகழ்பெற்ற ஆற்காட்டையும் வந்தவாசியையும், கோடம்பாக்கத்து ஆற்காட்டு சாலை அருகே வந்து வசிக்கும் நான் பார்க்கவில்லையே, போகும் வழியில் ஒரு பேருந்து மாரும் இடமாகவே இவை உள்ளனவே என்று சின்ன வருத்தம். ஆனால், ஒரு கணம் யோசித்தால், லண்டன், நியூ யார்க், கைரோ, பாரிஸ், டோகியோ, ஹாங்க் காங்க், பம்பாய், தில்லி, சியோல், ஏதென்ஸ், அபுதாபி, டாய்பேய், குவாலாலம்பூர் ஆகிய ஊர்களையும் விமானம் மாரும் இடங்களாகவே பார்த்திருக்கிறேன் என்று அற்ப ஆறுதல். சிதம்பரம் ராமேஸ்வரம் பார்க்காதது அற்பத்தின் அடுத்த கட்டம்.



ஆற்காடு ஆரிய பவனில் பசியுடன் பசு
குந்தவை ஜீனாலயம்    கூகிள் வழிகாட்டி Google map location 

Wednesday, 2 October 2013

Decoding Rajasimha

कला चतु
On Sunday, September 29, 2013, I brought my Devanagari transliteration of RajaSimha Pallava's grantham inscription on the wall of the Kailsanatha temple, to Sri Balasubramanian's sanskrit class. The class finished at 2, lunch at 3 and for the next few hours, he tried to fit the inscription to Sanskrit chanda metres, and filled up missing letters with guesses. We got most of it except the last portion which is really damaged. Here is one such verse, with original grantha inscription and Devanagari captions. Incidentally there were a few spelling mistakes in the inscription :-) Here below is the sloka in Roman script.


रयोषितां रहसिरञ्जने मन्मथ स्त्रयीपथनिषेविणां स

ततपालनेवासवः मुनिद्विजसुरद्विषां हृदयदारणे

माधवः सचद्रवि
णसंपदा








सुजनतोषणे वित्तदः ॥ 


कलाचतुरयोषितां  रहसि रञ्जने मन्मथस्त्रयीपथनिषेविणां सततपालने वासवः

मुनिद्विजसुरद्विषां हृदयदारणे माधवः द्रविणसंपदा सुजनतोषिणे वित्तदः  ||

Addendum, April 21, 2020

kalaa catura yoshitaaM rahasiranchanemanmathas 
trayipathanisheviNaaM satatapaalanevaasavaH |
munidvijasuradvishaaM hRdayadaaraNe maaDhavaH 
sacadraviNasampadaa sujanatoshaNevittadaH ||


Translation
In charming talented maidens in solitude, he is Manmatha
In protecting good-people who follow the path of Vedas, he is Vaasava
In splitting the hearts of enemies of sages, brahmins, Suras, he is Maadhava
In donations to the poor and gladdening good people, he is Vittada

kalaa कला  art
catura चतुर  talented
yoshitaaM योषितां  maidens
rahasi रहसि in-secret (in solitude)
ranchane रञ्जने charm
manmatha मन्मथ Manmatha, the God of Romance
trayi स्त्रयी Vedas
patha पथ path
nisheviNaaM निषेविणां goers
satata सतत good-people
paalane पालने protector
vaasavaH वासवः Indra, the King of the Devas
muni मुनि sage
dvija द्विज twice-born
sura सुर Deva
dvishaaM द्विषां
hRdaya हृदय enemies
daaraNe दारणे split
maaDhavaH माधवः Madhava or Vishnu
sa He
ca च and
draviNa द्रविण poor
sampadaa संपदा donate
sujana सुजन good-people
toshaNe तोषिणे happiness
vittadaH वित्तदः  Kubera, the Lord of Wealth

கலாசதுரயோஷிதாம்ʼ ரஹஸி ரஞ்ஜனே மன்மத²ஸ்த்ரயீபத²னிஷேவிணாம்ʼ ஸததபாலனே வாஸவ .
முனித்³விஜஸுரத்³விஷாம்ʼ ஹ்ருʼ³யதா³ரணே மாத த்³ரவிணஸம்பதா³ ஸுஜனதோஷிணே வித்தத³꞉

தமிழாக்கம்
தனிமையில் தையலை மயக்குவதில் மன்மதன்
மறைவழி மரபினரை காப்பதில் வாசவன்
முனிவர் அந்தணர் சுரர்களின் எதிரிகளை வெல்வதில் மாதவன்
எளியோர்க்கு ஈண்டு இன்புருத்தும் வித்ததன்.

கலா - கலை
சதுர - திறமை
யோஷிதாம்இளம்பெண்கள்
ரஹஸி – ரகசியமாக (தனிமையில்)
ரஞ்ஜனேமயக்குவித்தல்
மன்மத² - மன்மதன்
த்ரயீ - வேதங்கள்
பத² - பாதை
நிஷேவிணாம் - செல்பவர்
ஸதத - நல்லவர்
பாலனே - காப்பவன்
வாஸவ - வாசவன் (தேவேந்திரன்)
முனி - முனிவர்
த்³விஜ - அந்தணர்
ஸுர - தேவர்
த்³விஷாம் - எதிரிக
ஹ்ருʼ³ - இதயம்
தா³ரணே - பிளத்தல்
மாத - மாதவன் (திருமால்)
- அவன்
ச – (உம் விகுதி
த்³ரவிண - ஏழை
ஸம்பதா³ - கொடை
ஸுஜன - நல்லவர்
தோஷிணே - மகிழ்வித்தல்
வித்தத³꞉ - வித்ததன் (குபேரன்)

My Sanskrit essays